26 Nov 2017

மீலாதை நியாயப்படுத்த ஸஹாபாக்கள்,நல்லோர்களின் பெயரில் புனையப்பட்டவை.

சில தினங்களாக வாட்ஸ்அப்பில் மீலாத் கொண்டாட்டத்தை நியாயப்படுத்த ஸஹாபாக்கள் நல்லோர்களின் பெயரில் புனையப்பட்ட செய்திகள் உலாவருகிறது இது குறித்து
நமது மறுப்பை பார்ப்போம்!

அல்லாமா இப்னு ஹஜர் மக்கி ஹைதமி (ரஹ்) அவர்களின் பக்கம்
ஒரு நூல் இணைத்து சொல்லப்படுகிறது.அந்த நூலில் குலஃபாயே ராஷிதீன்களின் வழிகாட்டுதலின் பேரில் மீலாத் விழா அதனின் சிறப்புகளை குறித்து கூறப்பட்டுள்ளது.

மௌலிது ஓதுவது பற்றி மகான்களின் மணி மொழிகள்.

قال ابوبكر الصديق رضي الله عنه
من أنفق درهما علي قرائة مولد النبي
صلي الله عليه وسلم كان رفيقي في الجنة

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்பவர் சொர்க்கத்தில் எனது "தோழராக" இருப்பார்.
(கலீபதுர் ரசூல் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு)

قال عمر بن خطاب رضي الله عنه 
من عظم مولد النبي صلي الله عليه وسلم
فقد أحيا الاسلام

அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்தியவர்
இஸ்லாத்தை உயிர்ப்பித்தவராவார்.
(உமர் ரலியல்லாஹு அன்ஹு)

قال عثمان رضي الله عنه 
من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين

மஹ்மூத் நபி    ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்தவர் "பதுறு,ஹுனைன் போர் முனைகளில் கலந்து
கொண்டவரைப் போலாவார்.
(உதுமான் ரலியல்லாஹு அன்ஹு)

قال علي رضي الله عنه وكرم الله وجهه 
من عظم مولدالنبي صلي الله عليه وسلم وكان سببا لقرائته لايخرج من الدنيا الابالامان ويدخل الجنة بغير حساب

நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களது பிறந்த தினத்தை கண்ணியப் படுத்தியவர், மவ்லிது ஓதக்கூடியவர் ஈமானுடனேயே மௌத்தாவார் சுவனத்தில் கேள்வி இன்றி பிரவேசிப்பார்.
(அலி ரலியல்லாஹு அன்ஹு)

இவர்களை தவிர ஹஜ்ரத் ஹஸன் பஸரி,ஜுனைத் பஃதாதி,மஃரூப் கர்கி,இமாம் ராஜி இமாம் ஷாபியி,ஹஜ்ரத் சிர்ரி ஸக்தி மற்றும் மற்ற அறிஞர்களின் கூற்றுகளும் எடுத்தெழுதப்பட்டுள்ளன.
இந்த நூலை படித்த பிறகு சில கேள்விகள் எழுகின்றன.இதற்கு பரேல்விகள் பதில் தருவார்கள்
என எதிர்ப்பார்க்கிறோம்!

(1) ஸஹாபாக்கள் நல்லோர்களின் கூற்றுக்களுக்கு அறிவிப்பாளர் தொடர் இல்லை.

(2) ஸஹாபாக்களின் சொல் செயல் நம்மிடத்தில் ஆதாரம் கொள்ளத்தக்கது.அல்லாமா இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.அவர் மேற்கூறப்பட்ட கூற்றுக்களை ஸஹாபாக்களிடமிருந்து கேட்டு இருக்கவில்லை என்பது எதார்த்தமான ஒன்றாகும்.இதனால் அறிவிப்பாளர் தொடர் அறியப்படவேண்டும்.

(3)ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள் :

அறிவிப்பாளர் தொடர் மார்க்கமாகும்.அறிவிப்பாளர் தொடர் இல்லையெனில் மனதில் படுவதெல்லாம் கூறிவிடுவர்.

