11 Sept 2017

மனாருல் ஹுதாவில் 'பரேல்விகளின் வரலாற்றுப்பார்வை' என்கிற கட்டுரைக்கு பரேல்விகளின் மறுப்பிற்கு மறுப்பு தொடர்:2


ஷாஹ் வலியுல்லாஹ்
(ரஹ்) அவர்களை போற்றுகிறோம், புகழ்கிறோம்.என்பதாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி சில நூல்களை எடுத்துக்காண்பித்தார்.
இது பரேல்விகளின் இரட்டை முகம், இரட்டை நிலைப்பாடு,
முனாபிக் தனத்தை தோலுரித்து காட்டியுள்ளோம்.

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் குறித்து பரேல்விகளின் நிலைப்பாடு அன்னார் வஹ்ஹாபி, குழப்பம் விளைவிப்பவர், விரோதி போன்ற வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு விமர்சித்ததை, அடுக்கடுக்கான ஆதாரங்களின் மூலம் பரேல்விகளின் நூல்களிலிருந்து நாம் நிரூபித்தோம்!
அதனை விரிவாக பின்வரும் லிங்கில் பார்வையிடவும்!

http://ummathemuhammedhiya.blogspot.in/2017/05/blog-post_10.html?m=1

இனி, ஹுஸ்ஸாமுல் ஹரமைனிற்கு மறுப்பாக எழுதப்பட்ட 'ஷிஹாபே ஸாகிப்' நூல் குறித்து பரேல்விய ஜவ்வாத் ரப்பானியின் வாதங்களுக்கு மறுப்பு:

    முஃப்தி தகிஉஸ்மானி தாமத்பரகாதுஹு அவர்களின் நூலான 'நுகேஷே  ரப்தகான்' 
நூலை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளார்.முதலில் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வீடியோவில் உள்ள போட்டோ காபியின் தலைப்பே முற்றிலும் தவறாகும்.
"ஹுஸ்ஸாமுல் ஹரமைன் நூலிற்கு எதிராக எழுதப்பட்ட தேவ்பந்தின் 'ஷிஹாபே ஸாகிப்' என்ற நூலில் இட்டுக்கட்டப்பட்ட நூல்களின் ஆதாரங்கள் அசிங்கமான வார்த்தையின் காரணமாக நிராகரிக்கப்பட்டது"



நிராகரிக்கப்பட்ட நூல் என்பதாக ஜவ்வாத் ரப்பானி திரித்து கூறுகிறார்.முஃப்தி தகி உஸ்மானி தாமத் பரகாதுஹு அவர்கள் நிராகரிக்கப்பட்ட நூல் என்பதாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ
ஒரு போதும் கூறவில்லை.மாறாக இருவிஷயங்களை சுட்டிகாட்டியுள்ளார்.
ஒன்று, 'ஷிஹாபே ஸாகிப்' என்ற நூலின் ஆசிரியர் ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹ்) அவர்கள் கடும்போக்கு உள்ளவர்.

இரண்டாவது ஸைஃபுன்னகியின் மீது நம்பிக்கை வைத்து ஷிஹாபே ஸாகிபில் இரு ஆதாரங்களை தவறாக கொடுத்துவிட்டார்.இதனால் அந்நூலின் காரணமாக ஏற்படும் பலன் குறைந்துவிட்டது.ஆக, முஃப்தி தகி உஸ்மான் ஸாஹிப் அவர்கள் இரண்டு காரணத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இட்டுகட்டுபவர்கள், பொய்யை புணர்பவர்கள் என்பதாக நம்மை விமர்சித்துக்கொண்டே,
பரேல்வி ஜவ்வாத் ரப்பானி 'ஷிஹாபே ஸாகிப்' நிராகரிக்கப்பட்டது என்பதை தேவ்பந்த் பெரியோர் விமர்சிப்பதாக புழுகியுள்ளார்.
பொய்யுரைத்துள்ளார்.

