18 Jun 2021

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ‎غير الله (அல்லாஹ் அல்லாதவர்),من دون الله (அல்லாஹ்வையன்றி) ‏என கூறுவதில் பரேல்விகளின் விளையாட்டு ‎.


1) பரேல்விகளின் ஹகீமுல் உம்மத் அஹ்மத் யார்கான் நயீமி அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை (غير الله) அல்லாஹ் அல்லாதவர் என்பதாக கூறுவது :

ஹழ்ரத் ரபீஆ (ரளி) அவர்கள் நபியிடத்தில் சுவனத்தை கேட்ட போது அண்ணலார் அவர்கள் அல்லாஹ்வையன்றி என்னிடத்தில் வேண்டி நீர் முஷ்ரிக் ஆகிவிட்டீர் என்பதாக கூறவில்லை.மாறாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (அவரின் வேண்டுதலை) ஏற்றார்கள்.வேறு ஏதேனும் கேளுங்கள் என்றார்கள்.இது அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி வேண்டுவதாகும் என்பது இந்நிகழ்வின் மூலம் நிரூபணமாகிறது.
(ஆதாரம்:ஜாஅல் ஹக் பக்கம்:195)


வாசகர்களே இறுதியான வாசகத்தை கவனியுங்கள்!

இதில் அஹ்மத் யார்கான் நயீமி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் அல்லாதவர் என்பதாக கூறியுள்ளார். இந்த நூலை குறித்து பரேல்விகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டும்.எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு ஷைத்தான் இருக்கமாட்டான்.

2) அறிஞர் பீர் நஸீருத்தீன் நஸீர் கோல்ரா எழுதியுள்ளார்:

  அல்லாஹ்வையன்றி என்பதில் காபிர்கள்,முஷ்ரிகீன்கள் உள்ளடங்குவதை போன்று நபிமார்களும்,நல்லோர்களும் நெருக்கமான வானவர்களும் உள்ளடங்குவார்கள்.
(ஆதாரம்:இஆனத் வ இஸ்திஆனத் கி ஷரயீ ஹைய்ஸிய்யத் பக்கம்:86)

 பரேல்விய அறிஞர் அப்துல் ஹகம் ஷரப் காதிரி அவர்கள் தனது நூலான "தத்கிரா அகாபிரே  அஹ்லுஸ்ஸுன்னத்தில்" பக்கம்:351 பீர் நஸீருத்தீன் நஸீர் அவர்களை புகழ்ந்து நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.

மேலும் பரேல்வி கவ்கப் நூரானி அவர்கள் ஹகாயிக் எனும் நூலின் 90 ஆம் பக்கத்தில் நற்சான்று தந்துள்ளார்.


3) பரேல்விய அறிஞர் முனாஜிர் அஷ்ரப் ஸிய்யாலவி அவர்களும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வையன்றி என்பதாக கூறியுள்ளார்:

தொழுகையில் தான் அல்லாஹ்வையன்றி கண்ணியப்படுத்துவது ஈருலக தூதரை கண்ணியப்படுத்துவது செயல்படுத்தப்படுகிறது.(ஆதாரம்:முனாஜிரா ஜங்,பக்கம்:78)

4) மெளலவி நயீமுத்தீன் முராதாபாதி அவர்கள் கஜாயினுல் இர்பானில் 107 ஆம் பக்கத்தில் مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ இந்த வசனத்தின் விரிவுரையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வையன்றி என்பதாக கூறியுள்ளார்.

இனி பரேல்விகளின் மற்றொரு முகத்தை பார்ப்போம்👇👇👇👇👇

1) அஹ்மத் யார்கான் நயீமி அவர்கள் தனது கருத்திற்கு எதிராக கூறுகிறார்  :

நபிமார்கள், இறைநேசர்கள் அல்லாஹ்வையன்றி என்பவர்கள் அல்ல. அவனை சேர்ந்தவர்கள் தான்.
(ஆதாரம்:ரஸாயீலே நயீமி 505)

இதில் அஹ்மத் யார்கான் நயீமி தனது கருத்திற்கு எதிராக முரண்பட்டுள்ளார்.

2) கர்னல் அன்வர் மதனி எழுதியுள்ளார்:

மடையர்கள்.
அதனைவிட உயர்ந்தவர்கள்.
அல்லாஹ்வையன்றி எனும் பொருளில் நபிமார்களை,நல்லோர்களை சேர்க்கிறார்கள்.இது இல்மின் குறையும் நுண்ணறிவின் குறைபாடுமாகும்.(ஆதாரம்:குல்லி இல்மே கைப் பக்கம்:41)

மேலும்  கொதித்தெழுந்து கடுமையாக எச்சரிக்கிறார்....

