5 May 2017

பரேல்விகளின் திரிபுகள் தொடர்-4

பரேல்விகள் என்று பெயரில் உள்ள பெரியோர்கள் மெளலவிமார்கள் பெரும் மோசடிக்காரர்கள் நீதமற்றவர்கள் இவர்களின் மோசடிகளை பரேல்விகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.பிரபல்யமான பரேல்விய மெளலானா நுஃமான் ஷேராஜி காதிரி அவர்கள், தற்கால பிரபல்யமான பரேல்வி அறிஞர் குலாம் ரஸுல் ஸயீதின் யூத வழிமுறையை ஏற்றுக்கொள்கிறார்.

எனக்கு ஸயீத் ஸாஹிபின் ஆதாரங்கள் மற்றும் அரபிவாக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் மீது அடிப்படையில் எப்போதும் நம்பிக்கை இல்லை.அவர் வாசகங்களை திரித்தல் புரட்டலில் கைதேர்ந்தவர்.அசல் வாசகத்தின் கருத்தை முழுமையான விழிப்புணர்வுடன் தனது நோக்கத்திற்கு ஏற்ப மாற்றி மொழிபெயர்க்கும் வழக்கமுள்ளவர்.சில இடங்களில் பெரும் மோசடியுடன் நடந்துள்ளார்கள்.
 (தஃவதே ஹக் 18,19)

ஒரு இடத்தில் மெளலவி குலாம் ரஸுல் ஸயீதின் மோசடிகளை கூறியவாறு தாருல் இஃப்தாவின் முஃப்தியான  துராபுல் ஹக் காதிரி அவர்கள் இவ்வாறு குமுறுகிறார்கள்: 

மெளலானா ஸயீத் அவர்கள் அல்லாமா ஸய்யித் முஹம்மது ஆலூஸி பக்தாதியின் தப்ஸீர் ரூஹுல் மஆனியில் அஹ்காப் சூரா ஆயத்து ஒன்பதின் விளக்கத்தில் வாக்கியங்களை துண்டித்து மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.ஏறத்தாழ இரண்டு பக்கம் உள்ளது.இந்த செயலானது முற்றிலும் (பக்கங்களை) நிரப்புவதாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.பக்கம் 41ல் இறுதி வரிக்கு முன்பு அசலான அரபி வாசக அமைப்பையும் அதன் மொழிபெயர்ப்பையும் ஸயீத் ஸாஹிப் அவர்கள் செய்துவிட்டார்.
(தஃவதே ஹக் பக்கம் 47)

இதே போன்று பரேல்விய ஹகீமுல் உம்மத்தின் மகனார் பிரதிநிதி இக்திதார் கான் நயீமி அவர்கள் பரேல்விய பாகிஸ்தான் பேச்சாளர் ஷஃபீஃ அவர்களின் மோசடியை நீதமற்ற தன்மையை முறையிட்டவாறு எழுதியுள்ளார்.
 بعض حوالوں میں توڑ موڑ کر کے خیانت کی گئی
 சில ஆதாரங்களை துண்டித்து மாற்றி மோசடி செய்துள்ளார்.
 (ஹுர்மதே ஹிளாப் ஸியாஹ் பக்கம் 23)

அஃலா ஹஜ்ரதின் வாசக தொடருக்கு தவறான விளக்கம் கொடுத்து பொய்யுரைத்துள்ளார்.
(ஹுர்மதே ஸியாஹ் ஹிளாப் பக்கம் 37)

இதே போன்று டாக்டர் மஹ்மூத் அஹ்மத் ஸாஹிப் புஸ்ரான் காஜிமி மோசடிகளை குறித்து குமறியுள்ளார். அவர் தனது தந்தையின் தப்ஸீரில் முரண்பாடுள்ள வாசக அமைப்பில் திரிபு செய்துள்ளார்.புஸ்ரான் காஜிமி மடையர் இல்லை.மாறாக நேர்மையற்றவர்
(முஆஹதுத்திப்யான் பக்கம்:52)

நன்றாக சிந்தியுங்கள்!
ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளர்,பாகிஸ்தான் பேச்சாளர் தற்கால கஜ்ஜாலி என்பதாக பிரபல்யமாக சொல்லப்படுவர்களின் மார்க்க ரீதியான காரியத்தில் செயல்படும் வழிமுறை எனில் பொதுவான பரேல்விகளின் வழிமுறை எப்படி இருக்கும்? இதனை நிர்ணயிப்பது சிரமமானது இல்லை. இன்ஷா அல்லாஹ் தொடரும்

முக்கிய குறிப்பு: பரேல்விகளின் திரிபுகள் குறித்த தொடரில் ஹள்ரத் மெளலானா மெளலவி விவாதகர் ஸாஜித்கான் தாமத் பரகாதுஹும் அவர்களின் ஆய்வை முன்வைத்து எழுதப்படுகிறது.பரேல்விகளின் நூல்கள் இணையத்தில் நீண்ட தேடலுக்கு பின்பும் கிடைக்கவில்லை.இன்ஷா அல்லாஹ் நூல்கள் கிடைத்தால் அதனின் Photo copy பதிவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live