13 Mar 2019

கபுரை கட்டுவது கூடுமா ? ஷரீயத் படி ஆகுமானதா ?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் உறுதியாகிவிட்டது.கப்ருகளை இழிவுப்படுத்துவது,அதன் மீது அமர்வது, அதில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது,அதனின் தோற்றத்தை, வடிவத்தை சிதைப்பது.இதனை தவிர அதற்கு இழிவை ஏற்படுத்தும் அனைத்து காரியங்களும் தடுக்கப்பட்டது.கப்ரானது தங்கும் இடமாகும்.அதனை சங்கைப்படுத்துவது கண்ணியப்படுத்துவது அவசியமாகும்.அதனை இழிவுப்படுத்துவது எப்போதும் கூடாது.இங்கு நாம் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட விஷயம் கப்ருகளை உறுதியாக கட்டுவது,  குப்பா கட்டுவது,கட்டடம் கட்டுவது கண்ணியப்படுத்துவதில் சேருமா? இல்லையா?



இதற்கு எளிதான பதில் 

கப்ருகளை வலுப்படுத்துவது கப்ரின் மீது கட்டடம் கட்டுவது அதனை சங்கைப்படுத்துவதாக ஆகாது.ஏனெனில்,கப்ருகளை வலுப்படுத்துவது அதன் மீது குப்பா கட்டடம் கட்டுவது கண்ணியம் சங்கையாக இருந்தால், நலன்,பயன் இருந்தால் ஈருலக தலைவர் அகிலத்தின் அருட்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போதும் இதனை தடைசெய்திருக்க மாட்டார்கள்.இதில் நன்மை இருந்தால்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு அதனை குறித்து ஏன் ஆர்வப்படுத்தவில்லை? ஊக்கப்படுத்தவில்லை?

ஈருலக தலைவர்,நபிமார்களின் தலைவர்,நபிமார்களில்  இறுதியானவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை தடுத்திருக்கும் போது அதில் நன்னை பயன் இருப்பதாக யார் வாதிட முடியும்?

கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவது தடை கூடாது என்பதற்குரிய விரிவான ஆதாரங்களை இனி காண்போம்!!

عن جابر رضي الله عنه نهی رسول الله ان يجصص القبر و ان يبنی عليه و ان يقعد عليه 

கப்ருகள் காரையால் பூசப்படுவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள்.

(ஆதாரம்:முஸ்லிம்)

 அபுல் ஹய்யாஜ் அல் அஸ்தி அவர்கள் கூறுகிறார்கள்:

அலி இப்னு அபீதாலிப் (ரளி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.எந்த உருவச்சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்.உயர்ந்துள்ள எந்த கப்ரையும் சீராக்காமல் விட்டுவிடாதீர்!! என்று கூறினார்கள்.

இரண்டு ஹதீஸ்களின் மூலம் கப்ரில் கட்டடம் கட்டுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதை புரியமுடிகிறது.அத்துடன் கட்டியிருந்ததை இடித்து சீர்ப்படுத்த வேண்டும் என்பதையும் விளங்க முடிகிறது.

ஹனஃபி மத்ஹபின் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் தெளிவான தீர்ப்பு :

ولا نری ان يزاد علی ما خرج منه و نكره   ان يجصص و يطين الی ان قال ان النبي ﷺ نهی عن تربيع القبور و تجصيصها قال محمد به ناخذ وهو قول ابي حنيفة رحمه الله 

ஹஜ்ரத் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கப்ரிலிருந்து எடுக்கப்படும் மண்ணை விட அதிகமாக்குவதை நாம் சரியாக கருதவில்லை.மக்ரூஹ் என்பதாக கருதுகிறோம்.கப்ரை வலுப்படுத்துவது,காரையால் பூசுவது,சதுரமாக கட்டுவதை பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இதனை தான் நாம் எடுத்து அமல் செய்கிறோம்.இதுதான் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் சொல்லாகும்.

வாசகர்களே!  பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கும் போது இறைநம்பிக்கையாளனுக்கு அதனை மீறுவதற்கு  உரிமை உண்டா?

 ஹஜ்ரத் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் சொல் மற்றும் பத்வா அதனின் பேரில் உள்ளது.எனினும்,பரேல்விகள் மக்களை ஏமாற்றுவதற்கு நாங்களும் ஹனஃபி மத்ஹபை தான் பின்பற்றுகிறோம் என்பதாக கூப்பாடு போடுகிறார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இந்த சொல்லானது இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவர் முஹம்மது (ரஹ்) அவர்கள் நேரடியாக அறிவிப்பதுடன் இதுதான் நமது மத்ஹப் என்பதாக கூறுகிறார்கள்.

கப்ரு கட்டுவது கப்ரை  வலுப்படுத்துவது கூடாது என்பதற்கு சரியான தெளிவான ஹதீஸ் மற்றும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் தெளிவான கூற்றிற்கு பிறகு இதனை குறித்து பேசதேவையில்லை.எனினும்,

மனநிறைவு பெறுவதற்கும் உண்மையாக மத்ஹபுகளை பின்பற்றுபவர்கள் பரேல்விகள் இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கும்  மார்க்க அறிஞர்களின் அதிகப்படியான ஆதாரங்களை பார்ப்போம்!