இப்போதும் ஏதேனும் மடையன் முரண்டுபிடித்தால் புரிந்து கொள்ளட்டும்.அவன் அல்லாஹ்வின் துரோகி.ஏனெனில் அவன் அல்லாஹ்வின் வசனங்களை வளைக்கிறான்
(தவறாக கையாள்கிறான்).அல்லாஹ்வின் துரோகிக்கு தண்டனை கொலைதான்.(ஆதாரம்:குல்லி இல்மே கைப் பக்கம்:41)

3) பரேல்விகளின் ஷைகுல் குர்ஆன் பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:

எனவே அல்லாஹ்வையன்றி என்பதில் ஒவ்வொரு பரக்கத்துமிக்க,கண்ணியமிக்க நபரை சேர்ப்பது மிகப்பெரும் மடத்தனமாகும்.
(ஆதாரம்:மேரே லியே அல்லாஹ் அவ்ர் உஸ்கா ரஸுல் ஹி காஃபி பக்கம்:50)

மேலும் அந்த நூலின் 72 ஆம் பக்கத்தில் கர்னல் அன்வர் மதனியின் வாதத்தை வலுவூட்டும் விதமாக அவரின் வாசகத்தை வார்த்தை மாறாமல் எடுத்தெழுதியுள்ளார்.

பரேல்வி அறிஞர்கள் கர்னல் அன்வர் மதனி,பைஜ் அஹ்மத் உவைஸி போன்றவர்களின் கண்ணோட்டத்தில் 
அஹ்மத் யார்கான் நயீமி,பீர் நஸீருத்தீன் நஸீர்,அஷ்ரப் ஸிய்யாலவி..

 1) மடையர்கள் அதனைவிட உயர்ந்தவர்கள்
 2)குறைந்த அறிவுடையவர்கள்
 3) நுண்ணறிவு குன்றியவர்கள்
 4) முரண்டு பிடிப்பவர்கள்
 5) அல்லாஹ்வின் துரோகி 
6) குர்ஆனின் வசனங்களை வளைப்பவர்கள் 
7)கொல்வது தான் தண்டனை 
8) மிகப்பெரும் மடத்தனம் 

பரேல்விகளின் முனாஜிர் மெளலவி உமர்,மற்ற அறிஞர்களை மிஞ்சும் விதமாக கூறுகிறார்:

 தூதர்களை அல்லாஹ் அல்லாதவர் என கூறுபவர்கள் மீது குப்ர் என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.
(மிக்யாஸே ஹனபிய்யத் பக்கம்:43)

பரேல்விய முனாஜிர் மெளலவி உமரின் கண்ணோட்டத்தில் அஹ்மத் யார்கான் நயீமி,பீர் நஸீருத்தீன் நஸீர்,அஷ்ரப் ஸிய்யாலவி இறைநிராகரிப்பு நிரூபணமாகிறது.

அறிஞர் பீர் நஸீருத்தீன் நஸீர் பரேல்விய அறிஞர்களுக்கு மறுப்பு கொடுத்தவாறு எழுதியுள்ளார்: 

அல்லாஹ்வையன்றி எனும் வார்த்தையில் அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு பயன்படுத்தப்படாது என்பதாக பிடிவாதமாக கூறுபவர்களிடத்தில் ஹள்ரத் ஸய்யிதுனா ஈஸா (அலை) அவர்களை விட பெரியோர்கள்
ஞானவான்களின் அந்தஸ்து உயர்ந்ததா? (ஆதாரம்:இஆனத் வ இஸ்திஆனத் கி ஷரயி ஹைஸிய்யத் பக்கம்:100)

அதே நூலின் 103 ஆம் பக்கத்தில் அல்லாஹ்வையன்றி என்பதில் சிலைகள் மட்டும் தான்.மனிதன் இல்லை என்பவர்கள் தவறில் இருக்கிறார்கள். 


ஆக பீர் நஸீருத்தீன் நஸீர் அவர்களின் கண்ணோட்டத்தில் கர்னல் அன்வர் மதனி,உமர், அஹ்மத் யார்கான்,பைஜ் அஹ்மத் உவைஸி ...

1)முரண்டு பிடிப்பவர்கள்
2)தவறில் உள்ளனர்
3)பரேல்விகள், பெரியோர்களை,
நல்லோர்களை ஈஸா (அலை) அவர்களை விட உயர்வாக கருதுகிறார்கள்.
ஏனெனில் ஹழ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வையன்றி என்பதில் சேருவார்கள்.
பெரியோர்கள், ஞானிகள் சேரமாட்டார்கள்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live