15 Dec 2017

அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் மீது பரேல்விகளின் பொய்யான குற்றச்சாட்டும்,நமது பதிலும்.


அஷ்ரப் அலி தானவி (ரஹ்)
அவர்கள் தாயிடத்தில் விபச்சாரம் அறிவுரீதியாக அனுமதி என்பதாக தீர்ப்பளித்தார்களா? இல்லை அறவே இல்லை!

கண்ணியமிக்க வாசகர்களே! 

பரேல்விகள், தேவ்பந்த் பெரியோர்களின் மீது சுமத்தும் வழக்கமான அபாண்டமும் பழியுமாகும்.நாம் சத்தியத்தை எடுத்து சொல்வதில் தயங்குவதில்லை.எனது பெரியோர்களின் கருத்தை மழுப்பாமல் எடுத்து சொல்வதற்கு பயமோ தடுமாற்றமோ நமக்கு இல்லை.எவரிடத்தில் விபச்சாரம் செய்தாலும் ஹராம் என்பதுதான் நமது நிலைப்பாடு.

குற்றச்சாட்டின் உண்மைநிலையும் தக்க மறுப்பும்:

காபிர் ஒருவர் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களிடத்தில் வினா தொடுக்கிறார்:

 தாயின் வயிற்றில் இருந்த போது எனது அனைத்து உறுப்புகளும் உள்ளே இருந்தது.நான் பிறந்த பிறகு எனது ஓர்  உறுப்பான ஆண்குறி  உள்ளே சென்றால் என்ன தவறு? அறிவுரீதியாக அனுமதி என்பதாக நினைக்கிறேன்.

மெளலானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் இதற்கு தெளிவாக அறிவார்ந்த  பதில் அளித்தார்கள்.

நீ அறிவுக்குருடாக இருக்கிறாய்! அறிவின் பிரகாரம் தாயிடம் விபச்சாரம் அனுமதியென்றால் அசுத்தங்களை சாப்பிடுவதும் அனுமதிக்கப்படும்.அசுத்தங்களை உண்பாயா? அசுத்தமும் உனது வயிற்றில் தான் இருந்தது.அந்த சமயத்தில் அசுத்தமானது வெறுக்கதக்கது இல்லை.வெளியே வந்த பிறகு உனது வாயில் சென்றால் அறிவு அதனை ஏற்குமா? ஆக அசுத்தத்தை சாப்பிடுவது மார்க்க ரீதியாக,அறிவு ரீதியாக கூடாது.அது போன்றுதான் விபச்சாரமும் மார்க்க ரீதியாக, அறிவுரீதியாக கூடாது.

மெளலானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் அறிவு ரீதியாக, அழகாக விஷயத்தை புரியவைத்துள்ளார்கள்.
மெளலானா அவர்கள் தாயிடம் விபச்சாரம் செய்வது அறிவுரீதியாக அனுமதி என்பதாக கூறினார்கள் என்பதாக  சுய சிந்தனை உள்ள எவரும் கூறமாட்டார்கள்.

பரேல்விகள் சுய
சிந்தனையை அடகுவைத்துவிட்டார்கள். பரேல்விகளின் கேடுகெட்ட சிந்தனையால்,மழுங்கிய அறிவால், அபாண்டத்தை அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் மீது திணித்துவிட்டனர்.
இதுவே போதுமானது.எனினும், பரேல்விகள் வாயடைக்கும் மறுப்பையும் பார்த்துவிடுவோம்!

மெளலவி ரிஜாகான் பரேல்வியிடம் கவ்வாலி (இசைக்கச்சேரி)
ஹராம் என்பதற்கு பெரியோர்களின் தலைவரிடமிருந்து நிகழ்வை எடுத்தெழுதியுள்ளார்கள்.

ஹஜ்ரத் ஸுல்தானுல் மஷாயிக் கூறுகிறார்கள்:

 இசைக்கச்சேரியின் சபைகளில் கலந்து கொள்வது கூடாது.இசையை கேட்டால் ஷரீஅத்தின் பிரகாரம் பாவியாகுவார். இசையில் மூழ்கி மெய்நிலை மறந்து இசை என்பதையே உணரவில்லையென்றால் கூடுமா?

 இதற்கு ஸுல்தானுல் மஷாயிக் அவர்களின் பதில் :

இது போன்ற தங்கடங்கள் வீணானது.இதனை அனுமதித்தால் அனைத்து பாவங்களும் அனுமதி என்பதாகிவிடும்.ஒரு மனிதர் சாராயம் குடித்தார்.இது சாரயாமா? அல்லது குளிர்பானமா என்பதை அறியாத அளவிற்கு மூழ்கிவிட்டேன் என்கிறார்.இதனால் சாராயம் குடிப்பது கூடுமா?
ஒருவர் தாயுடன் விபச்சாரம் செய்து விட்டு இது எனது தாயா?அல்லது மனைவியா?என்பதை அறியாத அளவிற்கு மூழ்கிவிட்டேன் என்கிறார்.இதனால் தாயுடன் விபச்சாரம் செய்வது கூடுமா?
(சுருக்கமான கருத்து ,ரஸாயிலே ரிஜவிய்யா பாகம்:1 பக்கம்:488)



ஒருவர் இதனை படித்து பார்த்துவிட்டு அஹ்மத் ரிஜாகான் பரேல்வியிடத்திலும்,ஸுல்தானுல் மஷாயிகிடத்திலும்
"சாராயம் அருந்துவது கூடும்.ஹலாலாகும்.
தாயிடம் விபச்சாரம் செய்வது கூடும்.ஹலாலாகும்." என்று வாதிட்டால் பரேல்விகளின் பதில் என்ன? பழி அபாண்டம் என்பீர்களா? உண்மை என்பதாக ஒத்துக்கொள்வீர்களா?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live