18 Aug 2017

அஹமது ரிஜா கான் நபிமார்கள் மீது அவமரியாதை( Replay.)

பரேல்விகளின் தலைவன் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஆயிஷா (ரளி) அவர்களின் விஷயத்தில் ஆபாசமான வர்ணனையை குறித்து விரிவாக கூறியுள்ளோம்.

இப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து மனைவிமார்களின் விஷயத்தில் தூய்மையற்ற முறையில் அவமரியாதையாக ஆபாசமாக சித்தரிப்பதை பார்ப்போம்!

பொய்யான் ஜவ்வாத் ரப்பானி இது குறித்து நமக்கு மறுப்பு என்ற பெயரில் வாந்தியெடுத்துள்ளான்.உண்மையில் அது நமக்கு மறுப்பு இல்லை.ஏனெனில் இது குறித்து விரிவான ஆய்வை இதுவரை எழுதவில்லை.

அஹ்மத் ரிஜாகான் மல்பூஜாத்தில் எழுதிய நிகழ்வானது
ஸய்யிதி இப்னு முஹம்மது இப்னு அப்துல் பாகி ஜர்கானி ரஹ் கூறுகிறார்கள் :

நபிமார்களின் பரிசுத்தமான மனைவிமார்கள் பரிசுத்தமான மண்ணறையில் சமர்ப்பிக்கப்படுவார்கள்.அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். (மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் பக்கம்:25)


தஃவதே இஸ்லாமியினரால் வெளியிடப்பட்ட மல்பூஜாத்தில் இதனை நீக்கிவிட்டனர் என்பதை மட்டும்தான் நாம் வாதம் வைத்தோம்.

இந்த சம்பவத்தில் வருகிற ஆபாசத்தை அவமரியாதையை குறித்து பேசவில்லை.ஆனால் ஜவ்வாத் ரப்பானி அவசரமாக மறுப்பு என்ற பெயரில் உளறியுள்ளான்.எனவே இந்த ஆய்வில் பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கும் சேர்த்து மறுப்பளிக்கப்படுகிறது.இனி இதனை குறித்து விரிவாக பார்ப்போம்!

அஹ்மத் ரிஜாகானின் வாக்கியத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது

(1)பரிசுத்த மனைவிமார்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்

(2)நபிமார்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள்

பரேல்விய ஜவ்வாத் ரப்பானியின் வாதம்
தனது மனைவிமார்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் என்ன தவறு உள்ளது? அடுத்தவரின் மனைவியுடன் இணைவதுதான் தவறு என்பதாக கூறுகிறான்?

நமது வாதம்:

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தனது மனைவியுடன் கப்ரில்  உடலுறவு கொண்டார் என்பதாக ஒருவர்  கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அதற்கு பரேல்விய அறிஞர் கேட்கிறார் இவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரம்? என கேட்கிறார்
அதற்கு அந்த நபர்  "ரிஜாகான் பரேல்வி அவரது மனைவியுடன் உடலுறவு கொள்வதாகதான் கூறினேன் அடுத்தவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டதாக கூறவில்லை"
என்பதாக கூறினால்   பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் பதில் என்ன?

அடுத்து அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவமரியாதையும் ஆபாசமும் நிறைந்த சம்பவத்தை கூறியதுடன்
அல்லாமா ஜர்கானி (ரஹ்) 
கூறியதாக பழிபோட்டுள்ளார்.அன்னார் உயிருடன் இருக்கும் பொழுது கேள்விப்பட்டு இருந்தால் அஹ்மத் ரிஜாகான் பரேல்விக்கு எதிராக கொதித்தெழுந்திருப்பார்கள் அல்லாமா ஜர்கானி (ரஹ்)
அவர்கள் இதனை அலி இப்னு உகைல் என்பவரிடமிருந்து எடுத்தெழுதியுள்ளார்

 قال ابن عقيل الحنبلى و يضاجع ازواجه و يستمع بهن اكمل من الدنيا 

இப்னு உகைலி ஹன்பலி அவர்கள் கூறுகிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனைவிமார்களுடன் தாம்பத்தியம் கொள்வார்கள்.இன்பம் பெறுவார்கள்.உலகத்தை விட பரிபூரணமானது.
(ஜர்கானி அலல் மவாஹிப் பக்கம்:169, பாகம்:2)

இப்னு உகைல் என்பவர் யார்? என்பதை இனி பார்ப்போம்!

