20 Jun 2021

" யா ரஸூலுல்லாஹ் " என்று கூறுவது பற்றி தேவ்பந்த் உலமாகளின் நிலைப்பாடும் ! பரேலவிகளின் நிலைப்பாடும் !

பரேல்விகளின் குற்றச்சாட்டு:

நாங்கள் 'யாரசூலுல்லாஹ்' கூறினால் இணைவைப்பு. தேவ்பந்திகள் 'யாரசூலுல்லாஹ்' கூறுவது
ஏகத்துவமா? நாங்கள் அலி முஷ்கில் குஷா (مشکل کشا) கூறினால் இணைப்பு. நீங்கள் கூறுவது ஏகத்துவமா?

அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாத்தின் பதில்: 

ஒருவரின் கொள்கைகளுக்கு நிலைப்பாட்டிற்கு ஏற்ப சட்டங்கள் மாறுபடும். உதாரணமாக ஷீஆக்கள் அலி (ரளி) மற்றும் ஹுஸைன் (ரளி) இருவரையும் இமாம் என்பதாக ஏற்கிறார்கள்.அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தை சேர்ந்த நாம்
அன்னார் இருவரையும் இமாம் என்பதாக ஏற்கிறோம். இரண்டும் ஒன்றா? அவர்கள் ஏற்கும் அர்த்தம் வேறு.நாம் ஏற்கும் அர்த்தம் வேறு.

நாம் ஏற்பதில் அவர்கள் ஏற்பதில் வித்தியாசம் உண்டு.நாம் அதற்குரிய வரம்பிற்குள் எல்லைக்குள் ஏற்போம்! ஆனால், ஷீஆக்கள் எல்லை கடந்து வரம்பு மீறி நபிமார்களை விட உயர்ந்தவர்கள்,மேலானவர்கள் என்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
  நன்றாக கவனியுங்கள்!

கொள்கையை முன்வைத்து இரண்டிற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது.மற்றொரு உதாரணம் வசந்தகாலம் காய்கனிகளை  விளைவிக்கிறது.இதனை நாத்திகவாதி கூறினால், 'அதனின் அர்த்தமும் தீர்ப்பும் வேறாகும்'.
'முஃமீன் கூறினால் தீர்ப்பும் அர்த்தமும் வேறாகும்'.

   ஷீஆக்களின் அசத்திய கொள்கையும், இறைநிராகரிப்பான இமாமத் நிலைப்பாடும் வழிகேடாகும்.எனவே கொள்கைகளை நிலைப்பாடுகளை முன்வைத்து தீர்ப்பு கூறப்படுகிறது. இதைப் போன்றுதான் பரேல்விகள் 'யாரசூலுல்லாஹ்' கூறுவதிலும் நாம் 'யாரசூலுல்லாஹ்' கூறுவதிலும் வித்தியாசம் உண்டு.

பரேல்விகள் 'யாரசூலுல்லாஹ்' கூறுவதானது அண்ணலார் அவர்கள் ஹாஜிர் நாஜிர், முழுமையான சுயவிருப்பம் உள்ளவர் என்ற கொள்கையின் பேரிலாகும்.இரண்டு கொள்கைகளும் அல்லாஹ்வின் தனிப்பட்ட தன்மையாக உள்ளது.ஹாஜிர் நாஜிர், முழுமையான சுயவிருப்பம் மற்றவர்களுக்கு உண்டு என்ற கொள்கையானது இணைவைப்பாகும்.

ஹாஜிர் கொள்கை:

   பரேல்விய ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார்கான் நயீமி எழுதியுள்ளார்:

அனைத்து இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் இருப்பதானது ஒருபோதும் அல்லாஹ்வின் தன்மை இல்லை.(ஜாஅல்ஹக்,பக்கம்:134)
மேலும் எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ் அனைத்து இடங்களிலும் இருக்கிறான் என நம்புவது மார்க்கமில்லாத வழிமுறையாகும்.அனைத்து இடங்களிலும் இருப்பதானது அல்லாஹ்வின் தூதரின் தன்மையாகும்.
(ஜாஅல்ஹக் பக்கம்:134)

அல்லாஹ் பாதுகாப்பானாக!

