22 Nov 2018

அமல்களின் சிறப்பு நூலில் சுமத்தப்படும் குற்றச்சாட்டும் நமது மறுப்பும் .(கபுரில் கை வெளியே வந்தது )


இமாம் ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி  (ரஹ்) அவர்களின் நிகழ்வு குறித்து ஆய்வு !


அன்னார் ஹஜ்ஜிலிருந்து திரும்பி மதீனா முனவ்வரா சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீபிற்கு வருகை தந்தார்கள்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரக்கத் பொருந்திய கரம் வெளியே வந்தது.அதனை அவர்கள்   முத்தமிட்டது.

இந்நிகழ்வை ஷைகு ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் சுயமாக புனைந்து ஒருபோதும் கூறவில்லை.மாறாக முன்னோர்களான அறிஞர்களின் நூல்களிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள்.
முன்னோர்களின் நூல்களில் சரியான அறிவிப்பாளர் தொடர்களுடன் உள்ளது.
முதலில் இந்நிகழ்வை அறிவிப்பாளர் தொடருடன்  பார்ப்போம்!

الامام عبد الكريم ابن محمد الرافعي اخبرنا شيخنا الامام الحجة القدوة ابو الفرج عمر الفاروثي الواسطي قال حج سيدنا و شيخنا السيد احمد الرفاعي عام خمس و خمسين و خمسماءة فلما وصل [سواد العينين10,11)

இனி இந்நிகழ்வின் மூன்று அறிவிப்பாளர் தொடர் குறித்து நற்சான்றை விரிவாக ஆய்வு செய்வோம்

 முதல் அறிவிப்பாளர் இமாம் அப்துல் கரீம் இப்னு முஹம்மது ராஃபியி

இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஷைகு,ஷாபியின் வழித்துறையை சார்ந்தவர்,அரபு மற்றும் அஜமிகளின் அறிஞர்,மார்க்கத்தின் இமாமாக திகழ்கிறார்கள்.

இமாம் தகியுத்தீன் இப்னுஸ்ஸலாஹ் கூறியுள்ளார்கள்:

 اظن اني لم ار في بلاد العجم مثله 

  அஜமிகளில் இவரைப் போன்றவரை நான் பார்த்ததில்லை.


இமாம் நவவி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

الرافعي من الصالحين المتمكنين كانت له كرامات كثيرةظاهرة

 இமாம் ராபியி ரஹ் அவர்கள் நல்லோர்களில் உள்ளவர்.அவர்களிடமிருந்து அதிகமான அற்புதங்கள் வெளிப்பட்டு உள்ளது.

இமாம் இப்னுஸ்ஸஃப்பார் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 

هو شيخنا امام الدين و ناصر السنة صدقا 

அன்னார் நமது ஷைகு,மார்க்கத்தின் இமாம்,உண்மையாக தீனின் உதவியாளர் (சுன்னத்தை உயிர்ப்பிப்பவர்.)
(ஸியரு இஃலாமின்னுபலா 22/252,தாரிகுல்இஸ்லாம் லித்தஹபி 13/742)

 இரண்டாவது அறிவிப்பாளர் இஜ்ஜுத்தீன் அபுல் ஃபரஜ் உமருல் ஃபாரூஸி அல்வாஸிதி

இமாம் ராஃபியி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

القدوة الحجة الامام

 முன்னோடியாக,ஆதாரப்புருஷராக,
இமாமாக திகழ்கிறார்கள்.

மற்றோர் இடத்தில் கூறியுள்ளார்கள்:

شيخنا امام الفقهاء ابو الفرج عمر الفاروثي

 நமது ஷைகு,மார்க்க விற்பன்னர்களின் இமாம் அபுல் ஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி
(ஸவாதுல் அய்னைன் 108)

இமாம் ஷுயூத்தி ரஹ் அவர்கள் '
'ஷரபுல் முஹ்தம்' என்ற நூலில் எழுதியுள்ளார்கள்:

الشيخ امام الفقهاء و المحدثين و شيخ اكابر الفقهاء و العلماء عز الدين عمر ابي الفرج الفاروثي الواسطي 

ஷைகு,மார்க்க மேதைகள்,மார்க்க விற்பன்னர்கள்,ஹதீஸ் கலைவல்லுநர்கள் மார்க்க விற்பன்னர்களான மூத்தவர்களின் ஷைகு இஜ்ஜுத்தீன் உமர் அபுல்ஃபரஜ் அல்ஃபாரூஸி அல்வாஸிதி

இமாம் தகியுத்தீன் அப்துர் ரஹ்மான் அன்சாரி அல்வாஸிதி கூறியுள்ளார்கள்:

العارف الكبير ولي الله العلامة السند و الثبت الفقيه المقري المحدث ابي الفرج 

பெரும் மெய்ஞானி,இறைநேசர்,பெரும் அறிஞர்,நம்பகமானவர்,பலமானவர்,ஹதீஸ்கலை வல்லுநர் அபுல்ஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி (திர்யாகுல் முஹிப்பீன்)

இமாம் அஹ்மத் இப்னு இப்ராஹீம் அல்ஃபாரூஸி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:

 الامام الفقيه ابي الفرج عمر الفاروثي 

இமாம் மார்க்க விற்பன்னர் அபுல்ஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி.
 (இர்ஷாதுல் முஸ்லிமீன் 88)

 மூன்றாவது அறிவிப்பாளர் இமாம் ஷைகுல் கபீர் அஹ்மத் ராபியி

இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

الامام القدوة العابد الزاهد 

இமாம்,முன்னோடி,
வணக்கசாலி,
உலகப்பற்றில்லாதவர்

இமாம் தாஜுத்தீன் ஸுப்கி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

شيخ العارفين احد اولياء الله العارفين و السادات المشمرين اهل الكرامات الباهرة ابو العباس بن ابي الحسن بن الرفاعي المغربي 
 
மெய்ஞானிகளின் ஷைகு,தலைவர்கள் மற்றும் ஞானிகள், இறைநேசர்களில் உள்ளவர்.வெளிப்படையாக அற்புதங்களுக்குரியவர் அபுல் அப்பாஸ் இப்னு அபூல் ஹஸன் இப்னு ரிஃபாயி அல்மஃரிபி

இமாம் இப்னு குல்கான் ,இமாம் ஜலீல் இப்னு அய்பக் ஸப்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

كان رجلا صالحا شافعيا فقيها

 நல்லோராக,ஷாபியி வழித்துறையை சேர்ந்தவராக,மார்க்க விற்பன்னராக இருந்தார்கள்.

அஸ்ஸஃப்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

الزاهد الكبير سلطان العارفين في زمانه 

மிகவும் உலகப்பற்றில்லாதவர்,அக்காலத்தின்
மெய்ஞானிகளின் அரசர்
(ஸியரு இஃலாமுன் னுபலா 21/77,தபகாதுஷ்ஷாபியிய்யா லிஸ்ஸுப்கி 6/23,
தபகாதுஷ்ஷாபியிய்யா லி இப்னி காளி ஷைபா 2/5,அல்வாஃபி பில்வஃபயாதி 7/143)

பெருமானார் ஸல்லல்லாஹு அவர்களின் கரத்தை இமாம் ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி (ரஹ்) அவர்கள்  முத்தமிட்டார்கள் என்ற நிகழ்வின்   அறிவிப்பாளர் தொடர் சரியானது.

ஆதார நூல்கள் :












0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live