27 Jul 2017

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலிமுல் கைபும்- பரேலவிகளின் முரண்பாடான பத்வாவும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை ஆலிமுல் கைப் என்று அழைப்பதை குறித்து பரேல்விய அறிஞர் முஃப்தி நிஜாமுத்தீன் முல்தானி அவர்கள் எழுதியுள்ளார்கள் :

அல்லாஹ்வின் போதனையின்றி எவரையேனும் ஆலிமே கைப் என்று கூறினால் குஃப்ராகும்.அல்லாஹ்வின் போதனையுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கூறுவது நிரூபணமாகியுள்ளது.
(அன்வாரே ஷரீஅத் பக்கம்:158)




பீர் மெஹ்ரே அலி ஷாஹ் ஸாஹிப் எழுதியுள்ளார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆலிமுல் கைப் என்ற இல்ம் கொடுக்கப்பட்டுள்ளது
(பதாவா மெஹ்ரிய்யா பக்கம்:6)


பரேல்விய முஜாஹித் மில்லத் மெளலவி அப்துல் ஹமீத் காதிரி ஸாஹிப் கூறுவதின் சுருக்கம் :

முன்னோர்களான ஹதீஸ்கலை அறிஞர்களிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலிம் கைப் என்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
(தஸ்ஹீஹுல் அகாயித் பக்கம்:49)


ஹாபிள் முஹம்மத் ஹஸன் ஸாஹிப் எழுதியுள்ளார்கள் :

பிறகும் நமது வாதம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலிமுல் கைப் என்பது நிரூபணமாகியுள்ளது.(அல்அகாயிதுஸ்ஸஹீஹா ஃபிரத்தில் வஹ்ஹாபிய்யா பக்கம்:32)



பரேல்விய முஃப்தி முஹம்மத் அஜ்மல் ஸாஹிப் எழுதியுள்ளார் :

 உலமாக்களில் சிலர்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப் என்று அழைக்கின்றார்கள்
(ரத்தே ஸய்ஃப் யமானி பக்கம்:151)


பரேல்விய அறிஞர் ஸயீத் அஹ்மத் அஸ்அதின் பிரசகங்கள் என்ற நூலில் வரும் தலைப்பு:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப் என்பதாக கூறி ஆதாரம் கொடுத்துள்ளார்
(ஸயீத் அஹ்மத் அஸ்அத் கி தக்ரீரே)

பரேல்விய அறிஞர் அபூகலீம் ஸித்திக் ஃபானி அவர்கள் பீர் மெஹ்ரே அலி ஸாஹிபின் ஆதாரத்துடன் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப் என்பதை ஏற்கிறார்கள் .
 (ஆயினே அஹ்லுஸ்ஸுன்னத் பக்கம்:413)


நபிமார்கள் நல்லோர்கள் அனைவரும் ஆலிமுல் கைப் என்பது சரியானது .(இஸ்திம்தாத் அஜ் இபாதுர்ரஹ்மான் பக்கம்:92)



இது போன்று "இஜாலதுள் ளலாலா" "கஷ்ஃபுல் முஙீபாத்" "இஸ்திம்தாத் அஜ் இபாதுர் ரஹ்மான்" போன்ற நூல்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப் என்று வந்துள்ளது.

🔪       முரண்பாடு        🔪

 பரேல்வி அறிஞர்கள் முஃப்தி அஹ்தர் ரிஜாகான் ஸாஹிப் பரேல்வி எழுதியுள்ளார் :

சந்தேகமின்றி
ஆலிமுல் கைப் என்பதாக அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு உபயோகிப்பது அனுமதியில்லை.
 (அன்வாரே ரிஜா பக்கம்:135)




அஜ்ஹரி எழுதியுள்ளார் :

நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப் என்பதாக கூறுவதாக சொல்வது முற்றிலும் பொய்யாகும்.
(அன்வாரே ரிஜா பக்கம்:138)



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப்
என்பதாக எங்களை நோக்கி தொடர்புபடுத்துவது இட்டுகட்டாகும்.ஆலிமுல் கைப் என்பது ரஹ்மான் கைய்யூம் குத்தூஸ் போன்ற குறிப்பான அல்லாஹ்வின் பெயர்களாகும்.இதனை மற்றவர்களுக்கு பொதுவாக பயன்படுத்துவது நமது அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களிடம் ஹராம் கூடாது.
(அன்வாரே ரிஜா பக்கம்:134)


பாஜில் பரேல்விய குறித்து எழுதப்படுகிறது :

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவர்களின் ஆய்விலே ஆலிமுல் கைப் என்பதாக பொதுவாக கூறுவது அல்லாஹ்வுடன் குறிப்பானதாகும்.எனவே வழக்கில் சுய ஆற்றல் இருப்பதின் பக்கம் விரையும். (ஃபஹாரிஸ் ஃபதாவா ரிஜ்விய்யா பக்கம்:856)



பரேல்விய அறிஞர் முஹம்மத் ஜஹாங்கீர் நக்ஷபந்தி ரிஜவியின் கூறுவதை நன்றாக கவனியுங்கள்:

