17 Jul 2017

பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் Top 10 பத்து பொய்கள்.


பொய்:1

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அரபு நாடு சென்று அங்கு உள்ள உலமாக்களிடம் பொய் கூறி மிர்ஜா குலாம் காதியானியின் நிலைப்பாட்டை  கூறி வஹ்ஹாபிகளும் இவர்களை சேர்ந்தவர்கள்தான்.

(ஹுஸ்ஸாமுல் ஹரமைன் அரபி பக்கம்:54,55 தாருல் இஃப்தா லாஹுர்)


வஹ்ஹாபிகள் மிர்ஜா குலாம் காதியானியை சேர்ந்தவர்கள் என்பது ரிஜாகான் பரேல்வியின் வாதம் எனினும் நாம் காதியானியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உலகமே அறிந்துள்ளது.இந்த பத்வா நமது பெரியோர்களை குறித்து மிர்ஜா என்பதாக புனைந்து கூறி வாங்கப்பட்டது.இதற்கு எந்த மதிப்பும் இல்லை.

பொய்:2

 ரிஜாகான் பரேல்வி தஹ்தீருன்னாஸின் வாக்கியத்தை சமர்ப்பித்த பொழுது அதில் மோசடி செய்துள்ளார்.

صاحب تحذير الناس و هو القائل فيه: لو فرض في زمنه صلى الله عليه و سلم بل لو حدث بعده صلى الله تعالى عليه نبي جديد لم يخل ذلك بخاتميته و انما يتخيل انه صلى الله تعالى عليه وسلم خاتم النبيين بمعنى آخر النبيين مع انه لا فضل فيه اصلا عند اهل الفهم  

 (ஹுஸ்ஸாமுல் ஹரமைன்,பக்கம்:80,நூரிய்யா ரிஜ்விய்யா பப்ளிஷர்ஸ் லாஹுர்)
நாம் உலகத்தில் உள்ள பரேல்விகளுக்கு சவால் விடுகிறோம்.நியாயமான உணர்வும்,ஈமானும் இருந்தால் தஹ்தீருன்னாஸில் இருப்பதாக கூறும் இந்த வாக்கியங்களை இதே வரிசையில் காண்பிக்க தயாரா? தஹ்தீருன்னாஸில் பல பக்கங்களில் இருந்த வாசகத்தை எடுத்து ஒரே வாசகமைப்பை போல் உருவாக்கிவிட்டார்.இவைகளுக்கும் மத்தியில் பிரித்து காட்டும் அடையாளமும் இல்லை.

பரேல்விகளே உண்மையில் அல்லாஹ்வை பயந்து சொல்லுங்கள் இது மோசடியா? இல்லையா?

பொய்:3

ரிஜாகான் பரேல்வி,ஹள்ரத் மெளலானா கலீல் அஹ்மத் ஸஹாரன்பூரி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் மோசடி செய்து கூறுகிறார்:

 ஹள்ரத் ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் மதாரிஜுன் நுபுவ்வத் என்ற தனது நூலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுவதாக ஒரு ஹதீஸ்
எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதை கொண்டு வந்து இதற்கு அடிப்படை இல்லை என்று அன்னார் ஷைக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.இதனை கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இதனை மறைத்து விட்டார்கள் என ரிஜாகான் பரேல்வி இட்டுகட்டியுள்ளார்.

(ஹுஸ்ஸாமுல் ஹரமைன் பக்கம்:21)
இது அப்பட்டமான பொய்யாகும்.உண்மையில் கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பொதுவாக கூறியுள்ளதை  ரிஜாகான் பரேல்வி திரித்து கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

ரிஜாகான் பரேல்வியின் இந்தப் பொய்யை தான் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி எடுத்து வைத்தார்.இதற்கு விரிவான, வாயடைக்கும் நமது மறுப்பை இந்த லிங்கில் பார்வையிடவும்!

பாகம் 1

http://ummathemuhammedhiya.blogspot.in/2017/04/blog-post_16.html?m=1

பாகம் 2

http://ummathemuhammedhiya.blogspot.in/2017/04/blog-post_18.html?m=1

பாகம் 3

http://ummathemuhammedhiya.blogspot.in/2017/04/blog-post_26.html?m=1


பொய்:4

ஹள்ரத் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்களை குறித்து ரிஜாகான் பரேல்வி இட்டுகட்டியுள்ளார் :

அவர் (ரஷீத் அஹ்மத் ரஹ்) ஒரு பத்வா வெளியிட்டுள்ளார்.பம்பாயிலிருந்து வந்துள்ளது.அதில் அவரின் முத்திரை நிரூபணமாகியுள்ளது.நான் இதனை எனது கண்களால் கண்டேன்.அல்லாஹ் பொய் கூறுவான் என்று யாராவது கூறினால் அவர் பெரும் குற்றம் செய்துவிட்டார்.எனினும் அந்த நபரை காபிர் என்று சொல்லக்கூடாது அதுமட்டுமின்றி பாவி என்றும் செல்லாதீர்! என தீர்ப்பளித்துள்ளார்.

