6 May 2017

புனிதப் பெயர்களில் மோசடியும் , பரேலவி ஜந்துகளின் இரட்டை நிலையும்.

மெளலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்களின் வம்சாவழித்தொடரில்.

காஜி பீர் பஹ்ஷ் தந்தையின் வம்வாசவழித்தொடராகும்.
பரீத் பஹ்ஷ் என்பது தாயின் வம்சாவழித்தொடரில் வருகிறது.
ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் இந்தப் பெயர்களை சூட்டுவது இணைவைப்பு என
கூறியுள்ளார்கள் இதனால் அன்னாரின் தாதா நானா இணைவைப்பாளர்களாக உள்ளார்கள்.

இந்த குற்றச்சாட்டை பரேல்வி ஹகீமுல் உம்மத் முஃப்தி யார் குஜராத்தி "ஜாஅல்
ஹக்" என்ற அவரது தக்வியதுல் ஈமான் நூலில் எழுதியுள்ளார்:  அலி பஹ்ஷ் பீர்
பஹ்ஷ் குலாம் அலி மதார் பஹ்ஷ் அப்துன்னபி ஷிர்க் என சொல்லப்பட்டுள்ளது.

எனினும் தத்கிரதுர் ரஷீத் முதல் பாகம் 13ம் பக்கத்தில் ரஷீத் அஹ்மதின்
வம்சாவழித்தொடர்.

மெளலானா ரஷீத் அஹ்மத் இப்னு அஹ்மதுப்னு மெளலானா ஹிதாயத் இப்னு காளி பீர் பஹ்ஷ்
இப்னு குலாம் ஹுஸைன் இப்னு குலாம் அலி தாயின் வம்சாவழித்தொடர் ரஷீத் அஹ்மத்
இப்னு கரீமுன்நிஸா பின்த் பரீத் பஹ்ஷ் இப்னு குலாம் காதிர் இப்னு முஹம்மத்
ஸாலிஹ் இப்னு குலாம் தேவ்பந்திகள் சொல்லட்டும்!

மெளலவி ரஷீத் அஹ்மதின் வம்சாவழித்தொடரின் பெரியோர்கள் முஷ்ரிகா? முர்தத்தா?
இல்லையா? இல்லையெனில் எவ்வாறு?
முர்தத் எனில் குழந்தைகள் ஹலாலா? அல்லது ஹராமா?
(ஜாஅல் ஹக் 387)



நமது மறுப்பு:

லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ஷைத்தான் மற்றும் அவனின்
சந்ததிகளிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மற்றும் பரேல்விகளிடம்

நமது கேள்வி: 

தந்தை அல்லது தாய் அல்லது தாதா அல்லது நானா காஃபிராகிவிட்டால்
குழந்தைகள் ஹராமாகிவிடுமா?

இமாம் புகாரி அவர்களின் மீது பரேல்விகள் என்ன பத்வா கொடுப்பீர்கள்? இமாம்
புகாரி (ரஹ்) அவர்களின் வம்சாவழித்தொடர் அபூஅப்தில்லாஹ் புகாரி முஹம்மதுப்னு
இஸ்மாயிலுப்னு இப்ராஹீமுப்னுல் முஙீரா இப்னு பர்தஜ்பா.

பர்திஜ்பா குறித்து ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நெருப்பு
வணங்கி
(ஸியரு இஃலாமின் நுபலா 12/391)




பரேல்விகளே! இமாம் புகாரி அவர்களின் மீது என்ன பத்வா கொடுப்பீர்கள்? அல்லாஹ்
பாதுகாப்பானாக! அல்லாஹ் பாதுகாப்பானாக!
அவரின் வம்சாவழித்தொடரும் ஹலாலா?  இல்லையா?

பரேல்வி அறிஞரின் இந்த குற்றச்சாட்டானது தூய்மையற்ற பேச்சு அவரின் சீர்கெட்ட
சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

ஹஜ்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் குலாம் முஹையத்தீன், குலாம்
முஸ்தஃபா இது போன்ற பெயர்களை பொதுவாக ஷிர்க் என சொல்லவில்லை.மாறாக அவர்களின்
வாசகங்களில் குறிப்பாக்கும் காரணிகள் உள்ளது.இதனை பரேல்வி ஜவ்வாத் மறைத்து
மோசடி செய்துவிட்டார். குறைந்த பட்சம் பத்து காரணிகளை கூறியுள்ளார்.

