21 Jul 2017

பரேல்விகள் ஏகத்துவத்தின் எதிரிகள்.


அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தின் அடிப்படை கொள்கை தவ்ஹீத்.தவ்ஹீத்தை ஏற்காமல் ஒருவர் இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது.இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசமின்றி இஸ்லாம் என்பதாக வாதிடுவது அர்த்தமில்லை.

இஸ்லாம் என்பதின் அடிப்படையான அம்சம் இரண்டு:

 (1)ஏகத்துவம் .
(2)பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசம் .

இந்த இரண்டில் எந்த ஒன்றை மறுத்தாலும் மனிதன் இறைநிராகரிப்பவனாக மாறிவிடுவான். தவ்ஹீதை வாதிட்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை மறுப்பது இறைநிராகரிப்பாகும்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை வாதிட்டு தவ்ஹீதை மறுப்பது இணைவைப்பாகும்.

நமது இந்த கட்டுரையின் நோக்கம் பரேல்விகள் ஏகத்துவத்தின் எதிரிகள் ஏனெனில் ஏகத்துவத்தை குறித்து அலர்ஜியினால் தவ்ஹீதை மறுக்கிறார்கள்.தவ்ஹீத் வார்த்தையை விமர்சித்து இணைவைப்பாளர்களின் அணியில் இணைவதை குறையாக கருதவில்லை.

ஏகத்துவம் குர்ஆனில்:

நடுநிலையாளர்களே!
இறுதி  வேதமும் இறை வேதமுமான திருக்குர்ஆனில் வரும் சூரா இஹ்லாஸ் ஏகத்துவ கொள்கையை பறைசாற்றுகிறது. பரேல்விகளின் கண்களை விட்டும் இந்த சூரா மறைந்துவிட்டதா? திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இதற்கு சூரா தவ்ஹீத்  என்றும் சூட்டியுள்ளனர்.

பிரபல்யமான திருக்குர்ஆன் விரிவுரையாளர் இமாம் ராஜி (ரஹ்) அவர்கள்:

 و اعلم ان كثرة الالقاب تدل على مزيد الفضيلة يشهد لما ذكرنا فأحدها سورة التفريد و ثانيها سورة التجريد و ثالثها سورة التوحيد 
(தப்ஸீர் கபீர் 11/308)


கருத்து:

அதிகமான பெயர்கள் சூட்டப்படுவது மேன்மையை அதிகரிக்கும் என்பதை அறிவிக்கிறது.சூரா இஹ்லாஸின் பெயர்கள் சூரா தஃப்ரீத்,சூரா தஜ்ரீத், சூரா தவ்ஹீத்.

ஆக இந்த இடத்தில் அல்லாமா இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் சூரா இஹ்லாஸின் பெயர் தவ்ஹீத் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை புரியமுடிகிறது.

அல்லாமா ஆலூஸி (ரஹ்) அவர்கள்:

 سمیت بها لما فيه من التوحيد و لذا سميت ايضا بالاساس فان التوحيد اصل لسائر اصول الدين 
(ரூஹுல் மஆனி) 


இந்த இடத்தில் அல்லாமா ஆலூஸி (ரஹ்) அவர்கள் சூரா இஹ்லாஸை குறித்து தவ்ஹீத் என பெயர் சூட்டியுள்ளார்கள்.இதே போன்று தப்ஸீர் முனீரில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏகத்துவம்  குறித்து ஹதீஸ்:

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ஆட்டை விலைகொடுத்து வாங்கினார்கள்.இரண்டில் ஒன்றை தவ்ஹீதை ஏற்ற தன்னுடைய உம்மத்தின் பேரில் அறுப்பவர்களாக இருந்தார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)

மற்றொரு அறிவிப்பில் இரண்டில் ஒன்றை தவ்ஹீத்திற்கு சாட்சியாக இருக்கும் தன்னுடைய உம்மத்தின் பேரில் அறுப்பவர்களாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.