வாசகர்களே ! அல்லாஹ்வின் தனித்தன்மையை துணிச்சலுடன் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முழுவதுமாக தந்துள்ளார். ஹாஜிர் நாஜிர் தன்மையானது அல்லாஹ்விற்கு இல்லை என்பதாக பகிரங்கமாக மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி அல்லாஹ்வை ஹாஜிர் நாஜிர் என்பவர் மார்க்கமில்லாதவர்
என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.இது வெளிப்படையான பகிரங்கமான இணைவைப்பாகும்.

  பரேல்விய முனாஜிர் மெளலவி உமர் எழுதியுள்ளார்: 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணவன், மனைவி தாம்பத்திய நேரத்தில் ஹாஜிர் நாஜிராக இருக்கிறார்கள்.
(மிக்யாஸே ஹனஃபிய்யத் பக்கம்:282)

கணவன்,மனைவி இரவில் தனித்து இருக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகைதருகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக !

  ஆக,பரேல்விகளிடத்தில்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாஜிர் நாஜிர் இல்லாத இடமேயில்லை.

பரேல்விய கொள்கை
(முக்தாரே குல்) முழுமையான சுயவிருப்பம்..!

மெளலவி அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்:

 அல்லாஹ் பிறகு தூதர் வானம் பூமியை படைப்பாளர்.அல்லாஹ் பிறகு தூதர் சுய அதிகாரத்துடன் உலகிற்கு உணவு அளிக்கும் ஆற்றல்மிக்கவர் என்பது இணைவைப்பு இல்லை.
(ஃபதாவா ரிஜ்விய்யா 30/588)

ஆனால்
  அல்லாஹ்தஆலா கூறுகிறான் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.” ( 72:21)

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.(15:21 )

இதற்கு எதிராக ரிஜாகான் பரேல்வி கூறுவதைப் பாருங்கள்: 

அல்லாஹ்வின் திருச்சமூகத்திலிருந்து வாங்குவது,கொடுப்பது அனைத்தின் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைகளில் உள்ளது.
(அல்அம்னு வல் உலா பக்கம்:22)

இதற்கு எதிரான குர்ஆன் வசனம்
👇👇

வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.(42:12)

பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது.அன்னார் (ஒருவரை குறித்து) நாடினால்
அவன் வாழும் போது தவ்பா வாசல் அடைக்கப்படும்.அவன் தவ்பா செய்தால் ஏற்கப்படாது.அன்னார் (ஒருவரை குறித்து) நாடினால் அவரின் மரணத்திற்கு பிறகும் தவ்பா வாசல் திறக்கப்படும்.அவருக்கு உயிர்கொடுக்கப்பட்டு முஸ்லிமாகுவார்.
(ஸல்தனதே முஸ்தபா பக்கம்:47)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க சட்டங்களின் தலைவர்.விரும்புகிறவருக்கு ஹலாலாக்குவார்கள்.ஹராமாக்குவார்கள்.விரும்புகிறவருக்கு குர்ஆனின் சட்டத்தை மாற்றுவார்கள்.(ஆதாரம்:ஸல்தனதே முஸ்தபா பக்கம்:28)

இதற்கு எதிராக அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்!

   திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.(5:17) 

மற்றோர் வசனத்தில் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 66:1)

மெளலவி அம்ஜத் பரேல்வி எழுதியுள்ளார்: 

வானங்களும்,பூமியும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கண்காணிப்பில் உள்ளது.சுவனம் நரத்தின் சாவிகள் பெருமானாரின் புனிதகரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.உணவு நலவு அனைத்து விதமான கொடைகள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் பங்கிடுகிறார்கள்.உலகம் மறுமை பெருமானாரின் கொடையின் ஒரு பகுதியாகும்.ஷரீஅத்தின் சட்டங்களும் பெருமானாரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.இதன் பேரில் விரும்புவதை ஹராமாக்குகிறார்கள்.விரும்புவதை ஹலாலாக்குகிறார்கள்.கடமைகளை விரும்பினால் மன்னித்துவிடுவார்கள்.(பஹாரே ஷரீஅத் பாகம்:1 பக்கம்:79-85)
இதற்கு எதிராக அல்லாஹ் கூறுவதை பாருங்கள்!

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.(35:2)

இப்பொழுது வித்தியாசம் நமக்கு தெளிவாக புரிந்திருக்கும்!

