25 Oct 2017

இல்யாஸ் (ரஹ்) அவர்களின் மல்பூஜாத் குறித்து | இஹ்ஸான் காதிரிக்கு புத்தியில் உரைக்கும் மறுப்பு.

பரேல்வி இஹ்ஸான் காதிரி 
தேவ்பந்த் உலமாக்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி,குரோதத்தால், பொறாமையால் விமர்சனம் செய்துள்ளார்.இவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வலுவற்றது.பலகீனமானது.
இனிக்க இனிக்க பேசுவதால் சத்தியவான் என்பதாக எண்ணிவிடாதீர்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் இவரின் விஷயத்தில் அப்படியே பொருந்துகிறது.

    "கடைசி காலத்தில் சிலர் தோன்றுவார்கள்.அவர்கள் மார்க்கம் எனும் போர்வையில் உலகச்செல்வங்களை வேட்டையாடுவர்.ஆடுகளின் மிருதுவான தோலினால் ஆடை அணிவார்கள்.அவர்களின் நாவுகள் சர்க்கரையை விட இனிமையானதாக இருக்கும்.எனினும் அவர்களுடைய உள்ளமோ ஓநாய்களின் உள்ளத்தை போன்றிருக்கும்."
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளி அவர்கள், நூல்:திர்மிதி)

தப்லீக் ஜமாஅத்தினர் மீது தனிப்பட்ட குரோதம் விரோதம் இல்லை என்பதாக நடிக்கிறார்.உண்மையில் தனிப்பட்ட குரோதம் விரோதம் தான் இல்யாஸ் (ரஹ்) அவர்களை விமர்சிப்பதன் காரணம் என்பதை நாம் பின்னால் தெளிவுப்படுத்துகிறோம்!

தவ்பா செய்யுங்கள் என்பதாக கூறுகிறார்.முதலில் தவ்பா செய்வதற்கு மிகத்தகுதியானவர் நீங்கள்தான்.

இனி,மெளலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் மல்பூஜாத் குறித்து விமர்சனமும் நமது மறுப்பையும் இனி பார்ப்போம்!

மல்பூஜாத்தில் வருகிற சம்பவம் மெளலானா ஹஜ்ரத் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இன்று கனவில் எனக்கு  சரியான ஞானம் கொடுக்கப்படுகிறது.இதனால் அதிகமாக தூக்கத்தை விரும்பினேன்.ஒரு காலம் வந்தது.தூக்கம் குறைந்தது.மருத்துவரிடம் ஆலோசனை செய்து பழைய படி தூங்க ஆரம்பித்தேன்.كنتم خير امة اخرجت للناس இந்த வசனத்தின் விளக்கவுரை எனக்கு  கனவில் கூறப்பட்டது.நீங்கள் நபிமார்களைப் போன்று அனுப்பப்பட்டவர்கள்.

இதனை வைத்து இஹ்ஸான் காதிரி அவர்கள் இல்யாஸ் ரஹ் அவர்களை நபி என்பதாக வாதிடுவதாக சித்தரிக்கிறார்.

நமது பதில்:

முதலில் இந்த சம்பவம் கனவுடன் சம்பந்தப்பட்டது.கனவில் வருவதை வைத்து குற்றம் சுமத்துவது பெரிய அறியாமையாகும்.

ஆயிஷா (ரளி) அறிவிப்பு:

மூன்று பேரை விட்டும் எழுது கோல் உயர்த்தப்பட்டுவிட்டது (நன்மை தீமை எழுதப்படாது) தூங்குபவர் விழிக்கும் வரை, பைத்தியம் தெளியும் வரை, சிறுவர் பருவம் எய்தும் வரையும்.
 (நூல்:அல்ஜாமிஉஸ்ஸஙீர்)


இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கனவின் மூலம் தன்னை பெருமை பேசுவதாக இஹ்ஸான் காதிரி அவர்கள் உளறுகிறார்.உங்களின் தலைவர் ஆங்கிலேயர்களின் அடிவருடியான ரிஜாகான் பரேல்வியை 
விட யார் பெருமை பேச முடியும்? பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ரிஜாகான் பரேல்வி இமாமத் செய்ததாக மல்பூஜாதில் எழுதி பெருமை பேசுவதை விடவா?

