26 Nov 2017

நடைமுறை மீலாத் விழாக்களின் உண்மைநிலை!


நற்பாக்கியமிக்க பிறப்பை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  பிறப்பை குறித்து பேசுவதற்கும், மீலாத்விழா மற்றும் மீலாத்  கொண்டாட்டத்திற்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு.முதலில் நாம் நன்கு மனதில் பதியவைக்க வேண்டிய விஷயம்!

நற்பாக்கியமிக்க நபி ஸல்லல்லாஹு அவர்களின் பிறப்பை குறித்து பேசுவது அளப்பெரும் நன்மையை பெற்றுத் தரும்.எனினும், நடைமுறையில் இருக்கும் மீலாத் விழாக்கள் வேறாகும்.முதல் விஷயமானது விரும்பத்தகுந்தது, நற்காரியமாகும்.இரண்டாவது விஷயமானது நூதனமும் வழிகேடாகும்.சுன்னத் ஜமாஅத் மற்றும் இஜ்மாவிற்கு எதிரானது.

   இதனை குறித்து அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் தேவ்பந்த் அறிஞர் ஹஜ்ரத் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறித்து பேசுவது விரும்பத்தக்கது.அதில் குறிப்பாகும் காரணிகளால் வெறுக்கத்தக்கது.
(பதாவா ரஷீதிய்யா)

மேலும் கூறுகிறார்கள்:

 அகில உலகத்தின் பெருமிதமிக்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறித்து பேசுவது நற்செயல் முஸ்தஹப்பாகும்.எனினும் குறிப்பான அம்சங்கள் இணைவதின் காரணமாக தடுக்கப்பட்டதாகி விட்டது.
(பதாவா ரஷீதிய்யா)

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் ஹனஃபி மத்ஹப் வழிமுறையைச் சேர்ந்தவர்களிடத்தில் மற்றும் இஸ்லாமிய சமூகத்தாரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பாக்கியமிக்க பிறப்பை குறித்து பேசுவதும், அண்ணலாரின் பரிசுத்த வாழ்வை குறித்து பேசுவதும்  உண்மையில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் மட்டும் நன்மையல்ல. மாறாக,வருடம் முழுவதும் நன்மையை பெற்றுத்தரும்.எனினும், மீலாத் சபை என்ற பெயரில் விழா கொண்டாடுவது, உணவு சமைத்து விருந்தளிப்பது; அதுமட்டுமின்றி, மீலாத் சபைகளுக்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை தருகிறார்கள் என்ற கொள்கை 
அதே சபையில் எழுந்து நின்றவாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரவேற்பது இந்த அனைத்தும் சுன்னத்திற்கு மாற்றமானது மட்டுமல்ல. மாறாக நான்கு இமாம்கள் முழு சமுதாயத்தின் ஒன்றுப்பட்ட கருத்திற்கு எதிரானதாகும்.

அடுத்து மீலாத் விழாக்கள் கொண்டாடுவதற்கு வாய்ப்புகளும் வழிகளும் காரணிகளும் இருப்பதுடன் ஸஹாபாக்கள் ஏன் கொண்டாடவில்லை?

அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமாக்கள் மீலாத் விழாக்கள் நடத்துவதை ஏன் சுன்னத்திற்கு மாற்றம் என்கிறார்கள்? 

  இதன் காரணம் என்னவெனில் ஸஹாபாக்கள் காலத்தில் மீலாத் விழாக்கள் கொண்டாடுவதற்குரிய அத்துணை வசதிகள்,வாய்ப்புகள், வழிகள், காரணிகள் இருந்தன.அதுமட்டுமின்றி அதனை தடுக்கும் தடைகளும் இல்லை.எனினும், ஸஹாபாக்கள் மீலாத் விழாக்கள் கொண்டாடவில்லை.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு புதிய ஒன்றல்ல.ஸஹாபாக்கள் இது குறித்து அறியவில்லை என்றும் கூறமுடியாது.அத்துடன் ஸஹாபாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை ஊன்றி கவனித்துள்ளார்கள்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சரியாக அறிந்திருப்பார்கள்.

  முஸ்லிம் ஷரீபின் அறிவிப்பில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி வருகிறது: 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு முன்பாக திங்கள்கிழமை நோன்பு வைத்தார்கள்.ஒரு முறை ஸஹாபாக்கள் நோன்பை குறித்து கேட்டார்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள்.

 ذلك يوم ولدت فيه و يوم بعثت او انزل علي فيه 

அன்று நான்  பிறந்தேன்.அன்று நான்   அனுப்பப்பட்டேன்.அல்லது அன்று என்மீது வஹி அருளப்பட்டது.

நான் இதே நாளில் தான் பிறந்தேன்.இதே நாளில் தான் எனக்கு நுபுவ்வத் எனும் கிரீடம் சூட்டப்பட்டது என்பதை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவுப்படுத்தி இருப்பதால் நிச்சயமாக ஸஹாபாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சரியாக அறிந்திருந்தார்கள்.மேலும் ரபியுல் அவ்வல் மாதத்தில் பிறந்ததையும் துல்லியமாக தெரிந்திருந்தார்கள். இங்கு கேள்வி என்னவெனில் ....

