Showing posts with label அவரது வழி கெட்ட கொள்கையும். Show all posts
Showing posts with label அவரது வழி கெட்ட கொள்கையும். Show all posts

6 Aug 2016

அஹ்மத் ரிழா கான் பரேல்வியும்,அவரது வழி கெட்ட கொள்கையும்.


வடஇந்தியாவில் உத்திரபிரதேசத்தில் பரேல்வி என்ற ஊரிலிருந்து ஆரம்பித்தது தான் இந்த போலி சுன்னத் வல் ஜமாத் போலி சுன்னத் வல் ஜமாத் எனும் பரேல்வியக் கொள்கை......



இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்த பொழுது முஸ்லீம்களிடத்தில் சண்டையை தோற்றிவிக்க ஆங்கிலேயர்கள் இருவரை தேர்ந்தெடுத்தார்கள்.

1 . மிர்சா குலாம் அஹமட் காதியானி.
2 . அஹ்மத் ரிழா கான் பரேல்வி

இதில் நாம் காணவிருப்பது அஹ்மத் ரிழா கான் பரேல்வியும்,அவரது வழி கெட்ட கொள்கையும்.

அஹ்மத் ரிழா கான் பரேல்வி என்பவர் 1856 ல் பிறந்தார் 1921 ல் இறந்தார் இவருடைய தந்தை பெயர் நகூ அலி கான் மற்றும் இவருடைய தாதா பெயர் ரிதா அலி கான் ஆகும்.
[தத்கிர உலமா இ ஹிந்த் 1/1]

அஹமது ரிழா கானின் இயர்பெயர் அம்மான் மியான் இவருடைய  தாய் மற்றும் தந்தை இவரை அஹமது மியான் என்றும் இவரது தாதா அஹமது ரிதா என்றும் அழைப்பார்கள்.
[அல் பரேல்வி பக்கம் 25]

சியாகளின் வம்சாவழி.

அஹமது ரிழா கானின் தாதா சியாகளை சார்ந்தவராக உள்ளார் அஹமது ரிழா பின் நகீ அலீ பின் ராஜா அலீ பின் கஸிம் அலி.
[ஹயாத் ஆலா ஹஜ்ரத் பக்கம் 2]

தனக்கு தானே பெயர் சூட்டிய அஹமது ரிழா கான் பரேல்வி:

           அஹமது ரிழா கான் பரேல்வி தனக்கு தானே அப்துல் முஸ்தபா (முஹம்மது நபியின் அடிமை) என்று பெயர் வைத்துக்கொண்டார்.
[மன்ஹுவ அஹமது ரிதா ப.15]

இவரின் ஆசிரியர் காதியானி சகோதரர்:

      மிர்ஷா குலாம் அஹ்மது காதிகாதியானி யின் சகோதரர் அஹமது காதிர் பேக் என்பவர் அஹமது ரிழா கான் பரேல்வியின் ஆசிரியர் ஆவார்.
[அல் பரேல்வி பக்கம் 36]

 அஹமது ரிழா கான் பரேல்வியும் ,அவரது சஹாகளும் தங்களுடைய கிதாபுகளிலே இஸ்லாதிற்க்கு முரணான பல வழிகெட்ட கொள்கைகளை எழுதியுள்ளார்கள் அவை கீளே தரப்பட்டுள்ளது.
  
பரேல்விகளின்  வழி கெட்ட கொள்கை:

1.கேள்வி : அல்லாஹ்வை அல்லாஹ் சாஹிப் என்று அழைக்கலாமா? 
பதில்: இது ஆகுமானதாகும்.
  [மல்பூஜாத் பக்கம் 281]

 2. குளிப்பு கடமையான நிலையும் தரூதே சரீப் ஓதலாம்.
 [பதாவா ரிஜ்வியா பக்கம் 13]

 3.நபிமார்களை மனிதர்கள் என்பவன் காபிராவான் .
[கன்ஜுல் ஈமான் பக்கம் 5] 

4.நபிமார்கள் காபிர்களின் கையில் சஹீதாகப்பட்டாலும் அவர்கள் முஜாஹிதீன்கள் கிடையாது.
 [தப்சீர் நூருல் இர்பான் பக்கம் 654]

 5.முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு கிடைத்த நுபுவ்வத் அவர்களுக்கு பிறகு மீண்டும் வருமாயின் அது காஜி முஹம்மத் அகில் அவருக்கு தான் கிடைத்திருக்கும்.( நவூதுபில்லாஹ் )
 [மகாபீலே சுல் மஜ்லிஸ் பக்கம் 70 ,காஜா முஹமது சுலைமான்] 

6.நுபுவ்வதுடைய தொடர்ச்சி போய்கொண்டேயிருக்கும் .யார் வந்தால் நுபுவ்வத் முடிவுக்கு வரும்? நுபுத்துடைய தொடர்ச்சி முடிவுக்கு வராமலிருந்தால் அப்துல் காதிர் ஜெய்லானி தான் அடுத்து நபியாக வந்துருப்பார்கள் . ( நவூதுபில்லாஹ் )
 [இர்பானே சரீஅத் வால்யூம் 3/ பக்கம் 83] 

  அஹ்லுஸ்ஸுன்னாவிற்க்கு மாற்றமான கொள்கை.

