29 May 2017

மௌலான ஸகரிய்யா காந்தலவி ரஹுமஹுல்லாஹ் - பற்றி சிறு குறிப்பு.

ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஸகரிய்யா ரஹ் அவர்கள் 1898 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி அதாவது ஹிஜ்ரி 1315 ரமழான் பிறை 11 ல்
டில்லிக்கு சமீபத்திலுள்ள முழப்பர் நகர் பிரதேசத்தின் காந்தலா என்ற ஊரில்
மௌலானா முஹம்மத் யஹ்யா பின் இஸ்மாஈல் அல் காந்தலவி அல் மதனி ரஹ் அவர்களின் மகனாக பிறந்தார்கள்.



Muhammad Zakariya Kandhalvi.jpg
சிறு வயதினிலே குர்ஆனை மனனம் செய்த மௌலானா அவர்கள்
தமது தந்தை மௌலானா யஹ்யா அவர்களிடமே தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்கள்
உர்தூ , பார்ஸி , போன்ற மொழிகளை தமது தந்தையின் உடன் பிறந்த சகோதரரும் மௌலானா இல்யாஸ் ரஹுமஹுல்லாஹ் அவர்களிடம் கற்றுக் கொண்டார்கள்
பின் சஹாரன்பூரிலுள்ள மழாஹிருல் உலூம் கலாபீட ஆசான்களிடமிருந்து
தமது மார்க்கக் கல்வி ஞானங்களை பெற்றுக் கொண்டார்கள்.
மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்களை சந்தித்து அவர்களிடமிருந்தும் பயனடைந்து கொண்டார்கள் அது போன்றே மௌலானா கலீல் அஹ்மத் சஹாரன்பூரி ரஹ் அவர்களிடமிருந்தும் கல்வி ஞானங்களைப் பெற்று உச்ச பயனடைந்து கொண்டார்கள்
மூத்த ஹதீஸ் கலை அறிஞர்களிடம் ஆழமாக மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்ட மௌலானா அவர்கள் மஸாஹிருல் உலூமின் பேராசிரியராக கடமை புரிந்தார்கள் அங்கு அவர்கள் நீண்ட காலமாக தமது அறிவுப் போதனையை மேற்கொண்டார்கள்.
தமது 29 வயதினிலே மதீனா முனவ்வராவிலிருந்து கொண்டு இமாம் மாலிக் அவர்களின் முஅத்தா என்ற பிரபல்யமிக்க ஹதீஸ் கிரந்தத்திற்கு
அவ்ஜஸுல் மஸாலிக் என்ற தனது விரிவுரை நூலை எழுத ஆரம்பித்தார்கள்.

