26 Nov 2018

அமல்களின் சிறப்பு நூலில் சுமத்தப்படும் குற்றச்சாட்டும் நமது மறுப்பும் .(கபுரில் கை வெளியே வந்தது பாகம் :3)



 (5) இஜ்ஜுத்தீன் அஹ்மத் இப்னுஸ் ஸய்யாத் (ரஹ்) அலைஹி அவர்கள் தனது நூலில் ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி அவர்களும் நிகழ்வை எடுத்தெழுதியுள்ளார்கள்.
 (மஆரிஃபுல் முஹம்மதிய்யா 59) 

அன்னார் ஷைக் இஜ்ஜுத்தீன் அஹ்மத் இப்னுஸ் ஸய்யாத் (ரஹ்) அலைஹி அவர்களை குறித்து இமாம் அஹ்மத் இப்னு இஜ்ஜுத்தீன் அல்ஃபாரூஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 மிகச்சிறந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர்,மெய்ஞானத்தின் புதையல்,காலத்தின் நல்லோர்,மக்களின் சேவகர்,இறைஞானிகளின் தலைமைப்பீடம்,உயர்ந்த தரத்தில் இருப்பவர். (இர்ஷாதுல் முஸ்லிமீன் பக்கம்:203)

 (6) ஷைக் ஷர்ஃபுத்தீன் முஹம்மது இப்னு அப்துஸ்ஸமீஃ அவர்களும் கூட "புர்கானுல் முஅய்யத்" நூலின் முன்னுரையில் இந்த நிகழ்வை கூறியுள்ளார்கள்.
(அல்புர்கானுல் முஅய்யத் பக்கம்:12, இர்ஷாதுல்முஸ்லிமீன் பக்கம்:154)

அன்னார் ஷைக் ஷர்ஃபுத்தீன் முஹம்மது இப்னு அப்துஸ்ஸமீஃ அவர்களை குறித்து ஹதீஸ்கலை வல்லுநர்களின் சான்று:

ஹதீஸ்கலை வல்லுநர்களில் ஏற்கத்தகுந்தவர்,
கண்ணியமானவர்,
வணக்கசாலி,ஆசிரியர்களின் ஆசான்.

 (7) ஹாபிள் ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் அவர்கள் "ஷர்புல் முஹ்தம்" என்ற தனியானதொரு நூல் எழுதியுள்ளார்கள்.அதில் 2-3 ஆம் பக்கத்தில் ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி அவர்களின் நிகழ்வை அறிவிப்பாளர் தொடருடன் நிரூபித்துள்ளார்கள்.அன்னார் அவர்களின் மற்றொரு நூலான "தன்வீருல் ஹலிக்"  51 ஆம் பக்கத்தில்  இதே நிகழ்வை எடுத்தெழுதியுள்ளார்கள்.இந்த கட்டுரையானது ஸுயூத்தி (ரஹ்) அவர்களின் "அல்ஹாவி லில்ஃபதாவா" இல் உள்ளது.இதிலிருந்து தான் இமாம் ஜக்கரிய்யா (ரஹ்) எடுத்தெழுதியுதுடன் அதனை தான் ஆதாரமாக காட்டியுள்ளார்கள்.

இமாம் ஹாபிள்,ஹதீஸ்கலை அறிஞர்,ஜலாலுத்தீன் ஸுயூத்தி அவர்களை குறித்து அறிஞர்களின் புகழ்மாலை:

இமாம்,ஹாபிஜ்,
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் மணிமகுடம்,
ஹதீஸ்கலை வல்லுநர்களின் இமாம் (அல்இஃலாம் பாகம்:3 பக்கம்:301,முகத்திமா தஃகீபாதுல் மவ்ளூஆத்)

 (8) ஹாபிள் தகியுத்தீன் அப்துர் ரஹ்மான் அல்வாஸிதி அவர்கள் "திர்யாகுல் முஹிப்பின்"
என்ற நூலின் 1/12 ஆம் பக்கத்தில் இந்த நிகழ்வை ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி (ரஹ்) அவர்களிடமிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள்:

ஹாபிள் தகியுத்தீன் அப்துர் ரஹ்மான் அல்வாஸிதி அவர்களை மார்க்க அறிஞர்கள் இமாம்,ஷைக்,முஃப்தி,ஹதீஸ்கலை அறிஞர்,மார்க்க மேதை,பெரும் மார்க்க அறிஞர்,ஹதீஸ்களை மனனம் செய்தவர் என்பதாக சான்று அளித்துள்ளனர்.