 على ابن عقيلى ابو محمد ابو الوفاء الظفرى الحنفلى احد الاعلام الا انه خالف السلف و وافق المعتزلة فى عدة بدع نسأل الله العفو و السلامة فإن كثرة التبحر فى الكلام ربما اضر بها)


அலி இப்னு உகைலி குறித்து இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இவர் அறிஞர் எனினும் முன்னோர்களான இமாம்களுக்கு மாறு செய்பவர்.ஏராளமான பித்அத்துகளில் முஃதஜிலாவிற்கு ஒத்துப்போவார்.நாம் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும் சாந்தியையும் கேட்போம்.சில சமயங்களில் கல்விக்கடலாக இருக்கும் பொழுது அதனை கற்றவருக்கு இழப்பை ஏற்படுத்துவிடுகிறது.

இதனைதான் அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் மற்றொரு இடத்தில் கூறுகிறார் :

இவர் சுன்னத்தை விட்டு வெளியேறியவர்.அவர் வாழும்போது பித்அத்தில் அவருக்கு ஒப்பானவர் எவரும் இல்லை.
(ஸியரு இஃலாமுன் நுபுலா பாகம்:19 பக்கம்:444,445)

هذ الرجل من كبار الائمة 
نعم كان معتزليا ،( اللسان)  


இவர் இமாம்களில் மூத்தவர் முஃதஜிலாக இருந்தார்.பிறகு அதனை விட்டும் தவ்பா செய்தார் என்பதாக ஷாபியி மத்ஹபை சேர்ந்த  ஹாபிள் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்

எனினும்  ஹம்பலி மத்பை சேர்ந்த ஹாபிள் இப்னு ரஜப் ரஹ் அவர்கள் இப்னு உகைல் பற்றி கூறுகிறார்கள்:

 இப்னு உகைல் தவ்பா செய்து விட்டார்.எனினும் மெளத் வரை சில  கொள்கையில் முஃதஜிலாவில்  நிலைத்திருந்தார்.
(தஃலுத் தபகாத் பக்கம்:144,பாகம்:1)


அஹ்மத் ரிஜாகான் இந்த நபரின் சொல்லை எடுத்து அதில் வார்த்தைகளை சேர்த்து மோசடி செய்து இதனை அல்லாமா ஜர்கானியின் பக்கம் இணைத்து பெரும் தவறு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அல்லாமா ஜர்கானி (ரஹ்) அவர்கள், மற்றும் அலி இப்னு உகைலின் முழு வாக்கியங்களையும் வாசித்துப்பாருங்கள்!

இந்த வாக்கியத்தின் அரபியானது கிடைக்காது.

ازواج مطہرات پیش کی حاتی ہیں 

பரிசுத்தமான மனைவிமார்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்.

இது அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் சுயமான கற்பனை. இது போன்ற வாக்கியத்தை நவீனவாதிகளான பரேல்விகளின் தலைவரைப் பார்த்து கூறினால் இந்த நபரின் மனைவிமார்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்.

அவர்களிடத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். சிந்தனையானது சமர்பிப்பவர் யார்? என்பதின் பக்கம் நிச்சயம் செல்லும்!

பரிசுத்தமான தூய்மையான மனைவிமார்களின் விஷயத்தில் ஆபாசமான கருத்தை விதைப்பது விமர்சனம் இல்லையா? அவமரியாதை இல்லையா?

பரேல்விகளில் சிலர் இதனை கூறி தப்பிக்க நினைக்கின்றனர்
அல்லாமா ஜர்கானி ரஹ் அவர்கள் லா மானிஅ (தடை இல்லை) என்று கூறி இப்னு உகைலின் கருத்துடன் இணைந்துள்ளார்கள்.

