16 Dec 2018

பெரியோர்களின் பெரியோர் ஜீலானி ரஹ் அவர்களின் வழிமுறையும் பரேல்விய வழிமுறையும் (போலி சுன்னத் வல்ஜமாஅத்)


வாசகர்களே!

பரேல்விகள், ஸய்யிதினா அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு எதிரானவர்கள்.வயிற்றை நிரப்புவதற்கு மட்டும் பிரியத்தை அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

இதனையும் கூறுகிறார்கள்:

அன்னார் அவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்வது கொல்லும் விஷமாகும்.இம்மை, மறுமை நாசமும் அழிவுமாகும்.
(ஃபதாவா ரிஜ்விய்யா)

உண்மையில் ஷைக் ஜீலானி (ரஹ்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்து பரேல்விகள் தங்களின் இம்மை மறுமையை நாசப்படுத்து கொள்கின்றனர் என்பதை நாம் உங்களுக்கு முன்னால் தெளிவாக நிரூவுகிறோம்.

(1) ஷைக் ஜீலானி (ரஹ்)
அவர்கள் எழுதியுள்ளார்கள்:

ஆஷுரா நாளில் துக்கம் அனுஷ்டிப்பதை  அனுமதிக்கப்பட்டு இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், மற்றும் தாபியீன்கள் அமல் செய்திருப்பார்கள்.ஏனெனில் அதற்கு மிகவும் நெருக்கமானவர்கள் தகுதியானவர்கள் அவர்கள்தான்.
(குன்னியத்து தாலிபீன்)

இதை தான் நாமும் கூறுகிறோம்.எத்தனை பித்அத்துகளை பரேல்விகள் அரங்கேற்றுகிறார்களோ அது அனுமதிக்கப்பட்டு இருந்தால் ஸஹாபாக்கள் தாபியீன்கள் அவசியம் செய்திருப்பார்கள்.துக்கம் அனுஷ்டிப்பதை நல்லோர்கள் கடைப்பிடிக்காமல் இருப்பதானது
தடை என்பதற்கு ஆதாரமாகும். இவ்வாறே அனைத்து பித்அத்துகளையும் அவர்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது
கூடாது என்பதற்கு ஆதாரமாகும்.ஆனால் பரேல்விகள் கூறுவது என்ன??

 தடை என்பதற்கும், கூடாது என்பதற்கும் ஆதாரம் தாருங்கள் என்பதாக குதிக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் பின்பற்றுவது ரிஜாகான் பரேல்வி என்ற தனிநபரை தான்.நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களையோ ஸஹாபாக்களையோ தாபியீன்களையோ இல்லை.

(2)ஹள்ரத் ஷைக் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

மார்க்க காரியங்களில் ஃபுகஹாக்கள் எனும்
மார்க்க விற்பன்னர்களின் (சொல்லின்)
பேரில் அமல்செய்யுங்கள் .
(குன்னியத்து தாலிபீன்)

மார்க்க விற்பன்னர்கள்
(புகஹாக்கள்) யாரெனில் ஷரீஅத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், குர்ஆன் சுன்னத்தின் ஒளியில் அவர்கள்  அனுமதிப்பதை அமல் செய்யவேண்டும்.அவர்கள் தடுப்பதை கைவிடவேண்டும்.மார்க்க விற்பன்னர்கள் மார்க்க சட்டங்களை கூறுபவர்கள்.மாறாக உருவாக்குபவர்கள் இல்லை.இவர்கள் குர்ஆன் சுன்னத்தில் உள்ள நுணுக்கங்களை அறிந்து சட்டங்களை  தொகுத்தளித்து அற்புதம் செய்துள்ளனர்.

பரேல்விகள் கூறுவதையும் பாருங்கள்!

அஹ்மத் யார் கான் நயீமி கூறுகிறார்:

 ஜனாஸா தொழுகைக்கு பிறகு துஆ செய்வதை புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள் தடுத்துள்ளனர்.
(ஜாஅல் ஹக்)

முக்கிய குறிப்பு :

ஜனாஸா தொழுகைக்கு பிறகு துஆ செய்வது பரேல்விகளிடத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
புகஹாக்களின் தீர்ப்புக்கு பாரதூரமான மாற்று  விளக்கம் அளித்து பித்அத்தை அரங்கேற்றுகின்றனர்.

அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்கள் :

மஸ்ஜிதுகளில் உரத்த குரலில் திக்ர் செய்வது மக்ரூஹ் என்பதாக புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
(ஷமாயிமுல் அன்பர்)

ஆனால் இன்று மஸ்ஜிதுகளில் உரத்த குரலில் திக்ர் செய்வது பரேல்விகளின் அடையாளச்சின்னமாக விட்டது.