இமாம் ஸிராஜுத்தீன் ஹனஃபி ரஹ் அவர்களின் கருத்து: 

يكره البناء علی القبور

கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவது மக்ரூஹாகும்.
(பதாவா ஜிராஜிய்யா) 

இமாம் காஜிகான் ஹனஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ولا يجصص لما روي عن النبي صلی الله انه نهی عن تجصيص و التفضيض و عن البناء فوق القبر 

கப்ரை வலுப்படுத்துவது கூடாது.ஏனெனில்  வலுப்படுத்துவது,வெள்ளி பூசப்படுவது,கப்ரின் மீது கட்டடம் கட்டுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாமா ஹல்பி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

عن ابی حنيفة انه يكره ان يبنی عليه بناء من بيت او قبة او نحو ذلك لما مر من الحديث اٰنفا 

அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.கப்ரின் மீது கட்டடம் குப்பா போன்றவைகளை கட்டுவது மக்ரூஹாகும்.மேற்கூறப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகும்.(கபீரி) 

ஹாபிள் இப்னு ஹுமாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ان النبي صلی الله عليه و سلم نهی  عن تربيع القبور و تجصيصها 

நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்  அவர்கள் கப்ருகளை சதுரமாக அமைப்பதை மற்றும் அதனை வலுப்படுத்துவதை தடுத்தார்கள்.
(பத்ஹுல் கதீர்) 

பதாவா ஆலம்கிரியில் வரும் வாசகம் :

و يسنم القبر قدر الشبر ولا يربع ولا يجصص و يكره ان يبنی علی القبر 

கப்ரானது ஒட்டத்திமிலாக ஒரு சாண் அளவிற்கு அமைக்கப்படும்.சதுரமாக அமைக்கப்படாது.
வலுப்படத்தப்படாது.கப்ரின் மீது கட்டடம் கட்டுவது மக்ரூஹாகும்.
(ஆலம்கிரி)

அல்லாமா இப்னு ஆபிதீன் ஹனஃபி (ரஹ்) ஹனஃபி :

اما البناء فلم ار من اختار جوازه 

கட்டடம் கட்டுவது கூடும் என்று கருத்துள்ளவரை நாம் அறியவில்லை.
(ஷாமி)

ஹஜ்ரத் முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

و هي ما انكره اءمة المسلمين كالبناء علی القبور و تجصيصها 

முஸ்லிம்களின் இமாம்கள் நிராகரித்தவைதான் வழிகேடான பித்அத்தாகும்.அவை கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவது அதனை வலுப்படுத்துவது போன்றாகும்.
(மிர்காத்)

முஸ்லிம்களின் இமாம்கள் கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவது அதனை வலுப்படுத்துவது கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.அதனை வழிகேடான பித்அத் என்பதாக தீர்ப்பளித்துள்ளனர் என்பதை மேற்குறிப்பிட்ட வாசகத்தின் மூலம் தெளிவாக புரியமுடிகிறது.

காஜி ஸனாவுல்லாஹ் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

நல்லோர்களின் கப்ருகளில் அரங்கேற்றப்படும் விஷயங்கள் உயர்ந்த கட்டடம் கட்டுவது, விளக்குவது எரிப்பது இதைப் போன்றவைகள் ஹராமாகும்.
(மாலா புத்த மின்ஹு) 

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:

 ان السنة ان القبر لا يرفع علی الارض رفعا كثيرا بل يرفع نحو شبر 

நிச்சயமாக கப்ரானது பூமியில் அதிகமாக உயர்த்தப்படாது.மாறாக ஒரு சாண் அளவிற்கு உயர்த்தப்படும்.இது சுன்னத்தில் உள்ளதாகும்.
(ஷர்ஹு முஸ்லிம்)

இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரானது பூமியிலிருந்து ஒரு சாண் அளவிற்கு நெருக்கமான உயரம்  இருந்தது.
(குப்ரா )

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிமின் விளக்கவுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

قال اصحبنا تجصيص القبر مكروه و القعود عليه حرام و كذا الاستناد اليه و الاتكاء عليه و اما البناء عليه فان كان فی ملك البانی فمكروه وان كان فی مقبرة مسبلة فحرام نص عليه الشافعي و الاصحاب قال الشافعی فی الام و رايت الاءمة بمكة يامرون بهدم ما يبنی و يؤيد الهدم قوله ولا قبرا مشرفا الا سويته 

கப்ரை வலுப்படுத்துவது மக்ரூஹ் அதன் மீது அமர்வது ஹராம் என்பதாகவும் மற்றும் இவ்வாறே அதன் மீது
சாய்வதும்  ஊன்றுவதும் (ஹராமாகும்) என நமது இமாம்கள் கூறுகிறார்கள். மேலும் அதன் மீது கட்டடம் கட்டுவது அவரின் சொந்த பூமியாக இருந்தால் மக்ரூஹாகும்.பொது சொத்தாக இருந்தால் (கட்டடம் கட்டுவது) ஹராமாகும்.இதனை இமாம் ஷாபியி ரஹ் அவர்களும் தோழர்களும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.இமாம் ஷாபியி (ரஹ்) கூறுகிறார்கள்:

"நான் மக்காவில் இமாம்கள் கப்ருகளை இடிக்கும் படி உத்தரவிடுவதை பார்த்தேன்".இதனை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. அந்த ஹதீஸ் உயர்ந்த எந்த கப்ரையும் அதனை சீராக்காமல் விட்டு விடாதே!