(1)நல்லோர்கள் அனைத்தையும் கேட்பார்கள் .சிரமங்களை அகற்றுவார்கள்.இதனால்
சிரமங்களின் போது அறியாமையில் அவர்களை அழைக்கிறார்கள்.

(2)இதே கொள்கையின் பெயரில் அவர்களிடத்தில் தங்களின் தேவைகளை வேண்டுகிறார்கள்

(3)அவர்களின் பேரில் நேர்ச்சை நோற்கிறார்கள்

(4)இதே கொள்கையின் பெயரில் நேர்ச்சை என்ற விதத்தில் முடி வளர்க்கிறார்கள்.

(5) அவர்களின் பெயரில் நேர்ச்சையாக கழுத்தில் ஆபரணம் அணிவித்தல்

(7) அவர்களின் நெருக்கத்தை பெரும் பொருட்டு அவர்களின் பெயரில் அறுத்து
பலியிடுகிறார்கள்.

(8)அவர்களின் பெயரில் குறிப்பான போர்வை போர்த்தப்படுகிறது.

(9)அவர்களின் பெயரில் சத்தியம் செய்கிறார்கள்

(10)அவர்களின் பெயரில் கால்களில் கொலுசு நேர்ச்சையாக அணிவிக்கப்படும்

இந்த கொள்கையுடன் துன்பங்களும் சிரமங்களும் அகல வேண்டும் என்பதற்காக தங்களின்
குழந்தைகளை அவர்களின் பக்கம் இணைத்து சொல்கிறார்கள்.குழந்தையானது பீர் பஹ்ஷ்
மாறி சிரமங்கள் துன்பங்கள் அகன்றுவிடும் என நம்பிக்கை கொண்டுள்ளனர் .

ஆக ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் பொதுவாக இப்பெயரை வைப்பதனால் மட்டும்
ஷிர்க் என சொல்லவில்லை.மாறாக அவர்களிடத்தில் இந்த அனைத்துவிதமான கொள்கைகளை
முன்வைத்து சொல்லப்படுகிறது.
المطلق على اطلاقه المقيد على تقييده  பொதுவானவை
அதனின் பொதுவான கருத்திற்கு ஏற்ப அமையும்.குறிப்பானவை அதனின் குறிப்பான
கருத்திற்கு ஏற்ப அமையும்.

انبت الربيع البقل வசந்தகாலம் காய்கனிகளை விளைவிக்கிறது.
இதனை இணைவைப்பாளர் கூறினால் அதனின் அர்த்தம் வேறு தீர்ப்பு
வேறு.இறைநம்பிக்கையாளர் கூறினால் அதனின் அர்த்தம் வேறு தீர்ப்பு வேறு.

பரேல்விகள் பரேல்விகளின் வீட்டை பார்க்கட்டும்!

மெளலவி ரிஜாகான் பரேல்வி 'அஹ்காமே ஷரீஅத்' என்ற நூலில் எழுதியுள்ளார்:

நிஜாமுத்தீன் முஹையத்தீன் தாஜுத்தீன் இது போன்று மார்க்கத்தில் மதிப்பிற்குரிய
என்ற வகையில் சூட்டப்பட்டபெயர்கள் உதாரணமாக ஷம்சுத்தீன்,பத்ருத்தீன்,
நூருத்தீன், பக்ருத்தீன்,முஹிய்யுல் இஸ்லாம்,பத்ருல் இஸ்லாம் இது அல்லாத
அனைத்து பெயர்களையும் அனைத்து உலமாக்களும் கடுமையாக வெறுக்கிறார்கள்.மக்ரூஹ்
என்பதாக தடுக்கப்பட்டது என்பதாக கூறியுள்ளனர்.
 (அஹ்காமே ஷரீஅத் 98)



பரேல்வி அறிஞர் பீர் மெஹ்ர் அலி ஷாஹ் ஸாஹிப் வம்சாவழித் தொடரை பார்ப்போம்!