ஆஸ் இப்னு வாயில் இவர் ஹள்ரத் அம்ரு இப்னுல் ஆஸ் (ரஹ்) அவர்களின் தந்தை.அறியாமைக்காலத்தில் மரணித்துவிட்டார்.ஹிஷாம் (ரளி) அவர்கள் ஆஸ் இப்னு வாயிலின் மகனும் ஸஹாபியாக இருந்தார்கள்.இவர் தனது தந்தைக்கு பகரமாக தனது பங்கில் ஐம்பது ஒட்டகங்களை அறுத்தார்.இது குறித்து
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அம்ரு இப்னு ஆஸ் (ரளி) அவர்கள் கேட்டார்கள்.நான் அவர்களுக்காக குர்பானி கொடுக்கமுடியுமா? இல்லையா? அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அவர் தவ்ஹீதை ஏற்றிருந்தால் அவரின்  பக்கம் தர்மம் செய்யுங்கள் நன்மை அவரை சென்றடையும்.

 (மஜ்மஉஸ்ஸவாயித்,முஸ்னத் அஹ்மத்)

தவ்ஹீத் வார்த்தையை குறித்து அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களின் கண்ணோட்டம்:

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் ஹள்ரத் ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) 
மற்றும் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் மற்றும் தாபியின் ஒரு கூட்டத்தினரிடமிருந்து அறிவிக்கிறார்கள்: 

ربما يود الذين كفروا لو كانوا مسلمين 

தவ்ஹீதை ஏற்றவர்கள் நரகத்திலிருந்து வெளியேறி சுவனத்தில் நுழைவிக்கப்படும் போது காபிர்கள் நாமும் முஸ்லிமாக இருந்திருக்கலாமே கூறுவார்கள்.
 (திர்மிதி)

இமாம் திர்மிதி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

 و وجه هذ ا الحديث عن بعض اهل العلم ان اهل التوحيد سيدخلون الجنة 

இந்த ஹதீஸ் குறித்து மார்க்க அறிஞர்கள் 'ஏகத்துவத்தை ஏற்றவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்படுவார்கள்' என கூறுகிறார்கள்.

ஒரு ஹதீஸில் வருகிறது ....

ஒரு மனிதர் லா இலாஹ இல்லல்லாஹ்வுடன் பொய்சத்தியம் செய்தார்.எனினும் அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.

இந்த ஹதீஸின் கருத்தை இமாம் ஷீஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

من قبل التوحيد 

தவ்ஹீதின் காரணத்தினாலாகும்.

அல்லாமா பைளாவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

وهم بذكر الرحمان 

ரஹ்மானை நினைப்பவர்கள்
ரஹ்மான் என்பதன் பொருள் தவ்ஹீத்

முல்லா அலி காரி (ரஹ்) :

انما جاء الانبياء لبيان التوحيد 

நபிமார்கள் தவ்ஹீதை குறித்து விளக்குவதற்கு வந்தார்கள் .

(ஷர்ஹு ஃபிக்ஹு அக்பர்)


ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்):

  اعلم ان التوحيد اربع مراتب 

அறிந்து கொள்ளுங்கள் தவ்ஹீதிற்கு நான்குவிதமான படித்தரங்கள் உண்டு .

(ஹுஜ்ஜத்துல்லாஹில் பாலிஃகா)


குர்ஆன் ஹதீஸ் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களின் கூற்றின் மூலம் தவ்ஹீத் என்ற வார்த்தைக்கு இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை தெளிவாக புரியமுடிகிறது.குர்ஆனின் ஒரு சூராவின் பெயர் தவ்ஹீத்.
தவ்ஹீதை ஏற்பவர்கள் சுவனம் நுழைவார்கள். இதனை குறித்து
நாம் வலியுறுத்தி சொல்வதின் அவசியம் என்ன என ஆச்சரியம் எழலாம்?
காரணம் என்னவெனில் பரேல்விகள் தவ்ஹீதை எதிர்ப்பவர்கள்,விரோதிகள். தவ்ஹீத் என்ற வார்த்தைக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை பார்க்கும் குறைந்த அறிவுடையோர் கூட இதனை நிராகரிக்க மாட்டார்கள்.தவ்ஹீதை ஏற்றிருக்கும் கிராமப்புற முஸ்லிம்கள் கூட இதனை மறுக்க மாட்டார்கள்.எனினும் கைசேதம் என்னவெனில் நாங்கள் தான் உண்மையான அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பவர்கள் என பொய் வேஷமும்,கோஷமும் போடும் பரேல்விகள் தவ்ஹீதை ஒட்டுமொத்தமாக மறுக்கிறார்கள்.விமர்சித்தும் அவமதிக்கவும் செய்கிறார்கள்.இதற்கு மாற்றமான கருத்துக்களை நூல்களில் எழுதிவைத்துள்ளார்கள்.

