25 Jul 2017

ரிஜாகான் பரேல்வியும் ஷீஆக்களின் வம்சாவழித்தொடர்- ஷீஆ என்பதாக பிரகடனம்.

 பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் மறுப்பிற்கு நமது மறுப்பு:

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி நமக்கு அளித்த மறுப்பில் வைத்த வாதங்களும் நமது மறுப்பும்.

(1) பெயர்களை வைத்ததன் காரணமாக ஷீஆ என்றால்
தானவி மற்றும் அஹ்லே ஹதீஸ் உலமாக்களும் பெயர்களை வைத்துள்ளார்கள்.

(2) ஷீஆக்களின் கொள்கையை சேர்ந்தவர் எனில் அவர்களுக்கு எதிராக எண்ணற்ற நூல்களை ஏன் எழுத வேண்டும் அது மட்டுமின்றி ஷீஆக்களின் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

(3) பரேல்விய்யத் கி கானா தலாஷி என்ற நூலில் பரேல்விய்யத் தாரீக் அகாயித் என்ற நூலில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நமது பதில்: 

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி வழக்கம் போல் நாம் வைத்த வாதங்களை திரித்து நமக்கு மறுப்பளித்துள்ளார்.பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மறுப்பில் செய்த பித்தலாட்டங்களையும் நமது விளக்கத்தையும் இனி காண்போம்!

'பரேல்விய்யத் கானா தலாஷி' என்ற நூலில் வரும் வாசகமும் அதன் மொழிபெயர்ப்பும்

کہ شجرہ جتنا بھی ذکر کیا گیا اس واضح ہوگیا کہ وہ تمام ہی نام روافض والے ہیں ملاحظہ فرمائے اور غور کرتے جائے

வம்சாவழித்தொடரில் உள்ள அனைத்துப் பெயர்களும் ரவாபிள்கள் அதனைப் பாருங்கள்! கவனியுங்கள்!



 احمدبن نقی علی خان بن رضا علی خان بن کاظم علی خان بن اعظم 

அஹ்மதுப்னு நகீ அலி கான் இப்னு ரிளா அலி கான் இப்னு காஜிம் அலி கான் இப்னு அஃஜம்.



முதல் சவால்: 

அலி ஹஸன் ஹுஸைன் என்பதாக தனித்து பெயர் வைத்ததை விமர்சிக்கவில்லை.மாறாக வம்சாவழித்தொடர் குறித்துதான் விமர்சிக்கப்படுகிறது.நமது பெரியோர்களின் நூலிலிருந்து வம்சாவழித்தொடரை இது போன்று எடுத்துக்காட்டுங்கள்!

அதுமட்டுமின்றி பெயர் சூட்டியதால் மட்டும் ஷீஆக்கள் என்பதாக விமர்சிக்கவில்லை. 'பரேல்விய்யத் கி கானா தலாஷி' நூலில் பரேல்விகளின் நூலில் உள்ள  ஷீஆ கொள்கை குறித்து எழுதப்பட்டுள்ளது.அஹ்லே ஹதீஸை சேர்ந்த அல்லாமா இஹ்ஸான் இலாஹி லஹீரி அவர்கள் பரேல்விய்யத் தாரிக் அகாயீத் என்ற நூலிலும் வம்சாவழித்தொடரை மட்டும் முன்வைத்து விமர்சிக்கவில்லை.பரேல்விகளின் தலைவர் ரிஜாகான் உம்முல் முஃமினீன் ஆயிஷா ரளி அவர்களை குறித்து ஆபாச வர்ணணை، மேலும்  ஷீஆக்களின் கொள்கையையும் பதிவு செய்து பரப்பியுள்ளார் என்பதாக விரிவாக கூறியுள்ளார்.

 ان عليا قسيم النار 

அலி (ரளி) அவர்கள் நரகத்தை பங்கிடுபவர் என்ற அறிவிப்பு ஷியாக்களின் கொள்கையாகும்.


 அஹ்மத் ரிஜாகான் அவர்கள் அனைத்து ஸஹாபாக்களையும் விட்டு விட்டு அலி (ரளி) மட்டும் சிரமத்தை நீக்குபவர் என்பதாக எழுதியுள்ளனர். இதுவும் ஷீஆக்களின் கொள்கையில் உள்ளது.