ஸய்யித் மெஹ்ர் அலி ஷாஹ் இப்னு ஸய்யித் நத்ருத்தீன் இப்னு ஸய்யித் குலாம் ஷாஹ்
இப்னு ஸய்யித் ரோஷன் தீன் இப்னு ஸய்யித் அப்துர்ரஹ்மான் நூரி இப்னு ஸய்யித்
இனாயத்துல்லாஹ் இப்னு ஸய்யித் கியாஸ் அலி இப்னு ஸய்யித் பத்ஹுல்லாஹ் இப்னு
ஸய்யித் அஸதுல்லாஹ் இப்னு ஸய்யித் பஹ்ருத்தீன் பிறகு தாஜுத்தீன்.


தாயின் வம்சாவழித்தொடரில்
ஸய்யித் ஸத்ருத்தீன் உள்ளது.

இப்பொழுது நமது கேள்வி என்னவெனில்

அஹ்மத் ரிஜாகான் கடுமையாக வெறுக்கிறார் பொதுவாக மக்ரூஹ் எனில் ஹராம் என்பதாக
தான் எண்ணப்படும். பீர்ஸாஹிபின் தாதாமார்கள் நானாமார்கள் ஹராமை ஹலால் என
எண்ணியுள்ளார்களா? ஹராமை ஹலால் என எண்ணுபவர் முஸ்லிமா? முஸ்லிம் எனில்
எவ்வாறு? அவ்வாறு இல்லையெனில் பீர் ஸாஹிப் வம்சா வழித்தொடரை குறித்து
தீர்ப்பு  என்ன?

அஹ்காமே ஷரீஅத் நூலில் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்:

மக்களிடம் கேட்டுப்  பார்க்கட்டும்!

தனது குழந்தைகளின் பெயர்களை  ஷைத்தான் மல்ஊன் ராபிளி கேடுகெட்ட,பன்றி  இது
போன்றவைகளை (சூட்ட)  விரும்புவார்களா?
ஒரு போதும் இல்லை.உறுதியான சொல்லானது மேற்கண்ட பெயர்களின் அர்த்தம் அசலின்
பேரில் இருக்கும்.பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு தங்களை, தங்களது
குழந்தைகளை நபி என்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்.
எந்த முஸ்லிமாவது தனது பெயரை ரஸுலுல்லாஹ் காதமுன் நபிய்யீன் அல்லது ஸைய்யிதுல்
முர்ஸலீன் வைப்பார்களா?
பிறகு முஹம்மத் நபி, நபி அஹ்மத் போன்றவைகளை ஏன் சூட்டுகிறார்கள்?
எந்தளவிற்கெனில் சில பெயர்கள் அல்லாஹ்வின் அச்சமில்லாதவர்கள்  நபியுல்லாஹ்
ரிஸாலத் கதமுன் நுபுவ்வத்தை வாதிடுவது ஹராம் தானே? இது போன்ற பெயர்களை
மாற்றுவது முஸ்லிம்களின் மீது அவசியமாகும்.
(அஹ்காமே  ஷரீஅத் 94,95)




ஆக நபி அஹ்மத் என பெயர் வைப்பது ஹராம்.இதனை மாற்றுவது அவசியம்.இந்தப் பெயரை
வைப்பது நுபுவ்வத்தை வாதிடுவது போன்றாகும்.

இப்பொழுது பரேல்விகளும், பரேல்வி ஜவ்வாத் ரப்பானி எடுத்து பார்க்கட்டும்!
அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரியின் 'தத்கிரஹ் அகாபிரே அஹ்லுஸ்ஸுன்னத்' பக்கம் 52
ல் அவர்களது ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவரை குறித்து அறிமுகம் செய்கிறார் அவரின்
பெயர் 'கவாஜா நபி அஹ்மத்'
பரேல்விகளே கூறுங்கள்!



நபி அஹ்மத் என்று பெயர் சூட்டியதன் மூலம் அவரது பெற்றோர்கள் தனது மகனின்
நுபுவ்வத்தை வாதிடுவதை விரும்புகிறார்களா?  அண்ணலாரின் பெயருக்கு அவமரியாதை
இல்லையா?
இல்லையெனில் எவ்வாறு?
ஆமாம் என்றால் நபி அஹ்மதின் பெற்றோர் முஸ்லிமா?  ஈமானை புதுப்பிக்காமல்
நிகாஹ்ஹை புதுப்பிக்காமல் உடலுறவு கொள்வது விபச்சாரமா? குழந்தைகள் ஹராமா?
இல்லையா?