(ஹுஸ்ஸாமுல் ஹரமைன் பக்கம்:25,26 மக்தபா நபவிய்யா லாஹுர்)உலகத்தில்  உள்ள பரேல்விகளுக்கு சவால் இந்த பத்வா காட்டுங்கள்! மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் எப்பொழுது கூறினார்கள்? எங்கு எழுதியுள்ளார்கள்? இவ்வாறு காட்டவில்லையெனில் உங்களின் அஃலா ஹள்ரத் பொய்யை புனைந்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்!

 பொய்:5

 ரிஜாகான் பரேல்வி காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் மீது இட்டுகட்டியுள்ளார்:

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்
மாறாக ஒரு வாதத்திற்கு அண்ணலாரின் காலத்திலே எங்காவது நபி வந்தாலும் அப்பொழுதும் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இறுதியானவர் என்பது பாக்கியாக இருக்கும்.அது மட்டுமின்றி கற்பனையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு பிறகு ஏதேனும் நபி பிறந்தாலும் காதமிய்யத் முஹம்மதில் எந்த வித்தியாசமும் ஏற்படாது.

(ஹுஸ்ஸாமுல் ஹரமைன் உர்து பக்கம்:20) 


இதில் நமது பரேல்விகளிடம் சவால் ரிஜாகான் பரேல்வி கூறியது சரியானது என்றால் இதனை நமது நூலிலிருந்து அப்படியே எடுத்து காட்டுங்கள்! எடுத்து காட்ட இயலவில்லையெனில் ரிஜாகான் பரேல்வி பொய்யின் பிறப்பிடம் என்பது உறுதியாகும்.

பொய்:6

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்:

தாடியை சிரைப்பவன் குறித்து  சாபம் ஏற்படும் என்பதாக குர்ஆனில் உள்ளது.

(அஹ்காமே ஷரீஅத் பக்கம்:190)
குர்ஆனில் தாடியை சிரைப்பவன் குறித்து சாபம் ஏற்படும் என எங்கு வந்துள்ளது? பரேல்விகளே எடுத்து காட்டுங்கள்!

பொய்:7

ரிஜாகான் பரேல்வி ஷைத்தானின் மீதுள்ள நேசத்தில் எழுதியுள்ளார்:

 ஷைத்தான் பொய் சொல்வதை விரும்புவதில்லை.

(அஹ்காமே ஷரீஅத், பக்கம்:135)
பொய்:8

எந்த ஒரு தூதரும் ஷஹீத் ஆகவில்லை.

(மல்பூஜாத், நான்காம் பாகம் பக்கம்:463,மக்தபதுல் மதீனா)
குர்ஆனில் மாயிதா சூரா எழுபதாவது வசனத்தின் அர்தத்தை கன்ஜுல் ஈமானில் பார்த்தால் ரிளாகானின் பொய் தெளிந்த நீரோடையைப் போல் விளங்கிவிடும்.

பொய்:9

இஸ்மாயில் தெஹ்லவியை எவ்வாறு கருதவேண்டும்? இதற்கு ரிஜாகான் பரேல்வியின் பதில் எனது வழிமுறை யஜீதைப் போன்று எனினும் எவரேனும் காபிர் என அவரை கூறினால் தடுக்கமாட்டேன்.நான் சொல்லமாட்டேன்.

(மல்பூஜாத், பக்கம்:102)
மற்றொரு புறம் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்கள்:

பேணிக்கை மிகுந்த உலமாக்கள் காபிர் என்பதாக அவரை கூறவில்லை.

 (தம்ஹீதே ஈமான் பக்கம்:132, மக்தபதுல் மதீனா)இது தடுப்பதாக இல்லையா? தடுப்பதுயென்றால் மல்பூஜாதில் கூறி விஷயமானது பொய்யா?

பொய்:10

நான் காஃபிர் என்று சொல்லமாட்டேன் என்பதும் பொய்தான்.ஏனெனில் அல்கவ்கபதுஷ்ஷிஹாபிய்யாவில் அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார் சந்தேகமின்றி பெரும்பான்மையான உலமாக்கள்,புகஹாக்கள்,முஃப்திகள்,பெரியோர்கள் அனைவரின் ஒன்றுப்பட்ட இஜ்மாவின் படி முர்தத் மற்றும் காஃபிர் எனவே தவ்பா செய்து மீண்டும் கலிமா சொல்வது அவசியமாகும்.

(அல்கவ்கபதுஷ்ஷிஹாபிய்யா,
பக்கம்:62)


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live