23 Aug 2017

ஷீஆக்களின் மொழிபெயர்ப்பாளர் பரேல்விகளே!


மெளலவி முஹம்மது அலி பரேல்வி ஜாமிஆ ரஸுலிய்யா ஷேராஜிய்யாவின் நிறுவனர் எழுதியுள்ளார்கள்:

இக்கால அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களில் சில எழுத்தாளர்கள், உபதேசம் செய்பவர்கள் விஷயத்தில் ஆராய்வது கடும் அத்தியாவசியமாக உள்ளது.ஷீஆ வழிமுறையை உறுதி செய்யும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
(மீஜானுல் குதுப் பக்கம்:579)

பரேல்விய ஆலிம் இப்திகார் ஹஸன் ஜைதியின் நூலான 'காகே கர்பலா' குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.

முஹர்ரம் மாதத்தில் நமது சில அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்கள் கர்பலாவின் ஷஹாதத் குறித்த நிகழ்வின் மூலம் வலியை ஏற்படுத்தும் நிலையை உண்டாக்கிவிட்டார்.ஷீஆ பிரசங்கம் செய்பவர்கள் கூட பின்தங்கி விட்டனர்.(மீஜானுல் குதூப் பக்கம்:580)

மேலும் எழுதியுள்ளார்கள்:

இப்படிப்பட்ட பேணிக்கையற்ற உபதேசகர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.(மீஜானுல் குதுப் 580)

ஜைத் ஸாஹிப் எழுதியுள்ளார்: 

தங்களை வானத்தில் உள்ள ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கர்பலாவின் பக்கம் செல்வதை தடுத்தாலும் பயணத்தை நிறுத்த முடியாது.
(காகே கர்பலா பக்கம்:213)

மெளலவி அஹ்மத் அலி ஸாஹிப் கடுமையாக கண்டனம் எழுப்பியவாறு கூறுகிறார்கள்: 

இந்த விஷயத்தை அவர்கள் வெறும் பயான் என்ற தோரணையில், கதை என்கிற போங்கில் எழுதி விட்டார்கள்.உண்மைக்கு எந்த சம்பந்தமும் இல்லை.அதுமட்டுமின்றி ஈமானுக்கு பெரும் அபாயம்.
(மீஜானுல் குதுப் 585)

ஸய்யித் இப்திகார் ஹஸன் ஜைதி ஸாஹிப் பரேல்வி அவர்கள்
ஸய்யிதா ஸுஃராவை சிறுபிள்ளை என்பதாக நினைத்து (தவறுதலாக) எழுதிவிட்டார்.சிறு குழந்தையாக இருந்ததால் மதீனாவில் தங்கிவிட்டார்கள்.மதீனாவில் தனித்து தங்கியதால்  வேதனையில் புலம்பி உதவியை வேண்டினார்கள்.இதனை தவிர மற்றதை எழுதியுள்ளார்.எனினும் இது அனைத்தும் இட்டுகட்டப்பட்டவை. புனையப்பட்டவை.
இந்த நிகழ்வை வேதனை வருத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார். ஷீஆக்களின் உபதேசகர்களும் இதனைப் படித்தால் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கர்பலா சம்பவத்தில் சுன்னா உபதேசகர்கள்.ஷீஆ உபதேசகர்கள் இருவரின் நோக்கமும் அழவைப்பது ஒன்றுதான்.
(மீஜானுல் குதுப் 586)

இந்நிகழ்வை குறித்து இவ்விதமாக விமர்சிக்கிறார். ஏதேனும் ஒரு பலமான அறிஞர் இல்லையெனில் ஒப்பாரி வைக்காமல் இருக்க முடியாது.

இதே சம்பவத்தை முஃப்தி ஹபீப் ஸியாலகோட் எழுதியுள்ளார் .
இந்த நூலில் பரேல்விய அறிஞர்களின் அணிந்துரை உள்ளது.

