24 Jun 2021

நபிமார்கள் பொய் கூறுவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் !


தஸ்பியதுல் அகாயித் என்ற நூலில் காஸிம் (ரஹ்) அவர்கள் நபிமார்கள் பொய் சொல்வார்கள் என்று எழுதியதாக பரேல்விகள் வழமை போல் பழிசுமத்துகின்றனர்.இது குறித்து விரிவான விளக்கத்தை இனி பார்ப்போம்
ஸர்ஸய்யித் அஹ்மத் கான் அவர்கள்,கொள்கைகள் சம்பந்தமாக தமக்கு எழும் பதினைந்து சந்தேகங்களுக்கு பதில் தருமாறு காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களிடம் கடிதம் அனுப்பினார்கள். அதில் ஒன்று தான் இவை.

கேள்வி: சொல்,செயல் அனைத்திலும் அல்லாஹ்வின் தூதர்கள் உண்மையாளர்கள்.அவசியமான (مصلحت) சமயத்தில் நபியின் பக்கம் இணைத்து சொல்வதில் குப்ரின் அச்சம் இருக்கும் போது மிக ஒழுக்ககேடான செயலாகும்.அவசியமான (مصلحت) சமயம் என்பதில் எனது கருத்து பொதுமக்கள் அவசியமாக(مصلحت)
கருதியிருப்பதை தான். சொல் அல்லது செயலை கொண்டு வருவது எதார்த்தத்தில் அனுமதியில்லை.எனினும்,அவசிய சமயத்தில் அதனை கூறுவது (தஸ்பியதுல் அகாயித் பக்கம்:5)

ஸர்ஸய்யித் ஸாஹிபின் சந்தேகத்திற்கு ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பல பக்கங்களில் பதில் தருகிறார்கள். 
அதனின் சுருக்கம் என்னவெனில் பொய் பலவகைகள் உள்ளது.ஒன்று تعریض (சமிக்ஞையாக கூறுவது)தவ்ரியா (சிலேடையாக கூறுவது) போன்றவைகள் அனைத்தும் வெளிப்படையில் தோற்றத்தில் பொய்யாக தெரியும்.எனினும் எதார்த்தத்தில் உண்மைதான்.
தெளிவான பொய்யில் விளக்கம் உள்ளது.பாதிப்புகளிலிருந்து (பொய்) நீங்கி,நன்மையாக இருந்தால் ஒரு வகையில் நன்மைகளில் உள்ளதுதான்.உதாரணமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூறுபவர் பொய்யர் இல்லை.(ஹதீஸின் சுருக்கமான கருத்து) எனினும், ஏமாற்றுதல்,மோசடி அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல் அல்லது தேவையின்றி கூறுவது ஹராமாகும்.சில சமயங்களில் சமிக்ஞை வார்த்தைகளை கூறினால் நிலைமை சரியாகிவிடும் எனும் போது தெளிவான பொய் அனுமதியில்லை.நபிமார்கள் தெளிவான பொய்யிலிருந்து முற்றிலுமாக நீங்கி பரிசுத்தமானவர்கள்.அவர்களை பொறுத்தவரை சமிக்ஞை வார்த்தைகளை கூறுவதையும் விரும்பவில்லை.ஹள்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகில் என்னிடமிருந்து சில பேச்சுக்கள் மூடலாக வந்துள்ளது என்பதாக வெட்கம் கொண்டு ஷஃபாஅத்திலிருந்து விலகிகொள்வார்கள்.இது குறித்து விரிவாக இமாம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
(தஸ்பியதுல் அகாயித் (சுருக்கம்) பக்கங்கள்:22,23,24,25,26)


சுருக்கமான விஷயம் சமிக்கை  வார்த்தைகள் வெளிப்படையில் பொய்யாக தெரிகிறது.மேலும் தெளிவான பொய்யும் சில சமயங்களில் நன்மைகளில் உள்ளது.இதனால் இதனை (சமிக்கைஞான  வார்த்தைகளை) நபியின் விஷயத்தில் பொய்யானது, ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிராக கருதுவது சரியில்லை.எனினும்,இவை மற்ற நபிமார்களின் விஷயத்தில் கூறியதாகும்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி விஷயத்தில் அனைத்து விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாக காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார்கள். ஆனால்  பரேல்விகள் நேர்மையற்று அதனை மறைத்துவிடுகின்றனர்.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் அசலான வார்த்தைகள்.

پھر دروغ صریح بھی کئی طرح پر ہوتا ہے جن میں سے ہر ایک حکم یکساں نہیں ہر قسم سے نبی معصوم ہونا ضروری نہیں اگر چہ ہمارے پیغمبر صلی اللہ علیہ وسلم سب بھی سے محفوظ رہے ہیں 

பிறகு தெளிவான பொய்யும் பல விதங்களில் உள்ளது.ஒவ்வொன்றின் சட்டமும் ஒன்றல்ல.அனைத்து வகையிலிருந்து நபிமார்கள் நீங்கியிருப்பது அவசியமில்லை.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தை விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள்.(ஆதாரம்:தஸ்பியதுல் அகாயித் பக்கம்:)

ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரேல்விய அறிஞர்களின் கருத்துக்களை இனி பார்ப்போம்!