கடும் போக்கு என்பதாக முஃப்தி தகி உஸ்மானி ஸாஹிப் அவர்கள் கூறியதை (غلیظ زبان) அசிங்கமான நாவு என்ற வார்த்தையால் ஜவ்வாத் ரப்பானி விமர்சிக்கிறார்.

கடும் போக்கு என்பது ஒருவரின் மதிப்பை குறைத்துவிடும் விமர்சனமா?  என்பதை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி சொல்லட்டும்!

கடும் போக்கு என்கிற குணம் ஒரு சிலருக்கு இயல்பிலேயே இருக்கும்.இதனை விமர்சனமாக சித்தரிப்பது அறிவாளியின் செயல் அல்ல.

ஹதீஸ்கலையில் அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களை மூன்று தரமாக பிரிப்பார்கள்.

(1)பேணிக்கையானவர்கள்.
(2)கடும் போக்கு கொண்டவர்கள். (3)கவனக்குறைவானவர்கள்.

கடும் போக்கு கொண்டவர்களில்
இமாம் இப்னு ஹிப்பான்,இமாம் நஸயி போன்ற பெரும் மார்க்க அறிஞர்கள் உள்ளடங்குவார்கள்.
இதனை முன்வைத்து இமாம்களை விமர்சிக்கலாமா?  ரிஜாகான் பரேல்வி கூட கடும்போக்கு கொண்டவர் அதனை பார்க்கவும்!

அஃலா ஹஜ்ரத் மிகவும் கடினம் போக்கு கொண்டவர் என்பதை குறித்து ஆய்வு செய்யும் போது பரேல்வி அறிஞர் கூறுகிறார்:
   நான் கேட்கிறேன் உண்மையில் கடும்போக்கு இழிவான குணமா?

اشداء على الكفار

என்பதை அல்லாஹ் எதற்கு அருளினான்?

البغض لله

 யாரைக் குறித்து பேசுகிறது? சந்தேகமின்றி இமாம் அஹ்மத் ரிஜாகான் அவர்களின் சுபாவமானது கடினப்போக்கும் பற்றுதலும் இருந்தது.
(அல்மீஜான் கா இமாம் அஹ்மத் ரிஜா )


அஹ்மத் ரிஜாகான் அவர்களின் காலத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் கடினப் போக்கால்,மார்க்கத்தில் கடினத்தன்மையால் விரும்பவில்லை.

(அன்வாரே ரிஜா)



அஹ்மத் ரிஜாகான் அவர்களின் கடினத்தன்மை, கடும் போக்கு உண்மையில்  ஷரீஅத்தை பின்பற்றுவதாக உள்ளது.
(ஹயாதே அஃலா ஹஜ்ரத்)



பைஜ் அஹ்மத் உவைஸி அஹ்மத் ரிஜாகான் குறித்து எழுதியுள்ளார்கள் அன்னாரின் சுபாவமானது கடினப்போக்கு கொண்டதாகும்.
(அல்ஹகாயிக் ஃபில்ஹதாயிக்)


ஆக, கடும்போக்கு என்பதை அசிங்கமான நாவு என்பதாக விமர்சிக்கும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகானை, இமாம்களை  விமர்சிக்க தயாரா?
(இன்ஷா அல்லாஹ்  பரேல்வி அறிஞரின்  அசிங்கமான நாவு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடுகிறோம்!)

அடுத்து, ஷைக் ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹ்) அவர்கள் 'ஸைபுன் நகி' என்ற நூலில் இருப்பதை எடுத்தெழுதியுள்ளார்.
சுயமாக புனைந்து இட்டுகட்டி கூறவில்லை.

பரேல்விகளின் உசூல் என்னவெனில் ஒரு நூலில் இருப்பதாக எடுத்துக்காட்டினால் போதுமானது.எடுத்துக்காட்டிய நூலில் உள்ள தவறுகளுக்கு பதில் அளிப்பது நம்மின் மீது அவசியமில்லை.

பரேல்விய அறிஞர் 'ஸைஃபே ஸிகந்திரி' என்ற நூலில் ஓர் இடத்தில் மல்பூஜாதின் மீது  சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கிறார்.கிருஷ்ணன் பல இடங்களில் ஆஜராகிறான் என்பதை ஸப்உ ஸனாபீலிருந்து ரிஜாகான் பரேல்வி எடுத்தெழுதியுள்ளார்.


