4 May 2017

ஷைத்தானின் அறிவானது நபியின் அறிவை விட அதிகமாகும் என்ற குற்றச்சாட்டிற்க்கு நமது வாடைக்கச் செய்யும் பதில்.

குற்றச்சாட்டு தேவ்பந்திகளின் கொள்கையானது ஷைத்தானின் அறிவானது நபியின் அறிவை
விட அதிகமாகும்.

ஹுஸ்ஸாமுல் ஹரமைனில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அபாண்டமான பழியை கலீல் அஹ்மத்
(ரஹ்) அவர்களின் மீது அள்ளிவீசுகிறார் திகைப்பாக உள்ளது.
வெட்கமற்று நபி (ஸல்) அவர்களின் கண்ணியமான ஞானத்தை ஷைத்தானின் அறிவைவிட
குறைந்தது என்பதை (உறுதிப்படுத்த) தூய்மையற்ற முயற்சி செய்துள்ளார்.பாவமில்லை
என்பதை போல் கேட்கிறார். நாம் என்ன தவறு செய்தோம்?
(ஹுஸ்ஸாமமுல் ஹரமைன் பக்கம்:4)தக்க மறுப்பு: 

உண்மையிலே ஒருவன்  இது போன்ற கொள்கையைக் கொண்டிருந்தால் இது
போன்ற வார்த்தையை கூறினால் உலமாக்களின் ஒன்றுப்பட்ட சொல்லின்படி அவன்
காபிராகிவிட்டான்.மதம் மாறிவிட்டான் அவன் சபிக்கப்பட்டவன் அல்லாஹ்வின் அருளை
விட்டும் விரட்டப்பட்டவன் என்று சொல்வதில் கொஞ்சமும் யோசிக்க தேவையில்லை.
இது தான் தேவ்பந்த் உலமாக்களின் கொள்கையாகும்.ஹள்ரத் மெளலானா கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு
மிகப்பெரிய அபாண்டமும் அவதூறுமாகும். பரலேவிகள் வழக்கம் போல் அன்னாரின்
கருத்தை திரித்து,புரட்டி விமர்சிக்கின்றனர்.இந்த குற்றச்சாட்டு எழுந்த
பின்ணணியையும் அதற்கான மறுப்பையும் இனி பார்ப்போம்!

பரலேவிய அறிஞர்
அப்துஸ்ஸமீஃ ராம்பூரி என்பவர்
 انوار ساطعہ در بیان مولود و فاتحہ 
என்ற பெயரில்
நூலை வெளியிட்டார்.அதில் மார்க்கத்திற்கு முரணான சடங்குகள்,மற்றும்
சம்பிரதாயங்கள் பித்அத்துகள் போன்றவைகளுக்கு மார்க்க வடிவம் கொடுத்தார்.இதற்கு
மறுப்பாக ஹள்ரத் கலீல் அஹ்மத் (ரஹ்)அவர்கள் "பராஹீனுல்  காதிஆ" என்ற பெயரில்
நூலை வெளியிட்டார்கள்.


ராம்பூரி அவர்களின் அபாயகரமான  வாதம்: 

அந்த நூலின் 54 ம் பக்கத்தில்
ஷைத்தானைக்கும், வானவர்களுக்கும் உள்ள ஆற்றலைப் பற்றி பேசுகிறார்.
இதற்கு ஆதாரமாக
 تفسیر معالم التنزیل رسالہ برزخ, شرح مواہب 
போன்ற நூல்களை
ஆதாரம் கொடுத்துள்ளார்.மலகுல் மெளத் அனைவரின் உயிரையும் கைப்பற்றுபவர்
ஜின்,மனிதன்,விலங்குகள் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் முழு உலகத்தில் உள்ள
படைப்புகள் அனைத்தையும் அல்லாஹ்,அவருக்கு சிறிய விரிப்பு அல்லது
பாத்திரத்தைப்  போன்று ஆக்கி கொடுத்துவிட்டான்.இதைப் போன்று கிழக்கிலிருந்து
மேற்கு வரை மரணிக்கும் ஒவ்வொரு நபரிடமும் ஒவ்வொரு விநாடியும்
ஆஜராகிறார்.