ناد عليا مظهر العجائب 
  تجده عونا لك فى النوائب 
كل هم و غم سينجلى بولايتك يا على يا على ( الامن و العلى صفحه 12،13)



ஷீஆக்களுக்கு எதிராக பல்வேறு  நூல்களை எழுதியுள்ளார் என்பதை ஏற்கிறோம்.தேவ்பந்த் உலமாக்களை பரேல்விகள் வஹ்ஹாபிகள் என்பதாக விமர்சிக்கிறார்கள்.இதற்கு மாற்றமாக வஹ்ஹாபிகளுக்கு எதிராக தேவ்பந்த் உலமாக்களும் நூல்களை எழுதியுள்ளனர். தேவ்பந்த் உலமாக்களும் வஹ்ஹாபிகளுக்கும் மத்தியில் கடுமையான கருத்து வேறுபாடுகள் கருத்து மோதல்கள் உண்டு என்பதை பரேல்விய அறிஞரும் ஏற்கின்றனர்.தேவ்பந்திகள், வஹ்ஹாபிகளுக்கு எதிரானவர்கள் என்பதை பரலேவிய அறிஞர்
ஏற்கிறார்.

ﻋﻠﻤﺎﺀ ﺩﯾﻮﺑﻨﺪ ﻋﻠﻤﺎﺀ ﻧﺠﺪ ﮐﮯ ﺳﺎﺗﮫ ﺍﭘﻨﮯ ﺍﮐﺎﺑﺮ ﺩﯾﻮﺑﻨﺪ ﮐﺎ
ﺷﺪﯾﺪ ﺍﺧﺘﻼﻑ ﻭ ﻧﻔﺮﺕ ﻣﻼﺣﻈﮧ ﮐﺮﯾﮟ ‘ ‘ ۔
‏( ﺭﺿﺎﺋﮯ ﻣﺼﻄﻔﯽ ،ﺟﻤﺎﺩﯼ ﺍﻻﺧﺮﯼ 1407 ﮪ،ﺹ 2,3 )

எவ்வாறு உலமாயே அஹ்லே சுன்னத்திற்கும் உலமாயே நஜ்தியுடன் கொள்கை ரீதியான
கருத்து வேறுபாடுகள் இருக்கிறதோ அதே போன்று உலமாயே தேவ்பந்துக்கும் உலமாயே
நஜ்த் மற்றும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கும் கடுமையான கருத்து
வேறுபாடும்,வெறுப்பும் உள்ளது.
( ﺭﺿﺎ ﻣﺼﻄﻔﯽ ﺟﻤﺎﺩ ﺍﻻﺧﺮﯼ ﮨﺠﺮﯼ 1407 ﺻﻔﺤﮧ 2,3 )

அதனின்  பட்டியல் சில

(1) 'தஸவ்வுப்' மற்றும் 'தரீகத்' அதனின்அமல்களான திக்ர் அன்றாட அவ்ராத்கள்
முராகபா என்ற இறைதியானத்தை கடுமையாக கைர முகல்லிதீன்கள்
எதிர்க்கிறார்கள்.ஆனால் நாம் அதனை ஆதரிப்பவர்கள் செயல்படுத்துபவர்கள்.

(2)தனி
நபரை தக்லீத் செய்வதை அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் நாம் இதனை வாஜிப்
என்கிறோம்.

(3)நபிமார்கள்,நல்லோர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்வதை
அவர்கள் மறுக்கிறார்கள்.ஆனால் நாம் அதனை ஏற்கிறோம்.

(4)சங்கைமிக்க
பெரியோர்களின் பரக்கத்துக்களை அவர்கள் மறுக்கிறார்கள். ஆனால் நாம் அதனை
அங்கீகரிக்கிறோம்.

(5)நபி (ஸல்) அவர்களின் ஹயாத்தை (உயிரோடு வாழ்வதை) அவர்கள்
மறுக்கிறார்கள் ஆனால் நாம் ஏற்கிறோம்.அது மட்டுமின்றி மறுப்பவர்களுக்கு எதிராக
விவாதம் செய்துள்ளோம்.

(6)ரவ்ளா ஷரீபிற்கு ஜியாரத்தின் நிய்யத்தில் மட்டும்
பிரயாணம் செல்வதை அவர்கள் மறுக்கிறார்கள் ஆனால் நாம் அமல்களில் சிறந்தது
என்கிறோம்.

(7)நபி ஸல் அவர்களின் ரவ்லா ஷரீபிற்கு முன்பாக ஸலாம்,ஷபாஅத்தை
வேண்டுவதை மறுக்கிறார்கள் ஆனால் நாம் அதனை ஏற்கிறோம்.

வெறும் பெயரை மட்டும் வைத்து ஷீஆ என்பதாக விமர்சிக்க கூடாது என்பதாக வாதிட்டால்

நமது பதில்: 

பரேல்விகளின் நூலான மிக்யாஸ் ஹனபிய்யத்திலிருந்து மறுப்பை காண்போம்! பரேல்விய அறிஞர் உமர் அவர்களின் பார்வையில் அஹ்மத் ரிளாகான் பரேல்வி அவரின் தந்தை நகி அலி கான் மற்றும் பரேல்விகள் அனைவரும் ஷீஆக்கள் அதனை பெருமையுடன் ஏற்கின்றனர்.

