15 Oct 2017

பெருமானார் ﷺ அவர்களை விமர்சிப்பவர்கள் போலி சுன்னத்(பரேலவி) ஜமாதினர்களே!


அஹ்மத் ரிஜாகான் (பரேல்விகளின் தலைவர்) அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமாக்களுக்கு எதிராக அபாண்டத்தை பழியை அள்ளிவீசுகிறார்.இவர்கள் வஹ்ஹாபிகள்; பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் என்கிறார்.
ஆனால்,இதற்கு நேர்எதிராக பரேல்விகளின் நூலை படித்துப் பார்த்தால் அதிர்ந்துவிடுவோம்!
திகைத்துப்போவோம்!
அதிர்ச்சிக்குள்ளாவோம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசம் என்ற பெயரில் முழக்கமிட்டு நயவஞ்சகத்துடன் அண்ணலாரை அவமரியாதை செய்வதே பரேல்விகள்தான்.

மெளலவி பரகாத் அஹ்மத் கப்ரின் நறுமணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீபின் நறுமணத்திற்கு சமமானது:

பரகாத் அஹ்மத் ஸாஹிப் மரணித்தார்.அன்னாரை அடக்கும் செய்யும் நேரத்தில் கப்ரில் இறங்கினேன்.மிகைப்பின்றி கூறுகிறேன்.முதல் தடவை ரவ்ளா ஷரீபிற்கு அருகில் நுகர்ந்த நறுமணத்தை அவரின் கப்ரில் உணர்ந்தேன்.

(மல்பூஜாதே ரிஜாஹான் பாகம்:2,பக்கம்:142)வாசகர்களே!

அஹ்மத் ரிஜாகான் பரேல்விக்கு எவ்வளவு துணிச்சல் என்று பாருங்கள்!
பரகாத் அஹ்மதின் கப்ரின் நறுமணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் நறுமணத்திற்கு சமமாக இருந்ததை துணிவுடன் நிறுவியுள்ளார்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கும் பரகாத் அஹ்மத் அவர்களின் கப்ருக்கு மத்தியில் வித்தியாசமில்லை என்பதை போன்று கூறியுள்ளார்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

எங்களின் ஈமான், எங்களின் தேவ்பந்த் பெரியோர்களின் ஈமான் 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் மதீனாவின் மண்ணின் நறுமணத்திற்கு உலகத்தில் உள்ள நறுமணம் 
ஈடாகாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
மெளலவி அஹ்மத் ரிஜாகானிடத்தில் பொய்யான வாக்குறுதி அளித்தார்களா? 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!) 

மெளலவி அஹ்மத் ரிஜாகான் 'மல்பூஜாத்தில்' 
ஓர் இடத்தில் எழுதியுள்ளார்கள்: 

குளிர்காய்ச்சல்,
காலரா, கொள்ளைநோய்கள், பார்வை குறைபாடு, ஒற்றைக்கண் குறைபாடு,வெண்குஷ்டம், தொழுநோய் மேலும்  மற்ற நோய்கள் என்னை அணுகாது என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்குறுதி.இதன் பேரில் எனக்கு இறைநம்பிக்கை உள்ளது.

(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் பாகம்:4,பக்கம்:377)
வாசகர்களே!
என்பதை அனைவரும் அறிந்துள்ளோம்.جاڑا என்பதற்கு உர்துமொழியில் குளிர்காய்ச்சல் என்று சொல்லப்படும்.
கைசேதம் என்னவெனில்....

மெளலவி அஹ்மத் ரிஜாகான் 
இதனை மறந்தவாறு கூறுகிறார்;

ஜித்தா அடைந்தேன்.எனக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் வரும்போது வழக்கம் போல் குளிரை கடுமையாக உணர்வேன்.

(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் பாகம்:2,பக்கம்:125,126)
வாசகர்களே!

நாளை
இந்த மல்பூஜாத்தை மாற்றுமதத்தவர்களில் எவராவது படித்துப் பார்த்தால் குற்றம் சுமத்த ஆரம்பித்துவிடுவார்கள்.அதாவது முஸ்லிம்களின் நபி,
தன்னை ஏற்பவர்களிடத்தில் பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆரம்பித்தில் கூறினார்கள்; உமக்கு குளிருடன் காய்ச்சல் வராது.

பிறகு ரிஜாகான் பரேல்வியே கூறுகிறார்; எனக்கு காய்ச்சலில் குளிரை கடுமையாக உணர்கிறேன்.

கவனமாக பாருங்கள்!
இதன் மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது பெரும் அவமரியாதை சுமத்தப்படுகிறது.

எங்களின் ஈமான் சூரியன் மேற்கிலிருந்து உதித்துவிடலாம்.பகலில் சந்திரன் வெளிப்பட்டு விடலாம்.எனினும், 
எனது எஜமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை கூறினால் ஒரு போதும் தவறாகாது.

பரேல்விகளே! உண்மையை ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்!மெளலவி ரிஜாகான் பரேல்வி தன்னை உயர்த்திக்காட்ட எண்ணி
பெரும் பொய்யுரைத்துள்ளார்.