அபூஹுரைரா (ரளி) அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுவதை அறிவிக்கிறார்கள்: 

"நீங்களும் உங்களின் முன்னோர்களும் கேள்விப்படாத ஹதீஸ்களை கூறும் மக்கள் என் சமூகத்தில் இருப்பார்கள்". நீங்கள் அவர்களை விட்டும் விலகியிருங்கள்!
(ஹதீஸின் கருத்து)

கேள்வி என்னவெனில் 
குலஃபாயே ராஷிதீன்கள் மற்றும் நல்லோர்களின்  மெளலிது குறித்த கருத்துக்கள் ஹஜ்ரத் ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி,ஹஜ்ரத் முஜத்தித் அல்ஃபஸானி,
முல்லா அலி காரி,
அல்லாமா ஸுயூத்தி 
ரஹ்மதுல்லாஹி  அலைஹிம் மேலும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களின் பார்வையை விட்டு எப்படி மறைந்துள்ளது? அறிஞர்களின் விசாலாமான மார்க்க ஞானம் அறியப்பட்ட ஒன்றாகும்.

(4)அல்லாமா யூசுப் இப்னு இஸ்மாயில் அவர்கள் 'ஜவாஹிருல் பிஹாரின்' மூன்றாம் பாகம், பக்கம்:328 முதல் 337 வரை அல்லாமா இப்னு ஹஜர் ஹைதமி அவர்களின்  '
நிஃமதுல் குப்ரா அலல் ஆலமி ஃபி மவ்லிதி ஸய்யிதி உலித ஆதம்' அசலான கட்டுரையின் சுருக்கத்தை எடுத்தெழுதியுள்ளார்.
அசலான நூலில் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழுமையான அறிவிப்பாளருடன் கூறப்பட்டுள்ளது.சுருக்கத்தில் அறிவிப்பாளர் தொடர் போக்கப்பட்டுள்ளது.

இப்னு ஹஜர் ரஹ் கூறுகிறார்கள்: 

எனது நூலில் புனைபவர்களின் புனைதல் இட்டுகட்டுவதை விட்டும் நீங்கியுள்ளது. எனினும், மக்களின் கரங்களில் உள்ள  மீலாத் குறித்த கட்டுரையில் அதிகமான பொய்யான புனையப்பட்ட அறிவிப்புகளே உள்ளது. இந்த நூலில் குலஃபாயே ராஷிதீன்கள் மற்றும் நல்லோர்களின் கூற்றுக்கள் குறித்து அறவே இல்லை.அல்லாமா இப்னு ஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்களின் பக்கம் இணைத்து சொல்லப்படும் நூலானது புனையப்பட்டதாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அல்லாமா ஸய்யித் முஹம்மத் ஆபிதீன் ஷாமி ( ரஹ்) அவர்களின்
சகோதரனின் மகனார் அல்லாமா ஸய்யித் அஹ்மத் ஆபிதீன் ஷாமி அவர்கள் 'நிஃமத்துல் குப்ராவின்' விளக்கவுரை 'நஷ்ருத்துர் அலா மவ்லிதி இப்னு ஹஜர்' 
என்ற பெயரில் எழுதியுள்ளார்கள்.இதனின் பலதரப்பட்ட மேற்கோள்களை அல்லாமா யூசுஃப் இப்னு இஸ்மாயில் அவர்கள் மஜ்மஉல் பிஹார் பாகம்:3 பக்கம்:337 முதல் 374 வரை எடுத்தெழுதியுள்ளார்.அதிலும் குலஃபாயே ராஷிதீன்களின் மேற்கூறப்பட்ட கூற்றுக்கள் குறித்து கூறப்படவில்லை.

மேற்குகூறியவைகளுக்கு ஆதாரம் 👇👇

 குலஃபாயே ராஷிதீன்கள் மற்றும் நல்லோர்களின் கூற்றுக்கள் பொய்யானவை என்பதை பரேல்விய அறிஞர் முஃப்தி ஸய்யித் ஸாபிர் ஹுஸைன் அவர்கள் 'ஈதே மீலாதின்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர் ஜன்த் இஸ்லாஹி தலபே பெஹ்லூ' நூலின் 64-ஆம் பக்கத்தில்
எடுத்துக்கூறி சத்தியத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live