23 Oct 2017

அர்வாஹே ஸலாஸா குறித்து || பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு மறுப்பு .

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கடுமையான வார்த்தைகள், கடும்போக்கின் பிண்ணணியை அறிய நமது தளத்தின் இந்த லிங்கை பார்வையிடவும்!

   அக்கால முஸ்லிம்களிடத்தில் இணைவைப்பு,இறைநிராகரிப்பு, நூதனங்கள்,சடங்கு,சம்பிரதாயங்கள் கடுமையாக ஊடுருவி இருந்தது.முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியில் பெயரளவில்தான் வேறுபாடு இருந்தது.முஸ்லிம்களிடம் காபிர்களின் பழக்கம் புரையோடி இருந்தது.இதன் பேரில் இணைவைப்பு கொள்கை இறைநிராகரிப்பு கொள்கையை வேறோடு களைய,அடியோடு அகற்ற, முற்றிலுமாக துடைத்தெறிய, தகர்த்தெறிய,கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்கள்.

தக்வியதுல் ஈமான் குறித்து அர்வாஹே ஸலாஸா வில் உள்ள கருத்தை வழமைபோல் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பூதாகரமான குற்றச்சாட்டாக சித்தரிக்கிறார்.இனி,ஜவ்வாத் ரப்பானியின் வாதங்களையும் நமது மறுப்பையும் இனி பார்ப்போம்!


ஜவ்வாதின் வாதம்: 

ஷிர்கே கஃபியை (மறைமுகமான இணைவைப்பு) ஷிர்க்கே ஜலி (அப்பட்டமான இணைவைப்பாக) எழுதியுள்ளார்.

நமது பதில்: 

இணைவைப்பு குறித்து மக்களுக்கு அச்சுறுத்த வேண்டும்.அதனின்  விளைவுகளை குறித்து எச்சரிக்கவேண்டும் என்பதற்காக கடும் வார்த்தையை கையாண்டுள்ளார்கள்.ஏனெனில் இணைவைப்பின்  வாடையை கூட நுகரக்கூடாது என்கிற நல்லெண்ணம்தான் காரணமாகும்.

ஸஹீஹூல் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் வருகிறது :

و المراد باطلاق الكفر ان فاعله فعل فعلا شبيها بفعل اهل الكفر و فيه جواز اطلاق الكفر على المعاصى لقصد الزجر كما قررناه 


இதனின் கருத்து:

இறைநிராகரிப்பு என்பதைக் கொண்டு கருத்து என்னவெனில் காபிர்களின் செயல்களுக்கு ஒப்பான செயலை செய்துள்ளார்.எச்சரிக்கை செய்யவேண்டும் எண்ணத்தில் பாவங்களை இறைநிராகரிப்பு என்பதாக பொதுவாக கூறுவது கூடும்.

ஆக,பாவமான காரியத்தை விட்டும் எச்சரிக்கை செய்யவேண்டும் என்பதற்காக இறைநிராகரிப்பான செயல் என்று சொல்வதற்கு அனுமதியுள்ள போது மறைமுகமான இணைவைப்பை பகிரங்கமான இணைவைப்பாக கூற அனுமதியில்லையா?

ஜவ்வாதின் வாதம்: 

கடும் போக்கு கடுமையான வார்த்தைகள் என்பதை எடுத்துக்கூறி ஜவ்வாத் ரப்பானி குற்றச்சாட்டாக சித்தரிக்கிறார்

நமது பதில்:

கடுமையான வார்த்தைகள், கடும்போக்கு என்பதை விமர்சனமாக சித்தரித்தால் இதற்கு முழு தகுதியானவர் அஹ்மதே ரிஜாகான் பரேல்வி.
அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் கடும்போக்கு,கடுமையான வார்த்தையை குறித்து நமது உம்மத்தே முஹம்மதிய்யாவில் ஓர் கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளோம்.

மேலும் கொஞ்சத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

அன்னார் மாற்றுகருத்து கொண்டவர்களின் விஷயத்தில் கடும் போக்கு கொண்டவர்.இந்த விஷயத்தில் ஷரீஅத்தின் பேணிக்கையை கவனிக்கவில்லை.

(முகத்தமா மகாலாதே ரிஜா பக்கம்:30)


கடும் போக்கு கொண்டவர் நாவின் விஷயத்தில் பேணிக்கை கொண்டவர்.சபிக்கக் கூடியவர் திட்டக்கூடியவர்.இந்த விஷயத்தில் ஷரீஅத்தின் பேணிக்கையை கவனிக்கவில்லை.