பரேல்விய ஜமாஅத்தின் ஹகீமுல் உம்மத் அஹ்மத் யார் குஜராத்தி இவரின் மகனார் முஃப்தி இக்திதார் கான் நயீமி எழுதியுள்ளார்: 

வஹ்ஹாபிகள் மனோ இச்சையின் பேரில் ஏழு நூதனமான வார்த்தையை புகுத்தியுள்ளனர்.இதனை குறித்து குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை.தவ்ஹீத், தவ்ஹீத்வாதி வஹ்ஹாபிகள் இந்த வார்த்தையை தஸவ்வுப் நூல்களில் புகுத்தியுள்ளனர்.நல்லோர்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான இந்த வார்த்தையை உபயோகித்து இருக்க முடியாது.

(அல் அதயல் அஹமதியா பீ பதாவா நயீமியா 296)




நடுநிலையாளர்களே! நமது அடுக்கடுக்கான ஆதாரங்களை பார்த்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள்! நாம் தான் இந்த வார்த்தையை புதியதாக புகுத்தினோமா? அல்லது திருக்குர்ஆன் விரிவுரையாளர்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களா?  (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

"மகாலதே கவுஸ் அஃழம்" (கெளதுல் அஃலமின் கட்டுரைகள்) என்ற நூலில் தவ்ஹீத்,தவ்ஹீத்வாதி என்ற வார்த்தை பின்னால் புகுத்தியது.அல்லாஹ் ரசூல் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடிக்காத வார்த்தையை கெளதுல் அஃழம் அவர்கள் ஏன் பயன்படுத்த போகிறார்கள்?

(ஷரயீ இஸ்திஃப்தா பக்கம்:24)

நாம் தவ்ஹீத் என்ற வார்த்தையை கூறியவர் யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.வினா என்னவெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை உபயோகித்து விட்டார்கள் எனினும் தங்களுக்கு பிடிக்கவில்லை உண்மையை கூறுங்கள் இந்த செயலானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட குரோதம் விரோதம் இல்லையா?
பரேல்விகளே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசம் என்பதாக கூவுவது உங்களுக்கு வெறும் பேச்சு மட்டும்தான். மார்க்கம் அறியாத பாமர முஸ்லிம்களின் ஈமானை பறித்து இப்லீஸை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் நோக்கமா?

பெரியோர்களின் பெரியோர் மஹ்பூப் சுப்ஹானி ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தை சேர்ந்தவர்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மையான நேசர். அன்னார் இந்த வார்த்தையை பயன்படுத்தியது அல்லாஹ் அவனின் தூதர் பயன்படுத்தியதின் காரணமாகும்.ஹஜ்ரத் ஜீலானி (ரஹ்) அவர்கள், நவீனவாதிகளான பரேல்வியைப் போன்றவர் இல்லை.

அதே நூலில் மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்:

அல்லாஹ் மற்றும் தூதருக்கு ஈமான்,முஃமீன் என்ற வார்த்தை  பிரியமானது.தவ்ஹீத் தவ்ஹீத்வாதி வார்த்தையை விரும்புவதில்லை.

 (ஷரயீ இஸ்திஃப்தா பக்கம்:24)

பரேல்விய நஸீருத்தீன் ஸாஹிப் எழுதியுள்ளார் மனிதனின் உள்ளத்திலிருந்து நூரே தவ்ஹீதின் அருட்கொடை கைப்பற்றப்படுகிறது.

இதனை குறித்து இக்திதார் கான் நயீமி பின்வருமாறு விமர்சிக்கிறார் நூரே தவ்ஹீத் என்பது என்ன? இதனை நிரூபிக்க வேண்டும்.தவ்ஹீத் என்ற வார்த்தையே நிரூபணமில்லையெனும் போது நூரே தவ்ஹீத் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?