ஷைக் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறைக்கு வருகை தருபவர் அன்னாரின் சமூகத்தில் ஸலாம் ஸலாத் எவ்வாறு சொல்லவேண்டும்?  மேன்மைமிக்க கப்ரின் பக்கம் முன்னோக்க வேண்டும்.பிறகு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் .
(குன்னியா)

பாருங்கள்! 

 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையிலும் தரூத் இப்ராஹீம் ஓதவேண்டும் என்று பெரியோர்களின் பெரியோர்
ஜீலானி (ரஹ்) அவர்கள்  என்கிறார்.ஆனால் பரேல்விகள் தரூத் இப்ராஹீம் ஓதுவதை தடை செய்கிறார்கள்.

பரேல்வி முஃப்தி இக்திதார் அஹ்மத் கான் 
நயீமி எழுதியுள்ளார்:

தரூத் இப்ராஹீம் தொழுகையில் ஓதலாம்.மற்ற சந்தர்ப்பங்களில் ஓதுவது குற்றமும் கூடான செயலாகும்.
(தப்ஸீர் நயீமி)

கவனியுங்கள்! 
ஷைக் (ரஹ்) அவர்களின் சொல்லிற்கு எந்தளவிற்கு முரண்படுகின்றனர்.

பரேல்விகளிடத்தில்
அல்லாஹுதஆலா ஹாஜிர் நாஜிர் என்பது மார்க்கம் இல்லை.சிலரிடத்தில் இறைநிராகரிப்பாகும்.மேலும் இவ்வாறு கூறுவது மிகக் கேடுகெட்ட செயலாகும்.எனவே இதனை அல்லாஹ்விற்கு பயன்படுத்துவது கூடாது.

ஆனால், ஷைக் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

هذا خطاب لحاضر يا حاضرا عندي 
(பத்ஹுர் ரப்பானி மஜ்லிஸ் நம்பர் 25)

  ஷைக் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்விற்கு ஹாஜிர் எனும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

மற்றோர் இடத்தில் கூறியுள்ளார்கள்:

தொழுகையாளி ஸனா ஓதும் பொழுது அவர் அறிந்து கொள்ளட்டும்!

انه مخاطب من هو سامع منه مقبل عليه ناظر اليه

 அவர் ஓதுவதை கேட்பவனிடத்தில் (அல்லாஹ்விடத்தில்) உரையாடுகிறார்.அவரை பார்ப்பவனை முன்னோக்குகிறார்.
(குன்னியா)

வாசகர்களே ஷைக் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்விற்கு நாளிர் (பார்ப்பவன்) என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.பரேல்விய பெரியோர்கள் ஹாஜிர் நாஜிர் என்ற வார்த்தையை அல்லாஹ்தஆலாவிற்கு பயன்படுத்துவதை நிராகரித்துள்ளனர்.
ஆனால் ஷைக் (ரஹ்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்.இப்பொழுது பரேல்விகள் தீர்ப்பை மாற்றிக்கொள்ளட்டும் அல்லது பரேல்விய வழிமுறையை தவறு என்பதாக ஏற்றுக்கொள்ளட்டும் ஏனெனில் ஷைக் ரஹ் அவர்கள் அதனை பயன்படுத்தியது அவர்களிடத்தில் கூடும் என்பதற்கு ஆதாரமாகும்.பரேல்விகளிடத்தில் கூடாது என்பதால் ஷைக் ரஹ் அவர்களுக்கு மாற்று செய்து இம்மை மறுமையை பாழ்ப்படுத்திவிடாதீர்

ஷைக் ரஹ் அவர்கள் ரவாஃபிள் (ஷீஆ கொள்கையை சேர்ந்தவர்கள்) 
குறித்து ஹதீஸை எடுத்தெழுதியுள்ளார்கள்:

தவறான கொள்கைவாதிகளுடன் சேர்ந்து சாப்பிடாதீர் பருகாதீர் அவர்களுடன் திருமணம் செய்யாதீர்.
 (குன்னியா)

ஆனால் கான் சாஹிப் பரேல்வியின்  நவாப் கல்ப் அலி அவர்கள் வரம்புமீறிய ஷீஆ கொள்கையை சேர்ந்தவரிடத்தில் பணிபுரிந்தார்.மேலும் அஃலா ஹஜ்ரத் பல தடவை கல்ப் அலியை சந்திப்பதற்கு செல்வார்.துணைவியையும் அழைத்து செல்வார்.(அன்வாரே ரிஜா)

ஷீஆ கொள்கை தாக்கம் ரிஜாகான் பரேல்வியை தாக்கியது.இதனால் ஆயிஷா ரளி அவர்களை களங்கப்படுத்தினார்.ஆபாசமும் அசிங்கமும் நிறைந்த கவிதையை இயற்றி அன்னையை தூற்றினார்.ஷீஆ கொள்கையை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் போர்வையில் பரப்பினார்.

ஆதார நூல்கள் :

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live