  திங்கள் கிழமை பிறந்தார்கள்
ரபிஉல் அவ்வல் மாதத்தில்தான் உலகில் கண்விழித்தார்கள் என்பது  ஸஹாபாக்களுக்கு  தெரியும்.
எனினும், பிறகு ஏன் மீலாத் விழா கொண்டாடவில்லை?

இந்த மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகை நடைபெற்றது என்பதை ஸஹாபாக்கள் தெளிவாக அறிந்திருந்தும் தோழர்கள் மதீனாவின் கடைவீதிகளில் கொடிக்கம்பங்களை ஏன் நட்டுவைக்கவில்லை? உணவு சமைத்து  ஏன் விருந்தளிக்கவில்லை? இது போன்ற நற்செயல்களில் ஏன் பின்தங்கி விட்டார்கள்?

அபூஜஹல்  வேதனை குறைக்கப்பட்டதாக வரும் மிக பலகீனமான ஹதீஸை தூக்கி பிடித்து மீலாத் கொண்டாடியதாக வாதிக்கின்றனர்.எனினும் நாயகத்தோழர்கள் மீலாத் கொண்டாடவில்லை என்பதை குழப்பவாதிகளும் ஏற்கின்றனர்.

அபூஜஹ்ல் வேதனை குறைக்கப்பட்டதாக வரும் ஹதீஸை ஒரு வாதத்திற்கு ஏற்றாலும் அவனின் மகிழ்ச்சி தூதுவத்தினால் வந்ததில்லை.உறவினால் ஏற்பட்ட மகிழ்ச்சியாகும்.இது தூதுதுவத்தை விட்டு விலகியிருந்தது.இதனால்தான் அபூலஹப் நரகில் நுழைவதை விட்டு தடுக்க முடியவில்லை.இன்று வரை நரகில் எரிந்து கொண்டுள்ளான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பாக்கியமுள்ள பிறப்பை ரிஸாலத் எனும் கண்ணாடியில் ஸஹாபாக்கள் பார்த்தார்கள்.இதனால் ஒவ்வொரு விநாடியும் நொடியும் கட்டுப்படுவது மிகைத்து நின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோழர்களை இந்த உணர்வில்தான் வார்த்தெடுத்தார்கள்.எனவேதான் அவர்கள் ஷரீஅத்திற்கு மாற்றமான தவறான பாதையில் செல்லவில்லை.தங்களின் மகிழ்ச்சியை கவலையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அர்ப்பணித்தார்கள்.இதனால் தோழர்கள் மீலாத் விழாக்கள் கொண்டாடவில்லை.அபூலஹப் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தூதராக பார்க்கவில்லை.உறவாகதான் பார்த்தான்.எனவே குழப்பவாதிகளின் வாதத்தின்படி இதன்பேரில் தான் அபூஜஹல் மீலாத் கொண்டாடினான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்கு பிறகு ஆறாம் நூற்றாண்டு வரை
எந்த ஒரு மார்க்க அறிஞரும் முஸ்லிமும் மீலாத் கொண்டாடவில்லை.கொடிகள் நடவில்லை.வீதிகளை அலங்கரிக்கவில்லை.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை தருகிறார்கள் என்ற இணைவைப்பு கொள்கையில்லை.

மவ்ஸில் என்ற ஊரின் அரசர்
இப்னு அர்பல் முஜப்பர் தீன் அபூஸயீத்  வீண்விரையம் செய்பவர் ஹிஜ்ரி 604- ஆம் ஆண்டு அவரின் கட்டளையின் பேரில் ஆரம்பித்தார்.

   அல்லாமா தஹபி ரஹ் அவர்கள் அரசரை குறித்து குறிப்பிடுகிறார்:

 كان ينفق كل سنة ولد النبي صلی الله عليه و سلم نحو ثلاثة مائة لف 

மீலாத் சமயத்தில் மூன்று இலட்ச ரூபாய்.

இப்னு அர்பல் குறித்து முன்னோர்களின் விமர்சனம்...

   இமாம் அஹ்மத் இப்னு முஹம்மது மிஸ்ரி மாலிகி:

 அவர் வீண்விரையம் செய்பவர் அக்கால உலமாக்களிடம் கூறினார் உங்களின் ஆய்வு ஆராய்ச்சியின் படி செயல்படுங்கள் மற்றவர்களின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம்.உலமாக்களில் ஒரு சாரார் இதன் பக்கம் சாய்ந்தனர்.ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாத் விழாவை நடைமுறைப்படுத்திய அரசர்களில் இவர்தான் முதல் நபர் .
(அல்கவ்லுல் முஃதமத் ஃபி அமலில் மவ்லித்)

ஆக வரலாற்றின் ஒளியில் நாம் ஆய்வு செய்யும் பொழுது ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாத் விழாவை நடைமுறைப்படுத்தியது மீலாத் சபைகளை அரங்கேற்றம் செய்தது இப்னு அர்பல் அரசர்தான். இவரை குறித்து உலமாக்களிடத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை.