மிஷ்காத் ஷரீபின் நீண்ட ஹதீஸின் மற்றும் ஹள்ரத் காளி ஸனாவுல்லாஹ்
பானிபத்தி நூலான "தத்கிரதுல் மெளதா"  மற்றும் தப்ரானியின் அறிவிப்பை எடுத்து சொல்கிறார் மலகுல் மெளத் நபி (ஸல்) அவர்களுக்கு கூறுகிறார் என் பார்வை எல்லா
இடங்களையும் அடைகிறது.இதைப் போன்று பல்வேறு நூல்களிலிருந்தும்,
ஹதீஸ்களிலிருந்தும்  இந்த முடிவை தருகிறார்.

மலகுல் மெளத் எல்லா இடங்களிலும் ஆஜாராகிறார்.மலகுல் மெளத்தைப் போன்று
ஷைத்தானும் எல்லா இடங்களிலும் ஆஜராகிறான்.இதற்கு ஆதாரமாக சில  நூல்களை எடுத்து
காட்டியுள்ளார். ஷைத்தான் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளான்.ஆக மலகுல் மெளத்தானவர்
எல்லா இடங்களிலும் ஆஜராகுவதற்கு அல்லாஹ் ஆற்றலை கொடுத்ததைப் போன்று
நல்லோர்களும் எல்லா இடங்களிலும் ஆஜராக முடியும்.(அன்வாரே ஸாதிஆவின் சுருக்கம்)


பரலேவிய அறிஞர் கொடுத்த ஹதீஸ்,மார்க்க அறிஞர்களின் கூற்றின்  மூலம் ஷைத்தானும்
மலகுல் மெளத்தும் பல்வேறு இடங்களிலும் ஆஜராகுவார்கள் என்பதை புரிய
முடிகிறது.ஆனால் அதே சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் மெளலிது மஜ்லிஸில்
ஆஜாராகுவார்கள் என்பதற்கு தனியானதொரு ஆதாரத்தை தரவேண்டும் ஆனால் அதற்குரிய
ஆதாரத்தை தராமல் அடுத்த  உதாரணத்திற்கு ராம்பூரி அவர்கள்  தாவுகிறார்
சூரியன்,சந்திரன் எல்லா இடங்களிலும் உள்ளது என்கிறார்.ஆக நபி (ஸல்) அவர்கள்
மெளலித் சபைகளில் ஆஜராகிறார் என்பதற்கு குர்ஆனிலோ,ஹதீஸ் நூல்களிலோ,கொள்கை
சார்ந்த நூல்களிலோ ஏற்கத்தகுந்த எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை புரிய
முடிகிறது. ராம்பூரி எடுத்து வைத்த வாதங்களுக்கு ஹள்ரத் மெளலானா

கலீல் அஹ்மத் ரஹ் மறுப்பு: 

அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையானது அல்லாஹ்வின்
எந்த தன்மையும் அடியானிடம் இருக்காது.அவன் தன்னுடைய தன்மையை சில நிழலைப்
போன்று கொடுத்திருப்பான்.அதனை விட அதிகமாக இருக்காது.سمع (கேட்பது) بصر
(பார்ப்பது) علم (அறிவு) இவைகள் அல்லாஹ்விற்கு உண்மையாக (حقیقی)
படைப்புகளுக்கு வெளிப்படையாக (مجازی ) இருக்கிறது.யாருக்கு எந்தளவிற்கு ஆற்றலோ
அல்லது தகுதியோ கொடுப்பானோ அதனை விட கொஞ்சம் கூட அதிகமாக
இருக்காது.

ஷைத்தானுக்கு கொடுத்த ஆற்றல்,மலக்குமார்களுக்கு உள்ள தகுதியும்
ஆற்றலும் சூரியன்,சந்திரன் எந்த அமைப்பில் வைக்கப்பட்டுள்ளதோ அதனை விட அதிகமாக
செல்லாது.செல்லவும் முடியாது.நெருக்கமான வானவர்களுக்கு அவருக்கு உள்ள
தகுதிக்கு ஏற்ப சக்தியை கொடுத்துள்ளான். ஷைத்தானுக்கு அவனுக்கு ஏற்ப ஆற்றல்
கொடுக்கப்பட்டுள்ளது. இதனையும் புரிந்து கொள்ளவேண்டும்!