(அல்ஃபாஜில் அல்பரேல்வி மஸ்ஊத் அஹ்மத் பக்கம்:199)



தக்வியதுல் ஈமானில் கடுமையான வார்த்தைகள் கால சூழ்நிலைகள் நிகழ்வுகளை கவனித்து எழுதப்பட்டுள்ளது.அக்காலத்தின் அறியாமைக்கு மருந்தாகும்.நோய் கடுமையாக இருந்தால் மருத்துவரின்  மருந்தும் கடுமையாக இருக்கும்.நோய் லேசாக இருந்தால் மருந்தும் லேசாக இருக்கும்.இதே போன்று ஹஜ்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கடுமையான வார்த்தையை பயன்படுத்தியது அறியாமை கடுமையாக இருந்ததன் பேரிலாகும்.

உதாரணமாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

قل فمن يملك من الله شيئا ان اراد ان يهلك المسيح ابن مريم


மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்;

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் தொழுகையை விடுவது மனிதனை குப்ரில் சேர்த்துவிடும்.மற்றொரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது இறைநம்பிக்கை மற்றும் இறைநிராகரிப்பிற்கு மத்தியில் வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்.

கவனியுங்கள்! இந்த ஹதீஸில் தொழுகையை விடுவது இறைநிராகரிப்பு இணைவைப்பு என்பதாக கூறப்பட்டுள்ளது.இதற்கு விளக்கம் என்னவெனில் எச்சரிக்கை செய்ய பயமுறுத்த அச்சுறுத்த சொல்லப்பட்டுள்ளது.எவரேனும் ஒருவர் இந்த ஹதீஸை கூறி தொழுகையை விடும் நபரை பார்த்து காபிர் முஷ்ரிக் என்பதாக தீர்ப்பளிப்பது பொறுத்தமில்லை.

கடுமையான வார்த்தைகள் இருந்தாலும் அர்வாஹே ஸலாஸாவில் தெளிவாக வந்துள்ளது கங்கோஹி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக வந்துள்ளது.தக்வியதுல் ஈமான் நூலின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்க்கையை சீர்செய்துகொண்டார்கள்.அன்னாரின் மரணத்திற்கு பிறகு எத்தனை நபர்கள் என்பதை கணக்கிட முடியாது.

ஜவ்வாத் வாதம்: 

தக்வியதுல் ஈமான் நூல் பிரச்சனை ஏற்படுத்த சண்டை ஏற்படுத்த எழுதப்பட்டது

நமது பதில்: 

இதற்கு நாம் பதில் தருவதை விட பரேல்வி ஜவ்வாத் ரப்பானி சரியான பதில் தருவதை எதிர்ப்பார்க்கிறோம்.

  அஹ்மத் ரிஜாகான் பரேல்வி   ஹுஸ்ஸாமுல் ஹரமைன் நூல் எழுதினார்.புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. அஹ்மத் ரிஜாகான் ஐம்பது வருடம் தொடர்படியாக முயற்சி உழைப்பில் மூழ்கினார்.இதன் பேரில் தனித்து இரு  பிரிவுகள் தோன்றியது.பரேல்வி தேவ்பந்தி அல்லது வஹ்ஹாபி.
 (ஸவானிஹே அஃலா ஹஜ்ரத் பரேல்வி)


தக்வியதுல் ஈமான் என்ற நூல் எழுதியது பிரச்சனை ஏற்படுத்த சண்டை ஏற்படுத்த குற்றம் சுமத்தினால்  அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் முயற்சியினால் பிரிவினை,பிளவுகள் தோன்றியது.சீர்த்திருத்தம் நல்லிணக்கம் ஏற்பட பாடுபடுவார்கள்.உழைப்பார்கள்.
ஆனால்,ரிஜாகான் பரேல்வி பிரிவினை பிளவை ஏற்படுத்த பாடுபடுபட்டு உழைத்துள்ளார்.

ஜவ்வாத் வாதம்:

 அர்வாஹே ஸலாஸாவில் வருகிற நிகழ்வு ஷாஹ் அப்துல்காதிர் ஸாஹிப் கூறினார் நாம் இஸ்மாயிலை ஆலிம் என்பதாக எண்ணியிருந்தோம்!எனினும்,ஒரு ஹதீஸின் கருத்தை கூட விளங்கவில்லையே
  இதனை வைத்து ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்களை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி விமர்சிக்கிறார்

நமது பதில்:

ஒரு அறிஞர் ஹதீஸை குறித்து விளங்கும் கண்ணோட்டம் வேறு.மற்றொரு அறிஞர் விளங்கும் கண்ணோட்டம் வேறு.இது இயல்பான ஒன்றாகும்.மேலும் ஷாஹ் அப்துல் காதிர் (ரஹ்) அவர்களின் கருத்தை கேட்டு ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை.பதில் அளிக்காமல் அமைதியாக விட்டார். ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் தவறான புரிதல் என்ற வைத்துக்கொண்டால் இதனை விமர்சனமாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி கூறினால் இது போன்ற பரேல்விய அறிஞர்களின் தவறான புரிதலை நிறைய காட்டமுடியும்!
இது குறித்து தனியானதொரு கட்டுரையை இன்ஷா அல்லாஹ் தருவோம்!

