23 Jul 2017

அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் - பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நூர் என வாதிட்டார்களா? தொடர் -1


அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு பரேல்விகளின் பொய்களை, ஈமானை நாசப்படுத்தும் கொள்கைகளைக் குறித்து நடுநிலையுடன் மறுப்புகளையும் ஆய்வுகளையும் எழுதி வருகிறோம்.

பெருமானார் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதத்தன்மையை கவனித்து மனிதர் என்பதாகவும் பண்புகளை குணங்களை கவனித்து நூர்  என்பதாக நம்பிக்கை கொள்வதுதான் இறைநம்பிக்கையாகும்.இது குறித்து குர்ஆன்,ஹதீஸ்,இமாம்களின் ஆதாரங்களின் மூலம் பரேல்விகளின் வலுவிழந்த வாதங்களுக்கு மறுப்பளித்து தொடராக எழுதினோம்.பெருமானார் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூர்தான் முதல் படைப்பு என்ற பொய்யான புனையப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் குறித்து ஆய்வு வெளியிட்டோம்.இதற்கு பதில் அளிக்க முடியாத பரேல்வி ஜவ்வாத் ரப்பானி ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் மற்றும் தேவ்பந்த் உலமாக்கள்,முஜத்தித் அல்பஸானி (ரஹ்) அவர்கள் போன்றவர்களின் நூல்களிலிருந்து கருத்துக்களை திரித்து நூர் என பரேல்வி ஜவ்வாத் ரப்பானி  புழுகியுள்ளார்.இது போன்றுதான் அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் கருத்தை திரித்து நூர் என வாதிட்டார்.இதற்கும் தெளிவாக விரிவாக பதில் அளித்தோம்.
(இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள் வரை முறியடிக்க முடியாது)

இன்ஷா அல்லாஹ் இது குறித்து வலுவான ஆதாரங்கள், தெளிவான வாதங்களை கொண்டு பரேல்விகளின் திரித்தலை புரட்டலை முறியடிப்போம்!

ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்களின் கருத்தை திரித்து நூர் என வாதிடும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு:

முதல் சவால்: 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக ஏற்பது ஈமான்
இல்லை.அண்ணலார் மனிதர் என்பவர் காஃபிர்.அண்ணலார் அவர்கள் மனித போர்வையில்
வந்துள்ளார்கள். அண்ணலார் (நூரே முஜஸ்ஸம்) பரக்கத்துமிக்க உடல் நூர் என்பதாக
பரேல்விகளைப் போன்ற கொள்கைகளை ஷைக் அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி  (ரஹ்) அவர்கள் அறவே
ஏற்கவில்லை.இது போன்ற வார்த்தைகளை கூறியதாக அன்னாரிடமிருந்து எடுத்து காட்ட பரேல்வி ஜவ்வாத் ரப்பானி தயாரா? ஆனால் இதற்கு எதிராக அன்னாரின் நூலிலிருந்து பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனிதர் என்பதை நிரூபிப்போம்.

அடுத்து ஷைக் அப்துல்ஹக்  முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்கள் குறித்து பரேல்விகளின் நிலைப்பாடு என்ன? கண்ணோட்டம் என்ன? என்பதை அறிந்து கொண்டால் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வைத்த வாதங்கள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும்.எனவே இதனை குறித்து பரேல்விகளின் நூல்களிலிருந்து பார்ப்போம்!

ரிளாகான் பரேல்வி ஹஜ்ரத் ஷைக் (ரஹ்) அவர்களின் கருத்தை விமர்சித்தவாறு

 ومن العجب ما وقع فى الاشعة

அஷிய்யத்துல் எழுதிய விஷயமானது ஆச்சரியமாக உள்ளது.
(பாபுல் அதான் வல் இகாமா பதாவா ரிஜ்விய்யா 2/418)



மற்றோர் இடத்தில் ரிளாகான் பரேல்வி எழுதியுள்ளார்: 

மதாரிஜுன் நுபுவ்வத் பிக்ஹ் ரீதியான நூல் இல்லை.இந்த சம்பவத்திற்கு அறிவிப்பாளர் தொடரும் இல்லை.இதன் மீது ஷைக் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
(ஃபதாவா ரிஜ்விய்யா 4/76 கிதாபுல் ஜனாயிஜ்)

இதன் மூலம் மதாரிஜுன் நுபுவ்வத்திலிருந்து மார்க்க சட்டம் எடுக்க முடியாது என்பதை அறியமுடிகிறது.