மீலாத் தொடர்பில் அரசாங்க அறிஞரின்.

வழிகேடான மீலாத் நடைமுறைக்கு பிறகு அதற்கு உயிரூட்டியவர் பேராசைமிக்க மெளலவி உமர் இப்னு தஹ்யா அபுல்கத்தாப்  அரசரின் கீழ் சேர்ந்து அரசாங்க அறிஞராக மாறினார்.மீலாத் விழாவை நடைமுறைப்படுத்தினார்.
ஸஹாபாக்கள் உம்மத்தின் ஒன்றுப்பட்ட கொள்கைகளை  கண்ணோட்டங்களை புறந்தள்ளி ஆதாரங்களை திரட்டினார்.இது குறித்து தனியானதொரு நூல் எழுதினார்.அரசர் மகிழ்ந்து அன்பளிப்புகளை வாரிவழங்கினார்.இவரை குறித்து விரிவான கருத்துக்கள் அல்லாமா தஹபி ரஹ் அவர்களின் பிரபல்யமான நூலான துவலுல் இஸ்லாம் இரண்டாம் பாகம் 266 ஆம் பக்கம் உள்ளது.

   மீலாத் விழா கொண்டாடும் பரேல்விகள் நன்மை என்பதாக எப்படி வாதிடுகின்றனர்?

இந்த சமயத்தில் நாம் நல்லமுறையில் விளங்கிகொள்ளவேண்டும்.மத்ஹப் மறுப்பாளர்கள் திங்கள்கிழமை நோன்பு வைப்பதை சுன்னத் என்பதாக கருதுகின்றனர்.பரேல்விகள் இதனை மீலாத் விழா கொண்டாடுவதற்கு ஹதீஸை வளைத்து  ஆதாரம் எடுக்கின்றனர்.மத்ஹப் மறுப்பாளர்களின் வாதம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றார்கள்.

நமது மறுப்பு: 

நம்மிடத்தில் இந்த நோன்பானது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குறிப்பானது.இதன் காரணம் உம்மத்திற்கு நோற்கும்படி கட்டளையிடவில்லை.
ஆர்வமூட்டவில்லை.ஓர் அமலை சுன்னத் என்பதாக தீர்மானிப்பது ஸஹாபாக்களின் வழிமுறையின் மூலமாகும்.ஸஹாபாக்கள் முழு வாழ்விலும் நோன்பை கடைப்பிடிக்கவில்லை.
ஆர்வமூட்டவில்லை.
அது மட்டுமின்றி ஸஹாபாக்கள் சுன்னத் என்பதை திங்கள்கிழமை நோன்பு வைப்பது சுன்னத் என்பதாக இருந்தால் ஸஹாபாக்கள் நோன்பு வைத்திருப்பார்கள்.இதன் காரணமாக திங்கள் கிழமை நோன்பு வைப்பது சுன்னத் என்பது சரியோ பொருத்தமோ இல்லை.

பரேல்விகளின் வாதம்: 

நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள்  தனது பிறந்த நாள் அன்று
நோன்பு நோற்று இருப்பதன் மூலம்
தனிச்சிறப்பு உள்ளதை
புரியமுடிகிறது.அதனால் அன்று நாம்  மீலாத் விழா கொண்டாடலாம்

நமது மறுப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கள்கிழமை நோன்பு வைத்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  அந்த நாளில்தான் பிறந்தார்கள்.இரண்டாவது அந்த நாளில்
தான் நுபுவ்வத் கிடைத்தது.இரண்டும் ஒரே கிழமையில் நடந்துள்ளது.எனினும்
இரண்டின் தேதியும் மாறுபட்டது.

அதாவது அன்னாரின் பிறப்பானது ரபியுல் அவ்வல் ஒன்பது அல்லது பன்னிண்டு நிகழ்ந்துள்ளது.நபிக்கு தூதுத்துவமானது ரமளான்ர இருபத்தொன்றில் கிடைத்தது.

இதனால் நாம் கூறுகிறோம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த
தினத்தை பெருநாளாக கொண்டாடுவதாக இருந்தால் நபிக்கு நபித்துவம் கிடைத்த
நாளையும் பெருநாளாக கொண்டாடதயாரா?

 தூதுத்துவம் கிடைத்த நாளை நபி (ஸல்) அவர்கள்
பிறந்த நாளை விட வலியுறுத்த வேண்டும்.ஏனெனில் தூதுத்துவம்தான் நபி (ஸல்)
அவர்களின் சிறப்பிற்கும்,மேன்மைக்கும்,
தனித்தன்மைக்கும் காரணமாக உள்ளது.அதனை ஏற்பதுதான் கலிமாவின் ஒரு பகுதியாக
உள்ளது.நபித்துவ விழா கொண்டாடக்கூடாது எனில் மீலாத் விழாவும் கொண்டாடக்கூடாது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live