4 Jul 2021

நபிமார்கள், நல்லோர்களின் சிபாரிசை நம்புபவர்கள் அபூஜஹ்லை போன்ற முஷ்ரிக் என்ற குற்றச்சாட்டும் ! பதிலும் !



இந்த தலைப்பிட்டு பரேல்விகள் எழுதியுள்ளனர் :
மௌலவி இஸ்மாயில் தெஹ்லவி எழுதியுள்ளார் : ஏதேனும் (நபிமார்களை/நல்லோர்களை) தனக்கு சிபாரிசு செய்யும் வகீலாக எண்ணுபவர்,நேர்ச்சை செய்பவர் எதைப்போன்று எனில் அல்லாஹ்வின் படைப்பாளர்,அவனின் அடியார் எண்ணுபவர்.அவரும் அபூஜஹ்லும் இணைவைப்பில் சரிசமமானவர்கள்.
(தேவ்பந்தியத் கே புத்லான் கா இன்கிஷாப் பக்கம்:68)


கவ்கப்pt>கவ்கப் நூரானி எழுதியுள்ளார்:
நபி,இறைநேசரை அல்லாஹ்வின் படைப்பு,அடியார் எண்ணி வக்கீலாக,சிபாரிசு செய்பவராக புரிபவர்,உதவிக்காக அழைப்பவர்,நேர்ச்சை செய்பவரான முஸ்லிம் மற்றும் காபிரான அபூஜஹ்ல் இணைவைப்பில் சரிசமமானவர்கள் 
(தேவ்பந்த் ஸே பரேலி பக்கம்:35)

நமது பதில்:

பரேல்விகள் வழமைபோல்  மோசடி,பொய்யை புனைந்து திரித்துள்ளனர். இவர்களின் திரிபு செய்யும் கலையை பார்த்தால் யஹுதி அறிஞர்களும் வெட்கப்படுவார்கள்.பரேல்விகளில் ஒருவருக்காவது தைரியம்,துணிச்சல் இருந்தால் மேற்சொன்ன வாக்கியங்களை அப்படியே தக்வியதுல் ஈமானில் காட்ட முடியுமா? 

தக்வியதுல் ஈமானில் வரும் அசலான விஷயம்:
இந்த வசனத்திலிருந்து புரியமுடிகிறது. அல்லாஹுதஆலா உலகில் ஒருவருக்கும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தரவில்லை.ஒருவரும் யாரையும் காப்பாற்ற முடியாது.
அல்லாஹ்வின் தூதர் இருந்த சமயத்தில் காபிர்களும் சிலைகளை அல்லாஹ்விற்கு சமமாக கருதவில்லை என்பதையும் புரியமுடிகிறது.அதுமட்டுமின்றி அவனின் படைப்பு,அவனின் அடிமை என்பதாகத்தான் கருதினார்கள்.அவைகளை அவனுக்கு எதிரில் ஆற்றல் உண்டு என்பதாக கருதவில்லை.எனினும் இந்த அழைப்பு,நேர்ச்சை செய்தல்,வக்கீலாக,சிபாரிசு செய்பவர்களாக கருதியது தான் அவர்களின் குப்ர்,ஷிர்க்.எவரேனும் ஒருவர் யாரிடத்திலாவது இந்த முறையில் நடந்து கொண்டு அவரை அல்லாஹ்வின் அடியான்,படைப்புதான் கருதினால் அவனும் அபூஜஹ்லும் இணைவைப்பில் சமமாகுவார்கள்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது குற்றம்சுமத்துவது பரேல்விகளின் உள்ளம் சீர்கெட்டதன் பேரிலாகும். தக்வியதுல் ஈமானின் அசலான வாசகத்தில் நபிமார்கள், நல்லோர்கள் அறவே இல்லை.ஆனால் பரேல்விகள் எழுத்தின் வேகத்தில் அநியாயமாக புகுத்தி விட்டனர்.ஹள்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் நல்லோர்கள், நபிமார்களின் சிபாரிசை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அன்னார் தெளிவாக எழுதியுள்ளார்கள்:
நபிமார்கள்,நல்லோர்களின் சிபாரிசு அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் உள்ளது.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:28)

அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் சிபாரிசு செய்வார்கள்  என்பதாக இருந்தும் கூட பொய்யாக,நேர்மையின்றி அன்னாரின் மீது அவதூறை அள்ளி வீசுகின்றனர்.முஸ்லிமை அபூஜஹ்லை போன்ற எப்படி கூறுவார்? ஒரு வாதத்திற்கு நபிமார்கள்,நல்லோர்கள் என்பதாக பொருள் கொண்டாலும் ஷாஹ் ஷஹீத் (ரஹ்) அவர்களின் நோக்கமானது முன்னால் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் நல்லோர்களை சிக்கலை தீர்ப்பவர்கள்,தேவைகளை நிறைவேற்றுபவர்கள், உலகத்தை நிர்வகிப்பவர்கள் என்பதாக விளங்கி அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்பவர்கள்,
அல்லாஹ்விற்கும் அவர்களின் சிபாரிசை தடுக்கும் சக்தி இல்லை.இது போன்று நபிமார்களை,நல்லோர்களை சிபாரிசு செய்பவர்களாக புரிந்து அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்தால் சந்தேகமின்றி அபூஜஹலை போன்று இணைவைப்பில் சரிசமம்தான்.

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மக்கா முஷ்ரிகீன்கள் குறித்து எழுதியுள்ளார்கள்:
இணைவைப்பாளர்கள் இயற்கையை உண்டாக்குவதில் யாரையும் இணையாக்குவதில்லை.பெரும் காரியங்களை நிர்வகிப்பதில் அல்லாஹ்விற்கு (ஒருவரையும்) இணையாக்கவில்லை.அல்லாஹ் ஒரு காரியத்தை தீர்மானித்து விட்டால் ஒருவரும் தடுப்பதற்கு சக்தி பெறுவார்கள் என்பதையும் ஏற்பதில்லை.மாறாக அவர்களின் இணைவைப்பு சில அடியார்களின் குறிப்பான செயல்களில் உள்ளது.
பேரரசர் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அடியார்களை அனுப்புவான்.சிறு பணிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக,சுய விருப்பம் பெற்றவர்களாக ஆக்கிவிடுவான்.பேரரசின் புறத்திலிருந்து தெளிவான உத்தரவு குறிப்பிட்ட காரியத்தின் பால் வரும் வரை அவர்களின் சிறுபணிகளில் குடிமக்களின் செயல்பாடுகளில் தானாக செயல்படமாட்டான்.மாறாக குடிமக்களின் (செயல்பாடுகளை) தலைவர்கள், அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவான்.
அதிகாரிகளுக்கு பணிவிடை செய்பவர்களின் விஷயத்தில் (அதிகாரிகளின்) சிபாரிசை ஏற்றுக்கொள்வான்............

சில வரிகளுக்கு பிறகு  ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:
நிச்சயமாக அல்லாஹ் அவனின் அடியார்களின் சிபாரிசை விருப்பமில்லாமல் இருந்தாலும் ஏற்றுக்கொள்வான்.
(அல்ஃபவ்ஜுல் கபீர் பக்கம்:22,23)

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர் என கூறினாரா? குற்றச்சாட்டும் ! பதிலும் !


அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர் என தலைப்பிட்டு பரேல்வி எழுதியுள்ளார்:
மெளலவி இஸ்மாயில் தெஹ்லவி கூறியுள்ளார்👉🏻 அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர். (தக்வியதுல் ஈமான் பக்கம்:8) 
அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் ஏற்காதீர்.வேறு எவரையும் ஏற்பது முற்றிலும் மதிமயக்கமாகும். (தக்வியதுல் ஈமான் பக்கம்:8)
 (ஆதாரம்:தேவ்பந்தியத் கே புத்லான் கா இன்கிஷாப் 68,69 தேவ்பந்த் ஸே பரேல்வி தக் பக்கம் 354,அல்ஹக்குல் முபீன் 74)


பரேல்வி மெளலவி குலாம் ஹுஸைன் எழுதியுள்ளார்:
இந்த கொள்கையின் மூலம் நபிமார்கள், வானவர்கள்,வானலோக வேதங்கள் கட்டாயம் மறுப்பதாகிவிடும்.குப்ராக உள்ளது.
(ஆதாரம் ஷம்ஷேர் ஹுஸைனி பக்கம்:44,45)
இந்த குற்றச்சாட்டை முதன்முதலாக அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அல்இவ்கபதுஷ் ஷிஹாபிய்யாவில் 18,19 இல் எழுதியுள்ளார் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.