இதனை குறித்து விமர்சித்தவாறு மெளலவி பரேல்விய முஹம்மத் அலி எழுதியுள்ளார்: இக்கால ஸுன்னா உலமாக்களின் உபதேசகர்கள் முஹர்ரமின் பயான்களில் கவர்வதற்கு ஸய்யிதா ஸுஃராவின் புனையப்பட்ட கதைகளை  அழகாக்கி எழுதியுள்ளார்.
(மீஜானுல் குதுப் பக்கம்:315,316)

மேலும் இந்த சம்பவத்தின் சுருக்கமான நிகழ்வை கூறி அதில் உள்ள கெடுதிகளையும் பட்டியலிடுகிறார்: 

ஸய்யிதா ஸுஃரா குழந்தையாக இருந்தார்கள்.கண்ணியமிக்க இமாம் ஹுஸைன் (ரளி ) அவர்கள் தனது சிறுபிள்ளையான மகளை விட்டு விட்டு சென்றுவிட்டார்கள்.அழுது கொண்டிருப்பார்கள்.கூஃபா செல்பவர்களிடம் தனது மனக்குமறலை முறையிடுவார்கள்.கூபா செல்லும் ஆசையை வெளிப்படுத்துவார்கள்.அவர்களின் வேதனை நிறைந்த வார்த்தையை செவிமடுப்பவர்கள் அழ ஆரம்பித்துவிடுவார்கள்.மேலும் கேட்பார்கள் தனித்த என்னை விசாரிப்பவர்கள் யாரமில்லையா? நான் தனிமையால் கவலை எனும் மலையால் அகப்பட்டுள்ளேன்.மதீனாவில்  ஸஹாபாக்கள்,அஹ்லே பைத்துகள்  இருந்தார்கள்.ஆறுதல் சொல்ல, இரக்கம் காட்ட யாரும் இல்லை.
(மீஜானுல் குதுப் பக்கம்:606)

இந்த சம்பவமானது உண்மையெனில் ஸஹாபாக்கள் அஹ்லே பைத்தினர் மீது கெட்ட எண்ணமும், நக்பிக்கையின்மையும் உள்ளத்தில் ஊடுருவிடும்.இதனை  பரேல்வி அறிஞர்கள் ஏற்படுத்த முயற்சிசெய்துள்ளார்கள்.

இப்திகார் ஹஸன்
தனது நூலில் கர்பலாவின் பத்தாம் நாள் இரவு சம்பவத்தை ஒப்பாரி வைத்தல், இரங்கல் அறிவித்தல் எனும் போங்கில் அழுகையை தூண்டும்படி முயற்சி செய்துள்ளார்.
(மீஜானுல் குதூப், பக்கம்:618)

இந்த சம்பவத்தை உள்ளத்தை தாக்கும், மனதை வசீகரிக்கும் போங்கில் பரேல்விய ஆலிம் மெளலவி நூர் கஷுரி அவர்கள் 'பாரா தக்ரீரே' என்ற நூலிலும் மெளலவி ஷம்சு பரேல்வி 'முரக்கஃ ஷஹாதத்' என்ற நூலிலும் மெளலவி ஸாயிம் சிஷ்தி 'ஷஹீத் இப்னு ஷஹீத்' என்ற நூலிலும் இந்த சம்பவத்தை  படிப்பவர்களுக்கு ஹுஸைன் (ரளி) அவர்கள் மீது கவலை உண்டாகும்படி அழுகையை தூண்டும்படியும் எடுத்தெழுதியுள்ளனர்.

ஸாயிம் சிஷ்தி அவர்கள்
'முஷ்கில் குஷா' என்ற நூலில் அலி (ரளி) அவர்களின்  வாழ்க்கை சரிதையை எழுதியுள்ளார்.அதில் ராபிளியாக்களுக்கு ஒத்துழைக்கும் விதமாக அலி (ரளி) அவர்களின் கொள்கைகள், கண்ணோட்டங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
(மீஜானுல் குதுப் பக்கம்:631)

'ஷஹீத் இப்னு ஷஹீத்' நூலிலும்
'காகே கர்பலா' வைப் போன்று புனையப்பட்ட கட்டுக்கதைகள் இஸ்லாமிய வரம்புகளை நாசப்படுத்தும் வார்த்தைகளால் வலுவூட்டப்பட்டுள்ளது.

