4 Sept 2017

குழப்பத்தின் ஆணிவேர் யார்? பரேல்விகளே! - பரேல்விகளின் நேரடியான வாக்கு மூலம்.

முஃப்தி பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்கள்:

   தேவ்பந்தின் மையமாக உள்ள பீர் முர்ஷித் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள்.அன்னாரை பரேல்விகளும் அங்கீகாரம் பெற்ற பெரியோராக ஏற்கின்றார்கள்.ஏனெனில், பரேல்விய்யத் மதிக்கத்தக்க அதிகமான பெரியோர்களின் பீர் முர்ஷிதாக அன்னார் திகழ்கிறார்கள்.இரு பிரிவினர்களில் (தேவ்பந்த் பரேல்விகள்)
ஹாஜி ஸாஹிப் அவர்களின் கொள்கைகளுக்கு நிலைப்பாட்டிற்கு மாற்றமாக இருப்பவர்கள் தான் குழப்பத்தின் ஆணிவேர் என்பதை அறிந்து கொள்ளட்டும்!

(இன்ஆமுல்லாஹ் ஃபி அகாயிதி ஹாஜி இம்தாதில்லாஹ் பக்கம்:4)




இதே விஷயத்தை உவைஸி அவர்கள் பக்கம்:7 ல் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:

எனினும், தேவ்பந்திகள்
ஹாஜி ஸாஹிப் அவர்களின் தீர்ப்பை ஏற்கவில்லையெனில் இதுதான் குழப்பங்களின் ஆணிவேர். அல்லாஹ்வின் பாதையில் குழப்பத்தை சேர்த்துவிட்டனர்
என்பதை அறிந்து கொள்ளட்டும்!

இதே போன்று 
மற்றொரு பரேல்விய அறிஞர் 
நியாஜி ஸாஹிப் எழுதியுள்ளார்கள்: 

அனைத்து பிரிவுகளின் சிந்தனை மிகுந்த உலமாக்கள் பின்தொடர்பவர்கள் ஹாஜி ஸாஹிப் அவர்களின் பைசலா ஹப்த் மஸ்அலா வை தீர்ப்பாக ஏற்றால் கருத்து வேறுபாடுகள் விரைவாக முடிவுக்கு வந்துவிடும்.

(இத்திஹாதே பைனல் முஸ்லிமீன் பக்கம்:114)



பரேல்விகள், பரேல்விய உவைஸி ஸாஹிப்,நியாஜி ஸாஹிப் அவர்களின் கூற்றிற்கு ஏற்ப ஹாஜி ஸாஹிபின் அடிச்சுவட்டின்படி நடப்பது மிகவும் அவசியமாகும்.ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்களின் தீர்ப்பை ஏற்று, அமல்புரியட்டும்!

ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்கள் 'பைசலா ஹப்த் மஸ்அலா' வின் இறுதியில் பக்கம்:13 இல் எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ்வின் அடியார்களின் தோழமையை, சேவையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்! குறிப்பாக மெளலவி ரஷீத் அஹ்மத் ஸாஹிப் அவர்களின் பரக்கத்தை இந்தியாவில் பெரும் வாய்ப்பாக மிகப்பெரும் அருட்கொடையாக கருதி, அவர்களிடமிருந்து 'பைஜ்' எனும் ஆன்மீக வளர்ச்சி 'பரக்கத்' எனும் அபிவிருத்தியை பெறவேண்டும்! அன்னார் அவர்கள் வெளிரங்க, அந்தரங்க பூரணத்துவங்கள் சங்கமித்தவராக இருக்கிறார்கள்.அன்னாரின் ஆய்வுகள் முழுக்க அல்லாஹ்வின் வழியில் இருக்கிறது.ஒரு போதும் இதில் சிறிதளவும் மனோஇச்சை இல்லை.மெளலவி அவர்களின் விஷயத்தில்  மாறுபாடு கொண்டவர்களுக்கு இந்த வேண்டுகோளாகும்!

(குல்லியாதே இம்தாதிய்யா பக்கம்:86)


எதிரிகள் சத்தியத்தை காதுகொடுத்து கேட்கட்டும்!
எங்களுக்கு தெரியாது என கூறவேண்டாம்!

இதே போன்று ஹாஜி ஸாஹிப் 
(ரஹ்) அவர்கள் 'ஜியாவுல் குலூப்' நூலின் பக்கம்:72 ல் எழுதியுள்ளார்கள் :

    என் மீது நல்லெண்ணம்,நேசம் இருப்பவர் மெளலவி ரஷீத் அஹ்மத் மற்றும் மெளலவி காஸிம் இருவரும் வெளிரங்க அந்தரங்க பூரணத்துவங்கள் சங்கமித்தவர்களாக இருக்கிறார்கள்.என்பதை (அறிந்து கொள்ளட்டும்!) என்னை விட மிகவும் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளட்டும்! எனினும்,வழமைக்கு மாற்றமாக
நான் அவர்களின் இடத்தில் உள்ளேன்.அவர்கள் என்னுடைய இடத்தில் இருக்கிறார்கள்.அவர்களின் சகவாசத்தை வாய்ப்பாக கருதவேண்டும்! அவர்களைப் போன்ற நல்லோர்களின் காலத்தை பெறமுடியாது.அவர்களின் 'பரக்கத்' எனும் அபிவிருத்தி, சகவாசத்தின் மூலம்  'பைஜ்' எனும் ஆன்மீக வளர்ச்சி பெற்றுக்கொள்ளட்டும்!

