9 Nov 2017

நபி ﷺ அவர்களை விமர்சணம் செய்து சண்டையிடும் போலி சுன்னத் (பரேலவி) ஜமாதின் பெரியார்கள்.

 ரிஜாகான் பரேல்வி, 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையான வார்த்தைகளால் சுடு சொற்களால் விமர்சனம்

🔪ரிஜாகான் பரேல்வி VS பரேல்வி அறிஞர்களின் மோதல்🔪

ரிஜாகான் பரேல்வி அவர்கள் இர்ஃபானே ஷரீஅத் நூலில் எழுதியுள்ளார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் அல்லது வையகத்தின் பெருமிதமிக்கவர் என்று கூறுவது பொருளற்றதாகும்.
(இர்ஃபானே ஷரீஅத் பக்கம்:37)



பரேல்விகளின் தலைவர் ரிஜாகான் பரேல்வியின் தீர்ப்பிற்கு எதிரான பரேல்விய அறிஞர்களின் நிலைப்பாடு!

பரேல்விய ஷைகுல் ஹதீஸ் அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி அவர்களின் ஆலோசனையின் பேரில் வெளியிடப்பட்ட நூலில் ரிஜாகான் பரேல்வியின் பத்வாவிற்கு எதிராகவும், புறக்கணித்தும் பரேல்விய அறிஞர் முஹம்மது ஆலே முஸ்தஃபா அவர்கள் எழுதியுள்ளார்கள்:

பிரியமான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகில உலகத்தின் பெருமிதக்கவர்.
 (முனாஜிரே பெங்கால்)




ஹாஃபிஜ் முஹம்மது ஹஸன் முஜத்திதி அவர்கள் ரிஜாகான் பரேல்வியின் பத்வாவிற்கு எதிராகவும் புறக்கணித்தும் எழுதியுள்ளார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகில உலகத்தின் பெருமிதமிக்கவர்.
(அல்அகாயிதுஸ் ஸஹீஹா ஃபி தர்தீதுல் வஹ்ஹாபிய்யா, பக்கம்:72)



இதே போன்று தேவ்பந்த் மத்ஹப் என்ற நூலில் அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் என்று எழுதப்பட்டுள்ளது.

பரேல்விகளே! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித குலத்திற்கும் மட்டுமல்ல முழு உலகத்தின் அனைத்து பொருட்களுக்கும் பெருமிதமிக்கவர்.

இதனை ஏற்பதற்கு ரிஜாகான் பரேல்விக்கு மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

ஏனெனில் பரேல்விகளிடத்தில்:

 ஷைத்தான் இல்லையென்றால் உலகில் எந்த ஒன்றும் நடைபெறாது.
(ரஸாயிலே நயீமிய்யா 379)



பரேல்விகள் ஷைத்தானை உலகத்தின் காரணியாக ஏற்கிறார்கள்.எனினும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு உலகத்தின் காரணியாளர், பெருமிதமிக்கவர் என்பதை ஏற்க மனம்  ஒத்துக்கொள்ளவில்லை.

ரிஜாகான் பரேல்வி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் என்று கூறுவது பொருளற்றது என்கிறார்.

பொருளற்றது என்பதற்கு ரிஜாகான் பரேல்வி பயன்படுத்திய உர்து வார்த்தை بے معنی  (பே மஃனா) என்பதாகும்.

பொருளற்ற வார்த்தை (بے معنی ) இதற்கு உர்துவில் அர்த்தம் 👇👇

 (1) مہمل (வீணான,பலனற்ற)
(2) لغو (பொருந்தாத பொய்யான)
 (3) بے ہودہ (ஒழுக்கமற்ற)
(4) بے سروپا காரணமற்ற,ஆதாரமற்ற, அடிப்படையற்ற.
(பைரோஜுல் லுகாத்)



ஆக
அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் பார்வையில்👇👇

(1)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் என்று கூறுவது தடையாகும்.

(2)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் கூறுவது வீணானது,பொருந்தாதது.

(3)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் என்று கூறுவது ஒழுக்கமற்றதாகும்.

(4)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் என்று கூறுவது அடிப்படையற்றது ஆதாரமற்றதாகும்.

