24 Sept 2017

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் யார்? - பாகம் -1

பரேல்விகள் பலஆண்டுகளாக மக்களின் உள்ளங்களில் பிரிவினை வித்தை விதைக்க ஆரம்பித்தனர்.தேவ்பந்த் உலமாக்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள்.அண்ணலார் அவர்களை கண்ணியம்,மதிப்பு அளிப்பதில்லை.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்துவது, மேன்மைப்படுத்துவது இணைவைப்பு, இறைநிராகரிப்பு என்கிறார்கள் என பரேல்விகள் பழிசுமத்துகிறார்கள்.

உண்மையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் யார்? என்பதை ஆராய்வோம்!

பரேல்விகள் கூறுவது சரியா? தவறா? இவர்களின் மோசமான வழிகெட்ட கொள்கையை மறைப்பதற்கு தேவ்பந்த் உலமாக்களின் மீது காபிர் எனும் வலையை விரித்துள்ளனர்.

பரேல்விகளின் வழிகெட்ட கொள்கைகள், கோட்பாடுகள், நிலைப்பாடுகள், கண்ணோட்டங்கள் இதனை குறித்து அறிவதற்கு முன்பாக தேவ்பந்த் பெரியோர்களின் தூய்மையான கொள்கைகள், பரிசுத்தமான கோட்பாடுகள், கசடற்ற நிலைப்பாடுகள், மாசற்ற கண்ணோட்டங்களை பார்ப்போம்!

பரேல்விகளால் கடுமையாக சகட்டுமேனிக்கு  விமர்சிக்கப்படுபவர் ஆரம்பமாக  பெரியோர் மெளலானா ஹஜ்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் தெஹ்லவி (ரஹ்) அவர்கள், பிறகு ஹஜ்ரத் காஸிம் நானூதவி (ரஹ்) அவர்கள், அடுத்து மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள், ஹஜ்ரத் மெளலானா கலீல் அஹ்மத் ஸஹாரன்பூரி (ரஹ்) அவர்கள், 
ஹஜ்ரத் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள்  இப்பெரியோர்களின் மீது திரும்ப திரும்ப குற்றச்சாட்டை களங்கத்தை பழியை அள்ளிவீசுகின்றனர்.பிரிவினை, பிளவெனும் பாதையில் குழப்பவாதிகளான பரேல்விகளின் சூழ்ச்சி, குயுக்தி, சதித்திட்டம் என்னவெனில் தேவ்பந்த் உலமாக்களின் சில வாக்கியங்களை திரித்து புரட்டி வளைத்து  விமர்சிக்கின்றனர்.இதனால் சாமனியர்கள் தடுமாறுகின்றனர்.அவர்களின் மீது மக்களின் உள்ளத்தில்  வெறுப்பை திணிக்க   முயற்சிக்கின்றனர்.பரேல்விகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான மறுப்பை நமது உம்மத்தே முஹம்மதிய்யா தளத்தில் அளித்துள்ளோம்!

தேவ்பந்த் பெரியோர்களின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கண்ணோட்டங்கள் ஆரம்பமாக பார்ப்போம்.பிறகு அடுத்த தொடரில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிக்கும், களங்கம் கற்பிக்கும், வழிகெட்ட, கேடுகெட்ட கொள்கைகள், வழிகெட்ட நிலைப்பாடுகளை பார்ப்போம்!

ஹஜ்ரத் மெளலானா ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத்  (ரஹ்) அவர்களின்  கொள்கை:

     போராளிகளின் தலைவர்
ஹஜ்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் மீது அபாண்டமாக, அநியாயமாக குற்றச்சாட்டும் பழியும் சுமத்தப்படுகிறது.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மூத்த சகோதரராக கருத வேண்டும் என்பது அன்னாரின் கூற்று என பரேல்விகள் விமர்சிக்கின்றனர்.