 பொதுவாக ஆலிமுல் கைப் என்பதை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உபயோகிப்பதை அஹ்லுஸ்ஸுன்னா பரேல்விய அறிஞர்களில் எவரும் கூறவில்லை.
(முனாஜிரே அஹ்லுஸ்ஸுன்னத் பரேல்வி பக்கம் 437)



பாஜில் பரேல்வி இதன் காரணமாக படைப்புகளை ஆலிமுல் கைப் என்பதாக பொதுவாக கூறுவது மக்ரூஹ்
(அல்அம்ன் வல் உலா பக்கம்:170)

குலாம் நஸீருத்தீன் ஸிய்யாலவி ஸாஹிப் எழுதியுள்ளார்கள்:

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆலிமுல் கைப் என்பதாக கூறுவதாக  அஹ்லுஸ்ஸுன்னாவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு இது வெறும் அபாண்டமாகும்.
(இபாரத் அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஜா பக்கம்:360)




பரேல்விய முஜத்தித் மில்லத் ஷஃபீஃ ஸாஹிப் எழுதியுள்ளார்கள்:

 படைப்புகளை ஆலிமுல் கைப் என்பதாக கூறுவது அனுமதியில்லை என்பதை நாமும் கூறுகிறோம்.
 (தஆருஃப் உலமாயே தேவ்பந்த் பக்கம்:59)





ஆலிமுல் கைப் அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமைக்கு குறிப்பானது.படைப்புகளின் விஷயத்தில் இந்த கொள்கையானது இறைநிராகரிப்பாகும்.
(தன்வீருல் ஹவாதிர் பக்கம்:34)


ஆலிமுல் கைப் என்பதாக நபிமார்களின் விஷயத்தில் கூறுவது சாத்தியமில்லை (சுருக்கமான கருத்து)
 (உசூலே தக்பீஃர் பக்கம்:314)




உசூலே தக்பீர் என்ற நூலில் ஹஜ்ரத் பீர் முஹம்மத் சிஷ்தி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

 இல்மானது பொதுவாக சொல்லப்படும் போது குறிப்பாக கைப்  (மறைவானது) பின் பக்கம் இணைந்து வந்தால் அதனின் கருத்தானது சுயமான இல்மாகும்.இதனின் விளக்கத்தை கஷ்ஷாபின் ஓரக்குறிப்பில் மீர் ஸய்யித் ஷரீஃப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது உண்மையில் சத்தியமானது.எவரேனும் ஒருவர் படைப்புகளுக்கு ஒரு அணுவளவு சுயமான அறிவு உண்டு என்று ஏற்பவன் உண்மையில் காபிராகிவிடுகிறான்.
(உசூலே தக்பீர் பக்கம்:401)



காரி குல்ஜார் ஹுஸைன் சிஷ்தி அவர்கள் எழுதியுள்ளார்கள்;

ஆலிமுல் கைப் என்பது அல்லாஹ் மட்டும்தான். அஃலா ஹள்ரத் இமாம் அஹ்மத் ரிஜாகான் அவர்கள்  எழுதியுள்ளார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சந்தேகமின்றி எண்ணற்ற மறைவான விஷயங்கள் மற்றும் நிகழ்ந்தது நிகழ இருக்கிற அனைத்தையும் அறிந்தவர்கள் எனினுமே ஆலிமுல் கைப் என்பது அல்லாஹ்விற்கு மட்டும்தான்.இவ்விதமாக  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உண்மையில் கண்ணியமும் கம்பீரமும் மிக்கவர் முழு உலகத்திலும் அன்னாருக்கு நிகராக ஒருவரும் கண்ணியமும் கம்பீரமும் இருக்க முடியாது.எனினும் முஹம்மத் அஜ்ஜ வஜல்ல என்று சொல்ல முடியாது.மாறாக அல்லாஹ் அஜ்ஜ வஜல்ல முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதாகதான் சொல்லப்படும்.
(இல்மே முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம்:22,23)



ஆக பரேல்விகளின் கண்ணோட்டத்தின் பேரில் நபிமார்கள் நல்லோர்களின் விஷயத்தில் ஆலிமுல் கைப் என்பதாக கூறுவது கூடாது.ஹராமாகும்.முழுக்க பொய்யாகும்.இட்டு கட்டுவதாகும்.அதுமட்டுமின்றி இந்த பண்பானது அல்லாஹ்விற்கும் மட்டும் குறிப்பானது.அவ்வாறு கூறுபவர் காஃபிர்.

எனினும் மாற்றமாக பரேல்விய அறிஞர்களின் மற்றொரு சாரார் ஆலிமுல் கைப் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்கலாம் என்பதாக கூறுகின்றனர்.

எனவே பரேல்வி அறிஞர்கள் :

(1)ஹராமான செயலை அனுமதிக்கின்றனர்.

(2)ஹராமான செயலுக்கு மார்க்கத்தில் ஆதாரம்உண்டு என்கின்றனர்.

(3)அல்லாஹ்வின் குறிப்பான பண்புகளை படைப்புகளுக்கு சூட்டுகின்றனர்.

(4)அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்கள் மீது இட்டுகட்டுகின்றனர்.முற்றிலும் பொய் பேசுகின்றனர்.

(4)காபிராகிவிடுகின்றனர்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live