நமது பதில்: உண்மை என்னவெனில் மனிதன் வெட்கம் எனும் ஆடையை கழற்றிவிட்டால் எந்த எல்லைக்கும் சென்றுவிடுவான்.மெளலானா அஹ்மத் ரிஜாகான்,அவனை சேர்ந்தவர்கள் தக்வியதுல் ஈமானில் முன்னால்,பின்னால் இருப்பதை விட்டுவிட்டு ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் வாசகங்களை வெட்டி ஒட்டி திரித்துள்ளனர்.தீனை வயிற்றுப் பிழைப்புக்காக விற்றுவிட்டர்களிடமிருந்து இவ்விதமான வெட்கங்கெட்ட தன்மை இருப்பது பாரதூரமானது இல்லை.நாளை யாராவது அசல் நூலை ஆராய்ந்து பார்த்தால்  ஏமாற்றம்,மோசடியின் திரை கிழிந்து விடும் என்பதை வெட்கங்கெட்டவர்கள் உணரவில்லையா? எதார்த்தம் என்னவெனில் வெட்கங்கெட்டவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் முதல் தலைப்பாக தவ்ஹீத் (ஏகத்துவ கொள்கை) ஷிர்க் (இணைவைப்பு) குறித்து எழுதியுள்ளார்: 

இந்த வசனத்தின் மூலம் தெரிகிறது.யாராவது ஒருவரை தனது உதவியாளராக கருதுபவன்.இதனையே எண்ணி அவரை வழிப்படும் காரணத்தினால் இறைவனிடத்தில் (உதவி) உண்டு.இவன் இணைவைப்பாளன்.பொய்யன்.
அல்லாஹ்வின் நன்றி மறந்தவன்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

அல்லாஹுத்தஆலா சூரா முஃமீனூனில் அருளியுள்ளான்:

قُلْ مَنْ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
ஓவ்வொரு பொருளின் ஆட்சியும் எவன் கைவசம் இருக்கின்றது? அவன் பாதுகாக்கிறான், (அவனது தண்டனையிலிருந்து தப்ப) அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே – அவன் யார்? என நீஙகள் அறிந்தவர்களாக இருப்பின் (கூறுங்கள்) என்று கேட்பீராக! (அல்குர்ஆன் : 23:88)

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ‏
அ(தற்க)வர்கள் “(சகல அதிகாரமும்) அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவார்கள்” (அவ்வாறாயின்) நீங்கள் எங்கிருந்து சூனியமாக்கப்படுகிறீர்கள் (எவ்வாறு மதிமயக்கப்படுகிறீர்கள்) என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் : 23:89)

எப்போது காபிர்களிடத்தில் கேட்கப்படுமோ முழு உலகின் கட்டுப்பாடு யாரின் கைவசத்தில் உள்ளது? இதற்கு எதிரில் எந்த ஒரு உதவியாளனும் நிற்கமுடியாது எனும் போது அவர்களும் இதனையே கூறுவார்கள்.இது அல்லாஹ்வின் மேன்மை.பிறகு மற்றவர்களை ஏற்பது முற்றிலும் மதிமயக்கம்தான்.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

வாசகர்களே! ஷாஹ் ஸாஹிப் அரபு முஷ்ரிகீன்களுக்கு பதில் தந்துள்ளார்.இதனை தன்னின் புறத்திலிருந்து கூறவில்லை.
மாறாக,குர்ஆன் வசனத்தை முன்வைத்து கூறியுள்ளார்.முழுமையான அரசன் சுய அதிகாரம் உள்ளவன் அல்லாஹ் மட்டும் தான்.இதற்கு எதிரில் வேறு எவரும் சிபாரிசு செய்பவராக, உதவியாளராக இருக்கமுடியாது எனும்போது அல்லாஹ்வை விட்டு தெய்வங்களை தேவைகளை நிறைவேற்றும் தீர்க்கும் என்பதாக கருதி வணங்குவது முற்றிலும் மதிமயக்கம் தான்.