நபிமார்களைப் போன்று அனுப்பப்பட்டவர்கள் என்பதாக உள்ளது.இங்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.உவமையாக கூறுவதை நேரடியாக விளங்கக்கூடாது.

பரேல்விகளின் நபிமார்களை அவர்களின் நூல்களிலிருந்து பார்ப்போம்!

பரலேவிகளின் நம்பிக்கைக்குரிய சூபியும் பெரியோரும் வலி குலாம் பரீத் அவர்கள் தனது மல்பூஜாதிலே கூறியுள்ளார்கள்:

حضرت مولانا فرمایا کرتے تھے کہ ہمارے حضرت شیخ کے تمام مریدین برگزیدہ تھے اور محبت شیخ میں اس قدر محو تھے کہ کلمہ طیبہ میں محمد رسول اللہ حضرت شیخ کے ڈر سے کہتے تھے ور نہ ان کا جی چاہتا تھا کہ شیخ کے نام کا کلمہ پڑھیں
 (حوالہ مقابیس المجالس )

ஹள்ரத் மெளலானா கூறினார்கள் எங்களின் ஹள்ரத் அனைத்து முரீதின்களை விட ஷைகிடத்தில் தனித்துவம் பெற்றவர்கள்.மேலும் ஷைகின் மீதுள்ள அன்பனாது இந்தளவிற்கு அவரை ஆட்கொண்டிருந்தது.கலிமா தய்யிபாவிலே முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று ஷைகின் மீதுள்ள பயத்தினால்  சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு இல்லையெனில் அவரின் உள்ளமானது ஷைகின் பெயரில் கலிமா படிப்பதை விரும்பியது.
(மகாபீஸுல் மஜாலிஸ்)


பரலேவிகளே! இஹ்ஸான் காதிரி அவர்களே இதற்கு பதில் கூறுங்கள்! "ஷைக்" மற்றும் "பீரின்" மீது பிரியத்தினால் கலிமாவை யார் படித்தார்? நபிமார்களைப் போன்று என்பதற்காக கொதித்தெழுந்த பரேல்வி  இஹ்ஸான் காதிரியே இதற்கு எதிராக கொதித்தெழ தயாரா? தவ்பா செய்ய சொல்ல தயாரா?

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் மட்டுமல்ல பரேல்வி அறிஞர்களின் பெயரில் ஸலவாத்:அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் தந்தை நகி அலிகான் அவர்களின் நூலான 'அன்வாரே ஜமாலே முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' பக்கம்:35 ல் வருகிற வாசகம் :


الشيخ قومه  كالنبي فی امته 

இதனின் கருத்து: 

தனது சமுதாயத்தில் நபியை போன்று ஷைக் தனது சமூகத்தில் இருக்கிறார்.


இதற்கு எதிராக இஹ்ஸான் காதிரி அவர்கள் கொதித்தெழ தயாரா? அஹ்மத் ரிஜாகானின் தந்தையை ஈமான் இல்லாதவர் என்று கூற தயாரா?

தஜல்லியாதே அஹ்மத் ரிஜா என்ற நூலில் பக்கம்:164 ல்

آپ کی  ذات عکس بیمبر 

அன்னாரின் (ரிஜாகான்) உள்ளமையானது நபியின் பிரதிபிம்பம் .


அஸ்தஃபிருல்லாஹ்! அஸ்தஃபிருல்லாஹ்!

இன்ஷா அல்லாஹ் இனி 
பரேல்வி இஹ்ஸான் காதிரியின் உண்மை முகம் தோலுரிக்கப்படும்! பொய்களின் புனைந்து கூறுவதின் மொத்த உருவம் பரேல்வி இஹ்ஸான் காதிரி என்பது நிரூவப்படும்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live