9 Dec 2017

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் பரேல்விகளே- தொடர் 4


     (7) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேட்டைக்காரர்
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இந்த ஆயத்தானது காபிர்களை குறித்து பேசுகிறது.ஒவ்வொன்றும் தன் இனம் இல்லாததை வெறுக்கிறது.இதன் காரணமாக கூறப்பட்டது.

    காபிர்களே நீங்கள் எம்மைக் கண்டு பயப்படாதீர்கள் நான் உங்களின் இனம்தான்.அதாவது நான் மனிதன் தான். வேட்டைக்காரன் வேட்டைப்பிராணிகளின் சப்தத்தை வெளியாக்கி நான் வேட்டையாடுகிறேன்.
(ஜாஅல் ஹக் பக்கம்)


அல்லாஹ் பாதுகாப்பானாக! 

வாசகர்களே குஜராத்தி ஸாஹிப் 
இந்த ஆயத்தின் மூலம் கூறுகிறார் வேட்டைக்காரன் ஆரம்பமாக தந்திரம் செய்து பிடிக்க முயற்சிசெய்வான்.இறுதியில் அவனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்று விட்டால் வேட்டைப்பிராணியின் சப்தத்தை எழுப்ப தொடங்குவான்.அது ஏமாந்து போய் அருகில் வந்த பிறகு அதை வேட்டையாடுவான்.

இதே போன்றுதான் ஆரம்பத்தில்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
நான் உங்களைப் போன்று மனிதன் இல்லை.நூராக இருக்கிறேன்.நூராக இருக்கிறேன் என்று ஆரம்பத்தில் மக்கா காபிர்களுக்கு புரிய வைத்துக்கொண்டு இருந்தார்கள்.அதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.வேட்டைக்காரன் தந்திரத்தை கையாண்டு அதைப் போன்று சப்தத்தை எழுப்பவது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் உங்களை போன்று மனிதன்.எனக்கு அருகில் வாருங்கள் என்னை வெறுக்காதீர்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

(8) பரேல்விகளிடத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைநிராகரிப்பில் ஈடுபட்டார் (அல்லாஹ் பாதுகாப்பானாக)

பரேல்விய மெளலவி நயீமுத்தீன் முராதாபாத் அவர்கள் 'கஜாயினுல் இர்ஃபானில்' எழுதியுள்ளார்:

குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பவர் காபிர் என  கூறப்பட்டுள்ளது.


வாசகர்களே!  இதனை குறித்து அதிகமான ஆராய்ச்சி தேவையில்லை.இந்த பத்வாவின் பேரில் யாரைக் குறித்து பரேல்விய அறிஞர் தீர்ப்பளிக்கிறார் இது குறித்து உதாரணம் மட்டும் கூறுகிறோம் இதனைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நேசம் கொள்பவரின் உயிரானது துடித்துபோகும்.

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

 நபியே நீர் கூறுவீராக! நான் உங்களைப் போன்று மனிதன்தான்.

வாசகர்களே! குர்ஆனில் நபிமார்களை மனிதர் என்று சொல்பவர் காபிர் என கூறப்பட்டுள்ளது என்பதாக
பரேல்வி அறிஞர் கூறுகிறார்.இந்த வசனத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை மனிதர் என்பதாக பிரகடனப்படுத்தியுள்ளார். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரேல்விகளின் பத்வா பேரில் ????

வாசகர்களே அறிந்து கொள்ளுங்கள்! பரேல்விகளின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வீசியெறியும் விமர்சனங்களை பதிவு செய்ய மனம் இல்லை.எனினும், பரேல்விகளின் உண்மை முகத்தை கிழித்தெறிய வேண்டிய அவசியம்.அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தை சேர்ந்த தேவ்பந்த் உலமாக்களின் சரியான வாக்கியங்களை திரித்து எழுபது காரணங்களின் பேரில் குப்ர் என்பதாக பத்வா அளிப்பவர்கள்
பரேல்விய நயீமுத்தீன் காபிர் என்பதாக தீர்ப்பளிப்பார்களா?

(9)கணவன் மனைவி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம்பத்திய சமயத்தில் ஹாஜிர் நாஜிர் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணவன் மனைவி தாம்பத்திய இல்லற சமயத்தில் ஹாஜிர் நாஜிர்
(மிக்யாஸே ஹனஃபிய்யாத் பக்கம்:282)
(10) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஹ்மத் ரிஜாகான் பரேல்விகளுக்கு காத்திருந்தார்கள் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

1340,இருபத்து நான்காம் தேதி ஸபர் அன்று எனக்கு விழிப்பு நிலை கனவில்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.அண்ணலார் வருகை தந்தார்கள்.ஸஹாபாக்கள் அண்ணலாரின் சமூகத்தில் வீற்றிருந்தார்கள். எனினும் எவரையோ சபையில் எதிர்ப்பார்த்தவாறு அமைதி நிலவியது.நான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வினவினேன்.எனது தாய் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் யாரை எதிர்ப்பார்க்கிறீர்கள்? அஹ்மத் ரிஜாகான் அவர்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன் என
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(அஃலா ஹஜ்ரத் அஃலா ஸீரத் பக்கம்:161)