பித்அத்வாதிகள் நபி (ஸல்) அவர்களை 'யாரசூலுல்லாஹ்' என கூறுவது ஹாஜிர் நாஜிர் முழுமையான சுயஅதிகாரம் கொள்கையின் பேரிலாகும். அல்லாஹ்வை அன்றி மற்றவர்கள் அனைத்து இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் முழுமையான சுய விருப்பம் உள்ளவர்கள் என்பது இணைவைப்பாகும்.இதன் காரணமாக பரேல்விகள் இணைவைப்பாளர்களாக உள்ளார்கள். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் தேவ்பந்த் உலமாக்கள் யாரசூலுல்லாஹ் கூறுவது
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்கள்
அனைத்து இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் முழுமையான சுய விருப்பம் உள்ளவர்கள் போன்ற கொள்கையின் பேரில் இல்லை. எனவே நாம் யாரசூலுல்லாஹ் என்று கூறுவது சத்தியமும் ஏகத்துவமாகும். பரேல்விகள் யாரசூலுல்லாஹ் கூறுவது இறைநிராகரிப்பு இணைவைப்பாகும்.

இவ்வாறுதான் நமது பெரியோர்கள் ஹஜ்ரத் அலி (ரளி) உடன் முஷ்கில் குஷா (مشکل کشا ) உபயோகித்துள்ளார்கள்.
அதனின் கருத்தானது சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர் என்பதாகும். ஏனெனில் ஹஜ்ரத் அலி (ரளி) அவர்களின் மரணித்திற்கு பிறகு இந்த சொல் பிரபல்யமாகிவிட்டது.அலி (ரளி) அவர்கள் உயிரோடு இருந்தால் தீர்க்க முடியாத சந்தேகத்தையும் நிவர்த்தி செய்வார்கள். 

நாம் 'முஷ்கில் குஷா'  என்பதை சந்தேகத்தை தீர்ப்பவர் என்ற கருத்தின் பேரிலாகும்.ஆனால் பரேல்விகள் உதவி செய்பவர் என்பதாக கருதுகிறார்கள்.இது இணைவைப்பாகும்.

ஹஜ்ரத் உமர் (ரளி) அவர்கள்
'ஃபாரூக்' என்று அழைக்கப்படுகிறார்.இதன் காரணம் அன்னார் சத்தியத்தை அசத்தியத்தை பிரித்தறிபவர்.
 
ஹஜ்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் 'சித்தீக்' என்று அழைக்கப்படுகிறார்.இதன் காரணம் அன்னார் உண்மையாளர்.

ஹஜ்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள் 'ஙனீ' என்று அழைக்கப்படுகிறார்.இதன் காரணம் அன்னார் கொடைவள்ளல்.

இவ்வாறுதான் அலி (ரளி)
அவர்களை  'முஷ்கில் குஷா' என்று கூறுவதும் தீர்க்க முடியாத சட்டத்திற்கு தீர்வு சொல்பவராக இருந்ததின் பேரிலாகும். ஆக இங்கும் வித்தியாசம் தெளிவாகிவிட்டது.பித்அத்வாதிகள் கூறுவதன் அர்த்தம் வேறு.நாம் கூறும் கூறும் அர்த்தம் வேறு.

இறுதியாக பரேல்விகள் அங்கீகரிக்கும் நூல் குற்றச்சாட்டிற்கு பதில்.!

மெளலவி ஷாஹ் மஸ்ஊத் கூறுகிறார்கள்:

யாரசூலுல்லாஹ்! என்பதை நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்பதின் எண்ணத்தில் சொல்வதானது இணைவைப்பை ஏற்படுத்தும்.
(பதாவா மஸ்ஊத் பக்கம்:531)

மற்றொரு பரேல்விய அறிஞர் கூறுகிறார்:

மீலாத் சபைகளில் நிற்பதானது இணைவைப்பு ஏற்படும் விதத்தில் இருந்தால் தான் கூடாது.ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மணித்துளியும் ஹாளிர் நாளிர் என்பது அல்லாஹ்வின் பண்பாகும்.
(ரஸாயிலே மீலாத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம்:567)
பரேல்விய அறிஞரின் கூற்றின்படி மீலாத் சபையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாளிர் நாளிர் எனும் எண்ணம் இல்லாமல் மரியாதை,சங்கை எனும் வகையில் நிற்கலாம் என்கிறார்.இதே போன்றுதான் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள பிரியம்,நேசத்தின் பேரில் யாரசூலுல்லாஹ் என்று அழைப்பது தவறில்லை என்கிறோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live