அனைத்து நபிமார்கள், தூதர்களின் தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மக்கள் அவர்களின் பெரும் பெரும் அற்புதங்களை பார்த்துள்ளார்கள்.அவர்களிடமிருந்துதான் ஷரீஅத்தை கற்றார்கள்.அனைத்து பெரியோர்களும் அவர்களை பின்பற்றியதன் பேரில்தான் மேன்மை கிடைத்தது.
(தக்வியதுல் ஈமான்)

நல்லோர்களின் பாதையில் நடைபோடுபவர் நபிமார்கள் நல்லோர்களை மட்டுமல்ல அத்துணை முஃமீன்களின் கடமைகள் மற்றும் கண்ணியத்தை நிறைவேற்றும் விஷயத்தில் மிக முயற்சி செய்யவேண்டும்.அனைவரும் இதன்பேரில் முயற்சி சிபாரிசு செய்வார்கள்.நபிமார்கள் நல்லோர்களின் முயற்சி மற்றும் சிபாரிசு மிகவும் வெளிப்படையானது.
(சிராதே முஸ்தகீம்)

இந்த ஆயத்தின் மூலம் அறியமுடிகிறது.நல்லோர்கள்,
நபிமார்களை அல்லாஹ் அனைவரையும் விட உயர்வை தந்துள்ளான்.அவர்களின் உயர்வு அல்லாஹ்வின் பாதையை எடுத்து கூறுவது நன்மை,தீமையை அறிந்து மக்களுக்கு கற்றுக்கொடுப்பது அல்லாஹ் அவர்கள் கூறும் விஷயத்தில் தாக்கத்தை கொடுக்கிறான்.இதனால் அதிகமான மக்கள் நேர்வழி பெறுகிறார்கள்.
(தக்வியதுல் ஈமான்)

மனிதன் என்ற விஷயத்தில் தூதுதுவத்தை விட உயர்ந்த அந்தஸ்து எதுவும் இல்லை.அனைத்து தகுதிகளும் அதற்கு கீழ்தான்.
(தக்வியதுல் ஈமான்)

நமது தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முழு உலகிற்கும் தலைவர்.அல்லாஹ்விடத்தில் அன்னாரின் அந்தஸ்து மிக உயர்ந்தது.அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை அனைவரை விடவும் செயல்படுத்துபவர்.மக்கள் அல்லாஹ்வின் வழியை கற்பதில் அவர்களின் பக்கமே தேவையுடையவர்கள்.
(தக்வியதுல் ஈமான்)

சிந்தித்துப் பாருங்கள்! ...

தெளிவான வாக்கியங்களுக்கு பிறகும் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்து பெரிய சகோதரனின் அந்தஸ்து என்பரா? ஒரு போது கூறியிருக்க முடியுமா?

ஹஜ்ரத் மெளலானா முஹம்மது காஸிம் நானூதவி ரஹ் அவர்களின் கொள்கை:

ஹஜ்ரத் மெளலானா காஸிம் நானூதவி (ரஹ்) அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி நபித்துவத்தை ஏற்கவில்லை என்பதாக பழியும் அபாண்டமும் சுமத்தப்படுகிறது.

அன்னார் அவர்களின் கொள்கை:

எனது மார்க்கம் இறைநம்பிக்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு வேறு நபிமார்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.இதனை குறித்து சிந்திப்பவர் காபிர் என்பதாக கருதுகிறேன்.(முனாஜிரே அஜீபா)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்கள்:

(நபியவர்கள்) காலத்தில் இறுதியானவர்கள் என்பதுதான் நமது மார்க்கமும் ஈமானுமாகும்.நியாயமற்ற முறையில் இட்டுகட்டுவோருக்கு மருந்து ஏது?

மேலும் எழுதியுள்ளார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பது இஜ்மாவான கொள்கையாகும்.

அதே நூலின் மற்றோர் இடத்தில்:

நபியவர்கள் காலத்தால் இறுதியானவர் என்பதில் எனக்கு எந்த ஒரு மறுப்புமில்லை.
மாறாக மறுப்பவர்களுக்கும் நான் எவ்வித இடமும் விட்டுவைக்கவில்லை.

அன்னார் தஹ்தீருன்னாஸில் எழுதியுள்ளார்கள்:

தொழுகையின் ரக்அத்துகளின் எண்ணிக்கையை மறுப்பது இறைநிராகரிப்போ அதைப் போல நபி (ஸல்) அவர்கள் இறுதிநபி என்பதை மறுப்பதும் இறைநிராகரிப்பாகும்.

