7 Apr 2017

இமாம் இப்னு சீரின் ரஹ் பார்வையில் காசிம் நானூதவி ரஹ் ஒரு துர்மார்க்கவாதி (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்ற குற்றச்சாட்டும் நமது மறுப்பும்.

பரேல்விய ஜவ்வாத் ரப்பானியின் அண்டப்புழுகும் நமது மறுப்பும்:

தேவ்பந்திகளின் ஆபாச கனவு என்பதாக விமர்சித்த பரேல்விகளுக்கு நாம்
மறுப்பளித்தோம்.இமாம் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள் ஆபாசமான கனவிற்கு அற்புதமான
விளக்கத்தை கூறியுள்ளார்கள்.இதனால் இமாம் அவர்களை விமர்சிக்க தயாரா? என
மறுப்பளித்தோம்.இதற்கு பதிலளிக்க முடியாத பரேல்வி ஜவ்வாத் ரப்பானி அடுத்து ஓர்
அபாண்டமான, அபத்தமான வாதம் வைத்துள்ளார்.
இதற்கான மறுப்பை இனி பார்ப்போம்!

இமாம் இப்னு ஸீரின் ரஹ் அவர்களின் பார்வையில் காசிம் நானூத்தவி (ரஹ்) ஒரு
துர்மார்க்கவாதி (அல்லாஹ் பாதுகாப்பானாக)  என்பதை ஜவ்வாத் ஏற்றால்
நியாயப்படுத்தினால் முதலில் ஆபாச கனவு என்பதாக பரேல்விகள் குற்றம் சுமத்தியது
தவறு,பொய், அபாண்டம் என்பதை ஏற்கவேண்டும்.அல்லது ஆபாசமான கனவிற்கு அற்புதமான
விளக்கம் தந்த இமாம் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்களை விமர்சிக்க வேண்டும். தயாரா?

அடுத்து இந்த குற்றச்சாட்டை பரேல்வி ஜவ்வாத் எடுத்து சொல்வதன் மூலம் கனவு
அதனின் விளக்கம் குறித்த அறியாமையில் இருக்கிறார் என்பதை புரிய முடிகிறது.நாம்
கனவு குறித்த நமது நிலைப்பாட்டை பலமுறை நமது நூல்களிலிருந்தும் பரேல்விகளின்
நூல்களிலிருந்தும் எடுத்து கூறிவிட்டோம்.

கனவை முன்வைத்து இமாம் இப்னு ஸீரின் (ரஹ்) பார்வையில் காசிம் நானூத்தவி (ரஹ்)
அவர்கள் துர்மார்க்கவாதி (அல்லாஹ் பாதுகாப்பானாக!) என்பதாக பரேல்விய ஜவ்வாத்
ரப்பானி வாதிட்டால்  இதற்கு நாம் பரேல்வி நூலிலிருந்து மறுப்பை பார்ப்போம்!

பரேல்விய மெளலவி அபூகலீம் முஹம்மத் ஸித்தீக் ஃபானி அவர்கள் 'ஆயினா
அஹ்லுஸ்ஸுன்னத்' என்ற நூலில் 158ம் பக்கத்தில் எழுதியுள்ளார்.

கனவு உலகத்தை இவ்வுலகத்துடன் ஒப்பிடுவது முற்றிலும் வீணானது.கனவு உலகத்தின்
நிலைகள் சம்பவங்களை முன்வைத்து ஷரீஅத்தின் சட்டங்கள் செயல்படுத்த முடியாது.


எனவே ஒன்று பரேல்வி ஜவ்வாத் பொய்யராக இருக்க வேண்டும்.அல்லது பரேல்விய அறிஞர்
அபூகலீம் முஹம்மத் ஸித்தீக் பொய்யராக இருக்க வேண்டும்.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் கனவானது ஸவானிஹ் காஸிமி, அர்வாஹே
ஸலாஸா,முஃபஸ்ஸராத் தாருல் உலூம் தேவ்பந்த் போன்ற நூல்களில் உள்ளது. அதில்
வரும் கனவு
நான் கஃபாவின் மேற்பகுதியின் மீது நிற்பதாக கனவு கண்டேன்.மேலும் எனது காலுக்கு
கீழ் ஆறுகள் ஓடியவாறு முழு உலகமும் பரவியது.

