26 Jul 2017

அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் - பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நூர் என வாதிட்டார்களா? தொடர் -2

⛲நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக ஏற்பது ஈமான்
இல்லை.

⛲அண்ணலார் மனிதர் என்பவர் காஃபிர்.

⛲அண்ணார் மனித போர்வையில்
வந்துள்ளார்கள்.

⛲அண்ணலார் (நூரே முஜஸ்ஸம்) பரக்கத்துமிக்க உடல் நூர்.

 என்பதாக
பரேல்விகளைப் போன்ற கொள்கைகளை ஷைக் அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி  (ரஹ்) அவர்கள் அறவே
ஏற்கவில்லை.இது போன்ற வார்த்தைகளை கூறியதாக அன்னாரின் நூல்களில் பார்க்க முடியாது.இதற்கு மாற்றமாக அன்னார் அவரது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக ஏற்றுக்கொண்ட ஆதாரங்கள் உள்ளன.அன்னார் கொள்கையை குறித்து எழுதிய சிறந்த நூல் தக்மீலுல் ஈமான் பக்கம்:109 ல் எழுதியுள்ளார் .




அல்லாஹ்தஆலா மனிதர்களிலிருந்து தனது தூதரை அனுப்பினான். மற்றொரு இடத்தில் எழுதியுள்ளார்கள் நபித்துவம் மனிதர்களுடன் குறிப்பானது.குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் நாம் உமக்கு முன்பாக அனுப்பிய அத்தனை தூதர்கள் ஆண்களாக இருந்தார்கள். ஷைக் அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதராக ஏற்றிருந்தார்கள் என்பதை விளங்கமுடிகிறது.

இது மட்டுமின்றி அன்னார் அவர்கள்  மதாரிஜுன் நுபுவ்வத்தில்  எழுதியுள்ளார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருப்பானது மண்ணிலிருந்துதான் உருவானது.(மதாரிஜுன் நுபுவ்வத் பாகம்:1/95)



ஷைக் ரஹ் அவர்கள் ஜத்புல் குலூப் நூலில் எழுதியுள்ளார்கள்:

 மரணமாகி அடக்கப்படும் மண்ணிலிருந்துதான் ஒவ்வொருவருரின் பிறப்பானது நிகழ்கிறது.நிச்சயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  பிறப்பானது மதீனாவின் மண்ணிலிருந்துதான்
(தாரீகே மதீனா பக்கம்:23)



ஷைக் ரஹ் அவர்கள் அஷிய்யத்துல் லம்ஆத் 1/392 ம் பக்கம் எழுதியுள்ளார்கள்:

 من بشرم 

கருத்து:

 நான் மனிதராக இருக்கிறேன்.

ஆக ஷைக் ரஹ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக மறுத்த ஆதாரம் அவரின் எந்த ஒரு நூலிலும் இல்லை.

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழல் சம்பந்தமாக இரு செய்திகள் ஷைக் ரஹ் அவர்களிடமிருந்து வந்துள்ளது.

(1)முதல் காரணம்: ஹஜ்ரத் உஸ்மான் ரளி அவர்கள் கூறினார்கள் பெருமானார்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழலானது பூமியில் விழாது.அன்னாரின் உடலானது அசுத்தமான இடத்தில் பட்டுவிடக்கூடாது.

 (மதாரிஜுன் நுபுவ்வத் 2/161 )




இதன் மூலம் தெளிவாக விளங்க முடிகிறது.ஷைக் ரஹ் அவர்கள் மனிதத்தன்மையை மறுக்கவில்லை. மற்றொரு விஷயத்தை விளங்கி கொள்ள வேண்டும் நிழலானது நூருக்கும் உண்டு புகாரியில் கிதாபுல் ஜனாயிஜ் வருகிற ஹதீஸ்

 مازالت الملائكة تظله باجنحتها حتى رفعتموه 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளி அறிவித்தார் ஹதீஸின் சுருக்கம் நீங்கள் அவரை தூக்கும் வரை வானவர்கள் அவர்களுக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிழல் இல்லை என்பதற்கு ஷைக் ரஹ் அவர்களின் இரண்டாவது காரணம்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நூர் ஸிராஜ் புனிதமிக்க பெயர்களை  என அல்லாஹ் சூட்டியுள்ளான்.ஏனெனில் அண்லாரின் வஸீலாவின் மூலமாக அல்லாஹ்வின் நெருக்கத்தையும் அடையும் வழி ஒளிரவேண்டும் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகும்.மேலும் அண்ணலாரின் பேரழகு பரிபூரணத்தின் பொருட்டால் பார்வை மற்றும் அகப்பார்வையின் பாக்கியம் பெறவேண்டும் என்பதற்காகும்.(மதாரிஜுன் நுபுவ்வத்)



ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நூர் என்பதாக கூறப்படுவதற்கு இரு காரணங்கள் நூரே ஹிதாயத் அண்ணலாரின் பேரழகு பூரணத்தின் காரணமாக நூர் என்பதாக சொல்லப்படுகிறது.இதனால் மனிதர் என்பதை மறுப்பதாக ஆகாது.ஏனெனில் ஷைக் ரஹ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாக்கியமிக்க பிறப்பின் மூலம் மண் என்பதாக ஏற்கிறார்கள்.

எனினும் பரேல்விகள் பிறப்பின் மூலம் நூர் என்பதாக கூறுகிறார்கள் ஸயீத் ஸாஹிப் அவர்கள் இதனை ஷர்ஹு முஸ்லிம் 5/106 ல் எழுதியுள்ளார்.


