24 Jun 2021

தேவ்பந்த் உலமாக்களின் மீது குப்ர் ஃபத்வா அவதூறே ! காழ்ப்புணர்ச்சியே ! - பாகம் : 3


காஸிம் நானூத்தவி ரஹ் அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி நபி என்பதை மறுக்கிறார்கள் என்பதாக அபாண்டமாக குற்றம் சுமத்தி காபிர் என்பதாக ரிஜாகான் பரேல்வி ஃபத்வா கொடுத்தான்.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் "தஹ்தீரின்னாஸ்" நூலில் பல இடங்களில் தனித்தனியான வாசகமாக இருந்த மூன்று வாசகங்களை ஒன்றாக இணைத்து திரித்து திரிபு செய்துள்ளான். இதனை தேவ்பந்த் உலமாக்கள் சுட்டிகாட்டிய போது,பரேல்விகள் இந்த வாசகங்கள் தனித்தனியான குப்ர் என்றனர்.

மூன்று வாக்கியங்களும் தனித்தனியான குப்ராகும்.
(ஆதாரம்:கரம் ஷாஹ் கா தன்கீதி ஜாயிஸா 135 பக்கம் ஓரக்குறிப்பு)

அபூகலீம் முஹம்மது சித்திக் ஃபானி பரேல்வி எழுதியுள்ளார்:

தஹ்தீருன்னாஸில் உள்ள இந்த மூன்று பாக்கியங்களும் தனது இடத்தில் தனித்தனியான குப்ராக உள்ளது.(ஆதாரம்:இப்திஹாரே அஹ்லுஸ்ஸுன்னத் பக்கம்:25)

ரிஜாகான் பரேல்வி குப்ராக கூறும் முதல் வாசகம்:
ஒரு வாதத்திற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்கேனும் ஏதேனும் நபி இருந்தாலும் இறுதிநபி என்பது பாக்கியமாக தான் இருக்கும்.(ஆதாரம்:தம்ஹீதே ஈமான் மஅ ஹுஸ்ஸாமுல் ஹரமைன் பக்கம்:7)

இது குப்ர் என்றால் பரேல்விகளின் பெரும் அறிஞர்களை காபிர் என்று தான் கூறவேண்டும்.👇👇👇

1) ஷாஹ் நகிஅலி கான் ஸாஹிப் அவர்கள் கூறுகிறார்கள்:
நான்கு நபிமார்கள் ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹள்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹள்ரத் கிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹள்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிக்கு பிறகு உயிரோடு இருக்கிறார்கள்.(ஆதாரம்:ஸுரூருல் குலூப் பக்கம்:225)

2) அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளான்:
நான்கு நபிமார்கள் இப்போதும் ஒரு நிமிடம் கூட மரணம் நிகழவில்லை.இருவர் வானத்தில் ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹள்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருவர் ஹள்ரத் கிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹள்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (ஆதாரம்:மல்ஃபூஜாத், பகுதி:4 பக்கம்:505)

3) பரேல்வி அறிஞர் முஹம்மது அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:
ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹள்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,ஹள்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப்படையான வாழ்வுடன் உயிரோடு இருக்கிறார்கள்.
(ஆதாரம்:கவ்ஸருல் ஹைராத் பக்கம்:70)
 
காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அவர்களின் காலத்தில் ஏதேனும் நபி இருந்தாலும் அண்ணலாரின் இறுநபித்துவம் பாக்கியாக இருக்கும் என்பதாக கூறியது குப்ர் என்றால் இந்த அனைத்து பரேல்விய அறிஞர்களும் கூறுவது இப்போதும் நான்கு நபிமார்கள் உயிரோடு உள்ளார்கள். எனவே பரேல்விகளின் கொள்கையின் படி நபியின் இறுதி நபித்துவம் இப்போதும் பாக்கியாக உள்ளதா? இல்லையா? 

இப்போது இறுதி நபித்துவம் பாக்கியாக இல்லை என்று பரேல்விகள் கூறினால் இறுதி நபித்துவத்தை மறுத்ததால் பரேல்விகளும் காபிர். இறுதி நபித்துவம் பாக்கியாக உள்ளது என கூறினால் காஸிம் நானூத்தவி(ரஹ்) அவர்கள் கூறியது சரியாகத்தான் உள்ளது.எனவே பரேல்விகள் எப்படி சமாளித்தாலும் தப்பிக்க முடியாது.

ஆக,பரேல்வி ரிஜாகானி காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் மீது அளித்த குப்ர் உண்மையில் அவதூறும், காழ்ப்புணர்ச்சியும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live