ஹஜ்ரத் நானூதவி (ரஹ்) அவர்கள் தஹ்தீருன்னாஸ் நூலில் எழுதியுள்ளார்கள்:

இறுதி நபித்துவத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அனைவரையும் விட உயர்ந்தவர் சிறப்புமிக்கவர்.மேலும் கூறினார்கள் இறுதி காலத்தில் வருவது அவசியமாகும்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனால் தான் இறுதியாக வந்தார்கள்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுபுவத் எனும் தன்மையில் அசலாக இருக்கிறார்கள்.
(தஹ்தீருன்னாஸ் பக்கம்:3)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கமானது இறுதியானது அண்ணலாருக்கு பிறகு நுபுவ்வத்தை வாதிடுபவர்கள் அனைவரும் பொய்யர்கள்.
(தஹ்தீருன்னாஸ் பக்கம்:5)

   இதில் தெளிவாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதிகாலத்தில் வருகை புரிந்த இறுதி நபி என்பதை ஏற்கிறார்கள்.

  அன்னார் அவர்களின் தெளிவுமிக்க, உறுதிமிக்க கூற்றுகளுக்கு பிறகும் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி நபித்துவத்தை ஏற்கவில்லை விதண்டாவாதமாக வாதிட்டால் மறுமையில் பழிசுமத்தியதற்கு நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் பதில் அளிக்க வேண்டும்! 

பரேல்விய குழப்பவாதிகள் சாமானிய மக்களின் உள்ளங்களில் வெறுப்பு, பிரிவினை, பிளவு போன்றவைகளை விதைக்கிறார்கள்.உள்ளத்தின் கண்களை பார்ப்பதை விட்டும் பாக்கியமிழந்துள்ளது.இறுதி நபித்துவம் காஸிம் நானூதவி (ரஹ்) அவர்ளின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விரிவான தெளிவான பதில் தரப்பட்டுள்ளது.இதனை பார்வையிடவும்!

ஹஜ்ரத் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்களின் கொள்கை:

அன்னார் நல்லோர்களில் தனித்துவமிக்கவர்,உறுதிமிக்கவர், பெருமிதம் மிக்கவர்.
மெளலானா அவர்கள் வாழும் போது இறைநேசராக வாழ்ந்தார்கள்.அன்னாரின் உள்ளத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசம் பிரியம் கண்ணியம் மேன்மை மதிப்பு நிரம்பியிருந்தது.

    ஸஹாபாக்கள் தனிமையெனும் மெய்ஞான சபையின்றியே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழமையின் பரக்கத்தினால் ஆன்மீக வளர்ச்சியை பெற்றார்கள்.அண்ணலாரிடம் ஒரு தடவை அமர்ந்ததின் மூலம் ஞானங்கள், ஆச்சரியமான ரகசியங்கள், கல்விகளை பெற்றனர்.மற்றவர்களெல்லாம் தனிமையில் இருந்தாலும் எளிதாக பெறமுடியாது.
(இம்தாதுஸ்ஸுலூக் பக்கம்:21)

ஆக, ஹஜ்ரத் அவர்களின் உள்ளம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் நேசம், மேன்மை நிரம்பியிருந்ததை எடுத்துக்காட்டுகிறது.இவ்வாறு இருந்தும் கூட பரேல்விகள் அன்னார் அவர்களை விமர்சிப்பது  பகலில் கண்ணை மூடிக்கொண்டு இரவு  என்பதாக வாதிடும் மடமைத்தனம் போலாகும்.

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்கள் நான்கு விஷயங்கள் அடிப்படைகள்:

(1)மார்க்க விஷயங்களில் ரோஷம்

(2)அகப்பார்வைகள் (முஷாஹதாத்) அகப்பார்வையின் வெளிப்பாடுகள் (முகாஷஃபாத்)  ஞானஒளி (தஜல்லிய்யாத்)  சமயத்தில் உயர்ந்த நோக்கத்தை பெறமுடியும்

(4)ஷைகின் கண்ணியம்,மதிப்பை பேணுவது
நாம் தோழமையின் பேரில் கருணையுடன் அணுகுதல் இந்த அனைத்தையும் அடையவேண்டுமெனில் பெரியோர்களுக்கு கண்ணியம் மரியாதை அளிப்பது.சிறுவர்கள் மீது இரக்கம் காட்டுவது.பரிபூரணமான இறைநம்பிக்கையாளர்கள் பாக்கியம் பெறுவார்கள்.இறைநம்பிக்கை குன்றியுள்ளவர்கள் பாக்கியம் கிடைக்காது.
(இம்தாதுஸ்ஸுலூக் பக்கம்:8)