பரேல்விய அறிஞர் உமர் அவர்கள் மிக்யாஸே ஹனஃபிய்யத் நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார் ஹஜ்ரத் பீர் பீரான் ஸாஹிப் (ஷைக் அப்துல் காதிர் ஜுலானி) (ரஹ்) அவர்கள் முஹம்மதி என்று அழைப்பவர்களை ரவாபிளின் ஒரு ஜமாஅத் என்பதாக கூறுகிறார்கள் குன்னியத்தாலிபீன் பக்கம்:217 ல்

 اما الروافضة لتفرقت اربع عشر فرقة القطعية و الكيسانية و الكبرية و المغيرية و المحمدية 

என்று  குறிப்பிட்டுள்ளார்.எனவே முஹம்மதி என்பதாக தங்களை அழைத்துக் கொள்ளும் வஹ்ஹாபிகள் ரவாஃபிளாக்கள் என்பதாக எழுதியுள்ளார்.

 (மிக்யாஸ் ஹனஃய்யாத் மூன்றாம் பதிப்பு 570)

'முஹம்மதி' என்று அழைப்பவர்கள் ராபிளியாக்கள் என்பதாக பரேல்விய அறிஞர் உமர் அவர்கள் வாதிடுகிறார்.

பரேல்விய அறிஞர் அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்: 

ابو محمد عبد المصطفى احمد رضا المحمدى السنى الحنفى القادرى البركاتى البريلوي

 பரேல்வி தன்னை குறித்து பெருமையாக 'முஹம்மதி' கூறுகிறார் அபூமுஹம்மத் அப்துல் முஸ்தஃபா அஹ்மத் ரிளா அல்முஹம்மதிஸ்ஸுன்னி அல்ஹனஃபி அல்காதிரி அல்பரகாதி அல்பரேல்வி (அன்ஹாருல் அன்வார்)




அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தனது தந்தையை குறித்து எழுதியுள்ளார்:

 سيدى و والدي حضرت مولانا نقى على خان صاحب محمدى سني حنفى قادرى 

ஸய்யிதி வ வாலிதி ள்ரத் மெளலானா நகி அலி கான் ஸாஹிப் முஹம்மதி ஸுன்னி ஹனஃபி காதிரி
(அன்ஹாருல் அன்வார்)



ரிளாகான் பரேல்வி தன்னை ஷீஆ என்பதாக பிரகடனப்படுத்தவில்லை மாறாக தேவ்பந்த் பெரியோர்கள் வஹ்ஹாபி பிரகடனப்படுத்தியுள்ளார்கள் என்று வாதிட்டால்!

நமது பதில்:

இமாம் ஷாபியி ரஹ் அவர்கள் தன்னை குறித்து ராபிளி என்பதாக கூறியுள்ளார்கள் எனவே அன்னாரை ராபிளி என்பதாக விமர்சிக்க தயாரா?

நபியின் குடும்பத்தின் பிரியத்திற்கு ராபிளிய்யத் என்று சொல்லப்பட்டால் நான்
ராபிளியாக இருக்கிறேன் என்பதற்கு ஜின்,மனிதன் சாட்சியாக இருக்கட்டும்!


எவரேனும் ஒருவர் இந்த கவிதையை அடிப்படையாக வைத்து கூறுவாரா? இமாம் ஷாபியி
(ரஹ்) அவர்கள் ராபிளி என்பதாக ( அல்லாஹ் பாதுகாப்பானாக! )

ராபிளிய்யத் என்பதன் மீது சாட்சியை சமர்ப்பிக்கிறார் என்றால் இமாம் அவர்கள் என்ன ராபிளியா? இல்லை ஒருபோதும் இல்லை.மாறாக இமாம் அவர்கள் ஒரு வாதமாகதான்
கூறியுள்ளார்கள்.மாறாக உண்மையில் கூறவில்லை.
அதாவது இமாம் அவர்களின் கருத்தானது
நீங்கள் நபியின் பிரியத்திற்கு பெயர்தான் ராபிளிய்யத் என்று சொன்னால்
என்னையும் ராபிளியாக கருதிக் கொள்ளுங்கள் ஆனால் நபியின் குடும்பத்தின்
பிரியத்தை விடமாட்டேன்.
நமது பெரியோர்களும் வஹ்ஹாபி என்ற சொன்னதின் நோக்கமும் இவ்வாறுதான் அதனின்
விளக்கமானது "நீங்கள் சுன்னத்தின் பக்கம் அழைப்பதையும்,பித்அத்,சடங்கு,
சம்பிராதயங்களை தடுப்பதையும் வஹ்ஹாபிய்யத் என்றால்" நாங்கள் வஹ்ஹாபிகள்
தான்.ஆனாலும் தவ்ஹீத் பக்கமும்,சுன்னத்தின் பால் அழைப்பையும் நாங்கள் ஒரு
போதும் விடமாட்டோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live