24 Jun 2021

தேவ்பந்த் உலமாக்களின் மீது குப்ர் ஃபத்வா அவதூறே! காழ்ப்புணர்ச்சியே! - பாகம் : 4


பரேல்விகளின் அஹ்மத் ரிஜாகான் தேவ்பந்த் உலமாக்களின் கருத்தை திரித்து புரட்டி காபிர் ஃபத்வா அளித்தான்.

அது முழுக்க தேவ்பந்த் உலமாக்களின் மீது காழ்ப்புணர்ச்சியே அவதூறே என்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து வருகிறோம்.அதனின் வரிசையில் மற்றோரு ஆய்வை பார்ப்போம்.

பரேல்விய அறிஞர்கள் தலைவனின் வழியை பின்பற்றி பல்வேறு வாதங்களை முன்வைத்து,காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் இறுதி நபித்துவத்தை மறுப்பதோடு  நபித்துவத்தையே மறுப்பதாகவும்  அபாண்டமாக பழியை சுமத்துகிறார்கள்.

பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

மற்ற நபிமார்கள் நுபுவ்வத் எனும்  தன்மையுடன் عرض (ஒன்றை  சார்ந்திருப்பது) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ذات (அசலாக) இதனால் நுபுவ்வத்தின் தொடர்பு அண்ணலாருடன் நிறைவு பெறுகிறது..........இது மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தை மறுப்பதாகும்.
(இபாராதே அகாபிர் கா தஹ்கீகி தன்கீதி ஜாயிஜா பாகம்:1 பக்கம்:198)

ஸயீத் அஹ்மத் காஜிமி எழுதியுள்ளார்:
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நுபுவ்வத்துடன் ذات (அசலாக) மற்ற நபிமார்கள் நுபுவத்துடன் عرض (ஒன்றை சார்ந்திருப்பது) இருக்கிறார்கள்.உறுதியாக முற்றிலும் அசத்தியமான கருத்து,வீண் வாதமாகும்.(ஆதாரம்;மகாலாதே காஜிமி பக்கம்:)

மெளலவி தபஸ்ஸும் ஷாஹ் புகாரி எழுதியுள்ளார்: 
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நுபுவ்வத்துடன் ذات (அசலாக) மற்ற நபிமார்களின் நுபுவ்வத்,ரிஸாலத் வெறும்  عرض (ஒன்றை சார்ந்திருப்பது) வெளிரங்கமானது என்பதாக கூறுவது சங்கையான குர்ஆனில் கருத்து ரீதியாக திரிப்பதும், நபிமார்களின் நுபுவ்வத்தை தெளிவாக மறுப்பதுமாகும்.
(ஆதாரம்:கதமே நுபுவ்வத் வ தஹ்தீருன்னாஸ் பக்கம்:197)

பரேல்விகள் கூறவருவது காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தையும் மறுக்கிறார்கள்.

பரேல்விகளின் மற்றொரு சாராரின் கருத்துக்கள்...

இது ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அவர்களின் புழக்க வார்த்தையாகும்.
ஒவ்வொருவருக்கும் புழக்க வார்த்தை இருக்க முடியும்.(ஆதாரம்:தஹ்தீரின்னாஸ் மேரி நஜர் மே பக்கம்:40)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்:
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நுபுவ்வத் ذات மற்ற நபிமார்களின் நுபுவ்வத் عرض இது அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையாகும்.(ஆதாரம்:தஹ்தீரின்னாஸ் மேரி நஜர் மே பக்கம்:27)

மெளலவி அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:
தூதுவத்தின் தொடர்பின் அசல்,அடிப்படை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்.(ஆதாரம்:கவ்ஸருல் ஹைராத் பக்கம்:35)

பரேல்வி ரிஜாகானின் தந்தை நகி அலிகான் எழுதியுள்ளார்:
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நுபுவ்வத்தின் பதவியில் அசலாக இருக்கிறார்கள்.

சந்தேகமும் நிவர்த்தியும்
தஹ்தீரின்னாஸில் ذات என்பதாக வந்துள்ளது.பரேல்வி அறிஞர்களின் நூலில் அசல் என்பதாகத்தான் வந்துள்ளது.
பதில்: பரேல்விய அறிஞர் தபஸ்ஸும் புகாரி அசல் எனும் வார்த்தையே ذات இன் மொழிபெயர்ப்பு தான்.
(ஆதாரம்:கதமே நுபுவ்வத் அவர் தஹ்தீருன்னாஸ் பக்கம்:162)

குலாம் மெஹ்ரே அலி எழுதியுள்ளார்:
இங்கு ذات ற்கு பகரமாக அசல் வந்துள்ளது.அசலிற்கு நகரமாக ذات வந்துள்ளது.
(ஆதாரம்:தேவ்பந்தி மத்ஹப் 595)

இது அல்லாமல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ذات மற்ற நபிமார்கள்عرض என்பதாக பரேல்விய அறிஞர்களின் நூலில் உள்ளது.எனினும்,அந்த நூல்கள் இணையத்தில்கிடைக்கவில்லை.அதனால் அவைகளின் பெயர் மட்டும் எழுப்படுகிறது.அதா முஹம்மது நக்ஷபந்தி ஜாமிஆ இஸ்லாமிய்யா கைருல் மஆத் முல்தான் ஷைகுல் ஹதீஸ் நூல் 'குலாஸதுல் கலாம்',மெளலவி அப்துல் மஜீத் கான் ஸயீதியின் நூல் 'நுபுவ்வத் இன்த ஷைகைன்' உள்ளது.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் இறுதி நபித்துவத்தை மறுப்பதுடன் மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தை மறுப்பதாக பரேல்விகள்  வாதிடுவது இரட்டை நிலைப்பாடகும்.அவ்வாறு வாதிட்டால் பரேல்வி அறிஞர்களும் மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தை மறுக்கிறார்கள் என்பதை ஏற்கவேண்டும்.அல்லது பரேல்விகள் பொய்,பழி, அவதூறு சுமத்தினோம் என்பதை ஒத்துக்கொள்ளட்டும்.
ஆக,உண்மையில் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் மீது கொடுக்கப்பட்ட பத்வா முழுக்க அபாண்டமும்,புரட்டும், காழ்ப்புணர்ச்சியும் என்பது மென்மேலும் வலுப்பெறுகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live