27 Jun 2021

தேவ்பந்த் உலமாக்களின் மீது குப்ர் ஃபத்வா அவதூறே ! காழ்ப்புணர்ச்சியே ! - பாகம் : 5


ரிஜாகான் பரேல்வி அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் ஹிப்ஜுல் ஈமானில் உள்ள வாசகத்தை புரட்டி,கருத்துக்களை திரித்து காபிர் பத்வா அளித்தார்.

பதாவா ரிஜ்விய்யா வின் 15 ஆம் பக்கத்தில் பொருளடக்கத்தில் வரும் வாசகம் .

مولوی اشرفعلی نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کے علم کو جانوروں پاگلوں،بچوں کے علم سے تشبیہ دی جس پر علمائے حرمین شریفین نے انھیں کافر کھا

மெளலவி அஷ்ரப் அலி,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இல்மை விலங்குகள்,பைத்தியங்கள்,
குழந்தைகளின் இல்முடன் ஒப்பிட்டுள்ளார்.இதன்பேரில் ஹரமைன் ஷரீபைன் உலமாக்கள் காபிர் என பத்வா கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இல்மை இவைகளுடன் உதாரணம் கூறியதுதான் காபிர் என்பதன் காரணம் என ரிஜாகான் பரேல்வி கூறியுள்ளார்.

அஹ்மத் யார்கான் நயீமி 
ஜாஅல் ஹக் நூலில் எழுதியிருப்பதை பாருங்கள் :

காபிர்களே! நீங்கள் எம்மைக் கண்டு பயப்படாதீர்கள் நான் உங்களின் இனம்தான்.அதாவது நான் மனிதன் தான். வேட்டைக்காரன் வேட்டைப்பிராணிகளின் சப்தத்தை வெளியாக்கி நான் வேட்டையாடுகிறேன்.
(ஜாஅல் ஹக் பக்கம்:176)

இந்த ஒப்பீடு எவ்வளவு மோசமானது பெருமானாரை இழிவுப்படுத்துவது என்பதை நம் தளத்தில் ஏற்கனவே விரிவாக பதிவு செய்துள்ளோம்.அதனின் லிங்க் 👇👇

இதில் வேட்டைக்காரனுடன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும்,
அவனின் சப்தத்துடன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்தையும் ஒப்பிடுவது சரியா? அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் காபிர் என்றால் அஹ்மத் யார் கான் காபிர்தானே! 

இதற்கு பரேல்வி அஷ்ரப் ஸிய்யாலவி அவர்கள் அளிக்கும் பதில்:

உதாரணத்திலே உவமைக்குரிய காரணத்தை தான் கவனிக்கவேண்டும்.
ஒட்டுமொத்தமான விஷயத்தில் இணைந்திருப்பதில்லை.(கவனிக்ககூடாது).
 (ஹாஷியா முனாஜிரா ஜங்க் பக்கம்:56)

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களுக்கு ஒரு நியாயம்.அஹ்மத் யார் கான் பரேல்விக்கு ஒரு நியாயம்.
இதுதான் பரேல்விகளின் இரட்டை நிலைப்பாடு.

அதுமட்டுமின்றி ஹிப்ஜுல் ஈமானில் வரும் வாசகத்தில் ایسا (இவ்விதமாக) என்பதாக வந்துள்ளது.இந்த வார்த்தை ஒப்புமைக்கு வராது.ஒரு வாதத்திற்கு வந்திருப்பதை ஏற்றாலும் உதாரணம்தான் கூறப்பட்டுள்ளது.
எனவே அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் மீது காபிர் என்பதாக தீர்ப்பானது முற்றிலும் பொய்யும்,அவதூறும்,
காழ்ப்புணர்ச்சியும் நிறைந்துள்ளதை தெளிவாக புரியமுடிகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live