17 Jun 2021

கண்ணியத்தின் பேரில் ஸஜ்தாவில் பரேல்வி அறிஞரின் பெரும் அறிஞர்கள் மீது விமர்சனம் !


பரேல்விய அறிஞர் ஸய்யத் முஜம்மில் ஹுஸைன் காஜிமி "ஸவூதி தப்ஸீர் பர் ஏக் நஜர்" எனும் நூலில் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை வரம்புமீறி விமர்சித்துள்ளார்.இறுதியில் அவரின் குற்றச்சாட்டு,விமர்சனம் பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் மற்றும் பெரும் உலமாக்களின் மீதும் திரும்பியுள்ளது.

பரேல்விய அறிஞர் முஸம்மில் ஹுஸைன் தக்வியதுல் ஈமான் பக்கம்:78 இல் இருப்பதாக எழுதியுள்ள வாசகம் :

(கண்ணியத்தின் பேரில் ஸஜ்தா செய்தால் என்ன தவறு என்பதாக எண்ணுகின்றனர்? இதன் மூலம் இணைவைப்பு ஏற்படும்.ஈமான் உள்ளத்தை விட்டு வெளியேறிவிடும் என்பதை நினைவில் வைக்கட்டும்)

இதனை குறித்து பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

இது ஷரீஅத்தில் ஹராமான காரியமாகும்.திஹ்லவி அவர்கள் இணைவைப்பு என்பதாக கூறுவது அல்லாஹ் அவனின்தூதரின் மீது இட்டு கட்டுவதும், மார்க்கத்தில் வரம்புமீறுவதாகும்.
(ஆதாரம்: ஸவூதி தப்ஸீர் பர் ஏக் நஜர் பக்கம்:196)

பரேல்விய அறிஞர் இருவிஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

1) கண்ணியத்தின் பேரில் செய்யும் ஸஜ்தாவை இணைவைப்பு என்பது வரம்பு மீறும் செயல்.

2)அல்லாஹ், அவனின் தூதரின் மீது பொய்யுரைப்பது‌.

மற்றொரு பெரும் அபாண்டத்தை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது சுமத்துகிறார்.

மிர்ஸா காதியானியை போன்று தனக்கும் தூதுத்துவம் உண்டு என்பதாக எண்ணுவதாகும். இதன்மீது ஏதேனும் புதிய வஹி வந்ததா? இத்தனை நாட்கள் வரை கண்ணியத்தின் பேரில் செய்யும் ஸஜ்தா பெரும்பாவமாக மட்டும் இருந்தது.இன்று முதல் இணைவைப்பாகி விட்டது.ஈமான் வெளியேறிவிடுகிறது.
(ஆதாரம்: ஸவூதி தப்ஸீர் பர் ஏக் நஜர் பக்கம்:)

நமது பதில்: 
(ஹழ்ரத் மெளலானா  முனாஜிர் அபூ அய்யூப் காதிரி தாமத் பராகாதுஹு அவர்கள் கூறுகிறார்கள்:
தக்வியதுல் ஈமான் நூலில் தேடியும் பரேல்விய அறிஞர் கூறுவது கிடைக்கவில்லை

ஒரு வாதத்திற்கு ஏற்றாலும் அறியாதவர்கள் விளங்கி கொள்ளட்டும்.ஷிர்க் என்பது பல வகைகள் உண்டு.ஆகுமானது என்பதில் தொடங்கி குப்ரு வரை உள்ளது.

உதாரணமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்வதை இணைவைப்பு என்பதாக கூறியுள்ளார்கள்.எனினும் சத்தியம் செய்துள்ளார்.இது ஆகுமானது என்பதில் சேரும்.

எனவே ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஷிர்க் என்பதாக கூறியது பெரும்பாவம் என புரியமுடிகிறது.

அடுத்து ஈமான் உள்ளத்தை விட்டு சென்றுவிடும் என்பதன் விளக்கம் மிஷ்காத் போன்ற நூல்களில் வந்துள்ள ஹதீஸ் முஃமீன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஈமான் உள்ளத்தை விட்டு சென்றுவிடும்.இதன் மூலம் அவர் காபிராகிவிடுவாரா? 
மாறாக பரிபூரண ஈமானை விட்டு தூரமாகிவிடுவார்.இந்த அர்த்தத்தில் தான் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) கூறியுள்ளார்.இப்போதும் புரியவில்லையெனில் இதனையும் பாருங்கள்!

ஹழ்ரத் ஷைகுல் மஷாயிஹ் ஸய்யித் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:

 அல்லாஹ் அல்லாதவரின் பக்கம் முன்னோக்குவது ஷிர்க் என கூறியுள்ளார்.
(ஆதாரம்:புதூஹுல் கைப், பக்கம்:161)

மற்றொரு இடத்தில் அன்னார் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:

ஷிர்க் ஏற்படாமல் இருப்பதற்காக ஏதேனும் விருப்பம்,ஆசை,நாட்டத்தை வெளிப்படுத்தாதீர்.(ஆதாரம்:புதூஹுல்கைப்,பக்கம்:24)

மற்றொரு இடத்தில் அன்னார் எழுதியுள்ளார்:

 சிலைகளை வணங்குவது மட்டும் ஷிர்க் இல்லை.மாறாக ஷிர்க் என்பது தனது இச்சைகளை பின்பற்றுவது,அல்லாஹ்வை தவிர உலக,மறு உலகத்தின் ஏதேனும் விஷயத்தை விரும்புவது.(ஆதாரம்:புதூஹுல் கைப்,பக்கம்:26)

அடுத்த விமர்சனம்....
👇👇👇👇👇👇👇👇👇👇

கண்ணியத்தின் பேரில் செய்யும் ஸஜ்தாவை இணைவைப்பு என்பவர் நுபுவ்வத்தை வாதிடுகிறார் அல்லது மார்க்கத்தில் வரம்புமீறி அல்லாஹ் அவனின் தூதரின் மீது பொய்யுரைக்கிறார்.

பரேல்விய அறிஞர் வரம்புமீறி,சகட்டுமேனிக்கு ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை விமர்சித்துள்ளார்.இது எவ்வாறு திரும்பியுள்ளது என்பதை பாருங்கள்.

பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார் :

அல்லாஹ் அல்லாதவருக்கு கண்ணியத்தின் பேரில் ஸஜ்தா செய்பவர் இறைநிராகரித்து விட்டார்.(ஆதாரம்:பதாவா ரிஜ்விய்யா 22/459)

பரேல்விய ரிஜாகான் பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். ஷரஹ் நிகாயா,மஜ்மஉல் அன்ஹர்,பதாவா ஷாமிய்யா,ஜாமிஉர் ருமூஜ்,காயதுல் பயான்,தப்யீனுல் ஹகாயிக்,நிஸாபுல் இஹ்திஸாப். 

ரிஜாகான் பரேல்வி நுபுவ்வத்தை வாதிடுபவர், அல்லாஹ் அவனின் தூதரின் மீது பொய்யுரைப்பவர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.
அது மட்டுமின்றி இந்த அனைத்து நூலின் பெரும் உலமாக்கள் பெரியோர்கள் நுபுவ்வத்தை வாதிடுபவர்களா? அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவர்களா? என்பதை கூறுங்கள்.

இந்த வாசகத்தில் உள்ள குப்ர் என்பதற்கு மாற்றுப் பொருள் கூறமுடியும் என்று வாதிட்டால் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் எழுதியதற்கு மாற்றுப் பொருள் கூற முடியாதா?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live