(ஷரஹு ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாமா இப்னு ஹஜர் மக்கி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

  تجب المبادرة الی  هدمها و هدم القباب التی عليها 

உயர்ந்த கப்ருகள் மற்றும் கப்ருகள் மீது குப்பா கட்டப்பட்டுள்ளதை இடிப்பது அவசியமாகும்.

(கிதாபு ஜவாஜிர்) 

ஹஜ்ரத் முல்லா அலி காரி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:

و يجب الهدم وان كان مسجدا 

மஸ்ஜிதாக இருந்தாலும் சரி இடிப்பது அவசியமாகும்.
(மிர்காத்)

இதனின் விளக்கம் தந்திரம் குயுக்தியுடன் கப்ருகளுக்கு அருகில் மஸ்ஜிது என்ற பெயரில் குப்பா கும்பா கட்டப்பட்டு இருந்தாலும் இடிக்க வேண்டும்.

அல்லாமா முஹம்மது ஆலூஸி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

ثم اجماعا فان اعظم المحرمات و اسباب الشرك الصلوة عندها و اتخاذها مساجدا بناءها عليه و تجب المبادرة إلى هدمها و هدم القباب التى على القبور إذ هي أضر من مسجد الضرار لأنها اسست على معصية رسول الله صلى الله عليه وسلم و تجب اناله كل قنديل أو سراج على قبر ولا يجوز وفقه و نذره 

இதன் பேரில் இஜ்மா உள்ளது.கப்ருகளுக்கு அருகில் தொழுவது,அதன் மீது மஸ்ஜித் கட்டுவது,அல்லது கட்டடங்கள் கட்டுவது ஹராமான இணைவைப்பு காரியங்களில் உள்ளது.எனவே உயர்ந்த கப்ருகள் அதன் மீது குப்பா அமைக்கப்பட்டு இருப்பதை இடித்து தள்ளுவது அவசியமாகும்.ஏனெனில் இது மஸ்ஜித் ளிராரை விட இழப்பை ஏற்படுத்தும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாற்றமாக கட்டப்பட்டது.அன்னார் அவர்கள் உயர்ந்த கப்ருகளை இடிக்கும்படி கட்டளையிட்டார்கள்.கப்ருகளின் மீது விளக்குகள்,அரிக்கன் விளக்குகளை விட்டு தூரமாக்குவது அவசியமாகும்.அதனின் வக்ஃப் நேர்ச்சை கூடாது.

(ரூஹுல் மஆனி)


ஹாஃபிள் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள் :

بقوله المنقول المعتمد كما جزم به النووى فى شرح المهذب حرمة البناء فى المقبرة المسبلة فإن بني فيها هدم ولا فرق فى ذلك بين قبور الصالحين و العلماء و غير هم 


பொது சொத்தில் கட்டடம் கட்டுவது ஹராமாகும்.அது இடிக்கப்படவேண்டும்.அதிலே நல்லோர்களின் ஆலிம்களின் மற்றவர்களின் கப்ருகளுக்கு மத்தியில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதாக ஷரஹ் முஹத்தப்பில் இமாம் நவவி ரஹ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மற்றோர் இடத்தில் அன்னார் எழுதியுள்ளார்கள் 

قد أفتى جماعة من عظام الشافعية بهدم قبة الامام الشافعي رضي الله عنه 

ஷாபியி மத்ஹபை சேர்ந்த பெரும் அறிஞர்கள் இமாம் ஷாபியி ரஹ் அவர்களின் குப்பாவை இடிக்கும் படி தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்.


ஆக கப்ருகளை கட்டுவது,அவைகளை வலுப்படுத்துவது,கட்டடம் குப்பா அமைப்பது அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஹதீஸ்களின், புகஹாக்களின் ஒளியில் புரியமுடிகிறது.இது அல்லாமல் அதிகப்படியான மார்க்க அறிஞர்களின் தீர்ப்புகளும் உள்ளது.அதனையும் தேவைப்படும் போது பதிவு செய்வோம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து கப்ருகளை கட்டுவதை ஆதரிக்கும் பரேல்விகளின் வாதங்களுக்கு மறுப்புகளையும் பிக்ஹ் நூலில் செய்யும் திரிபுகளையும் அடுத்து பார்ப்போம்!

1 comments:

  1. தொடர்ந்து பதிவிடவும்

    ReplyDelete

 

makkah live

Sample Text

madina live