12 May 2017

பரேல்விகளும் இந்துக்களும், தேவ்பந்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு.

ரிஜாகான் மல்பூஜாதில் காபிர் கிருஷ்ணன் பல்வேறு இடங்களில் ஹாஜிராகிறான் என்பதை போகிற போக்கில் சொல்லவில்லை.மாறாக அவரிடத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலாக அதனை எடுத்து முன்வைக்கிறார். அதாவது பரேல்விகளிடத்தில் ஹாஜிர் நாஜிர் என்பது கொள்கையாகும்.


ஒருவரே பல இடங்களில் ஹாஜிராகுவதில் ஏற்படும் சந்தேகம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது.அதற்கு பதில் சொல்லும் போது 'ஸப்உ ஸனாபிலில்' வருவதை எடுத்து சொல்லும் போது ஆதாரமாகதான் எடுத்துக்கொள்ளப்படும்.எனவே இது ரிஜாகானிடத்தில் ஏற்கத்தக்கது அங்கீகரிக்கத்தக்கது என்பதுதான் தெளிவாகிறது.ரிஜாகான் பரேல்வியின் நிலைப்பாட்டிற்கு முட்டு கொடுக்கும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் மறுப்பு புஸ்வானமாகிறது.

அடுத்து நத்வி ஒருவர் அவரைப் பற்றி அவரைக் குறித்து கூறுவது ஆதாரமா?

அவர் தேவ்பந்த் கொள்கையை சேர்ந்தவர் அல்லது தேவ்பந்த் உலமாக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரத்தை காட்டமுடியுமா?

அடுத்து ஒரு வாதத்திற்கு நத்வி அவர்கள் தேவ்பந்த் கொள்கையை சேர்ந்தவர் என்று எடுத்து கொண்டாலும் ஸப்உ ஸனாபிலை குறித்து வரலாற்று ரீதியாகதான் பதிந்துள்ளார்கள்.ஸப்உ ஸனாபில் ஏற்கத்தக்கது அமல் செய்ய தகுந்தது என்பதாக கூறியுள்ளார்களா?

ஒரு வாதத்திற்கு அந்த நூலை ஏற்கத்தக்கது என்று கூறியிருந்தாலும் கிருஷ்ணரின் சம்பவத்தை ஆதாரமாக எடுத்தது யார்?

அதுமட்டுமின்றி ஸப்உ ஸனாபில் பரேல்விகளிடத்தில் ஏற்கத்தக்கது இதற்கான ஆதாரத்தை இனி காண்போம்!

பதாவா ரிஜ்விய்யா பாகம் 28 ல் ரிஜாகான் பரேல்வி குறிப்பிட்டுள்ளார்:

  தலைவர்களின் தலைவர் பில்கிராம் ஹஜ்ரத் அவர்கள் ஷரீஅத்தின் மை, இறைஞானப் பாதையின் கடல் பின்னோர்களின் ஆதாரம் இவரின் நூலான ஸப்உ ஸனாபில் பெரும் அங்கீகாரம் பெற்றது என வர்ணித்துள்ளார்.இது மட்டுமின்றி பதாவா ரிஜ்விய்யா 14 ம் பாகம் பக்கம் 657ல் ஏற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்கள்


'அஜ்மதோ கே பஸ்பா' என்ற நூலில் அல்லாமா முஹம்மத் அப்துல் ஹகீம் ஷரீஃப் காதிரி அவர்கள் 16 ம் பக்கத்தில்  பெரியோர்களில் புகழுக்குரியவரான ஹஜ்ரத் மீர் ஸய்யித் அப்துல்வாஹித் பில்கிராமியின்  ஸப்உ ஸனாபிலை குறித்து ஏற்கத்தக்கது.கொள்கை ரீதியாக இறைஞானப் பாதை சம்பந்தமாக பொதிந்துள்ள நூலாகும் என்று கூறியுள்ளார்.ஹாஜி கிஃபாயத்துல்லாஹ் ஸாஹிப் கூறுகிறார்கள்: 