எவருக்கேனும் உள்ள
செயல்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்ட ஆற்றலில் கூடுதல் குறைவாக இருப்பதால்
அவர்களுக்குரிய அந்தஸ்து குறைந்து விடும் என்பதும் அடிப்படை அல்ல.உதாரணமாக
ஷைத்தானுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆற்றல்,சக்தியின் காரணமாக அவன்  முஃமீனின்
அந்தஸ்தை விட உயர்ந்து விட முடியாது.ஏனெனில் அவனுக்கு கொடுக்கப்பட்ட
ஆற்றலுக்கும்,சக்திக்கும் எந்த ஒரு மதிப்பும் இல்லை.
கொள்கையானது உதாரணங்களின் மூலம் நிரூபணமாகாது.

இங்கு உறுதிமிக்க தெளிவான
ஆதாரங்கள் அவசியமாகும்.அல்லாஹ் ஒவ்வொருக்கும் அவருக்குரிய பொறுப்பு  அந்தஸ்து
அவரின் தகுதிக்கு ஏற்ப கொடுத்துள்ளான். அவ்வாறே அவருக்கு  வலிமையையும்
ஆற்றலையும் தகுதிக்கு ஏற்ப வழங்கியுள்ளான்.இதனால் யாருக்கு கொடுத்துள்ளான்
எந்த வகையில் கொடுத்துள்ளான் என்பதை அல்லாஹ்விடத்திலிருந்துதான் அறிய
முடியும்.நான்கு நெருக்கமான வானவர்களுக்கு தரப்பட்டுள்ள
பொறுப்புகள்,செயல்பாடுகள், ஆற்றலை முன்வைத்து மற்றவர்களுக்கும் இது போன்று
ஆற்றல் உண்டு என முடிவு செய்யக்கூடாது.

படைப்புகளிலே இழிவிற்குரியவனான
ஷைத்தானுக்கு உள்ள முற்றிலும் ஏமாற்றுதல்,சூழ்ச்சி செய்தல் போன்ற மோசமான
தகுதிகள் மற்றும் ஆற்றல்களை,
படைப்புகளிலே சிறந்தவரான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தகுதிகளோடு ஒப்பிட்டு
சொல்வதானது ராம்பூரி,அவரை அறிஞராக ஏற்கும் பரலேவிகள்,ரிளாகான் போன்ற
அசத்தியவாதிகளுக்கு சாதரணமாக தோன்றலாம்.சத்திய கொள்கையை கொண்ட உலமாக்கள்
அசத்தியத்தை கண்டு வாய்மூடி மெளனியாக இருக்கமாட்டார்கள்.

அடுத்து...

எல்லா
இடங்களிலும் சூரியன் இருப்பதை வைத்து ஆதாரம் எடுப்பதன் மூலம்  பரலேவிகளின்
அறியாமை அப்பட்டமாக வெளிப்படுகிறது. பொதுவாக மார்க்க ஞானம்,
விளக்கமுள்ளவர்களுக்கு இது போன்ற உதாரணங்கள் வேலைக்காகாது.இதே போன்று ஜின்கள்
காற்றில் பறப்பதை கண்டு உருமாறுவதை கண்டு அவைகளை விட சிறந்த படைப்பான
மனிதனுக்கும் அந்த ஆற்றல் உண்டு என நம்ப வேண்டியதாகிவிடும். ஒவ்வொரு
முஸ்லிமும் ஷைத்தானை விட நல்லவன் என்பதால் ஷைத்தானுக்கு உள்ள ஆற்றல்
முஸ்லிமுக்கும் உண்டு என நம்ப வேண்டியதாகிவிடும்.

