3 Aug 2017

மெளலவி ஆமிர் உஸ்மானியின் உண்மை முகமும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பித்தலாட்டமும்.


பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மெளலவி ஆமீர் உஸ்மானியின் பொய்யான கருத்துக்களை முன்வைத்து தேவ்பந்த் உலமாக்களை விமர்சிக்கிறார்.எனினும் உண்மையில் மெளலவி ஆமிர் உஸ்மானி நமது நம்பிக்கைகுரிய அறிஞர் இல்லை.நமது பெரியோர்களில் எவரும் அவரை குறித்து புகழ்ந்து கூறவில்லை.இதற்கு மாற்றமாக நமது உலமாக்கள் அவரை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.அவர் மெளதூதியின் சிந்தனையால் தாக்கம் பெற்றவர் என்பதாக விளக்கியுள்ளனர்.

நமது ஆசிரியர் ஹஜ்ரத் மெளலானா கண்ணியத்திற்குரிய ஸாஜித்கான் நக்ஷபந்தி அவர்களின் வெளியிடப்படாத நூலில் எழுதியுள்ளார்கள்:

மெளலவி ஆமிர் உஸ்மானி தேவ்பந்தி இல்லை.மெளதூதியை சேர்ந்தவர்.இவரின் இதழான தஜல்லி தேவ்பந்தி என்பதானது தேவ்பந்த் உலமாக்களை வசைபாடுவதற்கு நிறுவியுள்ளார்.சில வரிகளுக்கு பிறகு எழுதியுள்ளார்கள்.இதனால் மெளதூதியின் தஜல்லியின் எந்த ஒரு ஆதாரமும் நம்மிடத்தில் ஏற்கத்தக்கது இல்லை.அதற்கு பதில் அளிக்கும் பொறுப்பும் இல்லை.
(திஃபாயே அஹ்லுஸ்ஸுன்னா கைரே மத்பூஆ பக்கம்:131)

ஞாபம் இருக்கட்டும்! இந்த நூலானது இந்தியா பாகிஸ்தான் உலமாக்களால் அங்கீகரிக்கப்பட்டது.இதில் தேவ்பந்த் விவாதகர்களின் அணிந்துரை உள்ளது.


   குறிப்பு:

இந்த நூல் இதுவரை பதிப்பாகவில்லை.பதிப்பு வெளிவந்தவுடன் ஆதாரம் இத்துடன் இணைக்கப்படும்.

தவ்ஹீத் கா கன்ஜர் என்ற நூலில் மெளலானா அலி தானிஷ் அவர்கள் எழுதியுள்ளார்கள் அவரின் ஊர் கோத்திரத்தை கவனித்து சந்தேகமின்றி தேவ்பந்தி
எனினும்,மஸ்கை கவனித்து தேவ்பந்தி பிடிப்புள்ளவர்  என்பது அப்பட்டமான பொய்யாகும்.ஜமாஅத் இஸ்லாமியின் நிறுவனர் மெளதூதியின் சிந்தனையின் தாக்கத்தினால் அமீர் உஸ்மானி அவர்கள் தனது ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தும் அளவிற்கு சென்றுவிட்டடார்.

   மேலும் சில வரிகளுக்கு பிறகு எழுதியுள்ளார் மெளதூதி ஸாஹிபின் மீது நல்லெண்ணம் கொண்டு அவரின் சமூத்தில் சிரம் பணியும் நபரை தேவ்பந்தின் பிடிப்புள்ளவர் என்பது நீதமா?
(தவ்ஹீத் கா கன்ஜர் பக்கம்:64)



ஆக தஜல்லி இதழை முன்வைத்து பரேல்வி ஜவ்வாத் ரப்பானி குற்றம் சுமத்துவது முழுக்க தேவ்பந்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி குரோதம் விரோதம்தான்.தஜல்லி தேவ்பந்த் மாத இதழில் ஆமிர் உஸ்மானி புனைந்துள்ளார்.அத்தனையும் எடுத்துக்கூறவேண்டிய அவசியமோ தேவையோ இல்லை.ஏனெனில் தேவ்பந்தினரால் ஏற்கத்தக்க நூல் இல்லை.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live