20 Jun 2021

தேவ்பந்த் பெரியோர்களின் மீது பரேலவிகள் கொடுத்த குப்ர் ஃபத்வா காழ்ப்புணர்ச்சியே ! அவதூறே! - பாகம் :1


சான்று:(1)

தேவ்பந்த் உலமாக்களின் பெயர் கூறாமல் பரேல்விகளிடத்தில் ஃபத்வா கேட்டால் (தேவ்பந்த் உலமாக்களின் வாக்கியத்தை அறியாமல் இருக்கவேண்டும்) உடனடியாக குப்ர் இல்லை என்பதாக தீர்ப்பு தருவார்கள்.

பரேல்விகளின் பெரியார் கமருத்தீன் ஸிய்யாலவி அவர்களிடத்தில் ஜைத் எனும் பெயரில் மார்க்க தீர்ப்பு கேட்டு வினா எழுப்பப்பட்டது...

ஜைத் கூறுகிறார்: காதமுன்நபிய்யீன் என்பதில் இறுதி என்பது மட்டும் பொருள் இல்லை.மாறாக,அனைத்து நபிமார்களும் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நூர்களை,பைஜ்கள்  (ஆன்மீக வளர்ச்சிகள்) பெறுகிறார்கள் என்பதாக கூறினால் ஜைதின் மீது குப்ர் உண்டாகுமா?

பதில்: ஜைதின் மீது குப்ர் ஏற்படாது.

(ஆதாரம்:அன்வாரே கமரிய்யா பாகம்:3, பக்கம்:149)

இதன்  பேரில் பரேல்விகள், ஸிய்யாலவிக்கு எதிராக கூச்சலிட்டனர் கொதித்தெழுந்தனர். இந்த வாக்கியத்தின் பேரில் தான் அஹ்மத் ரிஜாகான்,காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களை காபிர் என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

இதனால் ஸிய்யாலவி ஸாஹிப் தனது ஃபத்வாவை மாற்றிக் கொண்டார். ஹள்ரத் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் வாசகத்தில் வித்தியாசம் உள்ளது.இதனால் அவரின் மீது குப்ர் ஏற்படத்தான் செய்யும்.மேலும் நானூத்தவி (ரஹ்) அவர்களின் வாக்கியங்கள் பலதரப்பட்டது என்பதை நிரூவுவதற்கு தவறான வாதங்களை முன்வைத்தார்.அதில் ஒன்று நானூத்தவி (ரஹ்) அவர்கள் காதமுன் நபிய்யீன் பொருளில் لا نبي بعده  அண்ணலாருக்கு பிறகு நபி இல்லை என்பதை ஏற்காமல் பிடிவாதமாக இருந்தார் என்பதாக பொய்யுரைத்தார்.

ஆனால் எதார்த்தம் என்னவென்றால் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் தஹ்தீருன்னாஸில் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளார்:

காதமுன் நபிய்யீன் பொருளில் இறுதி நபி என்பதில் இஜ்மா உம்மத் உள்ளது. இந்த பொருளை ஏற்காதவர் காபிர் என தீர்ப்பளித்துள்ளார்.

ஹள்ரத் அவர்கள் காதமுன் நபிய்யீனில் இறுதிநபி என்பதை ஏற்பதுடன் அதிகப்படியான பொருளையும் கூறியுள்ளார்.மற்ற நபிமார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பைஜ்களை (ஆன்மீக வளர்ச்சிகளை) பெற்றவர்கள்.இந்த விஷயத்தை ஜைதின் பெயரில் கேட்ட போது ஸிய்யாலவி குப்ர் இல்லை என்பதாக தீர்ப்பளித்துள்ளார். தேவ்பந்த் உலமா என்றவுடன் காபிர் என்பதாக தீர்ப்பை மாற்றிவிட்டார்.

ஆகவே பரேல்விகள் தேவ்பந்த் பெரியோர்களை காபிர்கள் என்பதாக தீர்ப்பளித்தது அவதூறு, காழ்ப்புணர்ச்சி என்பது தெளிந்த நீரோடை போல்,பகலின் வெளிச்சம் போல் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சான்று:(2)

தேவ்பந்த் உலமாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிப்பவர்கள் என்பதை நிறுவுவதற்கு ஏறத்தாழ பரேல்விய உலமாக்கள் ஒரு விதியை முன்வைக்கின்றனர். அவமதிப்பின் அடிப்படை உர்ஃப் எனும் வழமை தான். இதில் இரு பரேல்விய அறிஞர்களின் கருத்துக்களை மட்டும் முன்வைக்கிறோம்.

பரேல்விய அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:

திரட்டுதல்,
பழித்தல்,குறைகூறுதல், இகழ்தல் வார்த்தைகளில் கூறியவரின் நோக்கம்,நாட்டம் கவனிக்கப்படாது.மாறாக உர்ஃப் எனும் வழமை, வார்த்தையிலிருந்து 
 உடனடியாக புரியும் பொருள்தான் (கவனிக்கப்படும்) .
(ஆதாரம்:இபாராதே அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஜா பாகம்:1, பக்கம்:23)

வார்த்தைகளின் அர்த்தங்கள்....