பரேல்விய ஆலிம் குலாம் ரஸுல் ஸயீத் அவர்கள் அஹ்மத் ரிஜாகான் மொழிபெயர்ப்பை குறித்து விமர்சிக்கிறார்:

 நம்மிடத்தில் இந்த மொழிபெயர்ப்பு சரியில்லை.ஏனெனில் மொழிபெயர்ப்பானது மொழி,குர்ஆன், ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமானது.மேலும் இதில்  அறிவுரீதியான ஐயங்களும், மறுப்புகளும் உள்ளது.
(ஷர்ஹு ஸஹீஹே முஸ்லிம் பாகம்:7/324,325)


அஹ்மத் ரிஜாகான் மொழிக்கும், ஹதீஸிற்கும், குர்ஆனிற்கும் மாற்றமாக மொழிபெயர்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி அறிவு ரீதியான ஐயங்களும், மறுப்புகளும்  உள்ளது.ஆக,குர்ஆனின் வசனத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு கூட அஹ்மத் ரிஜாகான் பரேல்விக்கு தெரியவில்லை என்பதாக அறியமுடிகிறது.

ஜவ்வாத் வாதம்: 

ராயினா சம்பந்தமாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பேசுகிறார்.ராயினாவில் இருவிதமான அர்த்தங்களும் உள்ளது.ஆடு மேய்ப்பாளர், பாருங்கள் என்று பொருள் உள்ளது. எனினும் இந்த வார்த்தையை கூறுவது கூடாது எனும் போது ملنا மில்னா வில் மண்ணோடு மண்ணாகுதல்,மண்ணோடு கலந்துவிடுதல்,அடக்கம் செய்தல் என்ற  அர்த்தம்  உள்ளது.எனினும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.எனவே அதனை பயன்படுத்துவிடக்கூடாது.

நமது பதில்:

ராயினா குறித்து பரேல்விய அறிஞர்களின் மோதலை தனியானதொரு கட்டுரையில் நாம் கொடுத்துள்ளோம்! இதுவரை ஜவ்வாத் ரப்பானி வாய்திறக்கவில்லை.

' அவ்ராகே கம்' என்ற நூலில் நபி ஸல்லல்லாஹு அவர்களின் மரணத்தை குறித்து கூறிவரும் போது மரணத்தின் அம்புகள் அன்னாரை நாசப்படுத்தியது என்பதாக பரேல்விய அறிஞர் எழுதியிருப்பதை எடுத்துக்கூறினோம்! இதற்கு பதில் அளிக்கவில்லை.


ஹுஸைன் (ரளி) அவர்களின் ஷஹாதத்தை குறித்து 'மில்னா' என்பதாக பரேல்விய அறிஞர்  எழுதியுள்ளார்  இதற்கும் பதில் இதுவரை இல்லை.



ஜவ்வாத் வாதம்: 

மில்னா என்ற வார்த்தையை பிறகு ஏன் மாற்றிவிட்டீர்கள்.உள்ளம் ஒத்துக்கொள்ளவில்லையா?

நமது பதில்: 

ஒரு வார்த்தையை நீக்கி மற்றொரு வார்த்தையை சேர்ப்பது எதார்த்தமான ஒன்றாகும்.எனினும், பரேல்விகளிடத்தில் தான் இணைவைப்பு, இறைநிராகரிப்பு என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளோம்!
இதனை குற்றம் என்பதாக கூறினால் மல்பூஜாதில் உள்ள நீக்குதல்,புரட்டலை பட்டியலிட்டோம்! தஃவதே இஸ்லாமியினர் தவ்பா செய்துவிட்டார்கள்  என்பதாக பரேல்வி ஜவ்வாத் பிதற்றினார்.இதற்கு மறுப்பளித்துள்ளோம்.இதுவரை வாய்திறக்கவில்லை.ஒரு வாதத்திற்கு மல்பூஜாத் விஷயத்தில் தஃவதே இஸ்லாமியினர் தவ்பாவை ஏற்றாலும் இதனை தவிர்த்து பரேல்விகளின் பல நூல்களிலிருந்து புரட்டலை திரித்தலை எடுத்துக்காட்டினோம்.இதற்கும் ஜவ்வாத் ரப்பானி வாய்திறக்கவில்லை.எனினும், நம்மிடத்தில் வெட்கமின்றி, நாணமின்றி,குற்றஉணர்ச்சியின்றி நியாயம் கேட்கிறார்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live