ஹஜ்ரத் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் சுருக்கமாக வரிகள்  மார்க்க ஞானம் மற்றும் மெஞ்ஞானம், நேசம், ஈமான் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

தேவ்பந்த் பெரியோர்கள் சதாவும் பெரியோர்களுக்கு மரியாதை செய்வது, சிறியவர்கள் மீது அன்புகாட்டுவது இறைஞானப்பாதையின் ஞானிகளின் நேசம் குறித்து பாடம் நடத்தி வருகிறார்கள்.நல்லோர்களை நபிமார்களை மதிப்பு மேன்மையுடன் பார்ப்பதில்லை என்பதாக அபாண்டமாக பொய்யாக பழிசுமத்தப்படுகிறது.

அல்லாஹ் பொய் சொல்வான் என்பதாக அன்னார் கூறியதாக பழிசுமத்தப்படுகிறது.
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

எனினும்,
இதற்கு நேர்எதிராக பரேல்விகளின் அபாண்டத்தை அறுத்தெறிகிறார்கள்.

அல்லாஹ்தஆலாவின் ஒவ்வொரு பேச்சும் உண்மை.அன்னார் அவர்களின் கொள்கை அல்லாஹ்வின் பக்கம் பொய்யை இணைப்பவர் காபிர் சபிக்கப்பட்டவன்.(பதாவா ரஷீதிய்யா)

இந்தளவிற்கு தெளிவாக கூறிய பிறகும் அபாண்டமாக கூறுவது வெட்கமும் நாணமின்மையாகும்.மறுமையை பற்றிய அச்சமின்மையாகும்.

ஹஜ்ரத் மெளலானா கலீல் அஹ்மத் முஹத்திஸ் ஸஹாரன்பூரி (ரஹ்) அவர்களின் கொள்கை:

ஷைகுல் ஹதீஸ் நல்லோர்களின் முன்மாதிரி ஹஜ்ரத் மெளலானா கலீல் அஹ்மத் ஸாஹிப் ஸஹாரன்பூரி (ரஹ்) அவர்கள்  மீதும் அபாண்டத்தை அள்ளிவீசியுள்ளார்.ஷைத்தானின் ஞானம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞானத்தை விட அதிகம் என்பது அன்னாரின் கொள்கை என குற்றம் சுமத்துகின்றனர்.
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இந்த பழி சுமத்தியது தெரிந்த போது அன்னார் கூறினார்கள்: இது என் மீது சுமத்திய அபாண்டம்.அடிப்படையற்றது.
வீணானது என் கொள்கை இல்லை.இந்த கொள்கை கொண்டவனை நானும் எனது  ஆசிரியர்களும் காபிர் சபிக்கப்பட்டவன் என்கிறோம்.சபிக்கப்பட்ட ஷைத்தான் மட்டுமல்ல.படைப்புகளில் எவருக்கேனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அதிக ஞானம் உண்டு கூறினாலும் சரிதான்.

சுருக்கம் என்னவெனில் கான் சாஹிப் அபாண்டமும் கற்பனையையும் புனைந்து பொய்யுரைத்து கூறியுள்ளார்.என்னின் வாழ்நாளில் இது போன்ற ஊசலாட்டமும் கூட வரவில்லை.ஷைத்தான் மட்டுமல்ல.நல்லோர் வானவர்கள் கூட அன்னாரின் ஞானங்களுக்கு சமமாக முடியாது.
(பதாவா தாருல் உலூம் 2/48)

அன்னார் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட பிரியம் நேசம் கொண்டு இருந்தார்கள்.அண்ணலாரின் சுன்னத்திற்கு மாற்றமாக எந்த விஷயத்தையும் விரும்பமாட்டார்கள்.