இதற்கு பதில் அளிக்கும் பரேல்விய அறிஞர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவர்கள் இதனை ஸப்உ ஸனாபீலிருந்து எடுத்தெழுதியுள்ளார் இதற்கு பதில் அளிப்பதானது நம்மின் மீது அவசியமில்லை என்பதாக கூறுகிறார்.
(இது குறித்து நமது இணையத்தின் பின்வரும் லிங்கில் தெளிவான மறுப்பை கொடுத்திருக்கிறோம் இதனை பார்வையிடவும்!)

http://ummathemuhammedhiya.blogspot.in/2017/05/blog-post_12.html?m=1

இவ்வாறுதான் ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹ்) அவர்களும் 'ஸைபுன் னகி' யிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள்.சுயமாக எழுதவில்லை.இதனை முன்வைத்து ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹ்) அவர்களை விமர்சிக்க கூடாது.ஸைபுன் னகியின் ஆசியரை வேண்டுமானால்  பரேல்விகள் விமர்சிக்கட்டும்!

ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹ்) அவர்களின் தவறான புரிதலினால் தவறு நிகழ்ந்துவிட்டது என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.பரேல்வி ஜவ்வாத் ரப்பானி கூறுவது போன்று திட்டமிட்டு புனைந்து கூறவில்லை.பரேல்விகளின் நூல்களிலும் இது போன்ற உதாரணங்களை எடுத்து காட்ட முடியும்!

  ஷீஆக்களுக்கு ஆதரவான கருத்துக்களை பரேல்விய அறிஞர்களின் நூல்களில் இருப்பதை ஆராய்ந்த பரேல்விய அறிஞர் மெளலவி முஹம்மத் அலி அதனை ஏற்கிறார்.எனினும், இதனை பரேல்விய அறிஞர்கள் அறியாமையினால், தவறான புரிதலினால் நிகழ்ந்தது என நியாயம் கற்பிக்கிறார்.
(மீஜானுல் குதுப்)



ஷீஆக்களின் கொள்கைகளை தவறுதலாக எழுதிவிட்டனர் என்பதாக நியாயம் கற்பிக்கும் பரேல்விகளே! குறிப்பாக பரேல்விய ஜவ்வாத் ரப்பானியே!
ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹ்) அவர்களும் தவறான புரிதலினால் எழுதிவிட்டார்கள் என கூறுகிறோம்.

தவறான புரிதலினால் எழுதியதன் பிண்ணனியில் பரேல்விகளின் சூழ்ச்சி இருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க கடமைப்பட்டுள்ளோம்!

அடுத்து, ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை குறித்தெல்லாம் இட்டு கட்டியுள்ளனர் என்பதாக ஜவ்வாத் ரப்பானி பொங்குகிறார்
ஸைபுன் நகி நூலின் ஆசிரியரின் செயலை ஹுஸைன் அஹ்மத் மதனி  (ரஹ்) அவர்களுடன் முடிச்சுப் போடுவது மிகப்பெரும் மடத்தனம்!

இனி, ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மீது பெரும் அவதூறை பழியை சுமத்தும் பரேல்விய அறிஞரை பாருங்கள்!

அன்னார் கூறினார்கள்:

(ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  எனது இருப்பு எனது நானா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருப்பாகும்.அப்துல் காதிரின் இருப்பு இல்லை.அதன் பிறகு மகனார் கேட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அவர்கள் மீது மேகம் நிழலிட்டது.எனினும், தங்கள் மீது ஏன் நிழலிடுவதில்லை? அதற்கு அன்னார் கூறினார்கள் என்னை மக்கள் நபி என்பதாக கூறிவிடக்கூடாதே!
 (தஃப்ரீஹுல் கவாதிர் 107)

அல்லாஹ் பாதுகாப்பானாக!
இங்கு பரேல்விகளின் இறைநிராகரிப்பு நிர்வாணமாக ஆடுகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live