அஃலா ஹஜ்ரத் அவர்கள் பனாரஸ் அழைத்து சென்றார்கள்.ஒரு நாள் முற்பகல் நேரத்தில் ஓர் இடத்தில் விருந்து அழைப்பு.நான் உடன் இருந்தேன்.திரும்பும் பொழுது வண்டிக்காரரிடம் அன்னார்  இந்தப் பக்கம் ஆலயம் உள்ளது செல் என்றார்கள் அஃலா ஹஜ்ரத் பனாரஸ் எப்பொழுது வந்துள்ளார்கள் இங்கு உள்ள தெருக்களை அறிந்துள்ளார்கள் ஆலயத்தின் பெயரை எப்பொழுது கேட்டுள்ளார்கள் என்பதாக ஆச்சரியம் ஏற்பட்டது.வண்டிக்காரர் ஆலயத்தை அடைந்தார்.ஒரு துறவி ஆலயத்திலிருந்து வெளியேறி வண்டிக்காரரின் பக்கம் வந்தார்.அன்னார் வண்டியை நிறுத்தினார்.அஃலா ஹஜ்ரதிடம்   துறவியானவர் பணிவுடன் ஸலாம் கூறினார்.அஃலா ஹஜ்ரத்தும் துறவியும் பேசிக்கொண்டனர்.எனக்கு கேட்கவில்லை.பிறகு அவர் ஆலயத்திற்குள் சென்றுவிட்டார்.இந்தப் பக்கம் வண்டிக்காரர் புறப்பட்டார்.அப்பொழுது நான் கேட்டேன் அவர் யார் அன்னார் கூறினார்கள் இவர் இந்த நேர அப்தால் நல்லோர் கவனித்துப் பாருங்கள் ஓர் ஆலயத்தின் துறவியானவர் பண்டிட்டை அப்தால் என்பதாக ரிஜாகான் பரேல்வி புகழ்ந்துள்ளார்.
(அஃலா ஹஜ்ரத் அஃலா ஸீரத் பக்கம்:134)உமர் பீர் ஷரீஃப் மகனார் மியா ஷேர் முஹம்மது ஷர்கபூரி குறித்து எழுதியுள்ளார்கள் :

சீக்கியர்களிடம் பிரியம் சீக்கியர்களை அன்னார் மிகவும் நேசிப்பார்கள்.சீக்கியர்களும் அன்னாரை நேசிப்பார்கள்.அதிகமாக அன்னார் அவர்கள் அவர்களின் ஏகத்துவ கொள்கையின் மீது கொண்ட நேசத்தை நினைவு கூர்வார்கள்.
(இன்கிலாபே ஹகீகத் பக்கம்:109)என்னுடன் இந்தியாவில் ஏழு கோடி முஸ்லிம்கள் முப்பது கோடி இந்துக்கள் (ஸீரேதே அமீரே மில்லத் 598)காபிர் தத்துவஞானிகள்,ஆரியா மற்றும் அவர்களல்லாதவர்கள் தவ்ஹீத் ஏற்பவர்கள் என்பது எண்ணமாகும்.(தம்ஹீதே ஈமான் மஅ ஹுஸ்ஸாமுல் ஹரமைன் பக்கம்:45)ரிஜாகான் பரேல்வியிடத்தில் கேட்கப்படும் கேள்வியும் பதிலும்:

வஹ்ஹாபி நிகாஹ் ஓதினால் கூடுமா?

பதில்:

 நிகாஹ் கூடிவிடும்.நிகாஹ் என்பது ஈஜாப் மற்றும் கபூல் சம்மதம் கேட்பது அதனை ஏற்பதற்கு பெயராகும்.பிரமாணர் ஓதினாலும் கூடும்.எனினும் வஹ்ஹாபி ஓதுவது சங்கை செய்வதாகும்.எனவே வஹ்ஹாபியை சங்கை செய்வதை தவிர்ந்திருப்பது அவசியமாகும்.(அஹ்காமே ஷரீஅத் பக்கம்:241)அதன் பிறகு இந்துக்களின் மதத்தை பற்றி கூற ஆரம்பித்தார்.

அன்னார் கூறினார்கள் இந்துமதமானது பழமையான மற்றும் தொன்று தொட்டுள்ள மதமாகும்.
எல்லா மதமும் அதன் பிறகுதான் வந்தது.ஏனெனில் இந்து மதம் ஆதம் (அலை) அவர்களின் மதமாகும்.

(மகாபீஸுல் மஜாலிஸ் பக்கம் 263)
இதன் பிறகு ஒருவர் கேட்டார.ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராமர் தாசரியா? இல்லையா? அன்னார் கூறினார்கள்:அனைத்து அவதாரம் மற்றும் ரிஷிகள் அந்த நேரத்தின் தூதர்கள் நபிமார்கள்.
 (மகாபீஸுல் மஜாலிஸ் பக்கம்:388)
குறிப்பு: மகாபீஸுல் மஜாலிஸ் நூலானது பரேல்வியால் ஏற்கப்பட்டதாகும்.அங்கீகாரம் பெற்றதாகும். இன்ஷா அல்லாஹ் தேவைப்படும் பொழுது அதனை நிரூபிப்போம்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live