முப்தி மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்:

ஸஹீஹ் புகாரி, முஸ்லிமில் அபூஹுரைரா ரளி அறிவிப்பு வருகிறது
நல்லோர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் மிக அதிகமாக இருக்கும்.இதனால் வெளிப்படையான தோற்றத்தில் உள்ள பொய்யையும் ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் தவறுசெய்தவனாக எண்ணி இஸ்திஃபாரில் ஈடுபட்டார்கள்.
(தப்ஸீரே மஜ்ஹருல் குர்ஆன் 2/978)

குலாம் ரசூல் ஸயீதி எழுதியுள்ளார்: 

ஹழ்ரத் உமர் (ரளி) கூறுகிறார்கள் :
முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு சமிக்கை வார்த்தைகள் போதுமானது.ஹள்ரத் இம்ரான் இப்னு ஹஸீன் (ரளி) கூறுகிறார்கள் முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யில் பெரிய வாய்ப்புள்ளது......

மேலும் எழுதுகிறார்: அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:ஹழ்ரத் இப்ராஹும் அலை அவர்கள் மூன்று பொய்களை மட்டும் தான் கூறினார்கள்.இந்த ஹதீஸில் பொய்யைக் கொண்டு கருத்தானது வெளிப்படையில் பொய்யாகும்.எதார்த்தத்தில் சமிக்கை வார்த்தைகள்.
(ஆதாரம்:திப்யானுல் குர்ஆன் 7/605)

ஹழ்ரத் இமாம் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.இதனின் நோக்கம் பொய்யில் சமிக்கையாக  கூறுவது,மறைத்து கூறுவது,சிலேடை அனைத்தும் நுழையும்‌.இவை நபிமார்களிடமிருந்து வெளிப்படும். எனவே நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழியில் கண்ணியமான நபிக்கு பொய் எனும் வார்த்தையை பயன்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறோம்.

لم يكذب ابراهيم النبي عليه السلام قط إلا ثلاث كذبات (مسلم /٢,٢٦٦)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் நூலின் விரிவுரையில் எழுதியுள்ளார்  சமிக்ஞையாக  இருந்தால் كذب (பொய்) என்பதாக கூறுவதன் தேவை என்ன? என்பதாக கேள்வி எழுப்பினால் நவவி (ரஹ்) அவர்களின் பதில் சமிக்ஞை,சிலேடை போன்றவைகளை பொய் என்பதாக பொதுவாக கூறுவது சரிதான் என்பதை இந்த ஹதீஸிருந்து புரியமுடிகிறது.

இறுதியாக பரேல்விகள் முதலில் அவர்களின் கேடுகெட்ட கொள்கைகளை களையட்டும் !

பரேல்விய அறிஞர் அஹ்மத் யார் கான் நயீமி எழுதியுள்ளார்:

 நபிமார்கள் நாட்டத்துடன், வேண்டுமென்றே  பெரும்பாவங்கள் நுபுவ்வத்திற்கு முன்பாக பின்பாக செய்ததில்லை.ஆனால் தவறுதலாக,மறதியாக ஏற்பட முடியும்.எனினும் அதன்மீது நிலைத்திருக்கமாட்டார்கள்.
(ஆதாரம்:ஜாஅல் ஹக் பக்கம்:)


நபிமார்களிடமிருந்து  பெரும்பாவங்கள் நிகழும் என்பதாக கூறுகிறார் இதற்கு எதிராக பரேல்விகள் என்ன தீர்ப்பு தருவார்கள்?

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    இங்கு கேள்வி கேட்ட நபர்
    ஸர்வ ஸய்யத் அஹ்மத் கான்
    அலிகார் முஸ்லிம் யுனிவர்சிட்டி நிறுவனர் தானா?

    ReplyDelete
  2. ரஹ்மத்துல்லாஹ் கீரானவி ரஹ் அவர்கள் தேவ்பந்திகளுக்கு எதிராக இருந்தார்களா?

    ReplyDelete
    Replies
    1. ரஹ்மத்துல்லாஹ் கீரானி ரஹ் அவர்கள் தேவ்பந்த் உலமாக்களுக்கு எதிரானவர்கள் என்பதாக பரேல்விகள் எதை வைத்து கூறுகிறார்கள்? அதனின் விவரங்களை பதியுங்கள்.

      Delete
  3. ரஹ்மத்துல்லாஹ் கீரானவி பராகினெ காதிஆ விற்கு எதிராக எழுதிய தக்தீஸ் அல் வகீல் அன்று தவ்ஹீத் ரஷீத் வகலீல் என்ற புத்தகத்திற்கு ஒப்புதல் வழங்கினார்களாம்
    பார்க்க பரேலவிகள் எழுதும்
    பைஸலா ஹப்த் மஸ்அலா தொடர்

    ReplyDelete

 

makkah live

Sample Text

madina live