12 Jul 2017

ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்களின் வழிமுறை.


(1) ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்கள்  لیغفر لک اللہ இந்த வசனத்தில் வரும் பாவம் என்ற வார்த்தையை நபி ஸல் அவர்களின் பக்கம் இணைத்து சொல்கிறார்கள்.

 (அஷிய்யதுல் லம்ஆத் பாகம்:1/137)




முக்கிய குறிப்பு:

 அசலில்  அஷிய்யத்துல் லம்ஆத் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.இதனின்  உர்து தர்ஜுமா பரேல்விய அறிஞர் செய்துள்ளார்.இதில் ذنب என்பதற்குரிய பொருளை பரேல்விய அறிஞர் விட்டுவிட்டார்.இதற்கான ஆதாரம் பாருங்கள் 👇👇👇


(2)ஷைக் ரஹ் அவர்கள் அனைத்து பித்அத்துகளையும் வழிகேடு என்கிறார்கள்.அல்லது வழிகேட்டிற்கு காரணம் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

(அஷிய்யத்துல் லம்ஆத் 1/150)




(3)சுன்னத்தை பற்றிப்பிடியுங்கள்!
அது சிறியதாக இருந்தாலும் சரி பித்அத்தை விட
ஹஸனாக இருந்தாலும் சரி
ஏனெனில் சுன்னத்தை பின்பற்றுவதன் மூலம் நூர் கிடைக்கிறது. பித்அத்தில் அகப்படுவது இருளாகும்.

(அஷிய்யத்துல் லம்ஆத்)



(4)நபி ஸல்லல்லாஹு அவர்களின் கூற்றானது மகத்தான கூட்டத்தை பின்பற்றுங்கள்!
இதன் விளக்கத்தில் ஷைக் (ரஹ்) அவர்கள் கூட்டம் என்பது அதிகமான உலமாக்கள் என்பதாக எழுதியுள்ளார்கள்.

(அஷிய்யத்துல் லம்ஆத்)


(5) ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

மக்களில் சிலர் தொழுகைக்கு பிறகும் ஜும்ஆவிற்கு பிறகும் முஸாபஹா எனும் கைலாகு செய்கின்றனர்.நேரத்தை குறிப்பாக்குவதினால் இது ஒன்றுமில்லாத செயலும் பித்அத்தாகும்.எனினும் முஸாபஹா எனும் கைலாகு பொதுவாக சுன்னத்தாகும்.

(அஷிய்யத்துல் லம்ஆத் 4/22) 



(6)ஷைகு ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:
கப்ரின் மீது கட்டிடம் எழுப்புவது கூடாது என்கிறார்கள்.ஏனெனில் அனைத்தும் பித்அத்தாகும்.மக்ரூஹ் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாறுபாடு செய்வதாகும்.

(ஷர்ஹு ஸஃபரிஸ் ஸஆதாஹ் பக்கம்:349) 




ஷைக் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள் மூன்றாம் நாளில் குறிப்பாக ஒன்று கூடுதல் மற்றவர்களுக்கு சிரமத்தை தருதல் அநாதைகளின் செல்வத்தை அனுமதியின்றி செலவழித்தல் பித்அத் மற்றும் ஹராமாகும்.

(ஷர்ஹு ஸஃபரிஸ் ஸஆதாஹ் )





(7) ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: மைய்யத்தின் மீது அல்லது அதனின் கஃபனின் மீது எழுதுவதானது எனது பார்வையில் இன்று வரை அது கூடும் என்பதற்குரிய நிரூபணமான ஹதீஸ் கிடைக்கவில்லை.

(மக்தூபாத் ஷைக் மக்தூப் நம்பர் 64)


(8) ஹள்ரத் ஜிப்ரயீல் (அலை) பெருமானார் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் மனித உருவத்தில் வருவார்கள்.இஸ்லாம் குறித்த கேள்விகளை கேட்பார்கள்.அதில் ஒரு கேள்வி கியாமத் எப்பொழுது வரும்? இதற்கு பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "கேள்வி கேட்பவரை விட  கேள்வி கேட்கப்படுபவர் மிக அறிந்தவர் இல்லை என்று பதிலளித்தார்கள்".இது குறித்து விளக்கவுரையில் ஷைக் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பதிலின் விளக்கமானது நானும் நீங்களும் இருவரும் கியாமத்தை அறியாமல் இருப்பதில் சமமாக இருக்கிறோம்.