ஹிஜ்ரி 1389 ம் ஆண்டு அவர்கள் ஐந்தாவது விடுத்தமாக ஹஜ்ஜுக்கு சென்ற போது அவர்களோடு அல்லாமா அபுல் ஹசன் நத்வி ரஹ் அவர்களும் அவர்களோடு இணைந்து ஹஜ்ஜுக்காக பயணமானார்கள். அல்லாமா அபுல் ஹசன் நத்வி அவர்கள் ஆரம்ப காலங்களில் அப்துல் காதிர் ராய்பூரி ரஹ் அவர்களின் தரிக்காவில் இனைந்திருந்தார்கள். அப்துல் காதிர் ராய்பூரி ரஹ் அவர்களின் இறப்புக்கு பின்னர் ஷைகுல் ஹதிஸ் மௌலானா ஸகரிய்யா ரஹ் அவர்களின் தரிக்காவில் சேர்ந்துகாென்டார்கள்.
மௌலானா அவர்களின் அறிவையும் ஆளுமையையும் கண்டு அக்கால உலகமே வியந்து போனது
அவர்கள் 140 நூற்களுக்கும் மேல் எழுதியுள்ளார்கள்
அவ்ரகள் அல் ஹதீஸ்,அல் பிக்ஹ்,
அத் தப்ஸீர்,அத் தாரீஹ், அத் தராஜும், அல் மன்திக்,அல் ஹிகம், அந் நஹ்வு போன்ற எல்லாத் துறைகளிலும் நூற்களைத் தொகுத்துள்ளார்கள்
அவர்கள் எழுதிய நூற்களில் முக்கியமான சில அரபு நூற்களின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1- அவ்ஜஸுல் மஸாலிக் இமாம் மாலிகின் முஅத்தா கிரந்தத்திற்கான விரிவுரை
( 18 )வால்யூம்கள்
2- மௌலானா ஹலீல் அஹ்மத் சஹாரன்பூரி அவர்களின் சுனன் அபூ தாவூத் கிரந்தத்திற்கான விரிவுரை நூல்
பத்லுல் மஜ்ஹூதுக்கான தெளிவுரை
( 20 ) வால்யூம்கள்
3- லாமிஉத் தராரீ மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் ஸஹீஹுல் புகாரிக்கு எழுதிய நூலுக்கான தெளிவுரை
4- அல் கவ்கபுத் துர்ரி மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் ஜாமிஉத் திர்மிதிக்கு எழுதிய விரிவுரைக்கான தெளிவுரை ( 4 ) வால்யூம்கள்
5- குத்பதுல் வதாஃ வஜுஸ்உ உம்ராதிந் நபி ( ஸல் )
6- அல் அப்வாப் வத்தராஜும் லிஸஹீஹில் புஹாரி
7- அஷ் ஷரீஆ வத் தரீகா
8- அஸ்பாபு ஸஆததில் முஸ்லிமீன் வஷகாயிஹிம்
9- வுஜூபு இஃபாயில் லிஹ்யா
10- அல் உஸ்தாத் அல் மௌதூதி வநதாயிஜு அப்காரிஹி வபுஹூதிஹி
11- மகானதுஸ் ஸலாஹ் பில் இஸ்லாம்
12- பழ்லுத் தஃவா இலல் ஹைர்

இவையல்லாத உருது மொழியில் மௌலானா அவர்கள் எழுதிய மிகப் பிரபல்யமான நூற்களில்.


1- ஷர்ஹ் ஷமாயில் திர்மிதி
2- ஹிகாயாதுஸ் ஸஹாபா
3- தப்லீகீ நிஸாப்
4- பழாயிலுத் திக்ர்
5- பழாயிலுஸ் ஸலாஹ்
6- பழாயிலுஸ் ஸியாம்
7- பழாயிலுல் ஹஜ்
8- பழாயிலுஸ் ஸகாத்
9- பழாயிலுஸ் ஸலாத் அலந் நபி (ஸல்)

இவையல்லாத இன்னும் ஏராளாமான நூற்களையும்
நம்மால் அவதானிக்க முடிகிறது.

ஷைகுல் ஹதீஸ் அல்லாமா ஸகரிய்யா அல்காந்தலவி (ரஹ்) அவர்களின் பழாயிலுல் அஃமால் அமல்களில் சிறப்பு என்ற கிதாபை மாத்திரம் பார்த்து விட்டு அவரது அறிவின் தரத்தை அளந்து விடுகிறார்கள்..

இமாம் மாலிகின் முவத்தாவுக்கு அவர்கள் எழுதிய அவ்ஜஸுல் மஸாலிக் என்ற விரிவுரையைப் பார்த்து அன்றைய சஊதி அறிஞர்களே திகைத்துப் போன வரலாறும் உண்டு.

மௌலானா அவர்களின் அறிவுப் பின்னணியையும் அவர்களின் ஆழமான விளக்கவுரைகளையும் தொகுப்புக்களையும் கண்ட அன்றைய சவூதி அரசாங்கம் அவர்களுக்கு சவூதி நாட்டுப் பிராஜா உரிமை வழங்கி கௌரவித்தது.

ஹிஜ்ரி 1402 ஷஃபான் மாதம் முதலாம் நாள் திங்கட் கிழமை அஸர் தொழுகைக்குப் பின் மதீனா முனவ்வராவிலே மௌலானா அவர்கள் தமது ரப்பை நோக்கிப் பயணமானார்கள்.
அன்னாரின் ஜனாஸா ஜன்னதுல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது
அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக.

آمين يارب العالمين

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live