சுருக்கம் என்னவெனில்
மெளலானா கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள், மலகுல் மெளத்,ஷைத்தானுடைய விஷயம்
குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் உறுதிமிக்க ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்ட
விஷயமாகும்.கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரங்கள்
அவசியம்.ஆதாரமின்றி ஒன்றை நாமாக கொள்கை என நம்புதல் அர்த்தமற்ற
விஷயமாகும்.ஆகவே பரலேவிகளின் கூற்றிற்கு ஆதாரம் தேவை.

இதைத்தான் இந்த
பரேல்விகள்  நபி (ஸல்) அவர்களை விட இப்லீஸுக்கு அதிக இல்ம் இருக்கிறது என்று
மெளலானா அவர்கள் கூறியதாக அபாயகரமான விளக்கம் தருகிறார்கள்.

ஆக கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மறுப்பு கொடுத்ததானது நபி (ஸல்) அவர்கள்
பல்வேறு  இடங்களிலும் ஆஜராகிறார்கள்.
மெளலிது சபைகளில் ஆஜராகுகிறார்கள் என்பதை பற்றித்தான் மாறாக நபி (ஸல்) அவர்கள்
இல்ம் மற்றும் அதனின் விசாலத்தைப் பற்றி அறவே இங்கு விவாதிக்கவில்லை.

இறுதியாக
பராஹுன் காதிஆவில் உள்ள வாசகங்களில் பரலேவிகள் செய்த திரித்தலும் புரட்டலையும்
இனி பார்ப்போம்!

شیطان اور ملک الموت کا حال دیکھ کر علم محیط زمین کا فخر عالم کو خلاف نصوص
قطعیہ کے بلا دلیل محض قیاس سے ثابت کرنا شرک نہیں تو کون سا ایمان کا حصہ

கருத்து :

இது அசலான வாசகம் இதனின் கருத்தானது உறுதிமிக்க தெளிவான ஆதாரங்களைக் கொண்டு
நிரூபணமான ஒன்றைக் கொண்டு அதாவது  ஷைத்தான் மற்றும் மலகுல் மெளத் முழு
உலகத்தையும் சூழ்ந்து அறியும் (علم محیط زمین ) நிலையை பார்த்து ஆதாரமின்றி
கியாஸைக் கொண்டு மட்டும் நபிக்கும் (எல்லா இடங்களிலும் ஆஜாராகுவது)
உண்டு என நிரூபிப்பதானது ஷிர்க் இல்லையெனில் இறைநம்பிக்கையில் எந்த பகுதி
இருக்க முடியும்?


ஆக இங்கு ஆய்வானது விவாதமானது நபி (ஸல்) அவர்களுக்குரிய ஞானத்தை பற்றியது அல்ல
மாறாக நாயகம் ஸல் அவர்கள்  மெளலிது சபைகளுக்கு ஆஜராகுவார்களா? என்பதை
பற்றிதான் என மக்களுக்கு புரிந்துவிடும் என்பதால் இந்த பகுதியில் பரலேவிகள்
இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் மெளலிது சபைக்கு வருகை தருகிறார்கள் என்பதனை உறுதிமிக்க
ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.மாறாக உறுதிமிக்க ஆதாரங்களைக் கொண்டு
நிரூபணமான ஒன்றைக் கொண்டு கியாஸ் எடுக்க கூடாது.

அறிவு இரண்டு வகையாக உள்ளது :

(1)மார்க்க அறிவு
(2) மார்க்கம் அல்லாத அறிவு
அல்லது உலக அறிவு

குர்ஆன் ஹதீஸ்களில் எந்த இல்மை குறித்து சிறப்புகள் வந்துள்ளதோ அது மார்க்க
ரீதியான அறிவாகும்.நபிமார்கள் நல்லோர்களின் சிறப்பின் காரணம் இதுதான்.

மார்க்கம் அல்லாத அறிவு ஷரீஅத் ரீதியாக எந்த தொடர்பும் இல்லாதது.இதன் காரணமாக
அல்லாஹ்விடத்தில் சிறப்பு இல்லை.

கட்டடக்கலையை ஒருவர் அறிந்துள்ளார்.இமாம் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு
தெரியவில்லை என்பதால் அந்த நபர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களை விட சிறந்தவர்
ஆக முடியாது.

இமாம்  அபூஹனீபா (ரஹ்) அவர்களை விட அந்த நபர் சிறந்தவர் என மடையன் கூட
கூறமாட்டான்.