ஷைக் (ரஹ்) அவர்கள் மதாரிஜுன் நுபுவ்வத்திலே ஒரு காஜியின் சம்பவத்தை கொண்டு வந்துள்ளார். இதனை குறித்து ரிளாகான் பரேல்வி பொரிந்து தள்ளுகிறார்.அனைத்து தெளிவான ஆதாரங்கள் நம்பகமான நூல்கள் அனைத்து மத்ஹபுகளின் இஜ்மாவிற்கு எதிராக 11ம் நூற்றாண்டின் பாஜில் காஜியின் கருத்தை எப்படி எடுக்க முடியும்?.
 (பதாவா ரிஜ்விய்யா 4/76)




இப்படிப்பட்ட அர்த்தமற்ற அறிவிப்பாளர் தொடர் பெரிய அறியாமையாகும்.
(பதாவா ரிஜ்விய்யா 4/76)




டாக்டர் முஃப்தி ஷுஜாஅத் அலி காதிரி அவர்கள் அஃலா ஹஜ்ரத் குறித்து எழுதியுள்ளார்கள்:

மெளலானா ஹஜ்ரத் அஃலா (ரஹ்) அவர்களின் மார்க்க கல்வி சுரங்கத்தில் அன்னார் எவரிடத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார் என்பதை தேடுவது கடினமில்லை.மாறாக அன்னார் எந்த பகீஹிடத்தில் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார் என்பதை தெரிந்துகொள்வது மிகப்பெரிய ஆய்வாகும்.(ஷர்ஹு முஸ்லிம் 7/25)




இதன் மூலம் ரிளாகான் பரேல்வி அவர்கள் ஷைக் அப்துல்ஹக் (ரஹ்) அவர்களிடமும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார் என்பதை நாம் முன்னால் பார்த்துவிட்டோம்.

அல்லாமா குலாம் ரஸுல் ஸயீதி அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி,அல்லாமா குலாம் ரஸுல் ரிஜவி மற்றும் சில அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்கள் ذنب (பாவம்) என்பதாக மொழிபெயர்த்துள்ளனர். இதில் நாம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம்.
(ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் 7/342)




அல்லாமா ஸயீத் ஸாஹிப் எழுதியுள்ளார்: 

இது அறிவிப்பாளர் தொடர் அற்ற அறிவிப்பாகும்.இதனின் அறிவிப்பாளர் தொடர் இல்லை.ஷைக் (ரஹ்) அவர்கள் இதனை மதாரிஜுன் நுபுவ்வத்தில் கொண்டு வந்துள்ளார்கள்.அதில் பலகீனமான பலமான அனைத்தும் உள்ளது.இது நம்மின் மீது ஆதாரமில்லை.
(ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் 1/518)




ஷைக் அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்கள் தனது கருத்தை எடுத்தெழுதி தாடி ஒரு பிடி வைப்பது கடமையாகும் என்கிறார்கள்.மேலும் எழுதுகிறார் ஷைக் (ரஹ்) தாடி ஒரு பிடி வைப்பதை வாஜிப் என்பதாக எழுதியுள்ளார்.இதற்கு ஆதாரத்தை கூறவில்லை.நம்மிடத்தில் புகஹாக்களின் வாசகத்தின் மூலம் ஷைகின் மாற்று விளக்கம் சரியில்லை.ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி  (ரஹ்) அனைத்து கல்வி ரீதியான சேவைகள் மேன்மை இருப்பதுடன் மனிதர்.
நபி, தூதர் இல்லை.அவரின் கருத்தில் தவறு ஏற்படும்.மேலும் அவர்களை முஹத்திஸ் என்பதாக அங்கீகரிக்கலாம்.அவர்களை மார்க்க வல்லுநராக (பகீஹ்) ஏற்க முடியாது.அவர்களின் எந்த ஒரு நூலும் பத்வாக்களாக எண்ணப்படாது. 

(ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் 1/930,931)




ஹஜ்ரத் ஷைக் ரஹ் அவர்கள் தக்மீலுல் ஈமானில் எழுதியுள்ளார்  :

مکر خدا است

 (தக்மீலுல் ஈமான் பார்ஸி 188)

یعنی خذا کا مکر یہ ہے அல்லாஹ்வின் சூழ்ச்சி இதுவாக உள்ளது

பரேல்விய பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:

مکر (சூழ்ச்சி) தொடர்பானது அல்லாஹ்வின் பக்கம் இணைப்பது மார்க்கம் அற்றவர் (ஸய்யிதினா அஃளா ஹஜ்ரத் பக்கம்:20)



மெளலவி மஹ்பூப் அலிகான் காதிரி பரகாதி مکر யை அல்லாஹ்வின் பக்கம் இணைப்பது கடுமையாக திட்டுவதாகும்.குப்ர் என்பதாக எழுதியுள்ளார்.
 (நுஜுமே ஷிஹாபிய்யா 8,9)

இந்த நூலை 54 பரேல்விய உலமாக்கள் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளனர்.

