22 Nov 2018

அமல்களின் சிறப்பு நூலில் சுமத்தப்படும் குற்றச்சாட்டும் நமது மறுப்பும் .(கபுரில் கை வெளியே வந்தது பாகம் :2 )

(1) ஷைக் அப்துஸ்ஸமீஃ அவர்கள் கூறுகிறார்கள்:நான் இந்த நிகழ்விற்கு கண்ணால் கண்ட சாட்சியாக உள்ளேன்.அதில் ஹஜ்ரத் கபீர் அஹ்மத் ரிஃபாயி (ரஹ்) அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முஸாபஹா செய்தார்கள்.

 ஷைக் அப்துஸ்ஸமீஃ அவர்களை குறித்து  நற்சான்று அளித்த அறிஞர்களின் பட்டியல்:

இமாம் ராபியி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 நமது ஷைக் அப்துஸ்ஸமீஃ அல்ஹாஷிமி அல்வாஸிதி ஹதீஸ்கலைவல்லுநர்களில் நம்பகமானவர்.

இமாம் இஜ்ஜுத்தீன் அல்ஃபாரூஸி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

ஆசிரியர்களுக்கு ஆசிரியர்

இமாம் அபூஅப்துல்லாஹ் துபைஸி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

அன்னார் கண்ணியமானவர்,நல்லோர்,
வணக்கசாலியாக உள்ளார்கள்.

(ஸிவாதுல்அய்னைன் பக்கம்:9,இர்ஷாதுல் முஸ்லிமீன் பக்கம்:265,தாரீக் இப்னு தைஸி பக்கம்:79)

 முக்கிய குறிப்பு:

ஷைக் அப்துஸ்ஸமீஃ அல்ஹாஷிமி அவர்களின் அசலான பெயர் முஹம்மத் இப்னு அப்துஸ்ஸமீஃஅல்ஹாஷிமி எனினும் அன்னாரை அப்துஸ்ஸமீஃ அல்ஹாஷிமி அல்வாஸிதி என்பதாகவும் அழைக்கப்படும்.சில ஹதீஸ்கலைவல்லுநர்கள் அன்னாரின் புனைப்பெயர்  தாலிப் ஷர்புத்தீன் என்பதாகவும் கூறுகிறார்கள்.
(இர்ஷாதுல் முஸ்லிமீன் பக்கம்:30)

இதே போன்று இந்த நிகழ்வை ஹதீஸ்கலை வல்லுநர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் நூல்களில் எடுத்தெழுதியுள்ளனர்.

 (2) இமாம் அலி இப்னு அன்ஜப் (ரஹ்) அவர்களின் நூலில்  தனித்தனியான ஐந்து அறிவிப்பாளர்களின் தொடர்களுடன் ஷைக் அஹ்மத் ரிஃபாயி (ரஹ்) அவர்களின் நிகழ்வை எடுத்தெழுதியுள்ளார்கள்.
(முக்தஸர் தாரிகுல் குலபா பக்கம்:97-99)

அலி இப்னு அன்ஜப் (ரஹ்) அவர்களை திறமையானவர்,ஹதீஸ்கலை வல்லுநர்,பெரும் வரலாற்றாசிரியர்,சிறந்தவர்,இலக்கிய வல்லுநர் என்பதாக மார்க்க மேதைகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
(தாரிகுல் இஸ்லாம் லித்தஹபி 15/278,தபகாதுல் ஹுப்பாள் லிஸ்ஸுயூதி 1/512,தபகாதுஷ்ஷாபியிய்யா லில்காஜி ஷைபா 2/140)

இமாம் அலி இப்னுல் ஹஸன் இப்னு அஹ்மத் அல்வாஸிதி (ரஹ்) அவர்களது "குலாஸதுல் இக்ஸீர்  ஃபி நஸபி ஸய்யிதினால் கவுஸ் ரிஃபாயில் கபீர்" நூலில் அற்புதத்தை பதிவு செய்துள்ளார்கள்.