நபியின் நுபுவ்வத் சம்பந்தப்படாத அறிவுகளில் நபியை விட நபியல்லாதவர் அதிகம்
இருக்க முடியும்.
 (இமாம் ராஜி)

இதனால் இமாம் ராஜி அவர்கள் மீது இறைநிராகரிப்பு பத்வா தீர்ப்பு கொடுக்கதயாரா?

ஆக உலக ரீதியான அறிவில் நபியை விட நபி அல்லாதவர் அதிகமாக இருக்க முடியும்.

கற்பனை செய்து பார்ப்போம்!

மெளலவி ரிஜாகான் பரேல்வியின் ஆதரவாளர் கூறுகிறார் நபி (ஸல்) அவர்களுக்கு கவிதை
இயற்றும் திறன் உள்ளது. இதற்கு இம்ரஉ கைஸ், பிர்தெளஸிக்கு கவிதை இயற்றும்
திறன் இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் மக்களில் சிறந்தவரான நபி (ஸல்)
அவர்களுக்கு கட்டாயம் உண்டு என்பதாக கூறினால் ஏற்புடையதா?

இதற்கு தேவ்பந்த் அறிஞர் பதில் தருகிறார்: 

இம்ரஉ கைஸ்,பிர்தெளஸ் கவிதை
இயற்றும் திறனை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.எனினும் தெளிவான
ஆதாரங்களுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களுக்கு கியாஸ் செய்வது
சரியில்லை.ஏனெனில் கவிதை இயற்றும் ஆற்றல் உண்டு எனில் ஆதாரங்களின் மூலம்
நிரூபிக்க வேண்டும் .குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் (கருத்து) அண்ணல்
நபி (ஸல்) அவர்களுக்கு கவிதை ஞானத்தை தரவில்லை.அவர்களுக்கு பொருத்தமானதும்
இல்லை. எனவே ஆதாரங்களை கொண்டு நிரூபிக்க வேண்டும் என்கிறார்.

இதன் பேரில் பரேல்வி,
தேவ்பந்த் அறிஞர் இம்ரஉ கைஸ் மற்றும் பிர்தவ்ஸின் அறிவு நபியை விட உயர்ந்தது
என வாதிடுகிறார் என்று குற்றம் சுமத்தினால் அறிவார்ந்த செயலா?

தேவ்பந்த் அறிஞர் கூறுவது கவிதையின் அறிவு.
பொதுவான அறிவை குறித்து அல்ல. இவ்வாறுதான்  எந்த ஆற்றலானது ஷைத்தான் மற்றும்
மலகுல் மெளத்திற்கு அவர்களின் செயலிற்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த அறிவை
குறித்து தான் பராஹீனுல் காதிஆவில் கூறப்பட்டுள்ளது.மாறாக பொதுவான அறிவை
குறித்து இல்லை.

அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள் நபி (ஸல்) அவர்களை விட அதிகமான இடங்களில்
ஷைத்தான் வருகின்றான்  என்கிறார்.

இது ஞானங்களை பற்றி என  மீண்டும் வாதிட்டால் அப்துஸ்ஸமீஃ ராம்பூரி
நபி (ஸல்) அவர்களை விட அதிகமான ஞானம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கூறுகிறாரா?
அல்லாஹ் பாதுகாப்பானாக!

பரேல்வி அறிஞர் கூறுகிறார்:

ஷைத்தான் எல்லா இடங்களிலும் ஹாளிர் நாளிர் இருக்கிறான்.
(நூருல் இர்பான்)

மேலும் பரேல்வி அறிஞர் மற்றோர் இடத்தில் கூறுகிறார்:

இப்லீஸின் பார்வை முழு உலகமும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்க்கிறது.அனைத்து
முஸ்லிம்களின் நாட்டங்கள் அது மட்டுமின்றி உள்ளத்தின் சிந்தனையும்
அறிகிறான்.நல்ல எண்ணத்தை விட்டு விலக வைக்கிறான்.கெட்ட எண்ணத்தை
பாதுகாக்கிறான்
எனும் போது அடியார்களின் நேர்வழிக்காக வந்துள்ள நபிமார்களின் ஞானத்தை
என்னவென்று சொல்வது?
(தப்ஸீர் நயீமி 3/114)அண்ணலாருக்கு ஹாஜிர் நாஜிர் உண்டு என்பதை நிரூபிக்க ஷைத்தானுடன்  ஒப்புமையாக
கூறுவது
கூடுமா? இதனைக் குறித்து பரேல்விகள் கூறுவதை பார்ப்போம்!