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு:

என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர் தனது இடத்தை நரகில் அமைத்துக்கொள்ளட்டும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பீரிடத்தில் வருகை தருகிறார்கள் ;

ولی مرسل آئیں خود حضور آئیں 
وہ تیری وعظ کی محفل ہے یا غوث

இதனின் அர்த்தம்: 

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் உபதேசம் நடைபெறும் சபையில் வலி தூதர் வருவது இருக்கட்டும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கலந்து கொள்கிறார்கள் .

(ஹதாயிகே பக்ஷிஷ் பாகம்:2,பக்கம்:7)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாணவர் 
பீர் ஆசிரியர்:

قمر پر جیسے خود کایوں 
تیرا قرض ہے

سب اہل نور فاضل 
یا غوث 
غلط کر دم تو واہب نہ
مقروض 
تیری بخشش تیرا قائل 
یا غوث 

இதனின் அர்த்தம்: 


சந்திரன் சூரியனின் மூலம் ஒளிபெறுகிறது.சூரியன் கடன் கொடுத்துள்ளது.இதே போன்று அனைத்து நூர் (இறைநேசர்கள்) ஹஜ்ரத் அப்துல்காதிர் ஜீலானி ரஹ் அவர்களிடமிருந்து 'பைஜ்'
எனும் ஆன்மீக வளர்ச்சியை அன்னாரிடமிருந்து கடன் வாங்கியுள்ளனர்.முந்தைய கவிதையில் புலம்பலை வெளிப்படுத்திய நிலையில் இந்த கவிதை வரிகளிலும் புலம்பலை வெளிப்படுத்தியுள்ளார்.அதாவது غلط گفتم இடத்தில் غلط کردم என்ற புலம்பலுக்கு பிறகு கூறுகிறார்கள் தாங்கள் கடன் அளிப்பவர் இல்லை.மாறாக அன்பளிப்பவர்.அனைத்து நூர்களுக்கும் தனது 'பைஜ்'
எனும் ஆன்மீக வளர்ச்சியை அன்பளித்துவிட்டார்.

பரேல்விகளின் நிலைப்பாடு என்னவெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நூர்"
تو عین نور ہے தாங்கள் அசலில் நூராக இருக்கிறீர்கள்.

ஆக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூர்.
இதனை ஷைக் அவர்களிடமிருந்து 'பைஜ்' எனும் ஆன்மீக வளர்ச்சியின் மூலம் பெற்றுள்ளார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக! அஸ்தஃபிருல்லாஹ்!

இதனை எழுத கரம் நடுங்கியது.எனினும்,பரேல்விகளின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டிய கட்டாயத்தில் எழுதியுள்ளோம்!

பரேல்விகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் அனைத்து படைப்புகளையும் விட உயர்ந்தவர்கள் என்பதாக நடித்துக்கொண்டு அவர்களின் உண்மையான கொள்கையை மறைக்கிறார்கள்.

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நிழலாக நுபுவ்வத்தின் அந்தஸ்தில் இருக்கிறார்கள்:

   நுபுவ்வத் முடியாமல் இருந்தால் பரிசுத்தமான கெளஸ் (ரஹ்) அவர்கள் நபியாக இருப்பார்கள்.எனினும், கருத்தை நிபந்தனையை கவனித்து சரியானதும் அனுமதியும் உள்ளது.சந்தேகமின்றி அந்தஸ்து உயர்வை கவனித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு "நூரே ரளியல்லாஹு அன்ஹு"
அவர்கள் நுபுவ்வத் எனும் அந்தஸ்தில் நிழலாக உள்ளார்கள்.

(இர்ஃபானே ஷரீஅத் பக்கம்:90,மக்தபதுல் மதீனா கராஜ்ஜி)

வாசகர்களே!

 நமது இறைநம்பிக்கை, நமது பெரியோர்களான தேவ்பந்த் உலமாக்களின் இறைநம்பிக்கை பெரிய இறைநேசராக இருந்தாலும் ஸஹாபாக்களில் எவரின் செருப்பின் மண்ணிற்கும் சமமாக முடியாது.ஆனால்,பரேல்விகளிடத்தில் கெளஸ் ரஹ் அவர்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிகராக இருக்கிறார்கள் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரேல்விகளிடத்தில் ஷைக் (ரஹ்) அவர்கள் அனைத்து அந்தஸ்துகளையும் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.நபி ஸல்லல்லாஹு அவர்கள் பெற்ற அந்தஸ்திற்கு நிகராக உள்ளார்கள். எனினும், வித்தியாசம் என்னவெனில் ஷைக் (ரஹ்) அவர்கள் அந்தஸ்து நிழல் இது எதார்தத்தில் அசலை விட்டும் பிரிந்திருக்காது.

ஷைக் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான்..

அன்னார் கூறினார்கள்:

(ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  எனது இருப்பு எனது நானா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருப்பாகும்.அப்துல் காதிரின் இருப்பு இல்லை.அதன் பிறகு மகனார் கேட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அவர்கள் மீது மேகம் நிழலிட்டது.எனினும், தங்கள் மீது ஏன் நிழலிடுவதில்லை? அதற்கு அன்னார் கூறினார்கள் என்னை மக்கள் நபி என்பதாக கூறிவிடக்கூடாதே!

(தஃப்ரீஹுல் கவாதிர் 107)

அல்லாஹ் பாதுகாப்பானாக!
இங்கு பரேல்விகளின் இறைநிராகரிப்பு நிர்வாணமாக ஆடுகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live