தேவ்பந்த் பெரியோர்களின் உறக்க நிலையில் கண்ட கனவை முன்வைத்து அவர்கள் , பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பதாக குற்றம் சுமத்தி பழி போடும் பரேல்விகளே! ரிஜாகானின் விழிப்பு நிலை கனவிற்கு உங்களின் பதில் என்ன?
தேவ்பந்த் பெரியோர்களின் கனவு விமர்சனம் எனில் ரிஜாகானின்  விழிப்பு நிலை கனவு விமர்சனம் இல்லையா?

(11) மெளலவி அஹ்மத் ரிஜாகானை புகழ்பாடுபவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்பாடுபவர் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

آپ کا حامد ہے حامد سید کونین 

அஹ்மத் ரிஜாகான் அவர்களே தங்களை புகழ்பவர் ஈருலக தலைவரை புகழ்பவர்
(அஃலா ஹஜ்ரத் அஃலா ஸீரத் 
பக்கம்:166)
(12) அஹ்மத் ரிஜாகான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அற்புதம் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

آپ کے اوصاف تک کسی رسائئ ہو 
بھلا ہو نبی کے معجزہ بس ختم ہے اس پر سخن 

கருத்து;

 ரிஜாகான் பரேல்வி அவர்களே தங்களின் பண்புகளை எவர் அடைய முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அற்புதம்தான் தாங்கள்.😠இதன் பேரில் விஷயத்தை முடிக்கிறேன்.
(அஃலா ஹஜ்ரத் அஃலா ஸீரத் பக்கம்:170)
(13) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷாஹே ஆலம் அவர்களின் தோற்றத்தில் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

    தஃவதே இஸ்லாமியின் தலைவர் பிஅத்வாதிகளின் முன்மாதிரி இல்யாஸ் காதிரி ஸாஹிப் அவர்கள் மெளலவி அம்ஜத் அலி அஃஜமியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை குறித்து எழுதியுள்ளார்கள் அதனின் சுருக்கம் ;

இதே சமயத்தில் மதீனாவின் தலைவர்  தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.அண்ணலாரின் பரக்கத்நிறைந்த நாவானது அசைந்தது.மனம் கமழும் பூக்கள் உதிர ஆரம்பித்தது.ஷாஹ் ஆலம் அவர்களே தங்களின் பாடம் நின்றுவிடுவது உங்களுக்கு  கவலை அளிக்கும்.இதனால் உங்களின் தோற்றத்தில் ஆசனத்தில் அமர்ந்து நாள்தோறும் பாடத்தை கற்றுக்கொடுத்தேன் என்பதாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
(தஜ்கிராஹ் ஸத்ரிஷ்ஷரீஆ பக்கம்:36,37)(14) நல்லோர்கள் மணமகள் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமகன் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

உர்ஸ் என்பதின் பொருள் திருமணம் அல்லது விடுதலை நாள் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவாகவும் நல்லோர்களுக்கு குறிப்பாக உலகம் சிறைச்சாலையாகும்.

الدنيا سجن المؤمن و جنة الكافر 

உலகம் முஃமீன்களுக்கு சிறைச்சாலை.காபிர்களுக்கு சுவனமாகும்.

மரண சமயத்தில் நல்லோர்கள் உலக கவலைகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.அவர்களது நேசத்திற்குரியவனை சந்திக்கும் நாள்.இதன் பேரில் திருமணநாளாகும்.மேலும் முஃமீன்களிடத்தில் முன்கர் நகீர் கேட்கப்படும் கேள்வியின் பதிலை கேட்டு கூறுகிறார்கள் மணமகனைப் போன்று உறங்குங்கள்! மக்கள் மலக்குமார்களின் நாவால் மணமகன்களாக மாறிவிடுவார்கள்.இதன் பேரில் அன்றைய தினம் உர்ஸ் (திருமணநாள்)
அடுத்து அன்றைய தினம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்கும் நாளாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத்தின் மணமகன் மணமகனை சந்திப்பதன் காரணமாக விடுதலை இரவாகும்.
(மவாயிஜே நயீமிய்யா பக்கம்:222)


வாசகர்களே கவனமாக பாருங்கள்!
முஃப்தி அஹ்மத் யார் குஜராத்தியின் புலம்பலை பாருங்கள்!
பேச்சின் வேகத்தில் அனைத்து முஃமீன்களும் மணமகள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமகன்.அதாவது இன்றைய தினம் மணமகன்,மணமகள் சந்திக்கும் நாள் இதன் பேரில் நாம் உர்ஸ் என்கிறோம் என்பதாக  எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live