3 Dec 2018

பரேல்விகளின் நபி அஹ்மத் ரிஜாகான் பரேலவி !


பரேல்விகள் அஹ்மத் ரிஜாகானை நபிமார்களை விட மேன்மை மிக்கவர் என்பதாக கருதுகிறார்கள்.இதனின் உண்மை நிலையை தங்களுக்கு முன்பாக தெளிவுப்படுத்தி கூறுகிறேன்.

நமது தாழ்மையான வேண்டுகோள் இந்த கட்டுரையை கவனத்துடன் படித்துப் பாருங்கள்!

அஹ்மத் ரிஜாகான் கவ்ஸர் எனும் நீரை புகட்டுபவர் :

   அனைத்து முஸ்லிம்களின் கொள்கை கவ்ஸர் நீரை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் புகட்டுவார்கள்.எனினும்,பரேல்விகள் இதற்கு எதிரான கொள்கையின் பேரில் கவ்ஸர் நீரை புகட்டுபவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி என்பதாக கூறுகின்றனர்

جب زبانیں سوکھ جائیں پیاس سے 
جام کوثر کا پلا احمد رضا 

தாகத்தினால் நாவுகள் வரண்டுவிடும் பொழுது கவ்ஸர் நீரை புகட்டுபவர் அஹ்மத் ரிஜா
 (نغمتہ الروح )

முக்கிய குறிப்பு: 

இந்த நூலை பரேல்விகள் மறுப்பதை நாம் பார்த்துவருகிறோம்.அவர்களுக்கு கூறுகிறோம் " அபூகலீம் சித்தீக் ஃபானி பரேல்வி இந்த நூலின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 'ஆயினே அஹ்லுஸ்ஸுன்னா' என்ற நூலில் பதில் அளித்துள்ளார்.எனவே இந்த நூல் ஏற்கத்தக்கதல்ல என்ற வாதம் ஏற்புடையதில்லை."

பரேல்விய ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார் கான் நயீமி குஜராத்தி இவரின் மகனார் இக்திதார் கான் நயீமி அவரின் தந்தையின் முழுமைப் பெறாத குர்ஆனின் விளக்கவுரையை முழுமைப்படுத்தியுள்ளார்.

   அந்நூலில் வரும் வாசகம்:

نبی پر ایمان فرض ہے اطاعت نہیں

நபியின் மீது ஈமான் கொள்வது பர்ளாகும்.கட்டுப்படுவது பர்ளு இல்லை.
(تفسیر نعیمی )

மார்க்கம்,வழிமுறை என்பது எனது நூலிலிருந்து வெளிப்படுவதாக உள்ளது.இதன் பேரில் அமல் செய்வது அனைத்து கடமைகளையும் விட பெரும் கடமையாகும்.
(وصایا شریف )

வாசகர்களே! நடுநிலையோடு கவனியுங்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது பர்ளு இல்லை.அஹ்மத் ரிஜாகானிற்கு கட்டுப்படுவது அனைத்து பர்ளுகளை விடவும் பெரிய பர்ளாகும்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இதுமட்டுமின்றி, பரேல்விகளின் கொள்கை என்னவெனில் ....

  அஃலா ஹஜ்ரதின் கொள்கைகளுக்கு ஏற்ப இல்லாதவர் காபிராவார்.இது சரியானதாகும்.
الصوارم الہندیہ ,فتاوی صدر) 
الافاضل ,انوار شریعت )

கவனித்துப் பாருங்கள்! 
அஃலா ஹஜ்ரதின் கொள்கைகளுக்கு ஏற்ப இல்லையெனில் அவர் காபிர்.
நபி ஸல் அவர்களுக்கு கட்டுப்படுவதற்கு எந்த மதிப்பும் இல்லை.

அஹ்மத் ரிஜாகான் மல்பூஜாதில் எழுதியுள்ளார்:

 மேன்மைமிக்க குர்ஆனை பாதுகாக்கும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது.அதனின் வார்த்தை பொருளுடன் .......
சில வரிகளுக்கு பிறகு  எழுதுகிறார் :
        "அண்ணலார் வசனங்களில் சிலதை மறந்திருக்க வாய்ப்புள்ளது".

இதனின் கருத்து நபி (ஸல்)அவர்கள் வசனங்களில் சிலதை மறந்திருக்க வாய்ப்புள்ளது.

அஃலா ஹஜ்ரதின் மீது கண்மூடித்தனமான நேசம் கொண்டவர்கள் அவரை குறித்த நிலைப்பாட்டை பாருங்கள்! 

அஃலா ஹஜ்ரதின் நாவு, பேனாவை அல்லாஹ் தனது பாதுகாப்பில் எடுத்துக் கொண்டான்.நாவு பேனாவில் புள்ளி அளவிற்கு கூட தவறு ஏற்படுவதானது சாத்தியமில்லை.
(احکام شریعت )

அஃலா ஹஜ்ரதின் நாவு பேனாவில் புள்ளி அளவிற்கு கூட தவறு நிகழாது.நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் வசனங்களில் சிலதை மறக்க வாய்ப்புள்ளது.

பரேல்விகளிடம் நமது கேள்வி என்னவெனில்  நபி (ஸல்) அவர்களின் நாவை அல்லாஹ் தனது பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளவில்லையா?
அஃலா ஹஜ்ரதின் நாவு பேனா இரண்டையும் அல்லாஹ் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டான் எனில் இது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்தை குறைப்பதாக ஆகாதா? பரேல்விகளே பதில் தாருங்கள்!

ஸாஹிப் ஜாதாஹ் அபுல்கைர் முஹம்மது ஜுபைர் பரேல்வி அவரது நூலான 'மஃபிரதுத்தன்பில்' எழுதியுள்ளார்:

அஃலா ஹஜ்ரதின் கொள்கை விரும்பிகள் ரிஜாகான் பரேல்வியை நபி (ஸல்) அவர்களை விட உயர்ந்தவர் என்பதாக கருதுகிறார்கள்.
(انوار کنزالایمان ,مغفرت ذنب )

அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆதார நூல்கள் :



0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live