25 May 2017

ஹுஸாமுல் ஹரமைன் ஃபத்வா -ஓர் வரலாற்று பார்வை.

ஹுஸாமுல் ஹரமைன் ஃபத்வா:

"காபிர் பத்வா" எனும் வெறிபிடித்து அலைந்த ரிளாகன் பரேலவி ஹிஜாஸ் - அரபு நாட்டிற்க்குச் சென்று அங்குள்ள அனைத்து உலமாகளையும் சந்தித்து தேவ்பந்த் உலமாக்கள் குறித்து பல பொய்யான தகவல்களை கொடுத்தார். அதாவது ,இந்திய முஸ்லீம்களுக்கு மிகப்பெரும் சோதனை ஏற்பட்டுவிட்டு தேவ்பந்த் உலமாக்கள் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். இறுதி நபித்துவத்தை மறுக்கிறார் , அல்லாஹ்வின் பேச்சை பொய் என்று கூறுகிறனர். அவர்களை மக்கள் நம்பி மோசம் போய் ஈமானை இழக்கின்றனர். இந்த குழப்பத்தை உங்களுடைய உதவியின்றி அறவே ஒழிக்க முடியாது ஆகவே "தேவ்பந்த் உலமாகள் காஃபிர்" என்று நான் அளித்துள்ள பத்வாவில் நீங்களெல்லாம் கையெழுத்து மட்டும் போட்டாலே இந்த குழப்பத்தை ஒழித்து விடலாம் என்று பவ்வியமாக பேசி அரபு உலமாகளை நம்பவைத்தார்.

ரிழாகளான் பரேலவி தன்னை நபி என்று வாதிட்ட இன்னொரு முஸைலமா என்பதை முன் , பின் அறியாத உலமாகள் அந்த பத்வாவில் கையெழுத்திட்டனர்.இங்கிருந்து தான் வினையே வந்தது.
இந்த பத்வா "ஹுஸாமுல் ஹரமைன்" எனப்படும்.

ரிளாகான் பரேலவி இந்தியா திரும்பியதும் இந்த பத்வாவை  ஆயிரக்கணக்கில் அச்சிட்டு பாருங்கள் நான் மட்டுமல்ல தேவ்பந்திகளை மக்கா , மதினா உலமாகளே காபிர்கள் என்று பத்வா கொடுத்து விட்டனர். என்று வீதியென்றும் பொய்யை பரப்பினர்.

அதுவரை ரிளாகனை கண்டுகொள்ளாத மக்கள் அரபு உலமாகளின் பத்வா என்று சொன்னவுடன் நம்ப ஆரம்பித்தனர்.

பரேலவிகளுக்கு மறுப்பு :

மௌலான கலீல் அஹ்மது அம்பட்டேவி (ரஹ்) அவர்கள் அந்த பத்வாவிற்க்கு தெளிவான பதில் எழுதி அரபு உலமாக்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை படித்த அரபு உலமாகள் "தேவ்பந்த் உலமாகளிடம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கொள்கைக்கும் ,ஸலஃபே ஸாலிஹீன்களின் கொள்கைக்கும் மாற்றமான எந்த விஷயமும் இல்லை "   என்று சாட்சியமளித்தனர். முன்பே தீர விசாரிக்காமல் ரிளாகான் ஃபத்வாவில் கையெழுத்துப் போட்டதை எண்ணி வருத்தமும் தெரிவித்தனர்.

இவ்வாறு பொய்யையும் , பித்தலாட்டத்தையும் மூலதானமாக கொண்டு சாமானிய மக்களை ஏமாற்றி வந்தவர் தான் அஹமது ரிளாகள் பரேலவி தேவ்பந்த் உலமாக்கள் மீது மூட்டை மூட்டையாக பொய்யையும் , அவதூறுகளையும் சுமத்திவந்த போதிலும் தாருல் உலூம் தேவ்பந்த் கலாசாலை மூலம் நபித்துவக் கல்வி மற்றும் தீன்சுடர் உலகின் மூலை முடுக்குகளெல்லாம் பரவிக் கொண்டிருப்பதும் உலக முஸ்லீம்கள் தங்களது வழிகாட்டு தலமாக ஏற்றிருப்பதும் தாருல் உலூம் தேவ்பந்தை அல்லாஹ் அங்கீகரித்துவிட்டான் என்பதற்க்கு மிகப்பெரும் சான்றாகும் அல்ஹம்துலில்லாஹ்.

 கிலாஃபத் இயக்கத்தையும் எதிர்த்தார்:

1914 -1918 ல் நடந்த முதல் உலகப் போருக்குப் பின் பல முஸ்லீம் நாடுகளில் ஐரோப்பிய கூட்டுப் படை ஆதீக்கம் செய்து கொண்டிருந்த போது  இந்தியாவில் 90 % உலமாகள் ஓரணியில் திரண்ட பொழுது , இந்த ரிளாகானும் ,அவனது ஆதரவாளர்களும் இந்த கிலாபத் இயக்கத்தை எதிர்த்தது மட்டுமின்றி அதிலுள்ள உலமாகள் அணைவரையும் காபிர் என்று பத்வா கொடுத்து , இது காந்திய கூட்டம் என பரிகாசம் செய்தனர்.


இந்தியா தாருல் இஸ்லாமா?

இதே ரிளாகன் பரேலவி தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு உலமாகளும் , முஸ்லீம்களும் வீர மரணம் அடைந்து கொண்டிருந்த வேலையில் "இந்தியா தாருல் இஸ்லாம்" இந்தியா இஸ்லாமிய நாடு தான் முஸ்லீம்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது என வழியுறுத்தினர். அதற்க்காக அதற்க்காக ஆங்கிலேயர்களை புகழ்ந்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை கண்டித்தும் பல நூல்கள் எழுதி ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தனர்.ஆங்கிலேயர்களுடன் போரிடுவது நம் கடமை என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்த மௌலான அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களையும் அன்னாரின் சீடர்களையும் இவர் காஃபிர் -இறைமறுப்பாளர் என்று பத்வா கொடுத்தார்.

அது மட்டுமல்ல ஆங்கிலேயர்களுக்கெதிராக போரிடுவது முஸ்லீம்கள் மீது பர்ளு இல்லை (ஹராம்) எனவும் பத்வா கொடுத்தார்.


இப்போது சொல்லுங்கள் ! பரேலவிய்யத் ஆங்கிலேயப் பிள்ளையா? இல்லையா?

உதவிய நூல்கள் :

● தாரீஹே -தாஃவத் வ அஸீமத் ,செய்யித் அஹ்மது ஷஹீத் (ரஹ்) பாகம் 1 , ஆசிரியர் மௌலான அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்)

● உலமாயே ஹிந்த் கா ஷாந்தார் மாஜி - மௌலான செய்யித் முஹம்மது மியான் (ரஹ்)

● பரேலவி பித்னா கா நயாரூப் -முஹம்மது ஆரிப் ஸம்பலி நத்வி.

●தஹ்ரிகே ஆஸாதி -அவர் முஸல்மான் ,மௌலவி அஸீர் அத்ரவி ஸாஹிப்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live