3 Aug 2017

மறைவான ஞானமும் (இல்முல் கைப்)-பரேல்விகளின் கொள்கை குழப்பமும்.

அல்லாஹுதஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை மறுப்பவர் காபிர் என்பதாக கூறுகிறான்.
(பஹாரிஸ் ஃபதாவா ரிஜ்விய்யா பக்கம்:874)




மறைவான ஞானத்தை மறுப்பவர் நுபுவ்வத்தை மறுப்பவர்.
 (மகாலாதே ஷேர் அஹ்லுஸ்ஸுன்னத் 237)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை மறுப்பவன் முழுக்க நயவஞ்சகன்.
 (கலீமா ஹக் ஷிமாராஹ் நம்பர் பக்கம்:4)




அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானம் முழுவதும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாகி உள்ளதை மறுப்பது மாற்று விளக்கம் அளித்து மக்களை வழிகெடுப்பது ஈமானை விட்டு வெளியாக்கிவிடும்.
(மிக்யாஸே ஹனஃபிய்யத் பக்கம்:379)



அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை மறுப்பவர் எதார்தத்தில் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்பவர் இல்லை (மிக்யாஸே ஹனஃபிய்யத் பக்கம்:312)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேன்மைமிக்க மறைவான ஞானத்தை மறுப்பவர் குர்ஆனுக்கு மாற்றமாக இறைநிராகரிப்பாக உள்ளது.(மஸ்அலா இல்ம் கைப் பக்கம்:18)


மறைவான ஞானத்தை மறுப்பவர் குர்ஆனின் வசனங்களை மறுப்பவர்.குர்ஆனின் ஓர் ஆயத்தை மறுப்பது குப்ரு எனும் போது இதனால் அவர் காபிராகிவிடுவார்.
(வகாருல் பதாவா 1/102)



மெளலவி பைஜ் அஹ்மத் உவைஸி ஸாஹிப் அஃலா ஹஜ்ரத் பாஜில் பரேல்வி அவர்கள் முழுமையான மறைவான ஞானத்தை வாதிடுகிறார்.சந்தேகமின்றி அல்லாஹுத்தஆலா நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனைத்து விதமான முன்னோர்களின் பின்னோர்களின் ஞானத்தை அருளியுள்ளான்.கிழக்கு மேற்கிலிருந்து அர்ஷ் முதற்கொண்டு படுக்கை வரை வானமும் பூமியுள்ள அனைத்தையும் காட்டினான்.
(இமாம் அஹ்மத் ரிஜா ஃபன்னே தப்ஸீர் பக்கம்:16)





பரேல்வி அறிஞர் அப்துர் ரஷீத் எழுதியுள்ளார் :

அண்ணலாருக்கு அல்லாஹ் முழுமையான கல்வி ஞானத்தை அருளினான்.
(ருஷ்துல் ஈமான் பக்கம்:99)


பைஜ் அஹ்மத் உவைஸி ஸாஹிப் :

அல்லாஹுதஆலா முழுமையான மறைவான ஞானத்தை தந்துள்ளான்.
(இல்முல் முனாஜிரா பக்கம்:6)



🔪🔪இனி மறைவான ஞானத்தை பற்றிய பரேலவிகளின் இன்னொரு பக்கம்.🔪🔪

இதற்கு மாற்றமாக,
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் மறைவான ஞானத்தை இணைப்பதை கண்டிக்கும் பரேல்வி அறிஞர்களை பார்ப்போம்!

நமது விமர்சனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் மறைவான ஞானத்தை தொடர்பு படுத்துவது தவறாகும். அஃலா ஹஜ்ரத்  ரிஜாகான் ஸாஹிப் ஞானமானது மறைவானதின் பக்கம் இணைந்திருந்தால் அதனை கொண்டு கருத்து இல்மே தாதியாகும்(சுயமானது)

(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் ஹஜ்ரத் பக்கம்:317) 
(உசூலே தக்ஃபீர் பக்கம்:401)



ஆக மறைவான ஞானம் என்ற வார்த்தையானது தாதியாகும் (சுயமானது) எனவே இது அல்லாஹ்விற்கு மட்டும்தான் சொந்தம் என்பதை விளங்க முடிகிறது.

பரேல்விய அறிஞர் குலாம் ரஸுல் ஸயீதி :

மறைவான ஞானம் என்பது பொதுவாக கூறப்பட்டால் அதனை கொண்டு கருத்து தாதியாகும் (சுயமானது)
 (ஹாஷியா ஷர்ஹு முஸ்லிம் பாகம்:5 பக்கம்:110)


ஞானமானது عطائی கொடுக்கப்பட்ட இருந்தால் அதற்கு மறைவான ஞானம் என சொல்லப்படாது.கைப் என்பது தாதிதான் (சுயமானது)
(ஜாஅல் ஹக் பக்கம்:97)





மெளலவி குலாம் ரஸுல் ஸயீத் எழுதியுள்ளார்:

 அல்லாஹுதஆலாவை தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானத்தை பொதுவாக கூறுவது அனுமதியில்லை.மாறாக இதன் மூலம் அதன் பக்கம் செல்வது ஏற்படும்.இதனுடன் ஞானத்தின் தொடர்பு ஆரம்பித்தில் இருப்பதாக வந்துவிடும்.இது குர்ஆன் மஜீதிற்கு எதிரானது.
 (நிஃமதுல் பாரி ஷர்ஹு புகாரி 1/273)