அன்னார் கூறுவது,👇👇
விளங்கவைப்பது  என்ன என்பதை நாம் புரிய முடியும்?ஆனால் பரேல்விகள் எப்படி கருத்தை திரித்துள்ளனர் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்!

ஷாஹ் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் இந்திய,பாகிஸ்தான் இணைவைப்பாளர்களின் ஆன்மாக்களான மூதாதையர்கள்,தந்தையர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.இதற்கு பகரமாக  பரேல்விகள் அன்னாரின் மீது பொய்யை புனைந்துள்ளனர்.
அன்னார் தொடர்ந்து எழுதுகிறார்...

அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகிறான்:
 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ‏
மேலும், நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் இல்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் : 21:25)

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள் !
அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் ஏற்காதீர் ! எனும் சட்டத்தை அத்தனை நபிமார்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொண்டு வந்துள்ளனர்.
ஷிர்கிலிருந்து தடுப்பது மற்றும் தவ்ஹீதின் கட்டளை எல்லா ஷரீஅத்துகளிலும் உள்ளது.இதுதான் வெற்றிக்கு வழி‌.இதனை தவிர மற்ற பாதைகள் தவறானது.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:42)

நடுநிலை வாசகர்களே கவனியுங்கள் !இங்கு ஷிர்க் குறித்து கூறுகிறார். வணங்கப்படுவதற்கும், வணக்கத்திற்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டும் தான்.அவனை தவிர வேறு யாரையும் ஏற்காதீர்.நபிமார்கள், வேதங்கள்,மறுமை நாள் அனைத்தையும் மறுத்துவிட்டார் என்பது ஒரு போதும் இல்லை.(அல்லாஹ் பாதுகாப்பானாக)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்பதை குறித்து நூலின் துவக்கத்தில் அன்னார் அவர்கள் எழுதியுள்ளார்:
உனது பரிசுத்தமான தாத் எனும் உள்ளமையின் மீது பல்லாயிரக்கணக்கான நன்றி.நமக்கு ஆயிரக்கணக்கான அருட்கொடைகளை தந்துள்ளாய்.உமது உண்மையான மார்க்கத்தை தந்துள்ளாய்.நேரான வழியில் நடத்தினாய்.அசலான தவ்ஹீதை கற்றுக்கொடுத்தாய்.
உமது பிரியத்திற்குரிய முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்திலே ஆக்கினாய்.
அவர்களின் வழியை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தந்தாய். அவர்களின் பிரதிநிதிகள் அன்னாரின் பாதையை காட்டினார்கள்.அதன் வழியில் நடந்தார்கள்.அவர்களின் பிரியத்தையும் தந்தாய்.உன்னையன்றி வேறு இறைவன் இல்லை.உனது பிரியத்திற்குரிய (முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்) மீது அவரின் குடும்பத்தார்கள்,தோழர்கள் மீது அவரின் அனைத்து பிரதிநிதிகள் மீது ஆயிரக்கணக்கான அருளும் சாந்தியும் உண்டாகட்டும்.அவரை பின்பற்றுபவர்கள் மீது ரஹ்மத்தை தந்து அவரை பின்பற்றுபவர்களில் எங்களை சேர்த்துக்கொள்வாயாக! ஆமீன் ரப்பல் ஆலமீன் 
(தக்வியதுல் ஈமான் பக்கம்:19)

முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள்,ஸஹாபாக்கள் பிரதிநிதிகளான தாபியீன்கள்,
நல்லோர்கள்,முஹத்திஸீன்கள்,
புகஹாக்கள் பாதையில் செல்வது அதில் மரணிப்பதை துஆ கேட்கிறார்கள்."அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர்" என்பதாக அன்னார் கூறுவதாக குற்றம் சுமத்துவது எவ்வளவு பெரிய அநியாயம்? அப்பட்டமான காழாப்புணர்ச்சியை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்? 