ஷைக் ரஹ் அவர்கள் அஷிய்யத்துல் லம்ஆதில் 1/554 ம் பக்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னால் பின்னால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்! என்பதாக ஷைக் (ரஹ்) அவர்கள் பாவத்தின் தொடர்பை நபியின் பக்கம் இணைத்துள்ளார்.


பரேல்விய அறிஞர் முஹம்மது சித்திக் ஸாஹிப் எழுதியுள்ளார்:

கேடு கெட்டவர்கள் இதனை விதைக்க முயற்சிக்கின்றனர்.அல்லாஹ் பாதுகாப்பானாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து முன்னால் பாவங்கள் நிகழ்ந்துள்ளது.பின்னாலும் நிகழும்.நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஆரம்பம் முதற்கொண்டு இறுதி பாவம் செய்தவர் தவறு இழைப்பவர் என்பதை போன்று கூறுகின்றனர்
. (பாதில் அப்னே ஆயினே மே பக்கம்:5)



பரேல்விய அறிஞர் கூறுகிறார்:

இந்த ஆயத்திற்கு தர்ஜுமா செய்தவர்கள் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்ட பரிசுத்தமான நபி ஸல் அவர்களின் பக்கம் தவறுகள் பாவங்களை இணைக்கின்றனர்.இது தெளிவாக நபி ஸல் அவர்களின் விஷயத்திலே போராகும்.
( அன்வாரே கன்ஜுல் ஈமான் 823)



மெளலவி மஹ்பூப் அலி கான் காதிரி பரகாதி: 

தீன் மற்றும் மார்க்க ரீதியான எதிரிகள், அல்லாஹ்வின் ஆட்சியின் ஏமாற்றுக்காரர்கள்,அதிபதியான முஸ்தபா அவர்களுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள், பாவம்,தவறு, குறை என்பதாக எழுதியுள்ளனர்.
(நுஜுமே ஷிஹாபிய்யா பக்கம்:67)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துறவி என்று சொல்பவர் காபிர் எனும் போது அன்வரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாவம் செய்பவர்,தவறு செய்பவர், குற்றம் செய்பவர் என்பதாக அறிந்து எழுதினால் காபிர் இல்லையா?
 (நூஜுமே ஷிஹாபிய்யா பக்கம்:68)



ஆக ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் (ரஹ்) அவர்கள் பரேல்விகளின் கண்ணோட்டத்தில் முஹத்திஸ் மட்டும்தான் பகீஹ் கிடையாது.அன்னாரின் நூல் மதாரிஜ் பிக்ஹ் நூல் இல்லை.அன்னாரின் எந்த நூலை  முன்வைத்தும் தீர்ப்பளிக்கப்படாது.அதில் பலமான பலமற்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளது.மேலும் கடுமையாக கேவலமாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நூர் என்பதாக அன்னாரின் சொல்லை முன்வைத்து பரேல்வி ஜவ்வாத் ரப்பானி அவர்களுக்கு வாதிப்பதற்கு அருகதை கிடையாது.

முதலில் ஜவ்வாத் அவர்கள்   அவரின் பெரியோர்களின் நூல்களை முதலில் நன்றாக படித்துவிட்டு வந்து தேவ்பந்த் உலமாக்களை விமர்சிக்கட்டும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூர் என்பதை ஜவ்வாத் ரப்பானி மதாரிஜுன் நுபுவ்வத் நூலை முன்வைத்து வாதித்தார்.பரேல்வி அஹ்மத் ரிளாகான் கண்ணோட்டத்தில் பிக்ஹ் நூல் இல்லை.பரேல்விய அல்லாமா குலாம் ஸயீதின் கண்ணோட்டத்தில் மார்க்க விற்பன்னர் இல்லை. அவர்களின் எந்த ஒரு நூலும் தீர்ப்புக்குரியது இல்லை எனும் போது கொள்கை சார்ந்த விஷயத்திற்கு அன்னாரின் நூலை முன்வைத்து வாதிடலாமா?  மஸாயில்களில் மதாரிஜுன் நுபுவ்வத் ஏற்படையது இல்லை எனும் போது இறைநம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதனை முன்வைப்பது அறிவார்ந்த செயலா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்களின் கண்ணோட்டத்தில் நூர் என்பதாக வாதிடும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு இப்பொழுது அளித்த மறுப்பே போதுமானது.
எனினும் நடுநிலையாளர்களுக்கு இது குறித்து விரிவான விளக்கங்கள், மற்றும் ஷைக் அப்துல் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்களிடத்தில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்த நிலைப்பாடு
பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் மோசடிகள் மற்றும் பரேல்விய பெரியோர்களின் வாதங்களை முன்வைத்து இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் மறுப்பளிக்கப்படும்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live