(அஷிய்யத்துல் லம்ஆத்)




(9)
ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:கியாமத் வருகிற குறிப்பிட்ட  நேரத்தை அல்லாஹ்வை தவிர எவரும் அறிந்திருக்கவில்லை.

(அஷிய்யத்துல் லம்ஆத்)


(10) ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: முஃஜிஸா எனும் அற்புதம் அல்லாஹ்வின் செயலாகும்.நபிமார்களின் செயலன்று.

 (தக்மீலுல் ஈமான்)



(11)ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேரில் சிறந்த தரூதை ஓதி அனுப்புவதாக சத்தியம் செய்தார் எனில் அவர் தஷஹ்ஹுத்தில் ஓதும் தரூதை ஓதினால் சிறந்த முறையில் அவரின் சத்தியமானது  நிறைவேறிவிடும்.

(தாரீஹே மதீனா தர்ஜுமா ஜத்புல் குலூப்)

(12)மேலும் எழுதியுள்ளார்கள்:
எவர் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது தஷஹ்ஹுத்தில் ஓதும் தரூதை ஓதி அனுப்புவாரோ சந்தேகமின்றி அவர் ஷரீஅத்தில் ஏவப்பட்டதற்கு ஏற்ப அமல் செய்துள்ளார் (கருத்து).

(தாரீஹே மதீனா தர்ஜுமா ஜத்புல் குலூப்)



முக்கிய குறிப்பு: 

பரேல்விகளிடத்தில் தஷஹ்ஹுத்தில் ஓதும் தரூதை தொழுகைக்கு வெளியே ஓதுவது கூடாது.

(13)ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: அவன் (அல்லாஹ்) அறிவித்துள்ளான் வழிப்படுபவர்களுக்கு கூலி தருகிறேன்.பாவிகளை தண்டிக்கிறேன்.அவன் கூறியதற்கு ஏற்ப நடைபெறும்.எனினும் இது அவனின் மீது கடைமையில்லை.ஒருவேளை இதற்கு மாற்றமாக செயல்பட்டாலும் இவ்வாறு ஏன் செய்தான்? என கேள்வி கேட்பது முடியாது.

(14)ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: ஜமாஅத்துடன் நபில் தொழுவது மக்ரூஹாகும்.

 (மாஸபத பிஸ்ஸுன்னா ஷஹ்ர் ரமளான்)



(15)ஷைக் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஸஹாபாக்களிடமிருந்து நபில் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றியது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்பதன் மூலம் அறிய முடிகிறது.இதில் எந்த ஒரு சிறப்பும் இல்லை.

(இதன் மூலம் நாம் அறியமுடிகிறது ஷைக் ரஹ் அவர்களிடத்தில் நபில் ஜமாஅத்தாக தொழுவதை மறுப்பதற்கு காரணமானது நபி ஸல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடத்தில் ஸஹாபாக்களிடத்தில்  அமலானது நிரூபணமாகவில்லை என்பதாகும்)

(மாஸபத பிஸ்ஸுன்னா ஷஹ்ர் ரமளான்)





(16)ஷைக் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்: நீண்ட சம்பவத்தின் சுருக்கம் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்த நிலையில்  ஒருவர் தனது மனைவியிடத்தில் உடலுறவு கொண்டுவிடுவார்.இறுதியில் இவரின் பரிகாரத்தை நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் மன்னித்து விடுவார்கள்.இதற்கு ஷைக் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்காறார்கள் இப்பொழுது கஃப்பாராவை சாப்பிட்டுக்கொள் பிறகு அதனை நிறைவேற்று
(அஷிய்யத்துல் லம்ஆத்)





முக்கிய குறிப்பு:

இந்த சம்பவத்தை முன்வைத்து பரேல்விகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனைத்துவிதமான அதிகாரங்களும் உண்டு என வாதிடுகின்றனர் எனினும் ஷைக் ரஹ் அவர்களின் விளக்கமானது பரேல்விகளுக்கு எதிராக உள்ளது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live