இல்ம் கைப்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் தொடர்புபடுத்துவது அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நோவினை ஏற்படுத்துவதாகும். எப்பொழுது சிறுமிகள் எங்களில் உள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை நடப்பதை அறிவார் என்று கவிதை பாடினார்களோ இதனை அன்னார் தடுத்தார்கள் இதனின் காரணத்தை முஃப்தி யார் நயீமி குஜராத்தி கூறுகிறார்கள் தன்னின் பக்கம் மறைவான ஞானத்தை இணைப்பதை பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்புவில்லை.
(ஜாஅல் ஹக் பக்கம்:122)



இப்பொழுது பாருங்கள் காஜி ஸனாவுல்லாஹ் பானிபத்தி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

 ان الذين يؤذون الله و رسوله

 சூரா அஹ்ஜாப் 57 தப்ஸீரில் கூறுகிறார்கள் அல்லாஹ் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடிக்காத  விஷயத்தை
ஈடுபடுபவர்கள் வேதனை கொடுக்கப்படுவார்கள்.அவர்களுக்கு உலக மறுமையிலும் சாபம்.
(தப்ஸுர் மஜ்ஹரி பாகம்:7 பக்கம்:380)



முஃப்தி ஹனீஃப் குரைஷி ஸாஹிப்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நோவினை தருபவன்  காபிராகுவான்.




பரேல்விகள் மறைவான ஞானத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முழுமையாக ஏற்கின்றனர்.👇👇

   ஏதேனும் அல்லாஹ்வின் குறிப்பான தன்மையை மற்றவருக்கு பொருத்துவது ஷிர்க்கை உண்டாக்கிவிடும்.
(ஃபதாவா மஜ்ஹரி பக்கம்:537)



இதன் மூலம் அல்லாஹுதஆலாவின் குறிப்பான தன்மையை பிறருக்கு பொருத்துவது இணைவைப்பு என்பதை அறியமுடிகிறது.

பரேல்விகள் முழுமையான ஞானத்தை அல்லாஹ் தஆலாவின் குறிப்பான பண்பாக ஏற்கிறார்கள். 👇👇

  முஃப்தி அஹ்மத் யார் நயீமி:

 முழுமையான நாட்டங்கள் முழுமையான மறைவான ஞானம் அல்லாஹ்விற்குதான் அடிப்படை .
(மவாயிஜ் நயீமிய்யா பாகம்:2 பக்கம்:265)




முழுமையான ஞானத்தை அல்லாஹுதஆலா தனக்கு குறிப்பாக்கிகொண்டான்.
ஒவ்வொன்றையும் விரிவாக அறிந்துள்ளான்.
(இஸ்லாமி அகாயித் பக்கம்:120)



மறைவான ஞானத்தின் முழுமையான ஞானத்தின் சாவிகள் அல்லாஹ்விற்கு குறிப்பானது.
(அகாயித் நஜ்ரிய்யாத் பக்கம்:87)



நபிமார்கள் முழுமையான மறைவான ஞானம் இல்லை. ஏனெனில் முழுமையான மறைவான ஞானம் அல்லாஹ்வின் குறிப்பான பண்பாக உள்ளது.
(ஃபதாவா மெஹ்ரிய்யா பக்கம்:8)


பொதுவான தாதியான ஞானம்
(சுய ஞானம்) மற்றும் முழுமையான ஞானமானது அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கூறுவது இணைவைப்பாகும்.
(ஜேர் ஜபர் பக்கம்:49)





மெளலவி பீர் முஹம்மத் சிஷ்தி ஸாஹிப் :

ان الغيب المختص به معنى المختص به علمه سبحانه تعالى هو كل غيب 

மறைவான ஞானம்  குறிப்பானது. இதனின் விளக்கமானது அல்லாஹ்தஆலா முழுமையான மறைவானதை அறிந்துள்ளான் என்பது குறிப்பானது.
(உசூலே தக்ஃபீர் 310)



முஃப்தி கான் முஹம்மத் காதிரி:

 ஐந்து மறைவான ஞானத்தின் ஞானமானது அல்லாஹ்விற்கு குறிப்பானது.
(மஆரிஃபே ரிஜா பக்கம்:74 ஷிமாராஹ் மே வ ஜுன் 2009)



முஃப்தி அஹ்மத் யார் கான்:

 கைப் தாதி சுயமான மறைவான ஞானம் எவரும் அறியமுடியாது. முழுமையான மறைவான ஞானத்தையும் எவரும் அறியவில்லை.
(ஜாஅல் ஹக் பக்கம்:96)




ஆக முழுமையான மறைவான ஞானம் (علم غیب کل ) பரேல்வி பெரியோர்களின் கருத்தின்படி அல்லாஹ்தஆலாவின் குறிப்பான பண்பு இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உண்டு என்பதாக பரேல்விகளில் சிலர்  வாதிடுவதால் காஃபிரா? அல்லது முழுமையான ஞானத்தை மறைப்பதால் காபிரா?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live