14 Dec 2017

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் பரேல்விகளே! தொடர்-5


 (15)  பரேல்வி அஹ்மத் யார் குஜராத்தி ராஃபிளி நபிமார்களின் தலைவர் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து நாய்களின் உதாரணம் கொடுப்பது 
(அல்லாஹ் பாதுகாப்பானாக)

நாம் குழப்பமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் பரேல்விகள் ராபிஜியத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

பரேல்விய மெளலவி அஹ்மத்யார் குஜராத்தி சூரா ஃபுர்கானின் வசனத்தின் விளக்கவுரையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுப்படுத்தியுள்ளார்.

    சிந்திக்கட்டும்! அடியார் அவனின் அடியார் என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.அடியார் என்பவர் அல்லாஹ்வின் ரஹ்மத்தை எதிர்ப்பார்ப்பவர். அவனின் அடியார் என்பவர் அடிமைத்தனத்தின் மூலம் உலூஹிய்யத்தின் இறைத்தன்மையின்  மேன்மையை வெளிப்படுத்துபவர்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புமையில்லாத அடியாராக இருந்தார்கள்.நாய் என்பது இழிவானது.எனினும் குகைவாசிகளின் நாயானது கண்ணியம் பெற்றது.
(நூருல் இர்பான் பக்கம்:432)
அல்லாஹ் பாதுகாப்பானாக! நாய்களுக்கு பொதுவாக
எந்தவித மதிப்பும் இல்லை.எனினும், குகைவாசிகளின் நாயாக இருந்ததால் கண்ணியம் பெற்றது.இதே போன்றுதான் பொதுவாக அடியார் என்பதில் எந்தவித மதிப்பும் இல்லை.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராக மாறிய பிறகுதான் கண்ணியம் பெற்றார்கள்.பரேல்விகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தை நிரூபிப்பதற்கு நாய்களின் உதாரணத்தை கூறுகிறார்கள்.
இது போன்ற சிந்தனை  மடமையின் உச்சகட்டம் ,கீழான நிலை , வெட்கமற்ற தன்மை,வழிகேடு ,கேடு கெட்ட குணம், மனிதத்தன்மையற்ற நடைமுறைக்கு அத்தாட்சி

பரேல்விகளே கூறுங்கள்! ரிஜாகான் பரேல்வி 'ஹதாயிகே பக்ஷிஷ்' நூலின் முதல்பாகம்
46ஆம் பக்கம் எழுதியுள்ளார் :

کوئی تیری بات کیا پوچھے رضا 
تجھ سے کتے ہزار پھرتے ہیں 

நாய்களுக்கு மதிப்பில்லை.நாய் அசுத்தமாகும்.பிடிங்கி தின்னக்கூடியது. ஊளையிடும் அருவருப்பானது.எனினும்,ரிஜாகான் தன்னுடன் நாயை இணைத்து சொல்கிறார்.தன்னை தானே நாயாக கருதுகிறார்.இதனால் நாய்களின் அந்தஸ்து உயர்ந்துவிட்டது. மேலோங்கி விட்டது என்பதாக யாராவது நாளை கூறட்டும்!
இதனை பரேல்விகள் அஹ்மத் ரிஜாகானை புகழ்வதாக கூறுவார்களா?  விமர்சனம் என்பார்களா?

  நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு கூறுவது ஈமானற்ற செயல்,கீழான நிலை, வெட்கமற்ற தன்மை.

(16)  பரேல்விகள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஷைத்தானுடன் ஒப்பிடுவது 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

மீலாத் சபைகள் நடைபெறும் சுத்தமான,அசுத்தமான இடங்கள் மாற்றார்களின் சபைகள் அனைத்திலும்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாஜிர் (வருகை தருகிறார்)
என்பதாக நாம் வாதிடவில்லை.
மலகுல் மெளத் இப்லீஸ் இதனை விட அதிகமான இடங்களில் ஹாஜிர் அசுத்தமான இணைவைப்பு இணைவைப்பு இல்லாத சபைகளில் பெறப்படுகிறது.
(அன்வாரே ஸாதிஆ 359)


வழிகெடுக்கும் ஷைத்தானுக்கு அல்லாஹ் அறிவை கொடுத்துள்ளான்.அவன் எல்லா இடங்களில் ஹாஜிர் நாஜிர் இருக்கும் போது  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு உலகத்திற்கும் வழிகாட்டுபவர் ஹாஜிர் நாஜிராக இருக்கமாட்டார்களா?
(நூருல் இர்ஃபான் 184)இப்லீஸிற்கும் மறைவான ஞானத்தை அல்லாஹ் தந்துள்ளான்.பின்னால் நிகழும் செய்திகளை குறித்தும் அறிவித்துக் கொடுத்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.
(நூருல் இர்ஃபான் 751)


இந்த ஆதாரங்களின் மூலம் பரேல்விகளிடத்தில் ஷைத்தானும் (ஆலிமுல் கைப்) மறைவானதை அறிபவன் என்பதுதான் கொள்கையாகும்.பிறகு அவர்களின் ரோஷமற்ற வெட்கமற்ற குணத்தை பாருங்கள் ! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை உயர்த்த ஷைத்தானுடன் ஒப்பிட்டு கூறியுள்ளனர்.