அருவருப்பானவைகளைக் கொண்டு ஒன்றை ஒப்புமையாக கூறினால் அதன் மூலம்
இழிவுப்படுத்துதலும் களங்கப்படுத்துதலும் பெறப்படும்.(அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா)


ஷைத்தானை விட அருவருப்பானது எது இருக்கமுடியும்? ஷைத்தானுடன் பெருமானார் ஸல்
அவர்களை ஒப்பிட்டு கூறுவது அவமரியாதையா இல்லையா

முஃப்தி யார் கான் நயீமி கூறுகிறார்:

நபி (ஸல்) அவர்களின் விஷயத்தில் லேசான
வார்த்தையை உபயோகிப்பதும் உதாரணங்கள் தருவதும் இறைநிராகரிப்பாகும்.

(நூருல் இர்பான்)


முஃப்தி ஹனீஃப் குரைஷி கூறுகிறார்:

விலங்குகளுடன் ஒன்றை ஒப்பிட்டு கூறுவதானது
அதனை இழிவுப்படுத்துவதாகும்.

(முனாளிரே குஸ்தாக் கோன்)
விலங்குடன் ஒன்றை ஒப்பிட்டு கூறுவது இழிவு எனும் போது ஷைத்தானுடன் ஒப்பிட்டு
கூறுவது இழிவு இல்லையா?

பரேல்விகளின் பார்வை:

ஹிள்ர் (அலை) நபி அல்லது நபியல்லாதவர்.
சில அறிவுகளிலே நபியை விட அதிகமாக இருக்க முடியும்.நபியின் நுபுவ்வத்
சம்பந்தப்படாத அறிவுகளில் நபியை விட நபியல்லாதவர் அதிகம் இருக்க முடியும்.
(ஃபதாவா பைஜுர் ரஸுல் 1/39)முஃப்தி யார் கான் நயீமி அவர்கள் 'முஅல்லிமுத் தக்ரீர்' ஹள்ரத் ஆதம் (அலை)
அவர்களை படைத்தான்.அனைத்து புதிய படைப்புகளை  பிரதிநிதியாக ஆக்கினான்.அவருக்கு
அனைத்து பெயர்களையும் கற்றுக்கொடுத்தான்.வானவர்கள் இப்லீஸ் லட்சக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளார்கள்.இவர்களைதான்
அந்த புதிய படைப்புகளுக்கு ஆசிரியர்களாக ஆக்கினான்.

மெளலவி அபுல்ஹஸனாத் காதிரி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

 தாவூத் அலை அவர்கள்
கேட்டார்கள்.இறைவா உனது படைப்பிலே என்னை விட அதிகமாக திக்ர் செய்யும் படைப்பு
உள்ளதா அல்லாஹ் தவளை என்பதாக வஹி அறிவித்தான்.
(தப்ஸீருல் ஹஸனாத் 5/445)

இறுதியாக பரேல்விய அறிஞர் யார் கான் நயீமியின் கருத்தை முன்வைத்து
மறுப்பளிக்கிறோம்:


நபி (ஸல்) அவர்களின் ஞானமானது  படைப்புகளின் அனைத்து விட அதிகம்
என்பதை தேவ்பந்திகளும் ஏற்கிறார்கள் (ஜாஅல்ஹக் 119)
படைப்புகளில் மனிதர்கள் வானவர்கள் ஷைத்தான்கள் இவையல்லாத அனைத்தும்
உள்ளடங்கும்.எனவே நபி (ஸல்) அவர்களின் ஞானம் பெரியது என்பதை தான் தேவ்பந்த
உலமாக்கள் ஏற்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live