மெளலானா தபீரின் பத்வா:

 மெளலானா அவர்கள்
மெளலானா குலாம் கானிடத்தில் கூறினார் குலாமின் அர்த்தம் لونڈا எதைப்போன்று
எனில் உனது பெயர் خان لونڈا இதனால் சபையில் கூச்சல் எழுந்தது.மெளலவி குலாம்
கான் வெட்கப்பட்டு இந்நிகழ்விற்கு பிறகு தனது பெயரை குலாமுல்லாஹ் என்று
மாற்றிக்கொண்டார்.
(ஃபவ்ஜுல் மகால் 4/541) 



لونڈا ன் அர்த்தத்தை உர்து அகராதியில் பாருங்கள்!

مفعول
بد فعلی کرنے والا لڑکا 

தன்நிலை சேர்க்கை புணர்பவன்  (பைரோஜ் லுகாத் 1170)



இப்பொழுது பரேல்வி அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரியின் நூல் 'தத்கிரஹ் அகாபிரே
அஹ்லுஸ்ஸுன்னா' பாருங்கள்! பொருளடக்கம்
குலாம் அஹ்மத்,குலாமுத்தீன் குலாம், ஜான் குலாம்,ஹைதர் குலாம்,தஸ்தகீர்
குலாம், ஸுரூர் குலாம் காதிரி இதை தவிர ஏராளமான பெயர்கள் உள்ளன.




பரேல்விகள் இப்படி சொல்லக்கூடும் لونڈا வின் அர்த்தம் சிறுவர் என்றும்
உண்டு.இது போன்ற விளக்கத்தை எடுப்பதும் சரியில்லை என்பதை பரேல்வி அறிஞரின்
வாசகம் தெளிவுப்படுத்துகிறது.எனினும் நாம் கூறுகிறோம் இங்கு பல அர்த்தங்களில்
ஒன்றை எடுத்து கொண்டீர்கள்! அந்தப் பொருளானது உங்களுக்கு பொருத்தமாக
எங்களுக்கு எதிராக உள்ளது.இது போன்று நாமும் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)
அவர்களின் கூற்றில் எங்களுக்கு தோதுவான உங்களுக்கு எதிராக உள்ளதை
எடுத்துள்ளோம்!
இதனையும் பாருங்கள்!

குலாம்நபி, குலாம் ரசூல், குலாம் முஸ்தபா போன்ற பெயர்களில்  பரேல்விய அறிஞரின்
உசூலின் பேரில் கடுமையான அவமரியாதை ஏற்படுகிறது.இதனை இங்கு சொல்ல எங்களுக்கு
தைரியம் இல்லை.

அது மட்டுமின்றி لونڈا விற்கு வேறு பெயர்கள் இருந்தாலும் மாற்று விளக்கம்
கொடுக்க முடியாது.ஏனெனில் எந்த வார்த்தையை உபயோகிப்பதனால் மிக குறைந்த பட்ச
ஒழுக்க கேட்டின் (சாயல்) வாய்ப்பு  பெறப்பட்டாலும்  அதனை பெருமானார் (ஸல்)
அவர்களின் விஷயத்தில் சொல்வது முற்றிலும் கூடாது.
(திப்யான் 275)




குர்ஆனில் எங்காவது ஓரிடத்தில் குலாம் என்ற வார்த்தை வந்துள்ளது.அதனின் பொருள்
சிறுவன் மகன் என்பதாக இருந்தால் குலாமுல்லாஹ் வின் கருத்தானது அல்லாஹ்வின்
குழந்தை என்கிற அர்தத்தினால் அல்லாஹ்வின் விஷயத்தில் பெரும்
இணைவைப்பாகும்.இதனால் ஆரம்பத்திலேயே மாற்றிவிடவேண்டும்.அவர் இணைவைப்பாளர்களின்
அணியில் வந்துவிடக்கூடாது.பிறகு மற்றவர்களின் மீது பத்வா அளிக்கட்டும்
(பவ்ஜுல் மகால் 
4/548)





அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி அவர்கள் அதே நூலின் பொருளடக்கத்தில் பெரியோர்களில்
ஒருவரை குறித்து கூறுகிறார்கள் அவரின் பெயர் குலாமுல்லாஹ் ஷர்கபூரி
பக்கம்296ல் உள்ளது.



பரேல்விகளின் வாதப்படி அல்லாஹ்விற்கு குழந்தைகள் உண்டு
என்பதை கிறிஸ்துவர்களை போன்று ஏற்கின்றனர்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live