பரேல்விய பெரியோர் ஸாயிம் சிஷ்தி அவர்கள் 'ஷஹீத் இப்னு ஷஹீத்'
என்ற நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:

ஸய்யித் ஜைனப் அவர்களின் தலையிலிருந்து முக்காடு இறங்கியது.தலைவிரிகோலமாக இருந்தார்கள்.இறுதியில் பொறுமையாளர்களின் தலைவரும் இந்த காட்சியைப் பார்த்து துடித்துப்போய் தைரியத்துடன் முன்னேறிச் சென்று, சகோதரியின் கீழே விழுந்த முக்காட்டு துணியை எடுத்தார்.அலியின் மகளே! தலையை மூடிக்கொள்! மேலும் அன்னார் அவர்கள் ஸகீனாவை மடியில் அமர்த்தினார்கள். பிறகு கூறினார்கள்  மகளே! ஸகீனா எழுந்திடு!  இறுதியான சந்தர்ப்பம் தந்தையின் மடியில் படுத்துறங்கு!  (ஷஹீத் இப்னு ஷஹீத் 315,316)

இதனை குறித்து விமர்சித்தவாறு பரேல்விய அறிஞர் மெளலவி முஹம்மத் அலி பரேல்வி கூறுகிறார்கள்: 

ஸய்யித் ஸைனப் (ரளி) அவர்களின் தலையிலிருந்து தலைமுக்காடு துணி இறங்கியது.தலைவிரிகோலமாக இருந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மேன்மைமிக்க கண்ணியம் நிறைந்தவர்களின் இந்த செயலானது குர்ஆன் ஹதீஸிற்கு எதிரானதில்லையா?
ஸாயிம் அவர்கள் அடிப்படையற்ற இந்த வாக்கியங்களின் மூலம்
ஜைனப் (ரளி) அவர்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தார் என்பதை நிரூபிக்க ஆசைப்படுகிறார்?
(மீஜானுல் குதுப் பக்கம்:634)

மேலும் எழுதுகிறார்கள்:

ஸகீனாவை மடியில் வைத்தார்கள்.
இது உயர்வுமிக்க இமாம் அவர்களின் மீது  தூய்மையற்ற விமர்சனமாக உள்ளது.நெஞ்சுடன் அணைப்பதற்கு, மடியில் அமரவைப்பதற்கு
ஸய்யித் ஸகீனா குழந்தை அல்ல.முற்றிலும் பொய்யானது.அம்மையார் திருமணமானவர்கள்.இவர்களின் கணவர் அப்துல்லாஹ் இப்னு ஹுஸைன் அவர்கள்.தம்பதிகளின் சம்பவமானது கர்பலா நிகழ்வில் உள்ளது.
(மீஜானுல் குதுப் பக்கம்:635)


ஸய்யிதா  ஹஸனாவை நெஞ்சுடன் அணைத்துக் கொள்ளும் விஷயத்தை இப்திகாருல் ஹஸன்  ஜைதி காகே கர்பலாவில் எழுதியுள்ளார். இந்த முழுமையான நிகழ்வை எடுத்து எழுதிய பிறகு பழைய பரேல்விய அறிஞர் கூறுகிறார்.இந்த அனைத்து நிகழ்வுகளும் உரையாடல்களும் புணைந்ததாகும்.நடுநிலைக் கண்ணோட்டத்துடன் அணுகினால்  பெரும் அவமரியாதை நிரம்பியுள்ளது.
(மீஜானுல் குதுப்:638)

இப்படிப்பட்ட அடிப்படையற்ற சம்பவங்களை உள்ள  உருக்கும் தொனியில் அழ தூண்டும் விதத்தில் பயான்  செய்வது சுன்னா வழிமுறை அல்ல.ஷீஆக்களுக்கு சேவகம் செய்வதற்கு ஏன் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்

மௌலவி முஹம்மது அலி  ஆய்வுடன் இதனை நிரூபித்துள்ளார்.  இமாம் ஹுஸைன் ரளி அவர்களிடத்தில் கர்பலாவில் ஒட்டகம் இருந்தது.மதீனா செல்லும் நேரத்தில் கூட குதிரையில்லை.

மேலும் எழுதியுள்ளார்கள் கைசேதம் என்னவெனில் சில அஹ்லுஸ்ஸுன்னா உபதேசகர்கள், பிரசங்கம் செய்பவர்கள் ஷியாக்களின் துல்ஜனாஹ் என்ற குதிரையை குறித்து பயான்களில் கூறுகிறார்கள்

பிறகு எழுதியுள்ளார்கள்:

நமது சுன்னாவை சேர்ந்தவர்கள் ஷியாக்களின் பின்னால்  ஒளிந்து குதிரைக்கு வலுகொடுத்து  அவர்களுக்கு உதவி செய்கின்றனர்.
(மீஜானுல் கிதாப்:664)