 இமாம் அலி இப்னுல் ஹஸன் இப்னு அஹ்மத் அல்வாஸிதி அவர்களை குறித்து அறிஞர்களின் நற்சான்றுகள்.

இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

இமாம்,முன்னோடி,
வணக்கசாலி,உலகப்பற்றற்றவர்,
மேன்மையாளர்

(3) முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்மக்ஜுமி அவர்களின் "ஸிஹாஹுல் அஹ்பார்" என்ற நூலில் ஹஜ்ரத் ஷைக் ஸைய்யத் அஹ்மத் ரிஃபாயி அவர்களின் அற்புதத்தை பதிவு செய்துள்ளார்கள்.
(ஸிஹாஹுல் அஹ்பார் பக்கம்:69)

அல்இஃலாம் 6/ 238 என்ற நூலில்  அன்னாரை குறித்து அக்காலத்தின் ஷைகுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் ஆசான்) என்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

(4) இமாம் இஜ்ஜுத்தீன் அஹ்மத் இப்னு இப்ராஹீம் அஃபாரூஸி அவர்கள் தனது  இர்ஷாதுல் முஸ்லிமீன் நூலில் இந்த நிகழ்வை அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்துள்ளார்கள்.

اخبرني ابي الحافظ محي الدين ابو اسحاق ابراهيم عن ابيه الشيخ عمر قال له كنت مع سيدنا و مفزعنا و شيخنا السيد احمد الكبير الرفاعي الحسيني (ارشاد المسلمين 88)

 அன்னாரை குறித்து இமாம் தஹபி அவர்கள் அளிக்கும் நற்சான்று:

உபதேசகர்,திருக்குர்ஆன் விரிவுரையாளர்,பிரசங்கம் செய்பவர்,ஆசிரியர்களின் ஆசான்,மார்க்க விற்பன்னர்,முன்னோரான இமாம்,ஹதீஸ்கலை வல்லுநர்,கிராஅத்தில் திறமைமிக்கவர்,தீர்ப்பளிப்பவர்,
வணக்கசாலி,உண்மையாளர்,ஞானி.
 (தாரிகுல் இஸ்லாம் 15/782)

அறிவிப்பாளர் தொடர் குறித்து ஆய்வு :

(1) இமாம் இஜ்ஜுத்தீன் அஹ்மத் இப்னு இப்ராஹீம்
(2) இமாம் அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் அல்ஃபாரூஸி
(3) இமாம் அபுல் ஃபரஜ் உமர் அஃபாரூஸி
(4) ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி

 இதில் முதல் அறிவிப்பாளர் இமாம் இஜ்ஜுத்தீன் அஹ்மத் இப்னு இப்ராஹீம் பலமானவர் என்பதை குறித்து முன்னால் பார்த்தோம்.

 இரண்டாவது அறிவிப்பாளர் இமாம் அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் அல்ஃபாரூஸி அவர்களும் பலமானவர்தான்.அன்னாரை குறித்து இமாம் இஜ்ஜுத்தீன் அஹ்மத் இப்னு இப்ராஹீம் அவர்கள் ஹாபிள்,பலமானவர்,
நற்பாக்கியமானவர்,நல்லவர்,ஆதாரப்புருஷர் என்பதாக நற்சான்று அளித்துள்ளார்
.(இர்ஷாதுல் முஸ்லிமீன் பக்கம்:88,105, ஸிஹாஹுல் அஹ்பார் 69)

 மூன்றாவது நான்காவது அறிவிப்பாளர்கள் இமாம் அபுஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி,ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி இருவரும் பலமானவர்கள் என்பதை முன்பே பார்த்துவிட்டோம்.

ஆகவே இந்த அறிவிப்பாளர் தொடரும் ஆதாரப்பூர்வமானது.

ஆதார நூல்கள்:











0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live