    அல்லாஹ் அவர்களின் ஆயுளில் பரக்கத்தை தந்தருள்வானாக! மெய்ஞானத்தின் அனைத்து அருட்கொடைகள் மற்றும் அவனது நெருக்கத்தின் பூரணத்துவங்களின் மூலம் மேன்மை அளிப்பானாக! உயர்வுமிக்க பதவிகளை அடைய அருள்புரிவானாக! அவர்களின் ஹிதாயத் எனும் ஜோதியின் மூலம் இவ்வையகத்தை ஒளிரச்செய்வானாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் கியாமத் வரை அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை நிலைத்திருக்க செய்வானாக!


 இப்பொழுது பரேல்விகளிடத்தில் நமது வினா? 


பரேல்விய ஜமாஅத்தைச் சேர்ந்த நபர் அல்லது அறிஞர்
ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்களின் நல்லுபதேசத்தை ஏற்று மெளலானா ரஷீத் அஹ்மத் மற்றும் மெளலானா காஸிம் ஸாஹிப் அவர்களுக்கு சேவையாற்றி ஆன்மீக வளர்ச்சி பெற்ற ஒருவராவது உள்ளனரா? அல்லது குறைந்த பட்சம் ஹாஜி ஸாஹிப் போன்று நல்ல துஆ செய்துள்ள ஒருவராவது உள்ளனரா?

அவ்வாறு ஒருவர் கூட  இல்லையெனில் பரேல்விய அறிஞர்களான பைஜ் அஹ்மத் உவைஸி, நியாஜ் இருவரின்   சொல் செயலின் படி பரேல்விகள்தான் குழப்பங்களின் ஆணிவேர். குழப்பவாதிகள் என்பது பகலை போன்று வெட்டவெளிச்சமாகிறது.

ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்களின் வேண்டுகோளிற்கும், நல்லுபதேசத்திற்கும் முரண்பட்டு செயல்படுவது நிரூபணமாகிறது.

கைசேதம் என்னவெனில் பரேல்விகளின் கூற்றின்படி ஹாஜி ஸாஹிபின் பேச்சை ஏற்று தேவ்பந்த் உலமாக்களுக்கு சேவைபுரியவேண்டும்!

ஆனால், இதற்கு நேர்மாற்றமாக பரேல்விகள் வெட்கமற்று,நாணமற்று கூறுகிறார்கள்: 

அதாவது வஸிய்யத் என்ற தலைப்பில் ஷாஹ் ஸாஹிப் (ஹாஜி இம்தாதுல்லாஹ் ஸாஹிப்) எழுதியிருப்பதை அங்கீகரிக்கத்தக்க தெளிவாக ஏற்கமாட்டோம்! அந்த வாக்கியங்களை கையால் தொடமாட்டோம்! இது தூங்கிப்போன குழப்பங்கள் .

(பைசலா ஹப்த் மஸ்அலா தவ்ஜீஹாத் வ தஷ்ரீஹாத் பக்கம்:311)



இத்துடன் பரேல்விகள் விட்டுவிடவில்லை....

ஹாஜி ஸாஹிபின் பெயரை பரேல்விகள்  கொண்டு பெருமிதம் கொள்கின்றனர்.எனினும்,வெறும் நடிப்புதான். நாணமற்றவர்கள் ஹாஜி ஸாஹிப் அவர்களையும் விட்டு வைக்கவில்லை.அதுமட்டுமின்றி அன்னாரை குப்ரின் படுகுழியில் பரேல்விகள்  தள்ளிவிட்டனர்.

      ஹாஜி ஸாஹிப் ரஹ் அவர்கள் தேவ்பந்த் உலமாக்களை மெளலானா என்பதாக கூறியுள்ளார்கள்:

பரேல்விகளின் கூற்றின்படி தேவ்பந்த் உலமாக்களை மெளலானா என்பது இறைநிராகரிப்பாகும். தேவ்பந்த் வஹ்ஹாபிகளை மெளலானா என்பது இறைநிராகரிப்பாகும்.

(அத்தாரி தாரி பக்கம்:1 பக்கம்:22) 
(பதாவா ரிஜ்விய்யா, 16/260, ரிஜாபவுண்டேஷன் லாஹுர்)


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live