(அல்முஃஜமுல் முக்தஸ் பில்முஹத்திஸீன லித்தஹபி 1/137,அல்வாஃபி ஃபில்வஃபயாத்தி லிஸ்ஸஃப்தி 18/104,அல்வஃபயாத் லிஇப்னி ராஃபி1/460,அல்இஃலாம் 3/314)


 (9) அல்லாமா அஹ்மத் இப்னு முஹம்மத் அல்வித்ரி அவர்கள  "ரவ்ளதுன் னாழிரீன்"
என்ற நூலில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்கள்.


அல்லாமா அஹ்மத் இப்னு முஹம்மத் அல்வித்ரி அவர்களை உலமாக்கள் பெரும் இமாம்,பெரும் மார்க்க மேதை,அல்லாஹ்வை அறிந்தவர்,உறுதிமிக்க இலட்சியவாதி,திறமையாளர்,
மிகப்பெரிய புத்திசாலி, சிறப்புமிகுந்தவர்,தகுதிமிக்கவர் என்பதாக சான்றளித்துள்ளனர்.
(அல்இஃலாம் 1/234,ஹில்யதுல் பஷர் 13)


 (10) இமாம் முஹம்மத் இப்னு அப்துர்ரவூஃப் அல்மனாவி அவர்கள் 'அல்கவாகிபுத் துர்ரிய்யாவின்' 2/220 ஆம் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்கள் :

இமாம் முஹம்மத் இப்னு அப்துர்ரவூஃப் அல்மனாவி அவர்களை உலமாக்கள் அல்லாஹ்வை அறிந்தவர்,பெரிய ஆசிரியர்,பெரிய இமாம்,மார்க்க அறிஞர்,மார்க்கம் மற்றும் கலைகளில்  பெரும் உலமாக்களில் உள்ளவர். (குலாஸதுல் அஸர் 2/193,அல்இஃலாம் 6/204)

இறுதியாக மேற்சொன்ன மார்க்க விற்பன்னர்கள் மற்றும் ஹதீஸ்கலை வல்லுனர்கள் மட்டுமின்றி பேரறிஞர்களும் அற்புதத்தை பதிவு செய்துள்ளனர்.

 (11) இமாம் அப்துல் காதிர் இப்னு முஹம்மத் ஹுஸைனி  ரஹ் அவர்கள் 'கஷ்ஃபுன்னிகாப்' நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (12) அல்லாமா அலி இப்னு இப்ராஹீம் அல்கல்பி ரஹ் அவர்கள் 'தஃரீபு அஹ்லில் இஸ்லாம் வல் ஈமான்' நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (13) அல்லாமா கிஃபாஜி (ரஹ்) அவர்கள் *'நஸீபுர் ரியாள்'* என்ற
நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (14) அல்லாமா முஹம்மத் இப்னு அபூபக்கர் அல்அன்சாரி அல்வாஸிதி அவர்கள் *'ரவ்ளதுல் அஃயான்'*
நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (15) காஸிம் இப்னு முஹம்மத் அல்வாஸிதி அவர்கள் *'உம்முல் பராஹீன்'* நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (16) ஷைக் அலி அல்ஹத்தாதி அவர்கள் *'ரபீஉல் ஆஷிகீன்'* நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

(17)ஷைக் அப்துர் ரஹ்மான் இப்னு அப்துஸ்ஸலாம் ஸஃபூரி அவர்கள் *'நுஜ்ஹதுல் மஜாலிஸ்'* நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (18) இமாம் அஹ்மத் இஜ்ஜுத்தீன் அஸ்ஸய்யாத் *'அத்தரிகுல் கவீம்'* நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 (19) ஷைக் அபுல்பள்ல் அப்துல்காதிர் இப்னு அல்ஹுஸைன் ஷாதிலி அவர்கள் *'அல்கவாகிபுஜ் ஜாஹிரா'* நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 முக்கிய குறிப்பு: கட்டுரையின் விரிவை அஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.அவ்வாறு இல்லையெனில் இந்த நிகழ்வு முன்னோர்களான அறிஞர்கள் மற்றும் மார்க்க மேதைகளின் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களில் உள்ளது.

ஆக,ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் 
இந்த நிகழ்வை முன்னோர்களான அறிஞர்களின் நூல்களிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள்.

ஆதார நூல்கள் :














1 comments:

 

makkah live

Sample Text

madina live