பதில்: 

இது பொருத்தமான பதில் இல்லை.ஏனெனில் லா மானிஅ
(தடை இல்லை) என்ற வார்த்தை இப்னு உகைலின் கூற்றுதான்.

நல்லெண்ணமும் இந்த சொல்லானது இப்னு உகைல் முஃதஜிலியின் கூற்றுதான்.அல்லாமா ஜர்கானி (ரஹ்) அவர்களின் கூற்று இல்லை என்பதுதான்.ஏனெனில் அல்லாமா ஜர்கானி ரஹ் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தை சேர்ந்தவர் எனவே நமது அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்திற்கு எதிரான கொள்கையை ஏற்கமாட்டார்கள்.

பரேல்விகள் நம்மிடத்தில் கேட்டால்...👇👇

  அல்லாமா ஜர்கானி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் நல்லெண்ணம் கொண்டு நிரபராதி என்பதாக கூறும் பொழுது அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவர்களும் அல்லாமா ஜர்கானி (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த கொள்கையை எடுத்து சொல்லும் போது அவரையும் நிரபராதி என்பதாக கூறவேண்டியதுதானே!  ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? காழ்ப்புணர்ச்சி இல்லையா?

நமது பதில்:

இந்த குற்றத்திலிருந்து ரிஜாகானை நிரபராதி என்பதாக கூறமுடியாது.அவரின் விஷயத்திலே நல்லெண்ணம் கொள்ளமுடியாது.

அஹ்மத் ரிஜாகான் மல்பூஜாதில் இந்த கொள்கையை கூறிய பிறகு!

 یہ تمام اہلسنت و الجماعت کا اجماعی عقیدہ ہے اور احادیث صحیحہ سے ثابت ہے جو خلاف کرے گا گمراہ ہے

 இது அனைத்தும் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் ஒன்றுப்பட்ட கொள்கையாக இருக்கிறது.ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாக வேண்டும்.இதற்கு மாற்றம் செய்பவன் வழிகேட்டில் உள்ளான்
(மல்பூஜாத் பக்கம்:252,பாகம்:3)

அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் சிந்தனையில் உதித்த கொள்கையை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை என்பதாகவும் அதற்கு மாற்றம் செய்பவர் வழிகேடர் என்பதாக புழுகியுள்ளார்.

நீதத்துடன் கவனியுங்கள்! மனைவிமார்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தை சேர்ந்த எந்த அறிஞரும் கூறவில்லை.பாமரனும் கூறவில்லை.எனினும் ரிஜாகான் பரேல்வி மட்டும் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் ஒன்றுப்பட்ட கொள்கை என்பதாக பொய்யுரைத்துள்ளார்.அதுமட்டுமின்றி முஃதஜிலி இப்னு உகைலின் சொல்லில்

ازواج مطہرات پیش کی جاتی

 என்கிற வாக்கியத்தொடர் இல்லை.

இது உண்மையில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் சிந்தனையில் உதித்த கற்பனையை தவிர வேறில்லை.மேலும் அல்லாமா ஜர்கானி அவர்கள் இந்த கொள்கையை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் இஜ்மா கொள்கை என்பதாக கூறவில்லை.இதற்கு மாற்றம் செய்பவன் வழிகேடன் என்பதாக கூறவில்லை.

ஆக அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் அவமரியாதையான செயலுக்கு முட்டு கொடுக்கும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வாதங்கள் அனைத்தும் தகர்கிறது.

இறுதியாக شب پاشی என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.எனினும் இந்த இடத்தில் தாம்பத்தியம் என்பதுதான் ரிஜாகான் பரேல்வியின் நோக்கமாகும்.ஏனெனில் இப்னு உகைலியின் கூற்றைதான் அஹ்மத் ரிஜாகான் எடுத்தெழுதியுள்ளார்.
அதில் يضاجع ازواجه என்று வருகிறது.இதன் அர்த்தம் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் என்பதாகும்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live