அன்னார் எழுதியுள்ளார் :
அசலான வணக்கம் ஈமானை சரிசெய்வது தான்.ஈமானில் குறைகள் இருந்தால் அவரின் எந்த ஒரு வணக்கமும் ஏற்கப்படாது.ஈமான் சரியாக இருந்து அவரின் வணக்கம் குறைவாக இருந்தாலும் அதிகம்தான். ஒவ்வொருவரும் விரும்பவேண்டும். ஈமானை சரி செய்வதில் பெரும் முயற்சி அதனை பெற்றுக்கொள்ள அனைத்து காரியங்களை விட முற்படுத்த வேண்டும்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:19) 

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஈமானின் மற்ற அம்சங்களை மறுத்துவிட்டார் .
இப்போதும் யாராவது கூறுவாரானால், நேர்மையற்ற தன்மையை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? 

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்: 

يا غلام لا تكن مع النفس و لا مع الهوى و لا مع الدنيا ولا مع الآخرة ولا تتابع سوى الحق عز وجل 

வாலிபரே நீர் மனதுடன்,மனோஇச்சையுடன்,
உலகத்துடன்,மறுமையுடன் ஆகிவிடாதீர் அல்லாஹ்வை தவிர யாரையும் பின்பற்றாதீர்.
 (அல்பத்ஹுர்ரப்பானி பக்கம்:84)

இந்த நூலின் முன்னுரையில் பரேல்விய அறிஞர் அப்துல் ஹக்கீம் ஷரப் காதிரி மொழிப்பெயர்ப்பு குறித்து எழுதியுள்ளார்:
அல்பத்ஹுர்ரப்பானி பலவகையான மொழிப்பெயர்ப்புகளில் வெளிவந்துள்ளது.முன்னால் உள்ள மொழிபெயர்ப்பு பாஜில் ஜலீல் ஹழ்ரத் மெளலானா முப்தி முஹம்மது இப்ராஹிம் காதிரி 
(அல்பத்ஹுர் ரப்பானி 72,73)

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நபிமார்களை,
ஸஹாபாக்களை,நல்லோர்களை
உலமாக்களை,புகஹாக்களை பின்பற்ற வேண்டாம்.
அல்லாஹ்வை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக எழுதியுள்ளார்கள் என்பதாக  பரேல்விகள் வாதிட தயாரா? ஷைக் அவர்களின் மீது குப்ர், அவமரியாதை ஃபத்வா அளிக்க தயாரா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அப்பாவியான ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் மீது மட்டும் தான் பரேல்விகளின் அவதூறு?

பரேல்விகளின் மோதல்கள் !


வாசகர்களே! பரேல்விகளுக்கு மத்தியில் உள்ள மோதல்களின் தொடர்களை வாசித்து வருகிறோம்.பொதுவாக கருத்து வேறுபாடுகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.ஆனால் 
பரேல்விகளின் கருத்து மோதல்கள் குப்ர்,இணைவைப்பு,அவமரியாதை போன்றவையாகும்.எனவே இந்த கருத்து மோதல்களை சாதரணமாக எடுத்து கொள்ளமுடியாதவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹனீப் குரைஷி Vs அஷ்ரப் ஸிய்யாலவி 

ஹனீப் குரைஷி எழுதியுள்ளார் :
ஸவூதி நாட்டின் வஹ்ஹாபிகளிடமிருந்து கிடைக்கும் மொழிப்பெயர்ப்புகள்,
திருக்குர்ஆன் விளக்கவுரைகள் இலவசமாக கிடைக்கப் பெறுகின்றன. இவர்களை சேர்ந்தவர்களின் மொழிப்பெயர்ப்புகளை தவிர்ந்துகொள்ள வேண்டும்.ஏனெனில் பல இடங்களில் இறைத்தன்மை,
நுபுவ்வத் விஷயத்தில் களங்கம் கற்பிக்கப்படுகிறது.உதாரணமாக ஸவூதியில் இலவசமாக கிடைக்கும் தப்ஸுரின் 1098 ஆம் பக்கத்தில் சூரா கஸஸின் 68 வசன எண்ணிற்கு கீழே எழுதப்பட்டுள்ளது. நுபுவ்வத்திற்கு முன்பாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (தாம்) ரிஸாலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவோம் எனும் எண்ணம்,சந்தேகம் இல்லை.(ஆதாரம்:குஸ்தாகி கோன் பக்கம்:197)