 விளக்கம் :

 لو كان بعدي نبي لكان عمر

எனக்கு பிறகு நபி வருவதாக இருந்தால் உமராக இருப்பார் என நபி  ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

 7.இப்லீசுடைய அறிவானது நபியவர்களின் அறிவைவிட விரிவானது.
 ( நவூதுபில்லாஹ் )
 [அன்வாரி ஷாதிஃ 359]

8.ஜிஹாத் இந்திய முஸ்லீம்களின் மீது ஹராமாகும்.பர்ளு இல்லை. [முஹஜ்ஜத் அல் முதமன்ன பக்கம் 208] 

9.ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் கியாமத் நாளில் நரகத்தின் சீட்டை (டிக்கேட்டை) காண்பிப்பார்கள்.( நவூதுபில்லாஹ் )
 [அல் அமான் வல் ஊலா பக்கம் 58] 

10.பணங்காடை ஆந்தை சாப்பிடுவதற்க்கு ஹலாலாகும். 
 [பதாவா ரிஜ்வியா பக்கம் 20/312]

11.கிளி சாப்பிடுவதற்க்கு ஹலாலாகும்.
 [அன்வாரே ஷரீயத் பக்கம்  119]
 

12.கோரை பல் கொண்ட வௌவால் சாட்பிடுவதற்க்கு ஹலாலாகும்.
 [பதாவா ரிஜ்வியா 20/318]

13.பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எழுதுவதால் எந்த பலனும் இல்லை. 
[பதாவா ரிஜ்வியா 21/640] 

14.பன்றி ,விந்து ,இரத்தம் இவை அணைத்தும் அசலானதும் தூய்மையானதும் ஆகும் . 
 [பதாவா ரிஜ்வியா 4/440]

 15.லாயிலாக இல்லல்லாஹு வஹதஹூ லாஸரீகலஹூ என்ற துஆவை மய்யிதுடைய கபனில் எழுதி அந்த மய்யிதை கபரில் வைத்தால் அந்த மைய்யிதின் அருகில் முன்கர் ,நகீர் மலக்குமார்கள் வரமாட்டார்கள் . 
[பதாவா ரிஜ்வியா பக்கம் 4/127] 

16.கபரின் அருகில் பாங்கு சொல்வது முஸ்தஹப்பாகும்(விருபத்திற்க்குரியதாகும்).
 [பதாவா ரிஜ்வியா பக்கம் 4/54] 

17.கபரின் பக்கத்தில் பாங்கு சொல்வதால் சைத்தான் ஓடுகிறான்,அந்த கபருக்கு பரகத் இறங்குகிறது. 
 [ஜாஅல் ஹக் பக்கம் 1/315]

 18. கபருக்கு விளக்கேற்றி வைப்பது ஆகுமான காரியங்களில் உள்ளதாகும் . [ஜாஅல் ஹக் பக்கம் 300]

 அஹ்லுஸ்ஸுன்னாவிற்க்கு மாற்றமான கொள்கை .

விளக்கம் : 

*கபருக்கு அருகில் விளக்கேற்றுவது ஜாஹிலியத்துடைய நடைமுறையாகும்
. [பதாவா ஆலம் கிரி பக்கம் 1/178] 

*கபரின் அருகில் விளக்கேற்றுவது ஹராமான காரியமாகும். 
[பதாவா ஸாஹ் ரபியுத்தீன் பக்கம் 14]

 *கபருக்கு அருகில் விளக்கேற்றுவது ஆகுமானதல்ல. 
 [ ரூஹீல் மாணி 10/219] க

19. வஹாபிகள் அசலான முஸ்லீம்கள் கிடையாது .அவர்களின் 5 நேர தொழுகையை ஏற்றுக்கொள்ளப் படாது.அவர்களுடன் முஷாபஹா செய்வது பாவமான செயலாகும். அவர்களுடைய ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம். அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளவும் வேண்டும். [பதாவா ரிஜ்வியா பக்கம் 13]

20.ஆங்கிலம் அல்லாஹ்வின் ரஸுல்,லண்டன் அல்லாஹ்வின் காபா. (மஆதல்லாஹ்)
 [அன்கலாப் அல்ஹகீகத் 31]

21.  ஆதம் (அலை) அவர்கள் இப்லீஸுடைய உஸ்தாத் ஆவார்கள்.
[ஆலிமுல் தக்ரீர் 100]

 

makkah live

Sample Text

madina live