பரேல்விய அறிஞர்கள் குதிரை குறித்து வலுவூட்டி உள்ளனர் 'ஷஹாததே நவாசே சைய்யிதுல் அப்ராரில்' இமாம் முஸ்லிம் ரளி அவர்களின் இரு மகன்களின் நிகழ்வை குறித்து பரேல்விய  மௌலவி ஷஃபி அகாடவி அவர்கள் 'ஷாமே கர்பலா' இல் முஃப்தி ஜலாலுதீன் அம்ஜதி பரேல்வி  'குதபாதே முஹர்ரமில்' எழுதியுள்ளார்கள் சத்ருல் பாஜில் நயீமுத்தீன்  மொராதாபாத்  பரேல்விய அறிஞர் 'ஸவாவனிஹே கர்பலா' வில்

இது குறித்து முஹம்மது அலி அவர்கள்  விமர்சனம் செய்கிறார்கள்:

இமாம் முஸ்லிம் இப்னு உகைல் ரளி அவர்களின் இரு புதல்வர்களின் சம்பவம் ஒட்டுமொத்தமாக புனையப்பட்டது.இதனை அழுகையை  தூண்டுவதற்கு,மக்கள் ஒப்பாரி வைப்பதற்கு உபதேசம் செய்பவர்கள் பயான்களில் பேணிக்கையற்ற  எழுத்தாளர்கள் நூல்களில் விவரித்துள்ளனர்.
(மீஜானுல் குதுப் பக்கம்:680)

பரேல்விய மஸ்லகின்  அபுல் ஹஸனாத்  காதிரி அவர்களும் அவ்ரா கே கம்  என்ற நூலில் ஷஹாததே இமாம் பற்றி எழுதியுள்ளார். இது குறித்து பரேல்விய அறிஞர் முஹம்மது அலி  அவர்கள்  விமர்சிக்கிறார்
அவ்ரா கே கம் மில்
உபதேசம் என்ற தோரணையில் எழுதப்பட்ட விஷயங்கள் அஹ்லுஸ்ஸுன்னா  கொள்கைகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
(மீஜானுல் குதுப்:72)

பரேல்விய அறிஞர் அபுல் ஹஸனாத் காதிரி அவர்கள் 'அவ்ரா கே கம்' மில்   எழுதியுள்ளார்கள்: இமாம் ஹுசைன் ரளி அவர்கள் ஸய்யிதினா  ஹஸன் ரளி  அவர்களின் மகனார் ஹாசிம் அவர்களுக்கு அதாவது சகோதரனின் மகனை  தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்
(சுருக்கம் அவ்ராகே கம்)

இதனைக் குறித்து விமர்சனம்....

ஆரம்ப காலத்தில் ஷீயாக்களின் அறிஞர்கள் பணம் சம்பாதிப்பதற்கு, கதைகளை கூறியுள்ளார்கள்.
காலம் செல்ல செல்ல
பொய்யான நிகழ்வுகளை எழுத ஆரம்பித்தனர்.அதில் ஒன்றுதான் ஹாசிம் அவர்களுக்கு கர்பலா மைதானத்தில் திருமணம் நடந்த நிகழ்வு.பின்னால் வந்தவர்கள் ஒவ்வொருவரும் புனையப்பட்ட கதையில் அதிகப்படியான விசையங்களை சேர்த்தனர். பிறகு ஷீயாக்களின் நூல்களில் உதாரணமாக பாஜில் காஷிபி  இடமிருந்து பொய்யான கதைகளை உபதேசம் செய்பவர்கள் இந்த நோக்கத்தின் பெயரில் பயான்  செய்வதற்கு,எழுதுவதற்கு ஆரம்பித்துவிட்டனர். அறியாதவர்கள் அறியாமையினால் ஷியாக்களின் அடிப்படைகளை வலுவூட்ட பெரும் சேவை செய்து விட்டனர். உலகை சம்பாதித்தனர். சுன்னா உபதேசகர்கள்  அஹ்லுஸ்ஸுன்னா வழிமுறைக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தினர். ஏற்படுத்தினர். ஷியாக்களின் இடத்தை சுன்னா உபதேசகர்கள் பிடித்துவிட்டனர்.
(மீஜானுல் குதுப்:729)

ஆக,ஷியாக்களின் வழிமுறைக்கு வழுவூட்டியது சேவை செய்தது பரேல்விய அறிஞர்களே என்பதானது இந்த கட்டுரையின் மூலம் பரேல்விகளின் எழுத்தின் மூலமே நிரூபணமாகிறது.
அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live