கவனமாக பாருங்கள்! தவ்ஹீதின் மீதுள்ள வெறுப்பு குரோதம் வரம்பு மீறுகிறது.இணைவைப்பில் அகப்பட்டு சிந்தனையை தொலைத்துவிட்டார்.தவ்ஹீதின் பெயரை கேட்டவுடன் கோபம் கொப்பளிக்கிறது.பரேல்விகள் தவ்ஹீதின் எதிரிகள் விரோதிகள் என்பதை அறிந்து கொள்வதற்கு இதனை விட பெரிய ஆதாரம் இருக்க முடியுமா?

அஹமது யார் கான் நயீமி:

அல்லாஹ்தஆலா ஈமான் கொண்டவர்களே என்பதாக அழைக்கிறான் ஏனெனில் தவ்ஹீத்வாதியாக ஆகக்கூடாது என்பதற்காகும்.

(முஅல்லிம் தக்ரீர்)



 பரேல்வி அறிஞர்:

தவ்ஹீத் என்ற வார்த்தை நுபுவ்வத்தை களங்கப்படுத்த நூதனமாக புகுத்தியது.

(அல் அதயல் அஹமதியா பீ பதாவா நயீமியா 297)




பரேல்விய ஹஜ்ரத் மெளலவி ஃபைஜ் அஹ்மத் உவைஸி:

 தவ்ஹீத் கொள்கையானது ரிஸாலத் விலாயத் விட்டு தூரமாக்க கூடிய யஹீதிய சூழ்ச்சியாகும்.

(பஜ்லுல் வஹீத் பக்கம்:9)

முவஹ்ஹித் (தவ்ஹீத்வாதி) என்று சொல்வது பித்அத்தாகும்.குறிப்பாக இன்றைய வஹ்ஹாபிகள் இதனை தங்களின் அடையாளமாக ஆக்கிகொண்டார்கள்.

இதனை உபயோகிப்பதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.அதுமட்டுமின்றி இதனை பயன்படுத்துவதை முஃதஜிலாக்கள் தனித்தன்மையாக தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.நமது காலத்தில் வஹ்ஹாபி,நஜ்தி சில பெயர்களுக்கு தவ்ஹீத் எனும் பெயர் சூட்டும் அளவிற்கு வரம்புமீறியுள்ளனர்.

(பதாவா உவைஸியா 36)




அஸ்தஃபிருல்லாஹ் நவூதுபில்லாஹ் தவ்ஹீத் கொள்கை யஹீதிகளின் சூழ்ச்சி என்பதாக விமர்சிப்பது மடமை இல்லையா?  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த  வார்த்தையை கேடுகெட்ட முறையில் விமர்சிப்பது இஸ்லாமிய விரோதம் என்பதற்கு தெளிவான ஆதாரமில்லையா? இது போன்ற தவ்ஹீதின் எதிரிகளுக்கு இஸ்லாத்தில் பங்கு இருக்குமா?

மெளலவி பைஜ் அஹ்மத் உவைஸி பரேல்வி 
தவ்ஹீத் வார்த்தையை பிரயோகிப்பது பித்அத் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்:

    தவ்ஹீத் என்பதாக முழக்கமிடுகிறார்கள்.பித்அத்களுக்கு எதிரி என்பதாக வாதிக்கிறார்கள்.தவ்ஹீத் என்ற பித்அத்தான வார்த்தை பிரயோகம் ஏன்? இஸ்லாம் என்ற அசலான புழக்க வார்த்தைக்கு மாற்றமாக தவ்ஹீத் என்ற பித்அத்தை போர்த்துகிறார்கள்.

 (பஜ்லுல் வஹீத் பக்கம்:2)

குர்ஆன் மற்றும் ஹதீஸை குறித்து குறைந்த அறிவுடையவர் கூட தவ்ஹீத் என்ற வார்த்தையை பித்அத் என கூற தைரியம் வராது.எனினும் மிகப்பெரிய கைசேதம் பரேல்விகளுக்கு இது குறித்து முறையாக வழிகாட்டப்படவில்லை.

தவ்ஹீத் வார்த்தை குர்ஆன், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிக்க நாவால் மொழிந்தது.

