22 Nov 2018

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இப்லீஸின் குழந்தை


பரேல்விய பைஜ் மில்லத் அஹ்மத் உவைஸின் ஆய்வின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இப்லீஸின் குழந்தை !

பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:

'இப்லீஸின் குழந்தைகளின்  அடையாளங்கள்'

இப்லீஸின் உண்மையான குழந்தைகளை குறித்து நமது ஆய்வு இல்லை.மாறாக, கருத்தின் அடிப்படையில் இப்லீஸின்  குழந்தைகளை குறித்து வெளிப்படுத்துகிறோம்.ஆதம் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்து 'தன்னை பின்பற்றுபவர்களை  உருவாக்குவோம்' என்பதாக
அவன் அல்லாஹ்விற்கு முன்பாக சவால் விட்டான்.இப்பொழுது கவனிக்க வேண்டும்.இப்லீஸ் அவனை  பின்பற்றுபவர்களை உருவாக்குகிறான் எனில் அவர்களின் அடையாளங்கள் என்ன? என்பதை அடியேன் நம்பகமான, ஏற்கத்தக்க நூல்களிலிருந்து சில அடையாளங்களை குறிப்பிடுகிறேன்.
(இப்லீஸ் த தேவ்பந்த்,பக்கம்:46)




பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:

  ஷைத்தான் அனைத்து கப்ருகளிலும்
அனைத்து மண்ணறைகளிலும் ஷைத்தான் வருகை தருகிறான் என்பதை (இப்லீஸின் குழந்தைகள்) ஏற்கிறார்கள்.ஏனெனில் ஹதீஸின் மூலம் நிரூபணமாகியுள்ளது. (என்கிறார்கள்) ஆனால், நபி ஸல்லல்லாஹு அவர்கள் அனைத்து கப்ருகளிலும் வருகை தருவதை மறுக்கிறார்கள்.
(இப்லீஸ் த தேவ்பந்த்,பக்கம்:49)


ஆக, பரேல்விய அஹ்மத் உவைஸியின் ஆய்வின் பேரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரில் வருகை தருவதை மறுப்பவர் இப்லீஸின் குழந்தைகள் ஆவார்கள்.

இந்த ஆய்வானது பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகானுக்கு எதிரானது....

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி மல்பூஜாதின் 526 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள்:

'மரண நேரத்தில் ஷைத்தான் ஊடுருவுதல்' என்ற தலைப்பில்

  முன்கர் நகீர் (கப்ரில்) கேள்வி கேட்கும் நேரத்தில் ஷைத்தானின் ஊடுருவுதல் உள்ளது."மன் ரப்புக" (உனது ரப்பு யார்?) என வினா தொடுப்பார்கள்.சபிக்கப்பட்ட ஷைத்தான் தூரத்தில் நின்று கொண்டு சமிக்ஞை செய்வான் என்னை (இறைவன் என) கூறு! (அந்த சமயத்தில்) பாங்கு கூறும் போது விரண்டோடுகிறான்.ஊசலாட்டம் ஏற்படுவதில்லை.பிறகு அடுத்த கேள்வி "மா தீனுக"
(உனது மார்க்கம் என்ன?) இதன் பிறகு "மா தகூலு ஃபி ஹாதர் ரஜுல்" இந்த மனிதர் குறித்து நீ என்ன கூறுகிறாய்? என கேட்கிறார்கள்.
இதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே வருகை தருவார்களா? அல்லது பரிசுத்தமான ரவ்ளா ஷரீஃபின் (பெருமானாரின் கப்ரின்) திரை விலக்கப்படுமா? என்பது தெரியவில்லை.ஷரீஅத் இது குறித்து விரிவாக கூறவில்லை.இது சோதனையான தருணம்.
இதனால் தான் ஹாதன் நபி (இந்த நபியை குறித்து உமது கருத்து என்ன?) என்பதாக வினா இல்லை.மாறாக,இந்த மனிதர் குறித்து உமது கருத்து என்ன? என்பதாக வினாவாகும்.


 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரில் வருகை தருவது உறுதியாகவில்லை என்பதாக பரேல்வி ரிஜாகான் ஏற்கிறார்.ஆனால்,பைஜ் அஹ்மத் உவைஸி பரேல்வி நபியின் வருகையை மறுப்பவரை இப்லீஸின் குழந்தைகள் என தீர்ப்பளித்துள்ளார்.எனவே 'இப்லீஸின் குழந்தைகளில் ரிஜாகான் பரேல்வியும் இணைந்துகொள்கிறார்' என்பது தெளிவாகிறது.
  சுப்ஹானல்லாஹ் ஆச்சரியம் பாருங்கள்!
தேவ்பந்த் உலமாக்களை இப்லீஸின் குழந்தைகள் என்பதாக சித்தரிக்க முயன்ற பைஜ் அஹ்மத் உவைஸியின் வாதம் அவரின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்விக்கு எதிராக திரும்பிவிட்டது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live