7 Apr 2017

அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் குற்றச்சாட்டுக்கு பரேலவிகளை வாயடைக்கச் செய்யும் பதில்.

அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் பரேலவிகளின் குற்றச்சாட்டுக்கு தக்க மறுப்பு .

நமது மறுப்பு :

பதாவா ரஷீதிய்யாவில் தெளிவாக அல்லாஹ் பொய் சொல்வான் என்று கூறுகிறவர் இறை நிராகரிப்பாளர் என்று பத்வா கொடுத்துள்ளார்கள்.

இப்படி இருக்கும் போது ரிளாகான் குற்றம் சுமத்துவது அபாண்டமான பொய்யாகும். இனி இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்!

கேள்வி:

 அல்லாஹ்வுடன் பொய் என்பதானது இணைந்துள்ளதா இல்லையா அல்லாஹ் பொய் பேசுவானா இல்லையா எவன் அல்லாஹ் பொய் சொல்வான் என்பதாக கூறுவானோ அவனின் நிலை என்ன?

பதில்:

ان الله تعلي منزه من أن  يتصف بصفة الكذب وليست في كلامه شاءبة الكذب ابدا كما قال الله تعالي و من اصدق من الله قيلا

கருத்து :

அல்லாஹ்வின் 'தாத்' (உள்ளமை) பொய் என்பதை விட்டும் பரிசுத்தமாகும் .ஒரு போதும் அவனின் பேச்சில் சிறிதும் பொய் இருக்காது .

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் : 

 قال اللہ تعالی: وَمَنْ اَصْدَقُ مِنَ اللّہِ قِیْلاً

அல்லாஹ்வை விட உண்மை பேசுபவன் யார்?

و من يعتقد و تيفوه بانه تعلي يكدب فهو كافر ملعون فطعاو مخالف الكتاب و السنه و الجماع الامة 

கருத்து :

அல்லாஹ் பொய் சொல்லுவான் என்று நம்பிக்கை கொண்டாலோ, நாவினால் கூறினாலோ அவன் தெளிவாக சபிக்கப்பட்ட காபிராவான். குர்ஆன் , ஹதீஸ் , இஜ்மா எனும் ஏகோபித்த முடிவிற்க்கு மாறு செய்தவன் ஆவான்.இப்போது சொல்லுங்கள் பரேலவிகளே இவ்வாறு தெளிவாக கூறியிருந்தும் நீங்கள் போலி வேஷம் போடுவதேன்?

 الله تعالي عما بفول الظالمون علوا كبيرا

 கருத்து :

அல்லாஹ் அநியாயக்காரர்களின் கூற்றை விட்டும் உயர்ந்தவன் ,பெரியவன்.

அதாவது , அல்லாஹ் பொய் சொல்லுவான் என்று கூறுபவன் அநியாயக்காரன் என்பதாக மௌலான காங்கோஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் .

இப்போது கூறுங்கள் பரேலவிகளே ! உங்கள் போலி முகத்தை எங்கே தொங்கவிடப்போகிறீர்கள்.

نعم اعتقاد اهل الايمان ان ما قال الله تعالي في القرآن في فرعون و هامان و ابي لهب انهم جهنميون فهو حكم قطعي 

கருத்து : 

ஈமான் கொண்டவர்களின் கொள்கையானது பிர்அவ்ன்,ஹாமான், அபூலஹப் ஆகியோர் சம்பந்தப்பட்ட நரகவாதிகள் என்று குர்ஆனிலே சொல்லப்பட்டுள்ளது. இது உறுதியான சட்டமாகும்.

இப்போது சொல்லுங்கள் பரேலவிகளே! உறுதியான சட்டம் என்பதின் மூலம் காங்கோஹி (ரஹ்)  அவர்கள் அல்லாஹ் உண்மையாளன் என்பதை பகிரங்கமாக கூறியுள்ளார்கள். பரேலவிகளே உங்களின் உள்ளங்களிலும் ! காதுகளிலும் ! கண்களிலும் முத்திரை குத்தப்பட்டு விட்டதா என்ன?

لايفعل خلافه ابدا 

கருத்து :

அல்லாஹ் ஒருபோதும் இதற்க்கு மாறு செய்யமாட்டான்.

لكنه تعالي قادر علي ان يدخل الجنة و ليس بعاجز عن ذلك

கருத்து :

ஆனாலும் சுவனத்தில் நுழையவைப்பதற்க்கும் சக்கி உடையவன். அதனை விட்டும் இயலாதவன் அல்ல.

 ولا يفعل هدا مع عخيتاره 

கருத்து :

ஆனாலும் அவனது சுய இஷ்டத்தை கொண்டு அப்படி செய்ய மாட்டான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான் :

 وَلَوْ شِئْنَا لَآتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَاهَا وَلَكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّي لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ

கருத்து :

நாடினால் ஒவ்வொரு ஆத்மாவிற்க்கும் அதனின் நேர்வழியை கொடுத்திருப்போம் என்றாலும் அணைத்து மனிதர்களாலும் , ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள செல்  திட்டமாகி விட்டது.