இரண்டாவது பரேல்விகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதப் போர்வையில் வருகைபுரிந்தார்கள் என்பதாக வாதிடுகிறார்கள்.இது  மனிதத்தன்மையை மறுப்பதாகும்.ஏனெனில் மனிதப் போர்வையில் மனிதர் வருவதில்லை.ஜின் அல்லது வானவர் தான் மனிதப் போர்வையில் வருகிறார்கள்.எனவே  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதப் போர்வையில் வருகை புரிந்தார்கள் என்று கூறினால் அண்ணலாரும் நூர்தான்.எனினும் மனிதராக இருக்கமாட்டார்கள்.அதுமட்டுமின்றி பரேல்விகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதப் போர்வையில் வருகைபுரிந்தார்கள் என்பதை ஏற்பதுடன் மனிதர் என்பதை ஏற்பதாக லட்சம் தடவை கூறினால் மனிதர் என்பதை மறுப்பதாகதான் அமையும்.

முக்கிய குறிப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் உண்டு என்பதற்கு தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு.இந்த ஹதீஸ்கள் இமாம்களின் பார்வையில் பட்டுஇருந்தால் இன்றைய பரேல்விகளைப் போன்று மறுத்திருக்கமாட்டார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்று ஹதீஸ்கள் இட்டுகட்டப்பட்டவையாக புனையப்பட்டதாக மிக பலகீனமானதாக உள்ளது.(இதனைக் குறித்து விரிவாக அறிய நமது தளத்தின் லிங்கில் பார்வையிடவும்)

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருக்கும் பொழுது பலகீனமான ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடற்ற ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்பதுதான் பரேல்விகளின் நிலைப்பாடு இதனைப் பார்ப்போம்!

ரிளாகான் பரேல்வி கூட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் பக்கம் இணைத்து
சொல்லப்படுவதற்கு ஆதாரம் தேவை என்பதை ஏற்கிறார்.

ஹதீஸை ஏற்பது
நபி (ஸல்) அவர்களின் பக்கம் இணைத்து சொல்லப்படுவதற்கு ஆதாரம் தேவை ஆதாரமின்றி
நபி (ஸல்) அவர்களின் பக்கம் இணைத்து சொல்வதற்கு அனுமதியில்லை .
( இர்ஃபானே ஷரீஅத்)




அஹ்மத் ரிளாகான் பரேல்வி ஒரு ஹதீஸை கூறுகிறார்:

சங்கைமிகுந்த உலமாக்கள் இதனை ஏற்றுள்ளனர்.............
ஆய்வின்படி பார்க்கும் போது இந்த ஹதீஸானது நிரூபணமாகவில்லை
(மல்பூஜாத் பாகம்
2,172)


ஹதீஸ்களில் சிலதை உலமாக்கள் தவறுதலாக "ஸஹீஹ் " என்று கூறினால் அல்லது அதனை
அங்கீகரித்து ஏற்றுக்கொண்டாலும் அதனை ஸஹீஹ் என்று சொல்லக்கூடாது என்பதை
ரிளாகான் பரேல்வியின் இந்த கூற்றின் மூலம் அறியமுடிகிறது.

பாஜில் பரேல்வி முஹத்திஸ் அப்பாஸ் ரிஜவி எழுதியுள்ளார்:

ஏதேனும் பலகீனமான ஹதீஸை ஸஹீஹ் என்றும்,ஸஹீஹான ஹதீஸை பலகீனம் என்பதால் பலகீனம்
ஸஹீஹாகிவிடாது.
( முனாஜிரே ஹி முனாஜிரே பக்கம் 296)




மார்க்க அறிஞர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை கூறுகிறார்களே என்று வினா எழுப்பினால் என்ன பதில்?

நமது பதில்:

(1) பரேல்விகள் தங்களது அசத்திய கொள்கையை நிரூபிப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூர் என்பதன் காரணமாக நிழலை மறுக்கிறார்கள்.எனவே கொள்கையை நிரூபிப்பதற்கு  உறுதிமிக்க ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வேண்டும்.ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று இருந்தாலும் அதனைக் கொண்டு கொள்கையை நிரூபிக்கமுடியாது.

(2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்கிற மிக பலகீனமான ஹதீஸை ஏற்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஃஜிஸா (அற்புதம்) என்ற பேரில் ரூஹானிய்யத் (ஆன்மாவானது) பஷரிய்யத்தை (மனிதத்தன்மையை) மிகைத்து நிழல் மறைந்துவிட்டது என்பதாக மாற்று விளக்கம் கொடுக்கலாம்.

(3) மார்க்க அறிஞர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்பதை வரலாறு என்ற வகையில் பதிவு செய்துள்ளனர்.கொள்கை என்ற அர்த்தத்தில் இல்லை.மனிதர் என்பதை மறுக்கவில்லை.மனிதப் போர்வையை அங்கீகரிக்கவில்லை. ஆனால் பரேல்விகள் கொள்கையாக நிழலை மறுக்கின்றனர்.

 இறுதியாக 'ஃபூயூஜாத் ஹுஸைனியின்' மோசடி என்பதாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி விமர்சிக்கிறார்.அந்நூலில் உள்ள தவறானது திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டது.அதனை குறித்து ஜவ்வாத் வாய் திறக்கவில்லை.

அதே நூலில் எழுதப்பட்டுள்ளது பின்வருமாறு: 

ஷைக் (ரஹ்)
அவர்கள் தனது மதாரிஜுன் நுபுவ்வத்தில் பதிவு செய்திருப்பதாக ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்கள் சுட்டிகாட்டியதால் அந்த ஹதீஸ் பலமானது என்பதாக மாறிவிடாது என்பதை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மறைத்து விட்டார்.



0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live