ஈ பறக்கிறது.நாய் ஓட்டமாக ஓடுகிறது.ஆனால் அஹ்மத் ரிஜாகான் பறவையை போன்று பறக்க முடியாது.நாயை போன்று ஓடமுடியாது.இதனால் இவை,
அவரை விட சிறந்தவிட்டது என்று கூறலாமா?  இது விமர்சனமா இல்லையா?

(17) பரேல்விகள் அவர்களின்  விவாதத்தின் முன்னோடி அவர்களை குறித்து நபிமார்களின் தலைவர் என்பதாக பட்டமளித்தல் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

நபிமார்களின் தலைவர், சிறந்தவர்களின் முதல்வர்,
மெளலானா மெளலவி ஹாபிஜ் முஃப்தி ஹகீம் ஸய்யித் ஷாஹ் ஆலி
முஸ்தஃபா ஸாஹிப் கிப்லா தாமத் பரகாத்
(அல்ஃபகீஹ் அம்ரேதஸர், பாகம்:28, ரஜப் ஷஃபான்,1364 ஹிஜ்ரி)


(18) பரேல்விய யார்முஹம்மதுவின்  கேடுகெட்ட கொள்கைகள்

(A) بیادر کوٹ مٹھن تارخ خیر الوری بنی 
کہ در شکل فرید آمد شہنشاہ حجازایں 

இந்த கவிதையில் யார் முஹம்மது கூறுகிறார்:

 எனது பீர் ஃபரீத் அவர்களின் முகத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகம் எனக்கு தென்படுகிறது.அண்ணலார் பீர் ஃபரீதின் உருவில் கோட் மடன் வருகை தந்தார்கள் (தீவானே முஹம்மதி 103) 


அல்லாஹ் பாதுகாப்பானாக!

(B) دید نشادیدن رسول اللہ 
مظہر مصطفی فرید الدین 

எனது பீர் காஜா ஃபரீதை பார்ப்பது அகில உலகத்தின் தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்ப்பது
(தீவானே முஹம்மதி, பக்கம்: 118)(C) تفسیر و الضحی ہے تجلی فرید کا 
تصویر مصطفی ہے کا نظارا فرید 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசர்கள் சூரா லுஹாவில் வள்ளுஹாவின் கருத்தானது ஈருலகத்தின் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகத்திற்கு ஒப்புமையாக கூறியுள்ளார்கள்.அன்னாரின் திருமுகமானது வள்ளுஹா விட பிரகாசிக்கும்.ஆனால் பரேல்வி கூறுகிறார் இது எனது பீர் ஃபரீதின் மதிப்பாகும்.இதன் காரணமாக எனது பீரின் உருவம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருஉருவத்திற்ககு முற்றிலும் ஒத்து இருந்தது.
(தீவானே முஹம்மதி,பக்கம்:  174)(D) وہی جلوہ جو فاراں پر ہوا احمد کی صورت 
اسی جلوے کو پھر عریاں کیا مٹھن کی گلیوں میں

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோற்றத்தில் புனிதம் நிறைந்த மக்கா மலையின் உச்சியில் விஜயம் செய்தார்.அல்லாஹ் அவரை மீண்டும் பீர் ஃபரீதின் தோற்றத்தில் கோட் மடன் தெருக்களில் நிர்வாணமாக்கினான்.
(தீவானே முஹம்மதி, பக்கம்:  191)அல்லாஹ் பாதுகாப்பானாக! 
இது அப்பட்டமான அபாண்டம் இல்லையா? விமர்சனம் இல்லையா?

(E) علی شیر حق پر مشکلکشا دے 
سوا جام کوثر پلا کوئی نی سگبدا

முழு உலக முஸ்லிம்களும் அறிந்துள்ளனர்.கியாமத் நாளில் ஹவ்ளுல் கவ்ஸரின் நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் புகட்டுவார்கள்.எனினும், இதனை எந்த ஒரு முஸ்லிமும் மறுக்க மாட்டார்கள்.ஆனால்,
இந்த கவிதையின் கருத்து என்ன?

அலி (ரளி) அவர்களை தவிர வேறு எவருக்கும்
புகட்டமாட்டார்கள்.
(தீவானே முஹம்மதி, பக்கம்: 247)


(F) پاک محمد یارکوں دیکھو 
مظہر پاک فریدن

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகத்தை பார்க்க எண்ணுபவர் பீர் ஃபரீதை பார்க்கட்டும்! (தீவானே முஹம்மதி பக்கம்: 312)

(19) முஃப்தி அஹ்மத் யார் குஜராத்தி  நபிமார்களின் தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்தில் ஷைத்தான் குரல் எழுப்ப முடியும்.
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஷைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்தை எழுப்ப முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பமான அம்சங்களில் ஒன்று அவர்களின் ஒத்த தோற்றத்தில் உருமாறமுடியாது.ஸுலைமான் அலை அவர்கள் மஸீஹ் அலை அவர்களின் உருவத்தில் மக்கள் மாறினார்கள்.எனினும் ஷைத்தான் அவனின் குரலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தமாக எழுப்ப முடியும்.உதாரணமாக சூரா நஜ்மை ஷைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று ஓதினான்.(மவாயிஜே நயீமிய்யா முதல் பாகம்:1 பக்கம்:143)


பரேல்விகள், அப்பாவி முஸ்லிம்களின் உள்ளத்தில் ஷைத்தான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குரலை எழுப்பமுடியும் என்ற வழிகெட்ட கொள்கையை விதைக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live