فتبين من هده الاية أنه تعالي لو شاءلجعلهم كلهم مؤمنين ولكنه لا يخالف ما قال 


இந்த ஆயத்தின் மூலம் நமக்கு தெளிவாகிறது

கருத்து :

 அல்லாஹ் நாடியிருந்தால் அனைவரும் இறை நம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கியிருப்பான் . ஆனால் அவன் சொல்லிற்க்கு மாறு செய்ய மாட்டான்.

இப்போது சொல்லுங்கள் பரேலவிகளே! காது இருந்தும் செவிடர்களா நீங்கள்? அல்லது கண்ணிருந்தும் குருடர்களா?

 و قد ذلك بالاختيار لا بلا ضطرار

கருத்து :

ஒவ்வொன்றும் அவன் சுய இஷ்டத்தில் உள்ளது. நிர்பந்தத்தில் உள்ளதல்ல.

وهو فاعل مختار فعال لما يريد 

கருத்து :

அவன் நாடியதை செய்வதற்க்கு விருப்பம் உள்ளவன் .

இது தான் அவர்கள் கொடுத்த பத்வா ! இவ்வளவு பகிரங்கமாக தெளிவுபடுத்தியும் அவர்கள் கொடுத்த பத்வா இவ்வளவு பகிரங்கமாக தெளிவுப்படுத்தியும் அவர்கள் மீது குற்றம் சுமத்துவது காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

هذه عقيدة جميع علماء الامة كما قال البيضاوي تحت تفسير قوله تعالي أن تغفر لهم الخ و عدم غفران الشرك مقتضي الوعيد فلا امتناع فيه

கருத்து :

 இது தான் அணைத்து உலமாகளின் ஒன்றுபட்ட ஏகோபித்த கொள்கை என்பதாக ரஷீத் அஹ்மத் காங்கோஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.மேலும் தப்ஸீர் பைளாவிலிருந்து ஆதாரத்தை குறிப்பிடுகிறார்கள் :

أن تغفر لهم

இணைவைத்தலுக்கு மன்னிப்பு கொடுக்காமல் இருப்பது அல்லாஹ்வின் வாக்கின்படியாகும். எனினும் அல்லாஹ்வின் உள்ளமைக்கு அதிலே எந்த ஒரு தடையும் அறவே இல்லை. (அதாவது இணைவைத்தலை மன்னிப்பதற்க்கு சக்கி பெற்றவன் என்றாலும் மன்னிக்க மாட்டான்).
இதே போன்று தான் ரஷீத் அஹமது (ரஹ்) அவர்கள் கொடுத்த பத்வாவும் அல்லாஹ் பொய் செல்லமாட்டான்  ஆனால் பொய் சொல்ல சக்தி உடையவன் என்பதாகும். ஆக இறுதியாக இதற்க்கு வலுவூட்டும் ஆதாரங்கள் கொள்கை சம்பந்தப்பட்ட கிரந்தங்களில் தெளிவாக உள்ளது.


(ولا يخرج عن علمه وقدرته شيء). لأن الجهل بالبعض والعجز عن البعض نقص وافتقار إلى مخصص

கருத்து :

அல்லாஹ்வின் இல்மை விட்டும் ,ஆற்றலை விட்டும் எந்த ஒன்றும் வெளியேறாது ஏனெனில் சிலதை பற்றி அறியாமல் இருப்பதும் , சில விஷயங்களில் இயலாமையும் , வேறு நபரின் பால் தேவையாவதும் குறை ஏற்படும் தன்மையாகும்.(அல்லாஹ் அணைத்து குறைகளை விட்டும்
பரிசுத்தமானவன்).


என அகாயித் நஸஃபியில் வந்துள்ளது.


மேலும் இதில் பேசப்படும் விசயம் அல்லாஹ்வின் விசாலத்தண்மையை பற்றியது என்றும் மௌலானா எழுதியுள்ளார்கள்.மேலும்

இல்யாஸ் கும்மான்( தாமத்பரகாதுஹும்)

 அல்லாஹ் முடிவு செய்த பல்வேறு தீர்ப்புகளை மாற்றும் சக்தி உள்ளவன்.எனினும் மாற்ற மாட்டான்.

( அகாயித் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்)
காங்கோஹி (ரஹ்) இந்த கருந்தை கூறியதால் நவூதுபில்லாஹ் காபிரென்றால் மேற் கூறிய அறிஞரும் இதே கருத்தை தானே கூறியுள்ளார் அல்லாஹ் பாதுகாப்பானாக.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live