பரேல்வி அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:
தன் மீது வேதம் தொடரும்,
இறங்கும்,ரசூல் ஆகுவோம் என்பது குறித்து அன்னாருக்கு  ஆசை (எண்ணம்) இல்லை.
(ஆதாரம்: தஹ்கீகாத் பக்கம்:168)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்: 
நாம் படைப்புகளின் பக்கம் அனுப்பப்படுவோம்.உம்மீது குர்ஆன் இறக்குவோம் என்பது அன்னாருக்கு தெரியவில்லை.
(ஆதாரம்:தஹ்கீகாத் பக்கம்:170)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்:
உமக்கு வஹி இறங்குவதற்கு முன்பாக உம்மீது வஹி இறக்கப்படும் எனும் எண்ணம் (உமக்கு) இல்லை.(ஆதாரம்:தஹ்கீகாத் பக்கம்:170)
மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்: நுபுவ்வத்தின் இடத்தில் ஆக்குவது, மதிப்புமிக்க ரிஸாலதின் கண்ணியத்தை பெறுதல்,அல்லாஹ்விடத்தில் உரையாடும் தகுதி பெறுதல் நீர் (முஹம்மதே) ஆதரவு, எதிர்ப்பார்ப்பு  வைக்கவில்லை. 
(தஹ்கீகாத் பக்கம்:172)

பரேல்வி யார்கான் நயீமி Vs ஹனீப் குரைஷி 

யார்கான் நயீமி எழுதியுள்ளார்:
ஒரு தடவை அல்ல.மாறாக பலதடவை சூனியம் செய்யப்பட்டார்.இதனால் அன்னாரின் சுயநினைவு,உணர்வு இல்லாமல் ஆனார்.
(ஆதாரம்:நூருல் இர்ஃபான் பக்கம்:448/ஷுஅரா 153)

ஹனீப் குரைஷி எழுதியுள்ளார்: நபிமார்கள், நல்லோர்கள், நெருக்கடியான மலக்குகளின் விஷயத்தில் அவர்கள் உணர்வற்று விட்டார்கள் என்பது தவறாகும்.நெருக்கமான வானவர்களின் மீது அல்லாஹ்வின் அச்சம் மற்றும் அவனின் மதிப்பு மேலோங்குவது சத்தியமாகும்.எனினும்,அவர்களை உணர்வற்று விடுவார்கள் என்பதாக கூறுவது அவர்களின் கண்ணியத்தில் களங்கமும், அவமதிப்புமாகும்.
(குஸ்தாகி கோன் பக்கம்:92)

மஜ்ஹருல்லாஹ் Vs பைஜ் அஹ்மத் உவைஸி 

பரேல்வி மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்:
அய்யூப் (அலை) அவர்களின் சோதனையானது அன்னாரின் அனைத்து குழந்தைகளும் மரணம்.அனைத்து செல்வமும் அழிந்துவிட்டது.உடல் முழுவதும் புழு ஏற்படும் அளவிற்கு நோய்வாய்ப்பட்டார்கள்.
(ஆதாரம்:தப்ஸீரே மஜ்ஹரே குர்ஆன் 2/981)

பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:
சில இஸ்ராயில் அறிவிப்புகளில் வருகிறது.அவர்களின் உடலில் புழு வந்துவிட்டது.இப்படிப்பட்ட அறிவிப்புகள் ஆதாரத்திற்கு ஏற்கத்தக்கதல்ல.அதில் தூதர் (அலை) அவர்களை கண்ணியத்தை குறைப்பதும், குறையும் உள்ளது.
(ஆதாரம்:அன்பியாயே கிராம் கி குர்ஆனி துஆயே பக்கம்:15) 

குறிப்பு: அன்பியாயே கிராம் கி குர்ஆனி துஆயே எனும் நூல் இணையத்தில் நாம் தேடிய வரை கிடைக்கவில்லை.இன்ஷா அல்லாஹ் கிடைத்த பிறகு இணைக்கப்படும்.
 

makkah live

Sample Text

madina live