இல்லை.மாறாக பொதுவான உர்ஃப் எனும் வழமையில் அதனின் கருத்து,நோக்கத்தின் பேரில் சட்டம் கொடுக்கப்படும்.
(ஆதாரம்:இபாராதே அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஜா பாகம்:1, பக்கம்:25)

மற்றொரு பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

சிலர் மரியாதையற்ற வார்த்தைகளின் பொருளில் பலதரப்பட்ட மாற்று விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.எனினும்,ஏதேனும் மாற்று விளக்கத்தால் பொருள் சரியாகுவதுடன் பொதுவான உர்ஃப் எனும் வழமை, மொழிநடையில் அம்மொழியை சேர்ந்தவர்களிடத்தில் அந்த வார்த்தையில் இழிவு செய்வது பெறப்பட்டால் அனைத்து மாற்று விளக்கங்களும் வீணானது என்பதை புரிந்து கொள்வதில்லை.
(ஆதாரம்: அல்ஹக்குல்முபீன் பக்கம்:28)

இனி இந்த விதியை வைத்துக்கொண்டு எவ்வாறு பரேல்விகள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்பதை இனி பார்ப்போம்!

பரேல்விய அறிஞர் ஷரீபுல் ஹக் அம்ஜதி அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் தேவ்பந்த் உலமாக்கள் காபிர்கள் என்பதாக தீர்ப்பு எழுதியுள்ளார்:

ஏதேனும் ஒருவரை சகோதரர் என்பதில் அவருடன் சரிசமம் என்பதாக வாதிடுவதாகும். நமது உர்ஃப் எனும் வழமையில் நம்மை விட மூத்தவரை,வயதானவரை செச்சா,தாதா போன்று அழைப்பார்கள்.நபிமார்களுடன் (அடியான்) சரிசமம் என்பதாக நம்பிக்கை கொள்பவர் கட்டாயம் காபிர்.மேலும் சகோதரர் என்பதில் சரிசமம் என்பதாக வாதம் உள்ளது.இதனால் இந்த செயல் கட்டாயம் குப்ராகும்.
(ஆதாரம்:ஃபதாவா ஷாரிஹ் புகாரி 1/583)
ஆக இங்கு சகோதரர் என்பது உர்ஃப் எனும் வழமையில் சரிசமம் என்பதாக வாதிடுவதாகும் என கூறியுள்ளார்.

ஒரு பரேல்வி,ஷரீபுல் ஹக் அம்ஜதியிடத்தில் பைஹகியிலிருந்து ஒரு ரிவாயத்தை அனுப்பியுள்ளார்.

வானவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சகோதரர் என்பதாக கூறியுள்ளனர்
இது குறித்து விளக்கம் என்ன? இப்போது ஷரீபுல் ஹக் அம்ஜதியின் உர்ஃப் எனும் வழமை மாறிவிட்டது. 

இந்த ஹதீஸ் எனது பார்வையில் படவில்லை . இவ்வாறு ஹதீஸ் இருந்தால் மாற்றுவிளக்கம் தரலாம்.வானவர்கள் சரிசமம்,ஒத்தவர்கள் எனும் நிய்யத்தில் கூறவில்லை.மாறாக பிரியத்தை வெளிப்படுத்த கூறியுள்ளனர்.எவ்வாறெனில் நமது பொதுவான உர்ஃபு எனும் வழமையில் பேசுபவரை சகோதரர் என்போம்.வஹ்ஹாபிகளுக்கு மாற்றமாக அவர்கள் கூறுவது மூத்த சகோதரருக்கு செய்யும் சங்கைக்கு ஏற்ப நபிக்கு செய்யுங்கள்.இந்த வாக்கியத்தில் இழிவுப்படுத்துவது மிகைத்துள்ளது.வானவர்களுக்கு மாற்றமாக அவர்களின் சொல்லில் பிரியத்தை வெளிப்படுத்துவது நோக்கமாகும்.இத்துடன் வானவர்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பை,பரிபூரணத்தை வெளிப்படுத்தும் விதமாக அல்லாஹ்வின் பிரதிநிதி என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கூறியுள்ளனர்.எனவே வஹ்ஹாபிகளின் குப்ர் சொல்லில் இது போன்ற மாற்று விளக்கங்கள் தரமுடியாது.(ஆதாரம்:ஃபதாவா ஷாரிஹ் புகாரி 1/347)
முந்தைய ஃபத்வாவில் தேவ்பந்த் உலமாக்கள் என்பதால் சகோதரர் என்பது வழமையில் சரிசமம் என்பதாக வாதிடுவது எனக் கூறி குப்ர் பத்வா அளித்துள்ளார்.இந்த ஃபத்வாவில் சகோதரர் என்பதாக அழைப்பது வழமையில் தவறில்லை என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.இந்த இரண்டு தீர்ப்பில் எது சரி? 
ஆக பரேல்விகள் தேவ்பந்த் உலமாக்களின் மீது குப்ர் பத்வா அளித்தது காழ்ப்புணர்ச்சிதான்.
அவதூறுதான் என்பது நிரூபணமாகிறது.

முக்கிய குறிப்பு: பரேல்விகளின் உர்ஃபு எனும் வழமையின் விதியில் பல்வேறு குறுக்கு கேள்விகள் உள்ளது.
முரண்பாடுகளும் உள்ளது.இதனை இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live