ஸய்யித் மீர் ஷரீஃப் ஜுர்ஜானி (ரஹ்) எழுதியுள்ளார்கள்:

தவ்ஹீதின் பொருளானது பரிசுத்தமான அல்லாஹ்வின் உள்ளமையை  வணங்குவதில் அனைத்தையும் விட அவனை தூய்மையானதாக,தனித்தது என்பதை ஏற்கவேண்டும்.தடுமாற்றம் ஊசலாட்டம் ஏற்படலாம்.கற்பனையில் சிந்தனையில் பொருளையோ மனிதரையோ வணக்கத்திற்கு தகுதியானது என எண்ணாமல் அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவன் எண்ணவேண்டும்.தவ்ஹீத் என்பது மூன்று விஷயங்ளின் பெயராகும்.அல்லாஹ்வை அறிதல் அவன் ரப் என்பதாக உறுதி கொண்டு அவன் தனித்தவன் என்பதை ஏற்பதுடன் எவரையும் இணையாக்காமல் இருப்பதாகும்.

(தஃரீஃபாத் பக்கம்:73)


அல்லாமா ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:

தவ்ஹீத் என்பது வணக்கத்திற்குரியவனின் உலூஹிய்யத் (அவன் ஒருவனை மட்டும் வணங்குவது) மற்றும் எல்லாவித குறைகளை விட்டும் பரிசுத்தமானவன் என்பதை நிரூபிப்பது.அவனை தவிர மற்றவைகளின் உலூஹிய்யத்தை (வணக்கத்தை) மறுப்பதாகும்.

(அல்இத்கான் ஃபி உலூமில் குர்ஆன்)




நடுநிலையாளர்களே! கவனமாக பாருங்கள்! இஸ்லாத்தின் அடிப்படையாக தாரக மந்திரமாக  தவ்ஹீத் உள்ளது இதனைதான் பரேல்விகள் எதிர்க்கிறார்கள்.

இப்னு ஜரீரிடமிருந்து வந்துள்ளது:

 குர்ஆனில் மூன்று விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது.அதில் ஒன்று தவ்ஹீத் இதனால்தான் சூரா இக்லாஸ் குர்ஆனின்  மூன்றில் ஒரு பகுதி என சொல்லப்படுகிறது.இது முழுக்க தவ்ஹீதாகும்.

 (அல்புர்ஹான் ஃபி உலூமில் குர்ஆன்)



இன்று பரேல்விகள் தவ்ஹீதை மறுப்பது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை மறுப்பதாகும்.

இனி பரேல்விகளுக்கு எதிராக பரேல்விய நூல்களிலிருந்து மறுப்பு:

முஃப்தி அஹ்மத் யார் நயீமி பரேல்வி கூறுகிறார் கலிமா தய்யிபாவின் முதல் பகுதியில் தவ்ஹீத் கூறப்பட்டுள்ளது.மற்றொரு பகுதியில் தவ்ஹீதின் கிளை கூறப்பட்டுள்ளது.

(ரஸாயிலே நயீமிய்யா)


மெளலவி அஹ்மத் ஸயீத் காஜிமி எழுதியுள்ளார்:  

இதில் சந்தேகமில்லை.கலிமா லா இலாஹ இல்லல்லாஹ் அழைப்பாகும்.முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அதனின் ஆதாரமாகும்.ஆதாரமானது அழைப்புடன் ஒன்றியுள்ளது.இதனால் தான் இரண்டிற்கும் மத்தியில் இணைப்பு வார்த்தை இல்லை.

(ளரூரதே தவ்ஹீத்)

ஆக முழு கலிமாவும் தவ்ஹீத் என்பதை அறிய முடிகிறது.எனவே தவ்ஹீதை குறித்து விமர்சிப்பது,கேலி செய்வது இஸ்லாமிய விரோதத்திற்கு அடையாளமாக,அறியாமையாக உள்ளது.

அல்லாஹ் நம் அனைவரும் தவ்ஹீதில் நிலைக்க செய்வானாக! அதற்கு எதிரான பரேல்விகளின் வழிக்கெட்ட கொள்கையை விட்டும் காப்பானாக!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live