13 Sept 2017

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வியின் பார்வையில்- இறைமறுப்பாளர், அவமதிப்பவர்

🔫பரேல்விய பஜ்ல் அஹ்மத்  பரேல்வி vs  அஹ்மத் ரிஜாகான் மோதல் 🔫




அஹ்மத் ரிஜாகான் பரேல்வி, 
ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) குறித்து கூறியுள்ளார்:

தாயிஃபாவின் இமாம் (இஸ்மாயில் தெஹ்லவி) மீது இறைநிராகரிப்பு தீர்ப்பளிக்கவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் உடையவர்களை தக்ஃபீர் செய்வதை விட்டும் நம்மை தடுத்துள்ளார்கள்.
(தம்ஹீதே ஈமான் மஅ ஹாஷியா ஈமான் கி பெஹ்ஜான் பக்கம்:132)




பரேல்வி பஜ்ல் அஹ்மத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) குறித்து  அவரது நூலான 'அன்வாரே ஆஃப்தாபே ஸதாகத்' தில் எழுதியுள்ளார்கள்:

இஸ்மாயில் தெஹ்லவியின் மீதும் அவரின் நூலான தஃப்வியதுல் ஈமானை குறித்தும் இறைநிராகரிப்பை ஹரமைன் ஷரீஃபைன் உலமாக்கள் ஒன்றுப்பட்டு தீர்ப்பளித்துள்ளார்கள்.
(அன்வாரே ஆஃப்தாபே ஸதாகத் பக்கம்:533)




அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஸாஹிப் கூறியுள்ளார் நான் ஷாஹ் இஸ்மாயில் தெஹ்லவியை முஸ்லிம் என்பதாக ஏற்கிறேன்.ஆனால், பரேல்விய பஜ்ல் அஹ்மத் கூறியுள்ளார் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் மீது இறைநிராகரிப்பு தீர்ப்பு ஒன்றுப்பட்டு தரப்பட்டுள்ளது..

பரேல்விகளின் உசூல் என்னவெனில் ..

காபிராக இருக்கும் ஒருவரை காபிர் என கூறவில்லையெனில் அவரும் காஃபிர்தான் (தம்ஹீதே ஈமான் பக்கம்:100)


ஆக, பஜ்ல் அஹ்மத் பரேல்வி தீர்ப்பின் பேரில் ஜனாப் அஹ்மத் ரிஜாகான் பரேல்வியும் காஃபிர்.அதுமட்டுமின்றி சாதாரண காபிர் இல்லை.பஜ்ல் அஹ்மத் பரேல்வியின் பார்வையில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி காபிர் என்பதன் மீது ஒன்றுப்பட்டுள்ளனர்.

🔫 பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி VS அஹ்மத் ரிஜாகான் மோதல்🔫



பரேல்வி  அஹ்மத் ரிஜாகான் 'கன்ஜுல் ஈமானில்' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சாவழியை விமர்சிக்கும் தர்ஜுமா   முஃப்தி ஹனீஃப் குரைஷி பார்வையில்.

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஸுரா அன்ஆம் ஆயத்து 74 இல் பின்வருமாறு தர்ஜுமா செய்துள்ளார்கள்:

இப்ராஹீம் அவர்கள் தம் தந்தை  ஆஜரிடம் "சிலைகளை கடவுளாக நீர்  ஆக்கிக் கொண்டீரா?
(தர்ஜுமா கன்ஜுல் ஈமான் பக்கம்:198)

பரேல்வி முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி கூறுவதை பாருங்கள்!

ஆஜர் அவர்களை இப்ராஹிம் அலை அவர்களின் தந்தை என்பதாக கூறுவதன் மூலம் இதுமட்டுமின்றி இது அல்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தமான  வம்சாவழி நிரூபணமாகியுள்ள  அனைத்து ஹதீஸ்களையும் மறுத்துவிடுவது அவசிமாகிவிடும்.
(ஆஜர் கோன் தா பக்கம்:55)


ஆக, பரேல்விய அறிஞர் ஹனீஃப் குரைஷியின் பார்வையில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தமான வம்சாவழியை மறுக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

 🔫குலாம் மெஹ்ரே அலி VS அஹ்மத் ரிஜாகான் மோதல்🔫


அஹ்மத் ரிஜாகான் பரேல்வி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறித்து கவிதை எழுதியுள்ளார்:

   குறைவிற்கு பிறகு அதிகமானது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அதிகமான ஸலவாத் உண்டாகட்டும்!

       இழிவிற்குப் பிறகு கண்ணியம் கிடைத்தது!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது லட்சக்கணக்கான ஸலாம் உண்டாகட்டும்!
(ஹதாயிகே பக்ஷிஷ்காமில் இரண்டாம் பாகம்,பக்கம்:298)


பரேல்விய அல்லாமா குலாம் மெஹ்ரே அலி கூறுகிறார்கள்:

 இதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து ذلیل (இழிவானவர்) என்பது அண்ணலாரின் சமூகத்தில் பாதுகாப்பு,கண்ணியத்தில் அவமரியாதை இறைநிராகரிப்பு ஏற்படுத்துவதாகும்.ஏனெனில் ذلیل (இழிவானவர்) என்ற சொல் நமது பேச்சுவழக்கில் இழிவை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.(தஹ்கீகாதே குலாமே மெஹ்ரே அலி பக்கம்:10)


குலாம் மெஹ்ரே அலி அவர்களின் பார்வையில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் அவமரியாதை செய்பவர் விமர்சிப்பவர் இழிவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டவர் என்பதும் இறைநிராகரிப்பாளர் என்பதும் நிரூபணமாகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live