24 Jul 2017

பரேல்விகளும்- ஸஹாபியின் விமர்சனமும்.


பதாவா ரஷீதிய்யாவில் ஸஹாபாக்களில் எவரையேனும் காஃபிர் என்று சொன்னால் அவர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டு வெளியேறமாட்டார் என்பதாக எழுத்துப்பிழை ஏற்பட்டது.

இதனை தூக்கிபிடித்து விமர்சிக்கும் பரேல்விகள் இனி இதற்கு எதிராக கொதித்தெழ தயாரா? போர்கொடி தூக்க தயாரா?

பரேல்விகளின் தலைவர் ரிஜாகான்  நாயகத்தின் தோழரை காபிர், ஷைத்தான் என்பதாக சகட்டுமேனிக்கு மல்பூஜாதில் விமர்சித்ததை எடுத்துக்கூறினோம்.
அதற்கு மறுப்பு என்ற பெயரில் பரேல்விய ஜவ்வாத் ரப்பானியின் உளறல்களுக்கு மறுப்பளித்து ஒரு கேள்வியை முன்வைத்து சவால் விட்டு இருந்தோம்.இது குறித்த விரிவான ஆமவையும் மறுப்பையும் பின்வரும் நமது தளத்தில் பார்த்துக்கொள்ளவும்!

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/01/3.html?m=1

இனி,அடுத்து ஒரு நாயகத்தோழரை பரேல்விகளின் விமர்சனத்தை பார்ப்போம்!

பரேல்விய அறிஞர் அப்துல் முஸ்தஃபா அஃஜமி எழுதியுள்ளார்: 

அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள் மேன்மைமிக்க மஸ்ஜிதின் நபவியில் புனிதமிகுந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிம்பரில் நின்று குத்பா செய்து கொண்டிருந்தார்கள்.திடீரென்று, துர்பாக்கியவான் கேடுகெட்டவன் அவனின் பெயர் 'ஜஹ்ஜா ஙிஃப்பாரி' ரளியல்லாஹு அன்ஹு  நின்றிருந்தான்.அன்னாரின் பரக்கத்துமிக்க கையிலிருந்து தடியை பறித்து உடைத்துவிட்டான்.அன்னாரின் மார்க்க ஞானம் சகிப்புத்தன்மையின் காரணமாக தண்டிக்கவில்லை.எனினும் அல்லாஹ்வின் அடக்கியாளும் ரோஷமுள்ள குணம்,ஜஹ்ஜா ஃஙிப்பாரியின் ஒழுக்கமற்ற களங்கப்படுத்தும் செயலினால் சபிக்கப்பட்ட அவனின் மீது தண்டனையை கொடுத்தான்.அவனின் கையில் புற்றுநோய் வந்தது.கை சூம்பி விழுந்துவிட்டது.ஒரு வருடம் கழித்து மரணம் அடைந்தான்.

(கராமதே ஸஹாபா பக்கம்:68)

அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் பாதுகாப்பானாக! நாயகத்தோழரை குறித்து எழுதுவதற்கு மனம் வரவில்லை.எனினும் பரேல்விகளின் உண்மை முகத்தை வண்டவாளங்களை,கொள்கை குழப்பங்களை முஸ்லிம்கள் அறியும் பொருட்டு எழுதப்பட்டுள்ளது.

இந்த நூலின் பல்வேறுப்பட்ட பதிப்புகளிலும் இந்த சம்பவத்தை பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்.

(1)கராமதே ஸஹாபா பக்கம் 69,70 மக்தபா கவுஸிய்யா ஸுல்தானிய்யா

(2)கராமதே ஸஹாபா,பக்கம்:92, மக்தபா மதீனா,அஹ்மதாபாத் குஜராத்

(3)கராமதே ஸஹாபா,பக்கம்:71
ரூமி பப்ளிகேஷன்

(4)கராமதே ஸஹாபா, பக்கம்:46

பரேல்வி அறிஞர் நாயகத்தின் தோழரை எப்படி விமர்சிக்கிறார்.அல்லாஹ் பொருந்திக்கொண்ட நாயகத் தோழரை பரேல்விகள் பொருந்திக்கொள்ளமாட்டார்களா?
அது மட்டுமின்றி இந்நிகழ்வை குறித்து மற்றொரு பரேல்விய அறிஞர் தஃவதே இஸ்லாமியினரின் தலைவர் இல்யாஸ் காதிரி அத்தாரி எடுத்தெழுதியுள்ளார்.அதிலும் நாயகத்தோழரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கராமதே உஸ்மான் ஙனி ரளி மக்தபா மதீனா கராச்சி பாகிஸ்தான் பக்கம்: 19,மூன்றாவது பதிப்பு நடுநிலை முஸ்லிம்களே நன்றாக அறிந்து கொள்ளுங்கள் பரேல்விகள் உண்மையில் அண்ணலாரை நேசிப்பவர்கள் இல்லை.ஷைத்தானை நேசிப்பவர்கள்.பதாவா ரஷீதிய்யாவில் எழுதப்பட்ட விஷயத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.வானம் பூமி அளவிற்கு வேறுபாடு உள்ளது.

பதாவா ரஷீதிய்யாவில் நாயகத்தோழரை ஒரு போதும் விமர்சிக்கவில்லை.மாறாக நாயகத் தோழரை விமர்சித்தவர்கள் விஷயத்தில் எழுத்தாளரின் தவறு ஏற்பட்டது.ஆனால் இங்கு பரேல்விய அறிஞர்களே நாயகத்தின் தோழரை நேரடியாக விமர்சிக்கிறார்.

ஜஹ்ஜா ஙிப்பாரி ரளி அவர்கள் ஸாஹாபி என்பதற்கான ஆதாரங்களை இனி பார்ப்போம்!

அஸதுல் காபா,அல்இஸ்திஆப்,அல்இஸாபா போன்ற நூல்களில் ஸஹாபி என்பதாக தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live