ஒரு தடவை ஹஜ்ஜின் பிரயாண சமயத்தில் ஹஜ்ஜின் வழிகாட்டி அன்னாரை ஓர் இடத்திலிருந்து விரைவாக புறப்படும்படி கூறினார். அதற்கு அன்னார் கூறினார்கள் ஒட்டகம் சென்றாலும் நாம் நடந்தே இன்ஷா அல்லாஹ் வருவோம்! எனினும், சுன்னத்தை விட்டு நீ சொல்வதை ஏற்கவேண்டும் என விரும்புகிறாய்.ஒரு போதும் இதனை நம்மிடமிருந்து எதிர்பார்க்காதே!
(தத்கிரதுல் கலீல் பக்கம்:58)

தேவ்பந்த் பெரியோர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசகர்களாக வாழ்ந்தார்கள்.அதற்கு சான்று மதீனா முனவ்வராவின் புனிதமண்ணில் நல்லடக்கமாகும் பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று விரும்பினர்.

கலீல் அஹ்மத் சஹாரன்பூரி (ரஹ்) அவர்கள் மதீனாவிற்கு இறுதியாக சென்ற போது அண்ணலாரின் மண்ணறைக்கு செல்லும் பொழுதெல்லாம் தூய்மையான இந்தப் பூமியின் பாக்கியம் எனக்கு கிடைக்கப்பெறவேண்டும் என்பார்கள்! இப்பொழுதும் கூட அரிய சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து செல்கிறேன்.மதீனா முனவ்வராவின் பரிசுத்தமான மண்ணின் பாக்கியம் பெறும் நேரம் வரக்கூடும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகாமையில் இடம் கிடைக்கவேண்டுமே!
(தத்கிரதுல் கலீல் பக்கம்:420)

இவ்வளவு தெளிவான வார்த்தைக்கு பிறகும் ஹஜ்ரத் மெளலானா கலீல் அஹ்மத் சஹாரன்பூரி (ரஹ்)
அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசகர் இல்லை என்பதாக யார் கூறமுடியும்?

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நேசமும் பிரியமும் அன்பும் இல்லை என்று யாராவது கூற முடியுமா? மெளலானா அவர்கள் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தின் மீது பிடிப்புள்ளவர்; நேசமிக்கவர்; அவர்களின் மீது அபாண்டமான அவதூறுகளை அள்ளிவீசும் பரேல்விகளே! உங்களின் மறுமை வாழ்வை பாழ்ப்பத்திவிடாதீர்கள்!

ஹஜ்ரத் மெளலானா அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் கொள்கை:

ஹஜ்ரத் ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் தனிச்சிறப்பை கூறும் அவசியமில்லை.தனித்தன்மை பெற்று திகழும் பெரியோர்.

அன்னார் அவரது நூலில் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தில் இழுக்கு  களங்கம் கற்பிக்கிறார் என்பதாக பரேல்விள்  குற்றம் சுமத்தியுள்ளார்.

    ஹஜ்ரத் மெளலானா முர்தஜா ஹஸன் ஸாஹிப் அவர்கள் அன்னாரிடத்தில் சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்கள்.இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக கூறினார்கள்:

 (1)இந்த கேடுகெட்ட கருத்தை எந்த நூலிலும் கூறவில்லை.

(2)எழுதுவது ஒருபுறம் இருக்கட்டும்!எனது உள்ளத்தில் கூட இதுபோன்ற சிந்தனை இல்லை.

(3)எனது வார்த்தைகளில் இது போன்ற கருத்தை கூறவில்லை.

 (4) எவர் நாட்டமின்றி அல்லது நாட்டத்துடன் தெளிவாக அல்லது சைக்கினையாக இதனை கூறினாலும் நான் அவனை இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் என எண்ணுகிறேன். எனது கொள்கையும் எனது பெரியோர்களின் கொள்கையும் அண்ணலார் படைப்புகளில் சிறந்தவர்கள்.

   ஹஜ்ரத் தானவி (ரஹ்)
அவர்கள் அபாண்டமாக குற்றம் சுமத்துபவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துவிட்டார்கள்.அன்னாரின் தெளிவான உறுதிமிக்க கொள்கைகள் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பாக உள்ளது.

ஆக,அன்னாரின் கூற்றின் சுருக்கம் நான் இந்த கருத்தை எந்த ஒரு நூலிலும் எழுதவில்லை. எழுதுவது பாரதூரமான விஷயம்.இதுபோன்ற தீய கருத்தானது எனது உள்ளத்தில் இல்லை.இது போன்ற குற்றச்சாட்டிலிருந்து நீங்கி கொள்கிறேன்.இது போன்ற கொள்கை கொண்டவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன்.


மேற்கூறிய ஆதாரங்கள்:

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live