காஸிம் நானூத்தவி ரஹ் கஃபாவின் மேற்பகுதியில் நிற்பதாகதான் கனவு
கண்டுள்ளார்கள்.

பரேல்விய ஜவ்வாத் ரப்பானி,
காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் காணாத கனவிற்கு தான் விளக்கம் கொடுக்கிறார்.

ஏனெனில்  உண்மையில் இமாம் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்களின் முஃஜம் தப்ஸீருல்
அஹ்லாம் என்ற நூலில் 951,952ம் பக்கத்தில்  கஃபாவின் மேற்பகுதியில் நின்று
தொழுவதாக கனவு காண்பவருக்கு தான் விளக்கம்  சொல்லப்பட்டுள்ளது.

வருகிற வாசகம்.

فان رأى انه يصلى فوق الكعبة فان دينه يختل 

கனவில் கஃபாவின் மேற்கூரையில்
தொழுவதாக கனவு காண்பவரின் மார்க்கம் மாறிவிடும்.

மற்றோர் இடத்தில்.

 وحكي ان رجلا اتى ابن سيرين فقال رايت كانى اصلى فوق الكعبة
فقال اتق الله فانى اراك خرجت عن الاسلام

எடுத்து சொல்லப்படுகிறது ஒரு மனிதர் இப்னு ஸீரின் ரஹ் அவர்களிடத்தில்
வந்தார்.மேலும் கூறினார் கஃபாவின் மேற்கூறையில் நான் தொழுவதைப் போன்று
பார்க்கிறேன்.அதற்கு இமாம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்
இஸ்லாத்தை விட்டு நீ வெளியேறிவிட்டாய் என்பதாக உன்னை நான் கருதுகிறேன்.


இதைதான் அப்துல் ஙனி நாபிஸி ரஹ் கூறுகிறார்கள்:

 ومن رأى يصلى فوق الكعبة فانه
يرتد عن دين الاسلام 

கஃபாவின் மேற்பகுதியில் தொழுவதாக பார்ப்பாரோ அவர்
இஸ்லாத்தை விட்டு மதம் மாறிவிடுவார்.


அடுத்து காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் கனவில் கஃபாவின் மேற்கூறையின் மீது
நிற்பதோடு ஆறுகள் கால்களுக்கு கீழ் ஓடியவாறு முழு உலகமும் பரவியதை
கண்டுள்ளார்கள்.ஜவ்வாத் ரப்பானி கனவின் இரண்டு பகுதியில் ஒரு பகுதிக்கு
மட்டும் விளக்கத்தை மற்றொன்றின் விளக்கத்தை கூறாமல் தேவ்பந்த் உலமாக்களின்
மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை கக்கியுள்ளார்.

இப்னு சீரின் (ரஹ்) அவர்களின் கனவிற்குரிய விளக்கமானது உண்மையில் கஃபாவின் மேற்கூரையின் மீது நின்று தொழுவதற்குதான் உள்ளது.

இதனை நாம் இப்னு சீரின் (ரஹ்) அவர்களின் அரபு நூலான 'முஃஜம் தப்ஸீரில் அஹ்லாம்' என்பதிலிருந்து எடுத்தெழுதி நிரூபித்தோம்.இன்னும் அதிகப்படியான ஆதாரம் இப்னு சீரின் (ரஹ்) அவர்களின் 'தஃதிருல் அனாம் ஃபி தஃபீரில் மனாம், என்ற நூலிலும் இவ்வாறுதான் உள்ளது.