 பரேல்விய அறிஞர்களின் மோதல்

🔪பரேல்விய முனாஜிர் அல்லாஹ் ததா VS அமீரே தஃவதே இஸ்லாமி பத்வா🔪

அமீரே தஃவதே இஸ்லாமி இல்யாஸி அத்தாரி அவர்களின் கேள்வியும் பதிலும்:

அல்லாஹ்வை ஹாஜிர் நாஜிர் என்பதாக கூறமுடியுமா? இல்லையா? பதில் கூறமுடியாது.அல்லாஹ் மறைவாக இருப்பதை பகிரங்கமாக இருப்பதை அறிபவன்.எதுவும் அவனை விட்டு மறைந்திருப்பது இல்லை.
(குஃப்ரியாதே கலிமாத் கே பாரே மே ஸுவால் வ ஜவாப் பக்கம்:571)


மெளலவி அல்லாஹ் ததா பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்கள்: 

அல்லாஹ்தஆலா எல்லா இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் என்பதை ஏற்கவேண்டுமா?
இல்லையா? ஏற்கவில்லையெனில் தெளிவான இறைநிராகரிப்பாகும்.(தன்வீருல் ஹவாதிர் பக்கம்:70,71)



பரேல்விய மெளலவி அல்லாஹ் ததாவின் தீர்ப்பின் பேரில் அமீரே தஃவதே இஸ்லாமி இல்யாஸ் அத்தாரி ஸாஹிப் காபிராகிவிட்டார்.

🔪 பரேல்விய முனாஜிர் உமர் அலி அஜ்ரவி VS ஹகீமுல் உம்மத் அஹ்மத் யார் கான் நயீமி மோதல்🔪

பரேல்விய முனாஜிர் உமர் அஜ்ரவி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் யார் கான் நயீமியின் மீது இறைநிராகரிப்பு பத்வா...

பரேல்விய ஹகீமுல் உம்மத் அஹ்மத் யார் கான் நயீமி ஸாஹிப் எழுதியுள்ளார்கள்:

ஹஜ்ரத் ரபீஆ (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சுவனத்தை வேண்டினார்கள்.இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் அல்லாஹ்வை அன்றி என்னிடத்தில் சுவனம் வேண்டுகிறீர்கள்.
இணைவைப்பாளராக ஆகிவிட்டீர்கள் என்று கூறவில்லை.மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் வேறு  கேளுங்கள் என்றார்கள்.இதன் மூலம் அல்லாஹ்வை அன்றி உதவி தேடுவதானது  நிரூபணமாகிறது.
(ஜாஅல் ஹக் 178,179)




பரேல்விய முனாஜிர் உமர் அலி அஜ்ரவி எழுதியுள்ளார்கள் :

இந்த குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் மற்றும் தூதர்களுக்கு மத்தியில் வித்தியாசத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் தூதர்களை அல்லாஹ்வையன்றி என்பவர்கள் மீது இறைநிராகரிப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
(மிக்யாஸே ஹனஃபிய்யாத்)


ஆக,அல்லாஹ்வையன்றி என்பதாக தூதர்களை பிரிப்பவர் பரேல்விய முனாஜிர் உமர் அலி அஜ்ரவி அவர்களின் கண்ணோட்டத்தின் படி காபிர்.எனவே பரேல்வி அறிஞர் அஹ்மத் யார் கான் நயீமி அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வையன்றி என்பதாக எழுதியிருப்பதால் காபிராகுவார்.

நமது உம்மத்தே தளத்தில் பரேல்விய மோதல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள்..👇👇

1) பரேல்விய பாஜில் அஹ்மத் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

2) பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

3)குலாம் மெஹ்ரே அலி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

4) பரேல்விகளின் காபிர் விளையாட்டு

5)பரேல்விய ஹஸன் அலி ரிஜவி Vs ரிஜாகான் பரேல்வி

6)பரேல்விகளின் பார்வையில் ரிஜாகான் பரேல்வி காபிர் பெருமானார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விமர்சகன்

7)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் தீர்ப்பின் பேரில் காபிர்

8) பரேல்விய உலமாக்கள் ரிஜாகான் பரேல்வியின் மீது தொடுக்கும் கண்டனங்கள்

9)பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒழுக்க கேடானவர்,அவமரியாதையாளர்

10)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் காபிர், அவமரியாதை செய்பவர்.

11)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இறைமறுப்பாளரே!
பரேல்விகளின் கண்ணோட்டம்

12)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் பரேல்வி.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live