ஜவ்வாத் ரப்பானி எடுத்து காட்டுவது உர்து மொழிபெயர்ப்பு அதில் மொழிபெயர்ப்பாளரின் தவறாக கூட இருக்கலாம்.உண்மையில் பரேல்விய ஜவ்வாத் ரப்பானி திராணி இருந்தால் அரபி மூலப் பிரதியில் இருந்து அசல் வாசகத்தை காட்ட தயாரா?

கனவில் வருகிற வாசகத்திற்கு விளக்கம் முபஷ்ஷராத் தாருல் உலூம் தேவ்பந்த் என்ற
நூலில் உள்ளது.கனவின் விளக்கமானது தாருல் உலூம் தேவ்பந்த் மற்றும் அதனின்
கிளைகளை தவிர வேறு என்ன இருக்க முடியும்?


ஹள்ரத் மெளலானா மம்லூக் அலி ஸாஹிப் நானூத்தவி (ரஹ்) அவர்களின் விளக்கமானது
உங்களிடத்திலிருந்து தான் மார்க்க கல்வியில் ஃபைஜ் எனும் வளர்ச்சியானது
அதிகமாகும்.

கேள்வியும் பதிலும்:

இமாம் இப்னு ஸீரின் அவர்களின் கனவின்  விளக்கத்தை விட தேவ்பந்த் பெயோர்களின்
கனவின் விளக்கம் சிறந்ததா?

நமது பதில்:

இப்னு சீரின் (ரஹ்) அவர்களின் விளக்கமானது நமக்கு எதிரானதல்ல
என்பதை முன்னால் விளக்கிவிட்டோம்.ஒரு வாதத்திற்கு இப்னு சீரின் (ரஹ்)
அவர்களின் விளக்கம் எதிரானது எடுத்துக் கொண்டாலும் பிரச்சனையில்லை.ஒரே
கனவிற்கு இரண்டு விதமான விளக்கம் சொல்லப்படலாம்.பரேல்விய அறிஞர் தாஹிர் காதிரி
அவர்களின்  'காபோ அவர் பஷாரத் இஃதிராஜாத் கா இல்மி முஹாகமா' என்ற நூலில்
ஐந்தாவது பகுதியில் 'காப் அவ்ர் தஃபீர் மே ஃபர்க்' என்ற தலைப்பில் எழுதியுள்ள
விஷயத்தின் சுருக்கம்:

ஒரு பெண்மணி நபி ஸல் அவர்களின் சமூகத்திற்கு
வந்தார்கள்.எனது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுவது போன்று கனவு கண்டேன்
என்றார்கள்.இதன் பேரில் பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள் பிரயாணம்
சென்றுள்ள கணவர் வீடு திரும்புவார் என கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு அந்தப் பெண் மீண்டும் அதே கனவை கண்டதாக
அபூபக்கர் (ரளி) அவர்களிடம் கூறினார்கள்:
அதற்கு அவர்கள் கூறினார்கள் உனது கணவர் மரணிப்பார்.அவ்வாறே கணவர் மரணித்தார்.(
www.minhajbooks.com/urdu/btext/cid/4/bid/59/btid/740/read/txt/باب-پنجم-خوابوں-اور-بشارات-پر-اعتراضات-کا-علمی-
<http://www.minhajbooks.com/urdu/btext/cid/4/bid/59/btid/740/read/txt/%D8%A8%D8%A7%D8%A8-%D9%BE%D9%86%D8%AC%D9%85-%D8%AE%D9%88%D8%A7%D8%A8%D9%88%DA%BA-%D8%A7%D9%88%D8%B1-%D8%A8%D8%B4%D8%A7%D8%B1%D8%A7%D8%AA-%D9%BE%D8%B1-%D8%A7%D8%B9%D8%AA%D8%B1%D8%A7%D8%B6%D8%A7%D8%AA-%DA%A9%D8%A7-%D8%B9%D9%84%D9%85%DB%8C-> محاکمہ.html))



ஆக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது.ஆதாரமற்றது
என்பதை கூறிக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live